சர்வதேச அருங்காட்சியக தினம் மே 18
ஒவ்வொரு ஆண்டும் மே 18ஆம் தேதி உலகளாவிய ரீதியில் சர்வதேச அருங்காட்சியக தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
அருங்காட்சியகங்களின் முக்கியத்துவத்தை மக்களுக்கு உணர்த்துவதற்கும் அதேபோல் இதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும்இ இத்தினம் 1977ஆம் ஆண்டுமுதல் கொண்டாடப்படுகின்றது
.
சர்வதேச அருங்காட்சியக தினம்
ஒவ்வொரு ஆண்டிலும் மே 18ம் தேதி உலகலாவிய ரீதியில் சர்வதேச அருங்காட்சியக தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.ஒரு சமூகத்தின், ஒரு தேசத்தின் மரபுரிமைகளைப் பேணி பாதுகாப்பதில் அருங்காட்சியகத்தின் பணி மிக முக்கியமானது.அதன் பரிமாணத்தை அளவிட முடியாது. கால காலங்களாக வரலாற்று மாற்றங்களின் சாட்சியங்களாக விளங்கும் அருங்காட்சியகங்கள் நாளைய சந்ததியின் விலை மதிக்க முடியாத சொத்துக்கள் நவீன உலகின் மிகப் பெரிய அருங்காட்சியகம் லண்டனிலுள்ள பிரிட்டிஷ் அருங்காட்சியகமாகும். உலகிலுள்ள ஒவ்வொரு நாடுகளிலும் பொதுவாக தேசிய அருங்காட்சியகங்கள் காணப்படுகின்றன. இந்த அருங்காட்சியகங்கள் பொதுப்படையாக அன்றேல் பல்வேறுபட்ட அலகு ரீதியாக அமைந்திருக்கும். இன்றைய உலகில் பல்வேறு நாடுகளில் தனியார் அருங்காட்சியகங்களும் காணப்படுகின்றன.
அருங்காட்சியகங்களின் முக்கியத்துவத்தை மக்களுக்கு உணர்த்துவதற்கும் அதே போல இதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், சர்வதேச அருங்காட்சியக தினம் 1977ஆம் ஆண்டு முதல் உலகம் பூராகவும் கொண்டாடப்படுகின்றது. ஒவ்வொரு வருடமும் இதற்கான கருப்பொருள் இதன் ஆலோசனைக்குழுவினால் தீர்மானிக்கப்படும். 2009 ம் ஆண்டுக்கான கருப்பொருள் “அருங்காட்சியகங்களும் சுற்றுலாத்துறையும்" என்பதாகும்.1992; ஆண்டு முதல் சர்வதேச அருங்காட்சியக தினம் ஒவ்வொரு ஆண்டுகளிலும் பின்வரும் கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு அனுஷ்டிக்கப்பட்டது.
2009 "Museums and tourism"
2008 "Museums as agents of social change and development"
2007 "Museums and Universal Heritage"
2006 "Museums and young people"
2005 "Museums bridging cultures"
2004 "Museums and Intangible Heritage"
2003 "Museums and Friends"
2002 "Museums and Globalisation"
2001 "Museums: building community"
2000 "Museums for Peace and Harmony in Society"
1999 "Pleasures of discovery"
1998-1997 "The fight against illicit traffic of cultural property"
1996 "Collecting today for tomorrow"
1995 "Response and responsibility"
1994 "Behind the Scenes in Museums"
1993 "Museums and Indigenous Peoples"
1992 "Museums and Environment"
சமூகத்திற்கும், அதன் விருத்திக்கும் சேவையாற்றும் ஒரு நிறுவனம் என்ற அடிப்படையில் அருங்காட்சியகங்கள் எதிர்நோக்கும் சவால்கள் பற்றி பொது மக்களைச்சந்தித்து அவர்களின் கவனத்தைச் செலுத்தமாறு இத்துறை சார்ந்தோர் வலியுறுத்தி வருகின்றனர்.
அருங்காட்சியகங்கள் தொடர்பான கொண்டாட்ட நிகழ்வுகள் இது குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தக்கூடிய போட்டி நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள், கலை நிகழ்வுகள் போன்றன மே மாதம் 18ம் திகதியே நடாத்த வேண்டும் என சிபார்சு செய்யப்பட்டள்ளது. ஒவ்வொரு நாட்டிற்கும் உரிய சம்பிரதாயங்கள் சூழ்நிலைகளுக்கு ஏற்ப அவர்களது நிகழ்ச்சிகளை நடத்த முடியும். கலாசாரப்பரிமாற்றம் அவை பற்றிய அன்னியோன்ய புரிந்துணர்வு, ஒத்துழைப்பு, மக்களிடையே சமாதானம் போன்றவற்றை அருங்காட்சியகங்களால் ஏற்படுத்த முடியும்.
உலக அருங்காட்சியக நாள் ( International Museum Day ) மே 18
உலகின் மிகப் பிரம்மாண்டமான கலைப் பெட்டகம் "பிரிட்டிஷ் அருங்காட்சியகம்"
உலக வரலாற்றின் 80 லட்சத்திற்கும் மேலான சேகரிப்பை தன்னகத்தே வைத்திருக்கும் ஒரு பிரம்மாண்டமான கலைப் பெட்டகம் பிரிட்டிஷ் அருங்காட்சியகம்.
மனிதன் உருவான காலத்திலிருந்து இப்போது வரையிலான வரலாறு, கலை, கலாச்சாரம் தொடர்பான ஆதாரங்களையும், வேலைப்பாடமைந்த வினோத பொருள்களையும், கதை ஆவணங்களையும் அதிக அளவிலும் விரிவான முறையிலும் விளக்கும் உலக வரலாற்றின் ஒரு வாழ்விடம் என்றே இந்த அருங்காட்சியத்தை சொல்லலாம்.
பிரிட்டனின் டாப் 15 அருங்காட்சியகங்கள் இவை தான்!
பிரிட்டன் நாடு அருங்காட்சியகங்களுக்கு பெயர் பெற்றதாகும். கலாச்சாரம், விளையாட்டு, மீடியாக்கள் ஆகிய துறைகள் கொண்ட அருங்காட்சியகங்கள், புகைப்பட காட்சியகங்கள் ஆகியவைகளின் முன்னணி பட்டியல் வெளியாகியுள்ளது.
பார்வையாளர்களின் எண்ணிக்கையை பொறுத்தவரையில் போன வருடத்தை விட இந்த வருடம் மூன்று மில்லியன் அளவுக்கு குறைந்துள்ளது.
இந்த பட்டியலில் பிரிட்டீஷ் அருங்காட்சியகம் முதல் இடத்தை பிடிக்கிறது.
முதல் 15 இடங்களுக்கான பட்டியல் :
1. British Museum
2. National Gallery
3. Tate Modern
4. Natural History Museum
5. Science Museum
6. V&A Museum
7. Royal Museums Greenwich
8. National Portrait Gallery
9. White Tower
10. Tate Britain
11. IWM London
12. Horniman Museum
13. Science National Railway
14. Science and Industry Manchester
15. Tate Liverpool
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக