உலக யானைகள் நாள் ( World Elephant Day ) ஆகஸ்ட் 12.
உலக யானைகள் நாள் ( World Elephant Day ) ஒவ்வொரு ஆண்டும் ஆகத்து 12 ல் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் கொண்டாடப்படுவதன் நோக்கம் ,யானைகளை பாதுகாப்பதே ஆகும். இன்றைக்கு உலகத்தில் உள்ள 65 அமைப்புகள் மற்றும் யானைகளை கொண்ட நாடுகள் இந்த தினத்தை கொண்டாடி வருகின்றன. இந்த தினத்தில் தனியார் வளர்க்கும் யானைகளை பாதுகாப்பதும் ஒரு நோக்கமாகும். முதன் முதலில் இந்த தினம் 2012 ஆக.,12ல் கொண்டாட ஆரம்பிக்கப்பட்டது. 'வனத்திற்குள் திரும்பு' என்ற ஆங்கிலப் படத்தை வில்லியம் சாட்னர் என்பவர் எடுத்தார். இந்த படத்தின் கதையே ஒரு தனியார் வளர்க்கும் யானையை, காட்டிற்குள் மீண்டும் விடுவது பற்றியது. இந்த படம் 2012 ஆக.,12ல் வெளியானது. அன்றைய தினம் முதல் 'உலக யானைகள் தினம்' கொண்டாடப்பட்டு வருகிறது.
உலக யானைகள் தினம் - காடு செழிக்க யானைகளை வாழ விடுங்கள்!
உலகில் இதுவரை 22 வகை யானை இனங்கள் அழிந்து விட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. ஆதிகாலத்தில் 24 வகை யானைகள் வாழ்ந்துள்ளன. தற்போது, உலகில் ஆப்பிரிக்க, ஆசிய வகை யானைகள் மட்டுமே உள்ளன. ஆசிய யானைகள் 55,000 வரை இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் இந்தியாவில் மட்டும் 32,000 யானைகளும், தமிழகத்தில் 3,750 யானைகள் உள்ளதாக கடந்த ஆண்டு கணக்கெடுப்பு தெரிவிக்கின்றன. தற்போது யானைகள், அரியவகை விலங்குகள் பட்டியலில் உள்ளன. பிற்கால சந்ததிகள், யானைகளைப் பார்க்க, அவற்றைப் பாதுகாக்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது.
தரைவாழ் விலங்குகளில் யானைதான் மிகப்பெரியது. தும்பிக்கை வடிவில் மூக்கை பெற் றுள்ள ஒரே விலங்கும் யானைதான். யானைகள் அதிகளவு தண்ணீர், உணவை உட்கொள்ளும். ஆகவே, தண்ணீர், உணவு அதிகமுள்ள காடுகளில் மட்டுமே யானைகள் வசிக்கும். யானைகளுக்கு காடு நல்ல வாழ்விடமாக அமைந்தால், அந்தக் காடு ஆரோக்கியமானதாக காணப்படுகிறது.
தும்பிக்கையே யானையின் பலம்
தும்பிக்கையே யானையின் பலம். தும்பிக்கை மூலமே யானை சுவாசிக்கிறது. தண்ணீரையும், உணவையும் அதன் மூலம்தான் சாப்பிடுகிறது. தும்பிக்கையாலேயே அதிக எடை கொண்ட பொருளை யானையால் எளிதாகத் தூக்க முடியும்.
தந்தம் தான் யானையின் முக்கிய ஆயுதம்
தந்தத்தை யானையின் கொம்பு என நடைமுறையில் அழைக்கின்றனர். ஆனால், யானையின் மேல்வரிசை பற்களின் நீட்சிதான் தந்தம். ஒரு டன் எடையுள்ள பொருளையும், தந்தத்தால் தூக்க முடியும். அதனால், சண்டையின் போது யானை தந்தத்தைத் தான் முக்கிய ஆயுதமாகப் பயன்படுத்தும். தந்தம் இல்லாத ஆண் யானை, மக்னா யானை என அழைக்கப்படுகிறது. தும்பிக்கை மூலம் யானை வாசனை உணர்வு களை அறிந்து கொள்கிறது. 1.5 கி.மீக்கு அப்பால் உள்ள மனிதனின் நடமாட்டத்தைகூட யானையால் அறிந்துகொள்ள முடியும். யானைக்கு கேட்கும் சக்தி அதிகம். ஆனால், கண் பார்வை குறைவு. மூளையின் அளவு பெரியது என்பதால் யானைக்கு நினைவாற்றல் அதிகம் உண்டு. இந்த நினைவாற்றல் மூலமே யானைகள், பரந்த காட் டில் வழித்தடம் மாறாமல் சென்று திரும்புகின்றன. ஒரு யானை சராசரியாக 60 முதல் 70 ஆண்டுகள் வரை உயிர் வாழ்கிறது. யானைக்கு தினசரி 200 முதல் 250 கிலோ உணவு தேவைப்படுகிறது. ஒரு நாளைக்கு 100, 150 முதல் 200 லிட்டர் தண்ணீர் வரை குடிக்கிறது.
காடுகளில் யானைகளே சாலைகள் உருவாகக் காரணம்
காட்டில், யானைகள் விதைகளை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு பரப்புகிறது. காட்டில் பல்லுயிரினப் பெருக்கத்துக்கும் யானை வழிவகுக்கிறது. யானைகள் பல கி.மீ. தூரம் காட்டில் நடந்து செல்வதால், புதிய வழிப்பாதைகள் காட்டில் உருவாகின்றன. நம் நாட்டில், காடுகளில் யானைகளே சாலைகள் உருவாகக் காரணம்.
யானைகள் அழிவுக்கு முக்கிய காரணம்
யானைகளின் வாழ்விடங்களில் ஏற்படும் நாகரிக வளர்ச்சிப் பணிகள், காடுகளில் வெட்டப்படும் மரங்கள், அதிகரிக்கும் குவாரிகள், வழிப்பாதைகள் ஆக்கிரமிப்பு மற்றும் தந்தத்துக்காக யானைகள் வேட்டையாடப்படுதல் ஆகியவை யானைகள் அழிவுக்கு முக்கிய காரணங்களாகக் கருதப்படுகின்றன.
உலக யானைகள் நாள் (World Elephant Day) ஒவ்வொரு ஆண்டும் ஆகத்து 12 ல் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் கொண்டாடப்படுவதன் நோக்கம் யானைகளை பாதுகாப்பதே ஆகும். இன்றைக்கு உலகத்தில் உள்ள 65 அமைப்புகள் மற்றும் யானைகளை கொண்ட நாடுகள் இந்த தினத்தை கொண்டாடி வருகின்றன. இந்த தினத்தில் தனியார் வளர்க்கும் யானைகளை பாதுகாப்பதும் ஒரு நோக்கமாகும்.
முதன் முதலில் இந்த தினம் 2012 ஆக.,12ல் கொண்டாட ஆரம்பிக்கப்பட்டது. 'வனத்திற்குள் திரும்பு' என்ற ஆங்கிலப் படத்தை வில்லியம் சாட்னர் என்பவர் எடுத்தார். இந்த படத்தின் கதையே ஒரு தனியார் வளர்க்கும் யானையை, காட்டிற்குள் மீண்டும் விடுவது பற்றியது. இந்த படம் 2012 ஆக.,12ல் வெளியானது. அன்றைய தினம் முதல் 'உலக யானைகள் தினம்' கொண்டாடப்பட்டு வருகிறது.
அகிலத்தில் 24 வகையான யானைகள் இருந்தன. அதில் 22 வகைகள் அழிந்து விட்டன. தற்போது யானைகளில் இருவகைகள் தான் உள்ளன. ஒன்று ஆப்ரிக்க யானை, மற்றொன்று இந்திய (ஆசிய) யானை. ஆசிய யானைகள் இந்தியா, இலங்கை, நேபாளம், பூடான், வங்கதேசம், மியான்மர், சீனா, தாய்லாந்து, ராபோஸ், கம்போடியா, வியட்நாம், மலேசியா மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளில் காணப்படுகின்றன.
ஆசிய யானைகளின் எண்ணிக்கை 35 ஆயிரம் முதல் 55 ஆயிரம் வரை உள்ளன. இதில் இந்தியாவில் மட்டும் 32 ஆயிரம் யானைகள் உள்ளன. அவற்றில் தமிழகத்தில் சுமார் 2250 ல் இருந்து 3750 வரை இருக்கிறது. எனவே, புலிகளை போல், ஆசிய யானைகளும் உலக எண்ணிக்கையில் இந்தியாவில்தான் அதிகம். எனவே, பிற்கால சந்ததிகள் யானைகளை பார்க்க, நாம் அவற்றை பாதுகாக்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளோம். தும்பிக்கை வடிவில் மூக்கினைப் பெற்றுள்ள ஒரே விலங்கு யானை தான். பாலை வனப் பகுதி மற்றும் சதுப்பு நிலங்களை தவிர மற்ற எல்லா நிலத்தோற்றங்களிலும் புலிகளை போல் யானைகளும் வசிக்கின்றன.
யானைகள் சமூக வாழ்க்கை முறை கொண்டவை. யானை கூட்டத்திற்கு தலைவன் கிடையாது. தலைவி மட்டும்தான். யானைகளுக்கு அதிக உணவு மற்றும் தண்ணீர் தேவை. எனவே, போதிய உணவும், தண்ணீரும் கொண்ட காட்டுப் பகுதிகளே அவை வாழ ஏற்ற வாழ்விடமாக அமையும். யானைக்கு தந்தங்கள் உண்டு. தந்தங்கள் இல்லாத ஆண் யானையைத் தான் 'மக்னா' என்கிறோம். எனவே, யானையின் வலிமை என்பது தும்பிக்கை மற்றும் தந்தங்கள்தான். தும்பிக்கை, வாசனை உணர்வுகளை அறிந்து கொள்ள உதவுகிறது. ஒன்றரை கி.மீ.,க்கு அப்பால் உள்ள ஒரு மனிதனின் வாசனையை யானை அறிந்து கொள்ள முடியும்.
ஆரோக்கிய காடுகள் : ஒரு காடு ஆரோக்கியமாக இருக்க வேண்டுமெனில், அங்கு யானைகள் வாழ்வது மிகவும் அவசியம். காடு என்ற சுற்றுச்சூழலில் யானைகளின் பங்கு அவசியம். காட்டில் தாவரங்களை உண்டு (சுமார் 120 வகை தாவரங்களின்) விதைகளை பரப்புகின்றன. வெகுதுாரம் செல்வதால் விதைகள் பல கி.மீ., துாரம் வரை பரவும். காட்டில் பல்லுயிரின பெருக்கத்திற்கும் வழிவகுக்கிறது. யானையின் எச்சத்தில் பல வகையான பூஞ்சைகள் வளர்கின்றன. யானைகள் பல கி.மீ., நடந்து செல்வதால், காட்டில் வழிப் பாதைகளை உருவாக்குகின்றன. இன்று நம் காட்டில் இருக்கும் பல வழிகள் யானைகளால் உருவாக்கப்பட்டவை. யானையின் 'லத்தி' (சாணம்) மக்கும் போது, அதை மக்கச் செய்யும் பூச்சிகள், பல்வேறு பறவை இனங்களுக்கு உணவாகின்றன. மான் போன்ற பிற தாவர உண்ணிகளுக்கு காட்டில் உணவு கிடைக்க யானைகள் வழி வகுக்கின்றன. யானையின் உருவம் மிகப் பெரியது. இவை நடந்து சென்று உணவு உட்கொள்ளும் பொழுது, அங்கு இடைவெளி கிடைக்கிறது. இது மற்ற விலங்குகளுக்கு பயனாகிறது.
அழிவின் விளிம்பில் யானைகள் :
எப்போதுமே யானைகள் நமக்கொரு
அலாதியான அனுபவத்தையே தந்து
இருக்கிறது . ஆனால், நமக்கு
சந்தோஷத்தை தரும் யானைக் கூட்டம்
இப்போது சந்தோஷமாக இல்லை. சரி ,
சந்தோஷத்தைக் கூட விடுங்கள் ... அதில்
பெரும்பாலும் இப்போது உயிரோட கூட
இல்லை .
ஒரு காலத்தில் ... மன்னிக்கவும் . ஒரு
காலத்தில் என்று உரையாடலை
துவங்கினால் , நீங்க சங்க காலம் என்ற
பொருளில் எடுத்துக் கொள்ளாதீர்கள் .
ஒரு நூறு வருஷத்துக்கு
முன்புதான் , நாம வாழுற இதே
உலகத்துல , மில்லியன் கணக்கில்
ஆப்ரிக்க யானைகளும், லட்சத்திற்கும்
மேலாக ஆசிய யானைகளும் இருந்தன .
ஆனால், இப்போது அதனுடைய
எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா,
ஆப்ரிக்க யானைகளின் எண்ணிக்கை
ஏழு லட்சத்திற்கும் கீழ் , ஆசிய
யானைகளின் எண்ணிக்கை 35,000 க்கும்
கீழ்தான் . இதே வேகத்துல இன்னும் இந்த
எண்ணிக்கை இன்னும் குறைந்துக்
கொண்டு இருக்கிறது .
சொல்லமுடியாது , நம் பேத்தியோ ,
பேரனோ பிறக்கும்போது . இங்க ஒரு
யானைக் கூட இல்லாமல் போகலாம் .
ஆனால், யானைகள் இல்லாமல் போவது
வெறும் யானைகளின் அழிவாக மட்டும்
இருக்காது. அது இந்த சூழலியலின்
மொத்த அழிவாகவும் இருக்கலாம் .
இதை ஏதோ நான் மேம்போக்காக
சொல்லவில்லை . இதை ஆராய்ந்து
சொல்வது ஃப்ளோரிடா
பல்கலைகழகத்தை சேர்ந்த
சூழலியலாளர் டிரிவோர் காவ்லின் .
சூழலியல் அழிவுனா ... அது வேற்றுக்
கிரகவாசிகளின் அழிவு இல்லை . அது
நம்ம அழிவு .
யானைகள் அழிவும் , நம்ம அழிவும்
வெவ்வேறானது அல்ல :
ஏன் யானைகள் அழிவும் , நம்ம அழிவும்
வெவ்வேறானது இல்லை என்று
சூழலியலாளர்கள் சொல்கிறார்கள் ...?
இன்று நாம பயணிக்கிற பல பாதைகள்
யானைகள் உண்டாக்கியவை . ஆமாம்,
யானைகள் பாதைகளை மட்டும்
உண்டாக்கவில்லை . காட்டையே
உருவாக்கியது யானைகள்தான் . இதை
புரிந்துகொள்ள வேண்டுமென்றால் ,
முதலில் யானைகளின் உணவு
பழக்கத்தை புரிந்து கொள்ள வேண்டும் .
யானைகள் சராசரியாக ஒரு நாளைக்கு 150 கிலோ உணவு உண்பவை . இவ்வளவு
உண்பதால் , அது மற்ற விலங்கினத்தின்
உணவை பறித்துக் கொள்கிறது என்று
அர்த்தம் இல்லை . ஆம் , அவை வனத்தில்
வாழும் மற்ற உயிரினங்களுக்கு
செரிக்காத உணவை உண்பவை. அவை
சாப்பிட்ட உணவு செரித்து , அது
சாணமாக , காடுகளில் அது
பயணிக்கும் பல இடங்கள் விழும். அதில்
உள்ள விதைகள்தான் காடெங்கும் பரவி,
செடிகள் துளிர்விட்டு , மரமாகி ,
காடாகும் . ஆக , யானைகளின்
அழிவென்பது காட்டின் அழிவு
இது ஏதோ , உங்களுக்கு யானைகளின்
மீது ஒரு பரிதாபத்தையோ அல்லது
பச்சாதாபத்தையோ ஏற்படுத்த
வேண்டுமென்பதற்காக எழுதப்பட்ட
வரிகள் இல்லை. தாய்லாந்தில்
யானைகள் அழிய அழிய அரிதான மர
வகைகளும் அழிந்து இருக்கின்றன .
யானைகளின் அழிவு , மரத்தின் அழிவு
என்று சுருக்கிப் பார்க்க முடியாது .
ஆம் , இப்புவியை ஒரு அடர்ந்த மரமாக
நீங்கள் உருவகப்படுத்தினீர்கள் என்றால் ,
இப்போது அதன் வேர் கருக துவங்கி
இருக்கிறது . வேர் கருகினால் , அந்த
மரத்தின் ஒரு இலையாக இருக்கும் இந்த
மனித குலமும் சருகாகி மொத்தமாக
விழும்
மக்களை காட்டை விட்டு
வெளியேற்றுங்கள் :
“ ஆமா ... நீங்க சொல்றது சரிதான் ...
காட்டுல வாழ்ற மக்கள்தான்
யானைகளை கொல்றாங்க. அவங்களை
காட்டைவிட்டு வெளியேத்திட்டா
எல்லாம் சரியாகிடும் .. ” என்று மட்டும்
சொல்லிவிடாதீர்கள் . ஆம் , உலகம்
முழுவதும் உள்ள பல தரவுகளை
பார்த்ததில் , காட்டில் பல காலமாக
வாழ்கிற அதன் பூர்வகுடிகளுக்கும் ,
யானைகளுக்கும் எந்த
முரண்பாடுகளும் பெரிதாக
இருந்ததாக தெரியவில்லை.
எளிமையாக சொல்ல வேண்டும்
என்றால் , இந்திய காட்டில் மக்கள்
வாழ்ந்தபோதுதான், ஆசிய யானைகள்
அதிக அளவில இருந்து இருக்கின்றன .
பல காரணங்கள் சொல்லி மண்ணின்
மக்களை , பழங்குடிகளை
வெளியேற்றிய பின்னர்
கவலைப்படுவது போன்றுதான்
அவற்றின் எண்ணிக்கையும்
குறைந்துள்ளன . அதனால், வழக்கமாக
நமது பிழைகளுக்காக , நாம் வேறு
யார் மீதாவது பழியை போட்டுவிட்டு
தப்பிக்க எண்ணுவோம் அல்லவா ...? அது
போல இந்த விஷயத்தில் வேண்டாம்.
அப்படி செய்ய வேண்டும் என்று
நினைப்பது , நம்மை நாமே ஏமாற்றிக்
கொள்வதற்கு சமம் .
' யானைகள் ஊருக்குள் புகுந்து
அட்டூழியம் ' என்பதே ஒரு வக்கிரமான
சொல்லாடல் என்பது மனசாட்சி உள்ள
மக்கள் அனைவருக்கும் தெரியும் .
யானைகள் மிக புத்திசாலியான
விலங்கினம் , அதன் நினைவாற்றல்
அபாரமானது . அது சராசரியாக ஒரு
நாளைக்கு 60 கிலோமீட்டர் நடக்கும் .
அது , முன்பு ஒரு காலத்தில் பயணித்த
பாதையில் , அது மீண்டும் பயணிக்க
முற்படும் போது... நாம் புதிதாக
எழுப்பி உள்ள ‘பாரடைஸ்
அப்பாட்மெண்டுகள்’ அதற்கு நரகமாக
தெரியும்... எத்திசையில் பயணிப்பது
என்ற குழப்பம் தான் ... அடுத்த நாள்
ஊடகங்களில், “யானைகள் ஊருக்குள்
புகுந்து அட்டூழியம் ... ” என்ற தலைப்பு
செய்தி வரும் .
மக்களை காட்டை விட்டு வெளியேற்ற
வேண்டும் என்பதில் நாம் தீர்க்கமாக
இருந்தால் ... எந்த மக்களை வெளியேற்றப்
போகிறோம் என்ற தெளிவும் வேண்டும்.
' சரி ... மக்கள் தொகை பெருகி விட்டது ...
வளர்ச்சி அடைந்து இருக்கிறோம் ...
அதனால் , நம் பல வேலைகள் இலகுவாகி
இருக்கிறது . இதை நாம்
புரிந்துகொள்ளாமல், காடுகளை
ஆக்கிரமிக்கிறோம் ' என்று பொத்தாம்
பொதுவாக பேசுவது சரியாக
இருக்காதுதான் . ஆனால், அந்த வளர்ச்சி
நம் எதிர்காலத்தை அழிக்கவும்
அனுமதிக்க முடியாதுதானே ...?
யானைகள் அழிகின்றன , காடுகள்
அழிகின்றன .... நாளை நாமும் அழியக்
கூடும் என்பதெல்லாம் சரிதான் . ஆனால்,
தீர்வென்ன ...? எளிய மனிதர்களாகிய
நம்மிடம் இருக்கும் தீர்வு , நம் நுகர்வை
குறைத்துக் கொள்வதுதான் . நம்
நுகர்வை குறைத்து
கொள்வோமானால் , புதுப் புது
தொழிற்சாலைகள் துவங்க காடுகள்
அழிக்கப்படாது . இன்னொன்று , நாம்
காடுகளை அழித்து , அங்கு புதுப்
புது சொகுசு நகரியங்களை
சமைப்பதையும் , ரயில் பாதை
அமைப்பதையும் இயன்ற அளவு தவிர்க்க
வேண்டும். யானைகளை
வேட்டையாடுபவர்களுக்கு
கடுமையான தண்டனை தர வேண்டும்.
இன்னொரு பக்கம் , அரசுகள் யானைகள்
குறித்து கவனம் செலுத்த நாம்
அழுத்தம் தர வேண்டும். இதற்கெல்லாம்
மேல், இப்போதாவது இது குறித்த
ஆக்கபூர்வமான உரையாடல்களை நாம்
துவங்க வேண்டும் .
அடுத்த தலைமுறை , யானைகளை
பார்த்தால்தான் , அதற்கும் அடுத்த
தலைமுறை இப்புவியில் வசிக்க
முடியும் . அதற்கு இந்த
தலைமுறையாகிய நாம், ஏதாவது
செய்ய வேண்டும்..
யானையின் தும்பிக்கைக்கு, பூமிக்கடியில் நீர் இருப்பதை எளிதில்
கண்டுபிடிக்கும் தன்மை உண்டு. கோடை காலங்களில் தும்பிக்கையை வைத்து பூமிக்கடியில் இருக்கும் நீரினை அறிந்து, பின் அவ்விடத்தில் உள்ள மண்ணை அகற்றி யானைகள் நீர் அருந்தும். இந்த நீர் மற்ற விலங்குகளுக்கும் பயன்படும். ஓரிடத்தில் வாழும் யானைகளின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் ஆரோக்கிய நிலையே, அவற்றின் வாழ்விடத்தின் தகுதியை காட்டும் அளவுகோல். யானைகளுக்கான வாழ்விடங்கள், மற்ற விலங்குகளுக்கும் வாழ்விடங்களாக அமைகின்றன. எனவே, சுற்றுப்புறச்சூழலின் ஆரோக்கிய தன்மையைக் காட்டும் 'அடையாளம் காட்டி' யானைகள். யானைகள் இல்லையெனில் அது காடு ஆகாது. எனவே, யானைகளின் வாழ்விடங்களை பாதுகாத்து எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்
. பல்லுயிரினப் பெருக்கத்திற்கு வழிகாண,
உலக யானைகள் தினத்தில் உறுதியேற்போம்.
' இனி யானைகளுக்கு
நாங்கள்தான்
பாதுகாவலர்கள் !'
மாற்றத்தை
விதைத்த மாங்கரை
மக்கள்..
வனத்துறையினரின் அலட்சியத்தால்
யானை வழித்தடங்களை சுத்தம்
செய்யும் பணியில் நேரடியாகக் களம்
இறங்கியுள்ளனர் கோவை இளைஞர்கள். '
நேற்று ஒரேநாளில் மட்டும் 600 கிலோ
உடைந்த மதுபாட்டில்களை
அப்புறப்படுத்தியுள்ளோம் .
வனப்பகுதிகளில் செயல்படும் டாஸ்மாக்
கடைகளை அகற்றும் போராட்டத்தை
முன்னெடுக்க உள்ளோம்' என்கின்றனர்
கொதிப்போடு .
கோவையில் இருந்து ஆனைக்கட்டி
செல்லும் வழியில் உள்ளது மாங்கரை.
இயற்கை எழில்சூழ்ந்த இந்தப் பகுதி
முழுக்க முழுக்க யானைகளின்
வலசைப் பகுதியாக உள்ளது . தமிழக
வனப்பகுதியை ஒட்டியுள்ள இந்தக்
கிராமத்தில் அரசின் டாஸ்மாக் கடை
ஒன்று செயல்பட்டு வருகிறது.
ஆனைக்கட்டியில் உள்ள அரசு மதுபானக்
கடை மூடப்பட்டதால் , மாங்கரை டாஸ்மாக்
கடைக்கு தினம்தோறும் 500- க்கும்
மேற்பட்டவர்கள் மது அருந்த வருகின்றனர்.
வார இறுதி நாட்களில்
ஆயிரக்கணக்கானோர் கூடுகின்றனர் .
ஆள் அரவமற்ற வனப்பகுதி என்பதால் ,
சாலையின் ஓரத்தில் அமர்ந்தே மது
அருந்துகின்றனர் . பாட்டில்களையும்
காட்டுப் பகுதியில் உடைத்துவிட்டுப்
போவதால் , அவ்வழியே நடந்து வரும்
யானைகள் பெரும் துன்பத்திற்கு
ஆளாகின்றன . இதை புகைப்படங்களாக
எடுத்துக் கொண்டு வன அதிகாரிகளின்
கவனத்திற்குக் கொண்டு போனார்
புகைப்படக் கலைஞர் சூரஜ் . இதற்கு
வனத்துறை எந்த அக்கறையும்
காட்டாததால், கோவையில் செயல்படும்
சங்கமம் அமைப்போடு சேர்ந்து , ' யானை
வழித்தடத்தை சுத்தம் செய்வோம் ' என்ற
முழக்கத்தை முன்னெடுத்தார் சூரஜ் .
நேற்று மட்டும் மாங்கரை வனத்தை
சுத்தம் செய்யும் பணியில் 150- க்கும்
மேற்பட்ட இளைஞர்கள் களமிறங்கினர் .
பொதுமக்களே நேரடியாகக் களம்
இறங்கியதை வனத்துறையினர்
எதிர்பார்க்கவில்லை .
சங்கமம் அமைப்பின் சூரஜ் , இதுபற்றி
நம்மிடம் விளக்கினார் . " தினம்தோறும்
அந்த வழியாகத்தான் சென்று
வருகிறேன் . மாங்கரையைக் கடக்கும்
யானைகளின் கால்களில் பாட்டில்
துண்டுகள் சிக்கி காயத்தை
ஏற்படுத்துகின்றன . இதனால் செப்டிக்
ஏற்பட்டு யானைகளின் இறப்பிற்கும் ஒரு
காரணமாக அமைந்துவிடுகின்றன .
காடுகளுக்குச் சென்று மது
அருந்துபவர்கள் வனவிலங்குகளின்
வாழ்விடத்தைப் பற்றி அக்கறை
கொள்வதில்லை. இதுபற்றி
வனத்துறையினர் கவனத்திற்குப் புகார்
கொண்டு சென்றாலும் , அவர்கள்
கண்டுகொள்வதில்லை . இந்த பூமியில்
மனிதர்கள் வாழ்வதற்கு எவ்வளவு
உரிமை இருக்கிறதோ , அதே
போலத்தான் வனவிலங்குகளுக்கும் .
அவற்றின் வலசைப் பாதையில்
பாட்டில்களை வீசிச் செல்வதைவிட
கொடூரமான ஒரு செயல் இருக்க
முடியாது .
வ்வொரு நாள் காலையிலும் மாங்கரை
வனப் பகுதியில் சிதறிக் கிடக்கும்
மதுபாட்டில்களைக் கண்டால் மனம்
மிகுந்த வேதனைப்படுகிறது . இவற்றை
அப்புறப்படுத்த நாங்கள் சில பேர்தான்
களத்தில் இறங்கினோம் . எங்களுடைய
முயற்சியைப் பார்த்துவிட்டு
நூற்றுக்கணக்கான மக்கள் எங்களுக்குத்
தோள் கொடுத்தனர் . இதற்குக் காரணம் ,
கோவையில் தொடர்ச்சியாக யானை
மரணங்கள் ஏற்படுத்திய
பாதிப்புகள்தான் . நேற்று மட்டும் 600
கிலோ உடைந்த மதுபாட்டில்களை
அப்புறப்படுத்தினோம் . இன்று கோவை
மாவட்ட கலெக்டர் ஹரிஹரனை சந்தித்து , ' மாங்கரை மதுபானக் கடையை
அப்புறப்படுத்துங்கள் ' எனப் புகார் மனு
அளிக்க இருக்கிறோம் . மாவட்ட ஆட்சியர்
நடவடிக்கை எடுக்காவிட்டால் ,
பொதுமக்களே திரண்டு அந்தக் கடையை
இழுத்து மூடுவார்கள்" என்றார்
கொதிப்போடு .
மாங்கரையில் மாற்றத்தைத் தொடங்கி
வைத்திருக்கிறார்கள் மேற்குத்
தொடர்ச்சி மலையின் மண்ணின்
மைந்தர்கள் . இதர வனப்பகுதிகளுக்கும்
இந்த எழுச்சி பரவட்டும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக