எழுத்தாளர் அசோகமித்ரன் காலமானார் மார்ச் 23 .
சாகித்ய அகாடமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர் அசோகமித்ரன் காலமானார்
வியாழன், 23 மார்ச் 2017 .
பிரபல தமிழ் எழுத்தாளர் அசோகமித்ரன் சற்று முன்னர் காலமானார். அவருக்கு வயது 86. கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த அசோகமித்ரன் சிகிச்சையின் பலனின்றி சற்று முன்னர் காலமானார்.
தியாகராஜன் என்ற இயற்பெயர் கொண்ட அசோகமித்திரன் கடந்த 1931 ஆம் ஆண்டு ஆந்திர மாநிலத்தில் உள்ள செகந்திராபாத் நகரத்தில் பிறந்தவர். தந்தையின் மறைவிற்கு பிறகு தனது 21ஆம் வயதில் சென்னைக்கு குடியேறிய அவர். எளிமையும், மெல்லிய நகைச்சுவையும் கொண்டவர். இவருடைய எழுத்து. தமிழ் இலக்கியத்துக்கு உலக அளவில் அங்கீகாரம் பெற்றுத் தந்தவை என்று கூறினால் அது மிகையாகாது. அமெரிக்க இலக்கியங்களைத் தமிழில் அறிமுகம் செய்த தனிப்பெருமை இவருக்குரியது. இவரது நாவல்கள் ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. தமிழ் மட்டுமின்றி ஆங்கில நாளிதழ்களில் தொடர்ந்து எழுதி வரும் அசோகமித்திரன், அயோவா பல்கலைக்கழகத்தில் எழுத்தாளர்களுக்கான சிறப்புப் பயிலரங்கில் கலந்து கொண்டவர். இவர் எழுதிய நாடகத்தின் முடிவு, வாழ்விலே ஒருமுறை, விமோசனம் விடுதலை, காலமும் ஐந்து குழந்தைகளும், முறைப்பெண், சினேகிதர் மற்றும் மானசரோவர் உள்பட பல நாவகள் புகழ்பெற்றவை. அசோகமித்ரன் எழுதிய 'அப்பாவின் சிநேகிதர்' என்னும் சிறுகதை தொகுப்புக்கு 1996 ஆம் ஆண்டு சாகித்திய அகாதெமி விருது கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அசோகமித்திரன், தமிழின் சிறந்த எழுத்தாளர்களுள் ஒருவர். தியாகராஜன் என்ற இயற்பெயர் கொண்ட அசோகமித்திரன் 1931 ஆம் ஆண்டு ஆந்திர பிரதேசத்தில் உள்ள செகந்திராபாத் நகரத்தில் பிறந்தவர். தந்தையின் மறைவிற்கு பிறகு தனது 21ஆம் வயதில் சென்னைக்கு குடியேறினார் . எளிமையும், மெல்லிய நகைச்சுவையும் கொண்டது இவருடைய எழுத்து. தமிழ் இலக்கியத்துக்கு உலக அளவில் அங்கீகாரம் பெற்றுத் தந்தவை இவரது கதைகள். அமெரிக்க இலக்கியங்களைத் தமிழில் அறிமுகம் செய்த தனிப்பெருமை இவருக்குரியது. இவரது நாவல்கள் ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ஆங்கில நாளிதழ்களில் தொடர்ந்து எழுதி வரும் அசோகமித்திரன், அயோவா பல்கலைக்கழகத்தில் எழுத்தாளர்களுக்கான சிறப்புப் பயிலரங்கில் கலந்து கொண்டவர்.
1996 இல் அப்பாவின் சிநேகிதர் சிறுகதை தொகுப்புக்காக சாகித்ய அகாதமி விருது பெற்றவர். இவரது படைப்புகள் பெரும்பாலும் சென்னை அல்லது ஹைதராபாத்தை கதைக்களமாக கொண்டு அமைந்திருக்கும். சாதாரணமான கதாபாத்திரங்களின் மூலம் அசாதாரண கருத்துக்களை வெளிப்படுத்துவதாக இவரது படைப்புகள் அமைந்திருக்கும் என்று ஒரு கருத்தும் உள்ளது.
ஆக்கங்கள்
சிறுகதைகள்
நாடகத்தின் முடிவு
வாழ்விலே ஒருமுறை
விமோசனம் விடுதலை
காலமும் ஐந்து குழந்தைகளும்
முறைப்பெண்
சினேகிதர்
பிப்லப் சௌதுரியின் கடன் மனு
நாவல்கள்[தொகு]
பதினெட்டாவது அட்சக்கோடு
தண்ணீர்
இன்று
ஆகாசத்தாமரை
ஒற்றன்
மானசரோவர்
கரைந்த நிழல்கள்.
குறுநாவல்கள்
இருவர்
விடுதலை
தீபம்
விழா மாலைப் போதில்
பிற[தொகு]
அசோகமித்திரன் கதைகள் தொகுப்பு 1&2
கட்டுரைகள்
அசோகமித்திரன் கட்டுரைகள் தொகுப்பு 1&2
தகைமைகளும் விருதுகளும்
இவருக்குப் பல தகைமைகளும் விருதுகளும் கிடைத்துள்ளன. அவற்றில் சில கீழே தரப்படுகின்றன:
இவருக்குத் தமிழ்நாடு அரசு பரிசுகள் மும்முறையும் இலக்கியச் சிந்தனை விருதுகள் 1977 இலும் 1984 இலும் இருமுறையும் கிடைத்துள்ளன
இவருக்கு இந்திய இலக்கியத்தை ஒப்பீடு செய்யும் ஆய்வுக்கு கே.கே. பிர்லா நல்கை கிடைத்தது. மேலும் 1973-74 இல் அயோவா பல்கலைக்கழகத்தின் படைப்பிலக்கிய நல்கையும் கிடைத்தது.
லில்லி நினைவுப் பரிசு, 1992
இவருக்கு 1993 இல் இராமகிருஷ்ணா ஜெய்தயாள் அமைதி விருது டால்மியா அறக்கட்டளையால் தரப்பட்டது.
அக்ட்சரா விருது, 1996.
இவரது அப்பாவின் சிநேகிதர் எனும் சிறுகதை தொகுப்புக்கு 1996 இல் சாகித்திய அகாதெமி விருது கிடைத்தது.
இவர் 2007 ஜனவரியில் எம்.ஜி.ஆர் விருதைப் பெற்றார்
இவர் 2012 மே மாதத்தில் என்.டி.ஆர். தேசிய இலக்கிய விருதை என்.டி.ஆர். அறிவியல் அறக்கட்டளையில் இருந்து பெற்றார்.
இவர் 2013 பிப்ரவரி 10 இல் சென்னையில் நடந்த விழாவொன்றில் தொடக்கநிலைக் க.நா.சு. விருதைப் பெற்றார்.
2013 மார்ச்சு 30 இல் இவர் கொல்கத்தாவில் உள்ள பாரதீய பாஷா அறக்கட்டளையின் விருதைப் பெற்றார்.
மேலும் காண்க
ஜெயகாந்தன்
க.நா.சுப்பிரமணியம்
சுந்தர ராமசாமி
ஜெயமோகன்
ஆங்கிலம்
ஃபோர்டீன் இயர்ஸ் வித் பாஸ்
தி கோஸ்ட் ஆஃப் மீனம்பாக்கம்
ஸ்டில் ப்ளீடிங் ஃபிரம் தி வூண்ட்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக