திங்கள், 15 மே, 2017

உலக குடும்ப தினம் மே 15



உலக குடும்ப தினம் மே 15 

ஐக்கிய நாடுகள் பொதுச்சபையானது 1993ஆம் ஆண்டு செப்டம்பர் 20 இல் சர்வதேச குடும்ப தினம் மே 15 அன்று அனுசரிக்க வேண்டும் என முடிவு செய்தது. குடும்பத்தை சமத்துவத்தோடு நடத்துவது, குடும்ப வன்முறையை தடுத்தல் போன்ற விழிப்புணர்வுகளை குடும்பங்களில் ஏற்படுத்தவே இத்தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் குடும்ப வன்முறைச் சட்டம் 2005 இல் கொண்டு வரப்பட்டுள்ளது.


அன்னையர் தினம் கொண்டாடிய இதே வாரத்தில் சர்வதேச குடும்ப தினமும் குதூகலமாக கொண்டாடப்படுகிறது..
' சர்வதேச குடும்ப தின' த்திலும் அன்னையர்குளுக்கு ஐக்கிய நாடுகள் சபை முக்கயத்துவம் கொடுத்திருக்கிறது மகிழ்ச்சி அளிக்கிறது.
ஐக்கிய நாடுகள் சபை 1992 -ஆம் ஆண்டு பிரகடனப்படுத்தப்பட்டு, ஆண்டு தோறும் மே 15 -ஆம் தேதி 'சர்வதேச குடும்ப தினம்' - கடைபிடிக்கப்பட்டு வருகிறது..
குழந்தைகளும், இளைஞர்களும் கல்வியிலும், வாழ்க்கையிலும் சிறப்பான நிலையினை அடைய, பெற்றோரும், சமூகமும் உறுதுணையாக இருப்பது அவசியம்
குடும்ப ஒற்றுமையின் முக்கியத்துவத்தை அனைவரும் உணர வேண்டும். ,ஒவ்வொருவரும் குடும்பத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நோக்கத்துடன் ஐ.நா., சார்பில், மே 15ம் தேதி சர்வதேச குடும்ப தினம், கொண்டாடப்படுகிறது.
எந்த சூழ்நிலையிலும், எந்த வயதினிலும், யாரும் குடும்பத்தை கைவிடாமல் ஆதரவளிக்க வேண்டும் என்பதை சர்வதேச குடும்ப தினம், வலியுறுத்துகிறது.


வாழ்வாதாரத்திற்காக வெளிநாடுகளுக்கு இடம் பெயர்ந்துள்ளவர்கள் உலகம் முழுவதும் பரவி வாழ்ந்து வருகின்றனர்..
இவர்களது குடும்பம், இவர்களைத் தான் சார்ந்து உள்ளது. என்ன தான் இவர்கள், குடும்பத்திற்கு வருமானமோ அல்லது பாசத்தையோ அங்கிருந்து அளித்தாலும், அருகில் இல்லாதது அவர்களது குடும்பங்களுக்கு ஏமாற்றமாகவே இருக்கும்.
குடும்பங்களுக்கிடையே சமத்துவத்தை வளர்க்கவும், வீட்டு பொறுப்புகள், தொழில் வாய்ப்புகள், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் குடும்பங்களின் பங்களிப்பை உணர்த்தவும் இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட அறிக்கையில், அகதிகளாக உலகம் முழுவதும் வாழும் மக்களின் எதிர்காலம் பிரச்சனைகள் பற்றி குறிப்பிட்டுள்ளனர்.
"மாறி வரும் உலகில் , பல சவால்களை நாம் எதிர்நோக்கி உள்ள இந்த சூழ்நிலையில், ஒரு சிறந்த அடுத்த தலைமுறையை உருவாக்குவதில் அகதிகளற்ற சமுதாயம் முக்கியத்துவம் " என்று அறிக்கை குறிப்பிடுகிறது.
மாறிவரும் உலகத்தில் அன்னையர்களும் குடும்பங்களும் சந்திக்கும் சவால்களை கருவாகக்கொண்டு, அந்த சவால்களை எதிர் கொள்ளவும், அன்னையர்கள் சந்திக்கும் பிரச்சனைகளையும், அதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கும்
முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
வளர்ந்து வரும் நாடுகளில் உள்ள மகப்பேறு மருத்துவ வசதிகள், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் பெண் கல்விக்கான அவசியம் குறித்த முக்கியத்துவத்தை பெறுகிறது..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக