உலக உயர் இரத்த அழுத்த தினம் மே 17 #May 17
உலக சுகாதார நிறுவனம் கார்டியோவாஸ்குலர் நோயினால் (இருதய நோய்) ஏற்படும் இறப்பு விகிதத்திற்கான முக்கிய காரணமாக உயர் இரத்த அழுத்தத்தைக் குறிப்பிட்டிருக்கிறது.
உலகத்தில் உயர் இரத்த அழுத்தம் உள்ள மக்களில், 50 சதவிகிதத்திற்கும் மேற்பட்டவர்கள் தங்களுடைய நிலை குறித்து அறியாதவர்களாக இருக்கின்றனர். உயர் இரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுகிறது.
இது சம்பந்தமாக விழிப்புணர்வை ஏற்படுத்தவே, உலக சுகாதார நிறுவனம் உயர் இரத்த அழுத்தம் குறித்து 2005ஆம் ஆண்டில் உலகளாவிய விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்கியது என்பதுடன் ஒவ்வொரு ஆண்டும் மே 17ம் தேதியை உலக உயர் இரத்த அழுத்த தினமாக அறிவித்திருக்கிறது.
இன்று உலக உயர் இரத்த அழுத்த (ஹைபர் டென்சன்) தினம் மே 17.
May 17, thanks- aanthai
உலக சுகாதார நிறுவனம் கார்டியோவாஸ்குலர் இறப்பு விகிதத்திற்கான முன்னணி காரணமாக உயர் இரத்த அழுத்தத்தைக் குறிப்பிட்டிருக்கிறது. 85 தேசிய உயர் இரத்த அழுத்த சங்கங்கள் மற்றும் குழுக்களின் அம்ப்ரல்லா அமைப்பான தி வேர்ல்ட் ஹைபர்டென்ஷன் லீக் (டபிள்யூஹெச்எல்), உலகம் முழுவதிலுமுள்ள உயர் இரத்த அழுத்தம் உள்ள மக்களின் 50 சதவிகிதத்திற்கும் மேற்பட்டவர்கள் தங்களுடைய நிலை குறித்து அறியாதவர்களாக இருக்கின்றனர் என்று தெரிவித்துள்ளது.இந்தப் பிரச்சினையைத் தெரிவிப்பதற்கு, உலக சுகாதார நிறுவனம் உயர் இரத்த அழுத்தம் குறித்து 2005 ஆம் ஆண்டில் உலகளாவிய விழிப்புணர்வு பிரச்சாரத்தைத் தொடங்கியது என்பதுடன் ஒவ்வொரு ஆண்டும் மே 17 ஆம் தேதியை உலக உயர் இரத்த அழுத்த தினமாக (டபிள்யுஹெச்டி) அறிவித்திருக்கிறது.
hyper may 17
உயர் இரத்த அழுத்தம் (இரத்த கொதிப்பு) என்பது சமீபகாலமாக நம் நாட்டு மக்களில் அநேகம் பேரை பாதிக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது. பலருக்கு எந்த விளைவுகளும் ஏற்படுத்தாமல், எந்த அறிகுறியும் காட்டாமல், ஆபத்தான கட்டத்தை நோக்கி உள்ளே அது பூதாகாரமாக வளரும். ஆரோக்கியமான மனிதராகவே நாம் நடமாடிக் கொண்டிருக்க ஒரு நிலையில் திடீரென்று மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டு விடுகிறோம். இதன் வெளிப்படையான அறிகுறிகளை கண்டுபிடிப்பது கடினம் என்பதாலும், மெதுவாக எல்லா முக்கிய உறுப்பு மண்டலங்களையும் பாதிப்பதாலும் இதனை ஒரு அமைதிக் கொலையாளி (Silent Killer) என்று அழைத்தால் அது மிகையாகாது.
இரத்தக் கொதிப்பு எப்படி ஏற்படுகிறது?
நாம் நடுத்தர வயதைக் (35 To 40) கடக்கும் போது நம் உடலில் உள்ள சிறிய சுத்த இரத்தக குழாய்கள் (Arterides) விரியும் தன்மையை இழக்கின்றன. மேலும் நமது தவறான உணவுப் பழக்கங்களினால் இரத்தக் குழாய்களின் உட்புறம் படியும் தீங்கு செய்யும் கொழுப்பு வகைகளினால் தடிப்பு ஏற்பட்டு உள் அளவு சுருங்குகிறது. இதனால் இரத்த ஓட்டத்தின் சீரான வேகம் குறைந்து அழுத்தம் அதிகமாகிறது. இந்த நிலையைத் தான் நாம் “இரத்தக் கொதிப்பு” என்று கூறுகிறோம்.
இரத்தக் கொதிப்பு என்பது நோயல்ல. ஆனால் ஆரம்பத்திலேயே இதனைக் கண்டுபிடித்துத் தடுக்கவில்லை என்றால் மெதுவாக நமது உடலின் பல்வேறு முக்கிய உறுப்பு மண்டலங்களை பாதித்து, அவற்றில் ஏற்படும் நோய்களுக்கு காரணமாக இரத்தக் கொதிப்பு அமைந்துவிடும்.
பல்வேறு காரணங்களால் உயர் இரத்த அழுத்தம் ஏற்படலாம். உடல் பருமன் அதிமாக உள்ளவர்கள், உடல் உழைப்பு குறைவாக இருப்பவர்கள், தைராய்டு ஹார்மோன் பிரச்சினைகள், இதயம் மற்றும் சிறுநீரகக் கோளாறுகள், மன அழுத்தம், அதிகமாக கோபப்படுதல் உணவில் அதிக அளவில் உப்பு சேர்த்துக் கொள்வது, வாழ்க்கை முறை மற்றும் பரம்பரை தன்மை அதாவது வீட்டில் அம்மா, அப்பாவிற்கு உயர் அழுத்தம் இருந்தால் அடுத்த தலைமுறைக்கும் உயர் இரத்த அழுத்தம் ஏற்படுகிறது.
ஒரு ஆரோக்கியமான மனிதனின் இரத்த அழுத்தம் 120/80 மி.மீ மெர்க்குறி என்பதாகும். நடுத்தர வயதில் உள்ள ஆரோக்கியமான மனிதர்களுக்கு இந்த அளவானது சிறிது மாறுபடும். 139/89 மி.மீ மெர்க்குறி என்னும் அளவு வரை நார்மல் என்றே கூறலாம்.
140/90 முதல் 160/110 மி.மீ மெர்க்குறி வரை உள்ள அளவுகள் ஓரளவு உயர்ந்த இரத்த அழுத்தத்தைக் குறிக்கும் (Mild To Moderate Hypertension)
இதற்கு மேல் உள்ள அளவுகள் மிக அதிகமான உயர் இரத்த அழுத்தத்தினைக் குறிக்கும்.
நார்மல்
சிஸ்டாலிக் இரத்த அழுத்தம் (மி.மீ மெர்குறி) 130க்கு கீழ்
டயஸ்டாலிக் இரத்த அழுத்தம (மி.மீ மெர்குறி) 85க்கு கீழ்
இரத்த கொதிப்பு ஸ்டேஜ் -1
சிஸ்டாலிக் 140 – 159
டயஸ்டாலிக் 90 – 99
இரத்த கொதிப்பு ஸ்டேஜ் – 2
சிஸ்டாலிக் 160 – 179
டயஸ்டாலிக் 100 – 109
இரத்த கொதிப்பு ஸ்டேஜ் – 3
சிஸ்டாலிக் 180 – க்கு மேல்
டயஸ்டாலிக் 110 – க்கு மேல்
இரத்தக் கொதிப்பிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளும் முறைகள் என்னென்ன?
மருந்து மட்டுமின்றி நமது வாழ்க்கை முறையில் சில நல்ல மாற்றங்களை செய்து கொள்வதினாலும் நாம் இரத்தக் கொதிப்பிலிருந்து விடுபடலாம்.
1) உணவில் உப்பு குறைத்துக் கொள்ளல்:
உப்பு அதிகமாக இருக்கும் பண்டங்களான ஊறுகாய், அப்பளம், கருவாடு, மற்றும் அதிக உப்பு சேர்க்கப்பட்டு பிளாஸ்டிக் பைகளில் அடைத்து விற்கப்படும் முந்தரி, சிப்ஸ், பாப்கார்ன் போன்றவற்றையும் தவிர்க்க வேண்டும்.
2) பழங்கள் மற்றும் காய்கறிகளை தினமும் உணவில் அதிக அளவில் சேர்த்துக் கொள்வது இரத்தக் கொதிப்பை கட்டுப்படுத்தும்.
3) மனதை ரிலாக்ஸ் செய்யும் முறைகள்:
தொழுகையில் மனதை ஒருமுகப்படுத்துதல், இறைதியானம்(திக்ர்) போன்றவற்றில் ஈடுபடுதல், யோகா ஆகியவற்றை எந்த பரபரப்பும் இன்றி முறையாக பேணினால் இரத்தக் கொதிப்பு பெருமளவு குறையும்.
4) உடற்பயிற்சி:
தினமும் தவறாமல் மிதமான உடற்பயிற்சி செய்வது அவசியம். தினமும் 30 நிமிடங்கள் வாக்கிங் போவதோ, 20 நிமிடங்கள் சைக்கிள் ஓட்டுவதோ அல்லது நீச்சல் அடிப்பதோ சரியான உடற்பயிற்சி முறைகள். இவை உடற்பருமனையும் குறைப்பதால் இரத்த அழுத்தம் குறையும்.
5) புகை பிடித்தல், அளவுக்கதிகமாக மது அருந்துதல் முதலிய பழக்கங்களை அறவே நீக்குவதால் இரத்தக் கொதிப்பு ஏற்படாமல் தவிர்க்கலாம்.
6) தவறாமல் குடும்ப டாக்டரிடம் சென்று இரத்த அழுத்தத்தை பரிசோதித்துக் கொள்ளுதல்:
நம் நாட்டில் சமீபகாலமாக 30 வயதுக்குக் குறைவான இளைஞர்களுக்குக் கூட இரத்தக் கொதிப்பு இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆகவே 20 லிருந்து 40 வயது வரை உள்ளவர்கள் வருடத்துக்குக் இரண்டு முறையாவது பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.
40 வயதைக் கடந்தவர்கள் மூன்று மாதத்துக்கு ஒருமுறை இரத்த அழுத்தத்தை சோதித்துக் கொள்வது அவசியம். குறிப்பாக, குடும்பரீதியாக உயர் இரத்த அழுத்தப் பாதிப்பு உள்ளவர்கள் கண்டிப்பாக தங்களை மருத்துவரிடம் காட்டி பரிசோதித்துக் கொள்வது மிக மிக அவசியம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக