ஞாயிறு, 6 மே, 2018

தமிழக காங்கிரஸ் தலைவர் சு. திருநாவுக்கரசர் பிறந்த தினம் மே 7, 1949.



 தமிழக காங்கிரஸ் தலைவர் சு. திருநாவுக்கரசர் பிறந்த தினம் மே 7, 1949.

திருநாவுக்கரசர் (Su. Thirunavukkarasar) ஓர் தமிழக அரசியல்வாதி ஆவார்.
புதுக்கோட்டை மாவட்டம் , தீயத்தூர் கிராமத்தில் 1949 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் முதுகலைகளில் கலை மற்றும் சட்ட இளங்கலை பட்டம் பெற்றார்.

சு. திருநாவுக்கரசர்
தொகுதி அறந்தாங்கி (சட்டமன்றத் தொகுதி)
தனிநபர் தகவல்
பிறப்பு மே 7, 1949 (அகவை 68)
தீயத்தூர் , புதுக்கோட்டை , தமிழ்நாடு,
இந்தியா
அரசியல் கட்சி இந்திய தேசிய காங்கிரசு
வாழ்க்கை துணைவர்(கள்) ஜெயந்தி
பிள்ளைகள் மூன்று மகன்கள், இரண்டு மகள்கள்
இருப்பிடம் சென்னை
கல்வி முதுகலைகளில் கலை மற்றும் சட்ட இளங்கலை

1977 முதல் தொடர்ந்து ஆறுமுறை அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இவர் 1977 முதல் 1980 வரை துணை சபாநாயகராகவும்,1980 முதல் 1987 வரை
எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் பல்வேறு துறை அமைச்சராகவும் இருந்தவர்.
அ.தி.மு.க.வில் இருந்து விலகிய இவர்
பாரதீய ஜனதா கட்சியில் இணைந்து மத்தியில் தகவல் தொடர்பு இணை அமைச்சராக பதவி வகித்தார். ஒருமுறை மக்களவை உறுப்பினராகவும், ஒருமுறை மாநிலங்களவை உறுப்பினராகவும் பதவி வகித்தார்.
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் இணைந்து அதன் தேசிய செயலாளராக பணியாற்றிய இவர், தற்போது தமிழக காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக