வெள்ளி, 11 மே, 2018

தேசிய தொழில்நுட்ப தினம். (NATIONAL TECHNOLOGY DAY) மே-11.


தேசிய தொழில்நுட்ப தினம். (NATIONAL TECHNOLOGY DAY)  மே-11.

உலகில் தொழில்நுட்பம் என்பது நாளுக்கு நாள் அதிக அளவில் வளர்ச்சியடைந்து வருகிறது.

 தொழில்நுட்ப வளர்ச்சியால் மனிதனின் வேலைகள் எளிதாகியுள்ளன.

முக்கியமாக மருத்துவத்துறையில் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி இன்றிமையாத ஒன்றாக உள்ளது.

இந்தியாவில் இன்று, மே 11ஆம் தேதி தேசிய தொழில்நுட்ப தினம் கடைபிடிக்கப்படுகிறது.

நோக்கம்:-

💻அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையில் நாட்டின் சாதனைகளை அங்கீகரிப்பது,
💻புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குவது,
💻வருங்கால இளைஞர்களுக்கு அறிவியல் மீதான ஆர்வத்தை ஏற்படுத்துதல் ஆகியவற்றை வலியுறுத்தி, மே 11ஆம் தேதி இந்தத் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

*ராஜஸ்தானில் உள்ள பொக்ரானில் 1998 மே 11ஆம் தேதி, இந்தியா ஐந்து அணுகுண்டு சோதனையை நடத்தி வெற்றி கண்டது.*

இதன் மூலம் உலகின் அணு ஆயுத நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்தது.

இதை அங்கீகரிக்கும் விதமாக மே 11ஆம் தேதி ‘தேசிய தொழில்நுட்ப தினமாக’ அறிவிக்கப்பட்டது.

இந்தியா விண்வெளி, பாதுகாப்பு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி உள்ளிட்ட துறைகளில், சிறப்பாக முன்னேறி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் வளர்ச்சி:-

தொடக்கத்தில் தகவல் தொழில்நுட்பம் சேவையில் கொல்கத்தாவில் 93 சந்தாதாரர்கள் மட்டுமே இருந்தனர். இன்று உலகின் மொத்த சந்தாதாரர்களில் 13 சதவிகிதம் இந்தியர்கள். அதாவது, இந்தியா சந்தாதாரர்களின் எண்ணிக்கை 86.30 கோடி ஆகும்.

உலகிலேயே இந்தியாதான் குறைந்த தொலைப்பேசி கட்டணம் கொண்ட நாடாகும்.

சர்வதேச அளவில் இன்டர்நெட் வசதியைப் பயன்படுத்துவதில் இந்தியா மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது.

 உலகளவில் தொலைப்பேசி மற்றும் செல்போன்கள் பயன்படுத்துவதில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.

இந்தியாவில் முதல் மொபைல் டெலிபோன் சேவை 1995ஆம் ஆண்டு டெல்லியில் தொடங்கப்பட்டது.

இந்தியாவில் தொலைத்தொடர்பு சேவை 5,00,000 கிராமங்கள் வரை சென்றடைந்துள்ளது.

எனவே, நம் அனைவராலும் புதிய தொழில்நுட்பங்களை உருவாக்க இயலாவிட்டாலும், இருக்கும் தொழில்நுட்பங்களை நுட்பத்துடன், அளவுடன், *ஆக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்துவோம் என்று உறுதியேற்போம்*!!.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக