புதன், 30 மே, 2018

உலக புகையிலை எதிர்ப்பு தினம் மே 31.


உலக புகையிலை எதிர்ப்பு தினம் மே 31.

உலக புகையிலை எதிர்ப்பு நாள் உலகெங்கும் மே 31 ஆம் நாளன்று கொண்டாடப்பட்டு வருகிறது. உலக சுகாதார நிறுவனத்தின் உறுப்பு நாடுகள் சேர்ந்து இந்நாளை
1987ம் ஆண்டில் சிறப்பு நாளாக அறிவித்தது. உலகில் மனித இறப்புகளைத் தோற்றுவிக்கும் முக்கிய காரணிகளில் புகையிலை இரண்டாவது இடத்தை வகிக்கிறது. இச்சிறப்பு நாளின் அறிவிப்பு மூலம் உலக சுகாதார நிறுவனம் ஆண்டுதோறும் புகையிலை சம்பந்தமான சுமார் 3.5 மில்லியன் இறப்புகளைக் குறைக்க முடியும் என எதிர்பார்க்கிறது.


'உலக புகையிலை எதிர்ப்பு தினம்'...இந்த ஆண்டிற்கான தீம் 'ப்ளெயின் பேக்கேஜிங்!' #WorldNoTobaccoDay
இ ன்று, "உலக புகையிலை எதிர்ப்பு தினம்". புகையிலை உபயோகத்தைக் கட்டுப்படுத்துவதற்காக, ஒவ்வொரு ஆண்டும், உலக சுகாதார அமைப்பு புகையிலை உபயோகத்தைக் குறைக்க பல்வேறு விழிப்புணர்வு முகாம்களை நடத்தி வருகிறது.
ஒவ்வோர் ஆண்டும், ஏதாவதொரு 'தீம்'-ஐ மையப் படுத்தியே இந்த தினம் குறிக்கப்படுகிறது. அந்த தீமில் கூறப்பட்டுள்ளது கடைபிடிக்கப்பட வேண்டும். 2015 ஆம் ஆண்டின் தீம் "புகையிலைப் பொருட்களின் சட்ட விரோத வர்த்தகத்தை தடை செய்வது" (Stop illicit trade of tobacco products) என்பதாகும். உலகளவில் உபயோகிக்கப்படும் பத்தில் ஒரு சிகரெட், சட்டவிரோதமாகக் கொண்டு வரப்படுவதாகும்.
இளைஞர்களை தன் வலைக்குள் விழ வைக்க, மிகக் குறைந்த விலையில் இப்புகையிலைப் பொருட்கள் விற்கப்படுகின்றன. மேலும், அரசை ஏமாற்றுவது, அதிக விலையில் விற்பது, போலியான பொருட்களை விற்பது எனப் பல பிரச்னைகள் உள்ளன. இவற்றை எல்லாம் முடிவுக்கு கொண்டு வர இந்த முடிவு எடுக்கப்பட்டது.


இந்த ஆண்டிற்கான தீம் "Plain packaging".
இப்படிச் செய்வதற்கான முக்கியமான காரணம் , plain packaging புகையிலை பொருட்களின் கவர்ச்சியைக் குறைக்கிறது; புகையிலை விளம்பரங்களை ஒரு கட்டுக்குள் கொண்டு வருகிறது; மேலும், நமக்கான எச்சரிக்கை உணர்வை அது மேலும் அதிகரிக்கிறது.
இனி புகையிலைப் பொருட்களின் அட்டைகளில், நிலையான நிறம் மற்றும் நடையில் மட்டுமே எழுத்துக்கள் இருக்கும் (Standard styles and fonts). பிராண்டின் பெயர், தயாரிப்பாளரின் பெயர் மற்றும் லோகோ தவிர பிற விளம்பர தகவல்கள் ஏதும் இனி அட்டையில் இடம்பெறாது.
புகையிலையைக் கட்டுப்படுத்த பல நிலைகளில் எடுக்கப்படும் முயற்சிகளில் இதுவும் ஒன்று. இந்த plain packaging முறையை நம் அரசு நடைமுறைப் படுத்துகிறதா என்பதை நம் சமூக ஆர்வலர்களும், பொது மக்களும் கவனித்துக்கொள்ள வேண்டும்.
2012 ஆம் ஆண்டு டிசம்பரில், முதன் முதலில் ஆஸ்திரேலியா முற்றிலுமாக அனைத்து புகையிலைப் பொருட்களுக்கும் plain packaging முறையைக் கொண்டு வந்தது. இதேபோல், 2015-ல் அயர்லாந்து, இங்கிலாந்து, பிரிட்டன் மற்றும் பிரான்சு ஆகிய நாடுகளில் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டது. பல நாடுகளில் இத்திட்டத்தை அமல்படுத்த பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், உலகளவில் இத்திட்டத்தைக் கொண்டு வர, இதை மையப்படுத்தி இந்த ஆண்டின் "உலக புகையிலை எதிர்ப்பு தினம்" அமையப் போகிறது.
2016 WNTD (World No Tobacco Day)க்கான இலக்குகள்...
புகையிலைக் கட்டுப்பாட்டின் விரிவான அணுகுமுறையின் ஒரு பகுதியாக Plain packaging முன்னிலைப்படுத்தப்படப் போகிறது.


#சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினம்: புகைப்பழக்கத்தில் முதலிடத்தில் இருக்கும் நாடு எது தெரியுமா?

உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வின் அடிப்படையில், புகைப்பழக்கத்தில் சீனா முதலிடத்தில் உள்ளது.
 உலகம் முழுவதிலும் புகை பிடிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. அநேக மக்களின் மரணங்களுக்கு புகைப்பழக்கம் ஒரு காரணியாக இருப்பதாக, மருத்துவ ஆராய்ச்சியாளர்களும் கூறிவருகின்றனர். இந்நிலையில், உலக சுகாதார நிறுவனம் (WHO), புகைப்பழக்கம் அதிகம்கொண்ட நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. மே 31ஆம் தேதி, உலக புகையிலை தினம் கடைபிடிக்கப்படுகிறது. அதை முன்னிட்டு இந்த ஆய்வுப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் சீனா முதலிடத்தில் உள்ளது. சீனாவில் தனி நபர், ஒரு வருடத்தில் 4,124 சிகரெட்டுகளைப் புகைப்பது தெரியவந்துள்ளது. பெலாரஸ் 2-வது இடத்திலும் லெபனான் 3-வது இடத்திலும் உள்ளன. இந்தப் பட்டியலில், இந்தியா 159-வது இடத்தில் உள்ளது. நன்றி விகடன்.


ஆரோக்கியம் காக்க வழி : இன்று உலக புகையிலை எதிர்ப்பு தினம்

உலகம் முழுவதும் ஆண்டு தோறும் மே 31ம் தேதி சர்வதேச புகையிலை இல்லா தினமாக அனுசரிக்கப்படுகிறது. இதனை உலக சுகாதார நிறுவனம் 1887 ல் அறிவித்தது. உலக அளவில் புகைப் பழக்கம் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் புகையிலையை மெல்லுவது, புகையிலை பொருட்கள் கலந்த பான், பாக்கு, மூக்குப்பொடி, பீடி, சிகரெட் போன்றவற்றை நுகர்வதை காண முடிகிறது.புகையிலை பொருட்களால் ஆண்டுதோறும் 60 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். இவர்களில் 10 லட்சம் பேர் இந்தியர்கள். புகையிலையினால் ஏற்படும் வாய்புற்றுநோய், லட்சத்தில் 10 பேரை பாதிக்கிறது. 'வரும் 2020 ல் இந்தியாவில் 13 சதவீத மரணங்கள் புகையிலை பழக்கத்தால் அமையும்' என புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.உலகில் 47 சதவீத ஆண்களும், 12 சதவீத பெண்களும் புகைப்பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார்கள்.
இந்தியாவில் 53 சதவீத ஆண்களும், 3 சதவீத பெண்களும் புகைப்பழக்கம் உள்ளவர்கள்.
மலட்டுத்தன்மை: எய்ட்ஸ், காசநோய், வாகன விபத்துக்கள் போன்றவற்றால் ஏற்படும் மரணத்தை விட புகையிலை பழக்கத்தால் ஏற்படும் மரணம் அதிகம். புகை பிடிப்பதன் மூலம் வாய், நுரையீரல், சிறுநீரகம், மார்பகம் பாதிக்கப்பட்டு புற்றுநோய், ஆஸ்துமா, காசநோய், இதயநோய், உயர் ரத்த அழுத்தம், செவிட்டுத்தன்மை, மலட்டுத்தன்மை போன்ற பல நோய்கள் வருகின்றன.
* வாய், தொண்டை, நுரையீரல், வயிறு, சிறுநீரகம், சிறுநீர்ப்பையில் புற்றுநோய் ஏற்பட புகையிலை காரணமாகிறது.
* புகையிலையால் ஏற்படுகிற வாய் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இந்தியாவில்தான் அதிகம்.
* இந்தியாவில், ஆண்கள் மற்றும் பெண்களுக்கு ஏற்படும் புற்று நோய்களுக்கு, முறையே ௫௬ சதவீதம் மற்றும் ௪௫ சதவீதம் புகையிலை காரணமாக இருக்கிறது.


* 90 சதவீதத்திற்கும் மேலாக நுரையீரல் புற்றுநோய் மற்றும் பிற நுரையீரல் நோய்களை, புகைப்பழக்கம் ஏற்படுத்துகிறது.
* இதயம் மற்றும் ரத்தக்குழாய் நோய்களான மாரடைப்பு, மார்புவலி, பக்கவாதம், கால்களில் ஏற்படும் காங்கரின் எனப்படும் புற ரத்தக்குழாய் நோய்கள் போன்றவை ஏற்பட புகையிலை காரணமாகிறது.
* இந்தியாவில் 82 சதவீத, நுரையீரல் சுவாசக்குழாய் அடைப்பு நோய் புகைப்பிடித்தல் மூலம் வருகிறது.
* புகையிலை மறைமுகமாக நுரையீரல் காசநோயை (டி.பி.,) ஏற்படுத்துகிறது. புகைப்பவர்களுக்கு டி.பி., ஏற்படும் வாய்ப்பு மூன்று மடங்கு அதிகம்.
* திடீரென ரத்த அழுத்தத்தினை அதிகரிக்கிறது. இதயத்திற்கு செல்லும் ரத்தத்தின் அளவினை குறைக்கிறது.
* கால்களுக்கு செல்லும் ரத்த ஓட்டத்தை குறைக்கிறது.
* உடல் முழுவதும் உள்ள தமனி எனப்படும் ரத்தத்தை ஏந்திச் செல்லும் ரத்த குழாய் சுவர்களை சேதப்படுத்துகிறது.
* சர்க்கரை நோய் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது.
* ரத்தத்தில் உள்ள நன்மை தரக்கூடிய கொழுப்பின் அளவை குறைக்கிறது.
* புகையிலை நுகர்வதால் ஒவ்வொரு 8 வினாடிகளிலும் ஒரு மரணம் நிகழ்கிறது.
* புகையிலையை தவிர்ப்பதால் ஒருவரின் ஆயுள் 20 ஆண்டுகள் கூடுகிறது.
* பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் என்னும் ஹார்மோன் சுரப்பதை குறைக்கிறது. மாதவிடாய் விரைவாக நின்று விடுகிறது.
* புகைக்கும் பெண்கள், கர்ப்பத்தடை மாத்திரைகளை பயன்படுத்தும் போது பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.
* குறைந்த எடையுடன், வளர்ச்சியில் கோளாறு உள்ள, குழந்தை பிறக்கும் வாய்ப்பு உள்ளது. பிறந்த குழந்தை திடீரென இறக்க வாய்ப்பு உள்ளது.
2-வது இடம்
புகைப்பழக்கம், புற்றுநோய், இதய நோய் ஆகியவற்றை 30 சதவீதம் அதிகரித்திருக்கிறது. தினம் ஒரு சிகரெட் பிடித்தால் ஒருவரின் ஆயுளில் தினமும் 5 நிமிடங்கள் குறைகிறது. புகைப்பிடிப்பதால் அல்லது பிறர் பிடிக்கும் சிகரெட், பீடி புகையை நுகர்வதால் இருமல், சளி, உருவாகி ஆஸ்துமா வருகிறது. ஆஸ்துமா இருப்பவர்கள் புகைத்தால் அது மேலும் தீவிரமாகிறது. இறுதியில், மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிருக்கே உலை வைக்கிறது. புகைப் பழக்கம் கொண்டவர்களின் பட்டியலில் இந்தியா 2வது இடத்தில் உள்ளது. 'புகையிலை இல்லா தினம்' அனுசரிக்கப்படுவதன் முக்கிய நோக்கம், புகையிலையினால் ஏற்படும் பாதிப்பு மற்றும் இறப்பினை பெருமளவு குறைக்க வேண்டும் என்பதுதான்.


உடனடி நிவாரணம் புகையிலையில் இருக்கும் நிக்கோட்டின் என்ற ரசாயனம், மூளைக்கு சென்று 'நன்றாக இருக்கிறது' என்ற உணர்வை ஏற்படுத்தி, அதை பயன்படுத்துபவர்களை அந்த பழக்கத்திற்கு அடிமையாக்கி விடுகிறது. புகையிலைப் பொருட்களை பயன்படுத்துவதால், எத்தனை வருடங்களில் பாதிப்பு ஏற்படும் என்று சொல்ல முடியாது. அவரவர் உடலமைப்பு, நோய் எதிர்ப்பு சக்தியை பொறுத்து ஓரிரு வருடங்களில் அல்லது 20 முதல் 25 ஆண்டுகள் கழித்து கூட பாதிப்புகள் ஏற்படலாம். ஆனால், புகைப்பழக்கத்தை நிறுத்தியதும், உடனடியாக அதன் பாதிப்புகள் விலகத் தொடங்குகிறது. அதனால் புகையிலை பழக்கத்தை தவிர்ப்பது, நல்லது. அதனை விட்டொழிக்க, முதலில் மனதை கட்டுப்படுத்த பழகிக்கொள்ள வேண்டும்.சிகரெட்டை நிறுத்த
1. உங்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி 'நிக்கோட்டின் ரீப்பிளேஸ்மென்ட் தெரபி' சிகிச்சை பெறலாம்.
2 சிகரெட் பிடிப்பவர்களோடு சேராமல் எப்போதும் பிசியாக இருப்பதுபோல் வேலை வைத்துக் கொள்ள வேண்டும்.
3 வேறு வேலை இல்லாத நேரத்தில் தான் பெரும்பாலும் சிகரெட் புகைக்க தோன்றும். இந்த நேரத்தில் உடற்பயிற்சி செய்யுங்கள்.
3 சிகரெட் பிடிக்காத நண்பர்களுடன் வெளியில் செல்லுங்கள். இது, உங்களுக்கு சிகரெட் பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தை நீக்கும்.
5 . பாக்கு போடும் எண்ணம் தோன்றும் போதெல்லாம், அதற்கு பதிலாக உடலுக்கு நலம் தரும் உலர் திராட்சை, பேரிச்சம்பழம், கிராம்பு போன்ற பொருட்களில் ஏதாவது ஒன்றை வாயில் போட்டு சுவைக்கலாம்.
சுய நன்மைகள்
புகையிலையை தவிர்ப்பதால் உடலில் ஏற்படும் நன்மைகள்
* உங்களுக்கு புற்றுநோய் மற்றும் இதய நோய் ஏற்படும் ஆபத்து குறைகிறது.
* உங்கள் இதயத்தில் ஏற்படும் அழுத்தம் குறைகிறது.
* நீங்கள் நேசிக்கும் நபர் புகையிலையினால் பாதிக்கப்பட மாட்டார்.
* புகைப்பழக்கத்தினால் ஏற்படும் சளி மற்றும் இருமல் மறையும்.
* உங்கள் பற்கள் வெண்மையாகவும், சுத்தமாகவும் மாறும்.சமுதாய நன்மைகள்
* நீங்கள் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் ஒரு நபராக இருப்பின் சிகரெட் உங்களை கட்டுப்படுத்தாது.
* உங்கள் சுய தோற்றம், சுயநம்பிக்கை வளரும்.
* இப்போதும், எதிர்காலத்திலும் நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல பெற்றோராக இருப்பீர்கள்.
* புகையிலை தவிர்ப்பதால் மிஞ்சும் பணம் வீட்டிற்கும், நாட்டிற்கும் பயனுள்ளதாக இருக்கும்.
உலக மக்களின் ஆரோக்கியத்தை பாதிப்புள்ளாக்கும் புகையிலை பயன்பாட்டை நாம் எளிதாக தவிர்க்க முடியும். அதற்கு தேவை மன திடமும்,
தன்னம்பிக்கையும் தான். இதன் மூலம் நாம் ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க முடியும். எனவே, புகையிலை பயன்பாட்டை
தவிர்ப்போமாக!
-டாக்டர் பழனியப்பன்,நுரையீரல் சிகிச்சை நிபுணர், நன்றி தினமலர்.


வேண்டாம் புகையிலை, வேண்டாம் புற்றுநோய்‘: இன்று உலக புகையிலை எதிர்ப்பு தினம்

 இன்று உலக புகையிலை எதிர்ப்புத்தினம் ஆகும்.
உலகம் முழுவதும் வருடந்தோறும் மே, 31 ஆம் தேதி சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினம் ஆக(World No Tobacco Day) அனுசரிக்கப்படுகிறது.
இந்நன்நாளில், சில சமூக அமைப்புகள் புகையிலை பயன்படுத்துவதால், புகை பிடிப்பதால் ஏற்படும் புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள் பற்றி பொது மக்களிடம் எடுத்துச் சொல்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.
அவர்கள் எலும்புக்கூடு முகமூடி அணிந்துக் கொண்டு, புகை, மற்றும் மது குடிப்பதால் ஏற்படும் அபாயங்களை விளக்குகிறார்கள்.

உலக சுகாதார நிறுவனம்....
கடந்த 1987 இ ல் உலக சுகாதார நிறுவனம் ( WHO) மே - 31 ஆம் நாளை உலக புகை எதிர்ப்பு தினமாக அறிவித்தது.
புள்ளி விவரம்...
ஆண்டுதோறும் சுமார் 55 லட்சம் பேர் புகைப் பழக்கத்தால் இறந்து வருகிறார்கள். இவர்களுள் 10 லட்சம் பேர் இந்தியர்கள். 15 வயதிற்கு மேற்பட்ட ஆண்களில் 57% பேரும், பெண்களில் 10.8% பேரும் புகையிலையை ஏதோ ஒரு வடிவில் உபயோகிக்கின்றனர். புகையிலையினால் ஏற்படும் வாய்புற்று நோய் லட்சத்திற்கு இந்தியாவில் 10 பேரை பாதிக்கிறது. 2020 - ம் ஆண்டில் இந்தியாவில் 13% மரணங்களுக்கு புகையிலை பழக்கம் காரணமாக அமையும் என புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
புகை அடிமைகள்...
உலகில் ஆண்கள் 47%, பெண்கள் 12% புகைப் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார்கள். வளர்ந்த நாடுகளில் 42% ஆண்களும் 24% பெண்களும், வளரும் நாடுகளில் 48% ஆண்களும் 7% பெண்களும் புகைபிடிக்கிறனர். இந்தியாவில் 53% ஆண்களும் 3% பெண்களும் (குறிப்பாக வயது வந்த இளம் பெண்கள்) புகைப்பழக்கத்திற்கு அடிமையாக இருப்பதாகத் தகவலகள் தெரிவிக்கின்றன.
அதிக மரணங்கள்...
எய்ட்ஸ் நோய் (எச்.ஐ.வி.), காசநோய், வாகன விபத்துகள், தற்கொலைகள், கொலைகள் போன்றவற்றால் ஏற்படும் மரணத்தைவிட புகையிலையினால் ஏற்படுவது அதிகமாக இருக்கிறது.
அபாயகரமான பாதிப்பு...
புகைபிடிப்பது மூலம் வாய், நூரையீரல், சிறுநீரகம், மார்பகம் ஆகியவற்றில் புற்றுநோய், ஆஸ்துமா, காசநோய், இதயநோய், உயர் ரத்த அழுத்தம், செவிட்டுத் தன்மை, மலட்டுதன்மை என பல நோய்கள் வருகின்றன.


இளமையில் புகை....
தொடர் புகைப் பழக்கத்தால் நுரையீரல் புற்றுநோய் விரைவிலேயே வருகிறது. புற்று நோய், இதய நோய் ஆகியவற்றை புகைப் பழக்கம் 30 சதவீதம் அதிகரிக்கிறது என்று கண்டறியப்பட்டிருக்கிறது. புகைப் பழக்கத்திற்கு உலகம் முழுவதும் 115 (2011 நிலவரப்படி) கோடிக்கும் மேலானவர்கள் அடிமையாகியுள்ளனர். உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் 15 வயதிற்கு மேற்பட்டவர்களான இவர்கள்தான் அதிகமாக புகை பிடிக்கிறார்களாம்.
குறையும் ஆயுள்...
தினம் ஒரு சிகரெட் பிடித்தால் ஒருவரின் வாழ்க்கையில் தினமும் 5 நிமிடங்கள் குறைவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.. புகை பிடிப்பதால் அல்லது பிறர் பிடிக்கும் சிகரெட், பீடி ஆகியவற்றின் புகையை நுகர்வதால் இருமல், சளி உருவாகி ஆஸ்துமா பிரச்சனை வருகிறது. ஆஸ்துமா இருப்பவர்கள் புகை பிடித்தால், அது ஆஸ்துமாவை மேலும் அதிகரித்து, மூச்சுத் திணறலை உருவாக்கி உயிருக்கே உலை வைக்கிறது. கர்ப்பிணி பெண்கள் புகைபிடித்தால் அது கர்ப்பத்தில் இருக்கும் சிசுவை பாதிக்கும்.
ஆர்வக்கோளாறுகள்...
ஆர்வக் கோளாறுகள் சிலர், பெற்றோர், உறவினர், நண்பர்கள், திரைப்பட நட்சத்திரங்கள் போன்றவர்களை பார்த்துப் புகைபிடிக்கிறார்களாம். ஒருவர் புகை பழக்கத்தை நிறுத்தினால் இதய நோய், நுரையீரல் புற்றுநோய், நுரையீரல் நோய்கள், வலிப்பு நோய் போன்றவை படிப்படியாக குறையும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.



15 ஆண்டுகள் ஆகும்...
புகை பழக்கத்தைக் கை விட்டு 10 - 15 ஆண்டுகள் கழித்துதான் மனிதன் முழு ஆரோக்கியம் பெறுகிறான். அது வரைக்கும் அதன் பாதிப்பு உடலுக்குள்ளே இருந்துக் கொண்டேதான் இருக்கும்
வெளிநாட்டில் அரிது...
தாய்லாந்து, தைவான், மலேசியா போன்ற நாடுகளில் வயது வந்தோருக்கு மட்டுமே கண்டிப்பாக பீடி, சிகரெட் போன்றவை விற்பனை செய்ய வேண்டும் என்று சட்டம் இருக்கிறது. அது தீவிரமாகவும் அமல்படுத்தப்படுகிறது. இதனால், அங்கு சிறுவர்கள் புகைப்பது என்பது அரிதாகவே காணப்படுகிறது.
கள்ள மார்க்கெட்...
இந்தியாவில் சட்டம் என்ன தான் போட்டாலும், பெரும்பாலான வியாபாரிகள், வருமானத்தை மட்டுமே பார்க்கிறார்கள். எந்த ஒரு வருமானமும் நியாமானதாக இருக்க வேண்டும் என்று வியாபாரிகள் செய்தால் இது போல் செய்ய மாட்டார்கள்.
இதுலயும் ரெண்டாவது இடம்...
புகை பிடிப்பவர்களை அதிக அளவில் கொண்டுள்ள நாடுகளில் உலகில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. உலக அளவில் ஆரோக்கிய பராமரிப்புக்காகக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 9 சதவிகிதம் செலவிடப்படுகிறது. அதேநேரத்தில், இந்தியாவில் இது வெறும் 3% ஆக இருக்கிறது.
மனது வைத்தால் சாத்தியமே...
புகை பிடிப்பதை நிறுத்துவது என்பது ரொம்ப கஷ்டமான காரியமல்ல. மனதிருந்தால் மார்க்கமுண்டு. புகை பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றும் போது நூலகம், கோவில், தியானம் என்று மனதை திசை மாற்ற பழகிக் கொண்டாலே போதும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக