ஞாயிறு, 7 மே, 2017

உலக செஞ்சிலுவை மற்றும் செம்பிறை நாள் மே 8, 1828.


உலக செஞ்சிலுவை மற்றும் செம்பிறை நாள் மே 8, 1828.

உலக செஞ்சிலுவை மற்றும் செம்பிறை நாள் ( International Red Cross and Red Crescent Day ) மே 8ஆம் நாளன்று அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. முதலாவது
நோபல் விருதைப் பெற்றவரும்
செஞ்சிலுவைச் சங்கத்தின் ஆரம்பகர்த்தாவுமான ஹென்றி டியூனாண்ட் ( Henry Dunant ) அவர்களின் பிறந்த நாளான (மே 8, 1828 ) இந்நாள் 1948 ஆம் ஆண்டிலிருந்து சிறப்பு நாளாக அங்கீகரிக்கப்பட்டது.

வரலாறு
முதலாம் உலகப் போரின் பின்னர் சமாதானத்துக்கான தேவை உணரப்பட்டது.
செக்கோசிலோவாக்கியாவில் சமாதானத்தை வலியுறுத்தி 1922 இல்
ஈஸ்டர் திருநாளுக்காக மூன்று நாள் யுத்த நிறுத்தத்துக்கான வேண்டுகோள் விடப்பட்டது. இதுவே பின்னர் செஞ்சிலுவை மற்றும் செம்பிறை நாளாக அநுசரிக்கத் தூண்டுதலாக அமைந்தது. 1934 ஆம் ஆண்டு
டோக்கியோவில் இடம்பெற்ற செஞ்சிலுவைச் சங்கத்தினரின் 15வது அனைத்துலக மாநாட்டில் இது கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இருப்பினும்
1948 ஆம் ஆண்டிலேயே இந்நாளை செஞ்சிலுவைச் சங்கத்தை ஆரம்பித்தவரான ஹென்றி டியூனண்ட்டின் நினைவாக ஆண்டுதோறும் கொண்டாடும் தீர்மானம் எடுக்கப்பட்டது. முதலில் இந்நாள் செஞ்சிலுவைச் சங்க நாள் என்றே அழைக்கப்பட்டது. எனினும் பின்னர் பல மாற்றங்களுக்குள்ளாகி 1984 இல் இருந்து இந்நாள் உலக செஞ்சிலுவை மற்றும் செம்பிறை நாள் என அழைக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக