வியாழன், 31 மே, 2018

உலக பால் தினம் ஜூன் 1.


உலக பால் தினம் ஜூன் 1.

உலக பால் தினம் என்பது ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண் அமைப்பினால் உலகளாவிய உணவாக பாலின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்வதற்காகக் கடைபிடிக்கப்படும் ஒரு தினம் ஆகும்.

வரலாறு

இது 2001 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 1 ம் தேதியன்று கடைபிடிக்கப்படுகிறது. இது பால் பண்ணைடன் தொடர்புடைய நடவடிக்கைகளுக்குக் கவனம் செலுத்துவதற்கான ஒரு வாய்ப்பை வழங்கும் நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டுள்ளது. பால் ஒரு உலகளாவிய உணவு என்பதை உணர்ந்து கொள்ள இதே நாளில் பல நாடுகளில் தனிப்பட்ட மற்றும் தேசிய விழாக்களுக்குக் கூடுதல் முக்கியத்துவம் தரப்படுகிறது. 2016 ஆம் ஆண்டில், உலக பால் தினம் நாற்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் கொண்டாடப்பட்டது. தேசியப் பொருளாதார மதிப்பை ஊக்குவிப்பதில் கவனம் செலுத்துவதன் முக்கியத்துவம் மற்றும் தேசிய பால் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிப்பதில் கவனம் செலுத்துவதன் நோக்கம் ஆகியவற்றை உணர்த்த மாரத்தான் ஓட்டம், பண்ணைப் பார்வையிடல், பள்ளி சார்ந்த நடவடிக்கைகள், கச்சேரிகள், நிகழ்ச்சிகள், மாநாடுகள் , கருத்தரங்குகள் மற்றும் போட்டிகள் மூலம் பாலின் முக்கியத்துவத்தை உணர்த்துதல்.  2017 ஆம் ஆண்டு ஜூன் 1 ஆம் தேதி, பண்ணைத் துறை "ஒரு கோப்பையை உயர்த்துங்கள்" (ஆங்கிலத்தில் : “Raise a Glass” ) தலைப்பில் சமூக வலைதளங்களில் உலக பால் தினம் (#WorldMilkDay) எனும் பிரச்சார ஹேஸ்டேக்(hashtag) மூலம் ஒரு சிறப்பு பிரச்சாரத்தை கொண்டாடுகிறது.


பாலின் முக்கியத்துவத்தை உணர்த்த ஐநா சபையால் ’உலக உணவு’ என அங்கீகரிக்கப்பட்டு ஒவ்வொர் ஆண்டும் ஜூன் 1-ஆம் தேதி ‘உலக பால் தினம்’ கொண்டாடப்பட்டு வருகிறது.
இயற்கை தரும் இனிய ஊட்டச்சத்து பானம் பால் . தினசரி காலையில் காபியில் தொடங்குவது, மதிய உணவில் தயிர், வெப்பத்தைத் தணிக்க மோர், உணவின் சுவையைக் கூட்ட நெய் எனப் பால் பொருள்கள் இல்லாத நாளை நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. இத்தகைய சிறப்பும், சத்தும் நிறைந்த பால், ஐநா சபையால் உலக உணவாக அங்கீகரிக்கப்பட்டது. இதை உலகுக்கு உணர்த்த ஐநா சபை ஒவ்வொர் ஆண்டும் ஜூன் 1-ஆம் தேதி உலக பால் தினமாகக் கொண்டாடப்பட வேண்டுமென அறிவுறுத்தியது. இதன்படி 2001-ஆம் ஆண்டிலிருந்து ‘உலக பால் தினம்’ கொண்டாடப்பட்டு வருகிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக