செவ்வாய், 15 ஆகஸ்ட், 2017

நடிகர் சண்முகசுந்தரம் காலமானார் ஆகஸ்ட் 15.


நடிகர் சண்முகசுந்தரம் காலமானார் ஆகஸ்ட் 15.

சண்முகசுந்தரம் (இறப்பு:15 ஆகஸ்ட் 2017) தமிழ் குணச்சித்திர நடிகராவார். நூறுக்கு மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த இவர், எம்.எஸ்.விஸ்நாதன், இளையராஜா ஆகியோரின் இசைக்குழுக்களில் பாடகராக பங்களித்தார்.

வாழ்க்கைக் குறிப்பு

சண்முகசுந்தரம் சென்னையில் வணிகக் குடும்பம் ஒன்றில் பிறந்தவர். கல்லூரியில் படிக்கும் போது, அவரது நண்பர்களான சில நாடக நடிகர்களுடன் நாடகம் ஒன்றைப் பார்க்க சென்றிருந்தார். அந்நாடகத்தில் நடிப்பதாக இருந்த ஒருவர் அன்று வராததால், அந்த வாய்ப்பு சண்முகசுந்தரத்திற்குக் கிடைத்தது. அப்பாத்திரத்தில் திறமையாக நடித்து பாராட்டுப் பெற்றார். அதன் பின்னர் மேடை நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தார். இவரது நடிப்பை அவதானித்த சிவாஜி கணேசன்
இரத்தத் திலகம் (1963) திரைப்படத்தில் நடிக்க சந்தர்ப்பம் கொடுத்தார். இத்திரைப்படத்தில் இவர் சீன இராணுவத் தளபதி வேடத்தில் நடித்தார். அதன் பின்னர் பி. ஆர். பந்துலுவின் இயக்கத்தில் வெளிவந்த
கர்ணன் (1964) திரைப்படத்தில் சல்லியன் வேடத்தில் நடித்தார்.
1989 இல் கங்கை அமரனின் இயக்கத்தில் வெளிவந்த கரகாட்டக்காரனில் கிராமப் பஞ்சாயத்துத் தலைவராக இவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. 1990களின் இறுதியில் தொலைக்காட்சி நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தார். ராதிகா சரத்குமார் தயாரிப்பில் வெளிவந்த அண்ணாமலை ,
செல்வி அரசி ஆகிய நாடகங்களில் நடித்தார்.

நடித்த குறிப்பிடத்தக்க திரைப்படங்கள்..

திரைப்படங்கள்
இரத்தத் திலகம் (1963)
கர்ணன் (1964)
வாழையடி வாழை (1972)
இதயக்கனி
குறத்தி மகன்
படிக்காத பண்ணையார்
தசாவதாரம் (1976)
மீனாட்சி திருவிளையாடல் (1989)
கரகாட்டக்காரன் (1989)
மௌனம் சம்மதம் (1990)
கிழக்கு வாசல் (1990)
தங்கமான தங்கச்சி (1991)
காவல் நிலையம் (1991)
நான் போகும் பாதை (1991)
சிங்கார வேலன் (1992)
வில்லுப் பாட்டுக்காரன் (1992)
பங்காளி (1992)
கோயில் காளை (1993)
மணிக்குயில் (1993)
என் ராஜாங்கம் (1994)
செவத்த பொண்ணு (1994)
சுப்பிரமணிய சாமி (1994)
மஞ்சுவிரட்டு (1994)
நம்ம ஊரு ராசா (1996)
பொங்கலோ பொங்கல் (1997)
உன்னை தேடி (1999)
நீ வருவாய் என (1999)
எதிரும் புதிரும் (1999)
சாஜகான் (2001)
சென்னை 600028 (2007)
சரோஜா (2008)
கோவா (2010)
புகைப்படம் (2010)
தமிழ்ப்படம் (2010)
கலகலப்பு (2012)
நண்பன் (2012)
ஒன்பதிலே குரு (2013)
தாவணிக் கனவுகள்
நானே ராஜா நானே மந்திரி
பிரியாணி (2013)
மாசு என்கிற மாசிலாமணி (2015)
திரிஷா இல்லனா நயன்தாரா (2015)
ஜாக்சன் துரை (2016)
கடவுள் இருக்கான் குமாரு (2016)
அச்சமின்றி (2016)
வெருளி (2017)
அன்பானவன் அசராதவன் அடங்காதவன் (2017)
தொலைக்காட்சி நாடகங்கள்
அண்ணாமலை
செல்வி
அரசி
வம்சம்

தமிழ் சினிமாவின் குணச்சித்திர நடிகர் சண்முகசுந்தரம் இன்று காலமானார்.
கங்கை அமரனின் 'கரகாட்டகாரன்' படத்தில் கனகாவின் தந்தையாக நடித்தவர் சண்முகசுந்தரம். 77 வயதான இவர் சிவாஜி முதல் ஜி.வி.பிரகாஷ் குமார் வரை பலருடனும் நடித்துப் பெயர் வாங்கியவர். 'சென்னை 28', 'கோவா', 'கடவுள் இருக்கான் குமாரு' உள்ளிட்ட படங்களிலும் நடித்திருக்கிறார்.
உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த இவர் சாலிகிராமத்தில் தனது வீட்டில் வசித்து வந்தார். சிறிது நாள்களாகவே உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததால், தனது வீட்டில் இன்று காலமானார். ரத்தத்திலகம் படத்தின் மூலமாக அறிமுகமான இவர் கடைசியாக சிம்புவின் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவருக்கு வயது 70.
அறுபதுகளி்லேயே நடிப்பைத் தொடங்கிய சண்முகசுந்தரம், சிவாஜி கணேசன் நடித்த ரத்தத் திலகம் மூலம் அறிமுகமானவர். அதன் பிறகு நத்தையில் முத்து, இதயக்கனி, ஆதித்யன், குறத்தி மகன், மாப்பிள்ளை அழைப்பு, சக்திலீலை, லட்சுமி கல்யாணம், வாழையடி வாழை, அவளுக்கு நிகர் அவளே, கரகாட்டக்காரன், சென்னை 60028, தமிழ் படம் போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
இயக்குநர் திலகம் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் பெரும்பாலான படங்களில் சண்முகசுந்தரம் முக்கிய வேடத்தில் தோன்றுவார். இவரது தங்கை தான் பழம்பெரும் நடிகை சந்திரகாந்தா.
எத்தனையோ படங்களில் நடித்திருந்தாலும், கரகாட்டக்காரன் படம்தான் சண்முகசுந்தரத்தை மிகப் பிரபலமாக்கியது.
அவர் நடித்த கடைசி படம் அன்பானவன் அடங்காதவன் அசராதவன்.
அண்ணாமலை, செல்வி, அரசி, வம்சம் உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களிலும் சண்முகசுந்தரம் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவரது உடல் சென்னை மயிலாப்பூரில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலி செலுத்த வைக்கபட்டுள்ளது. முகவரி: எண்:13, டாக்டர் ரங்கா சாலை, மயிலாப்பூர் (பாபா கோயில் அருகே).

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக