புதன், 16 ஆகஸ்ட், 2017

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் பிறந்த நாள் ஆகஸ்ட் 17 , 1962 .



விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் பிறந்த நாள்  ஆகஸ்ட் 17 , 1962 .

தொல். திருமாவளவன் (பிறப்பு ஆகஸ்ட் 17 , 1962 ), தமிழ்நாட்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர்.தலித்துக்கள் முன்னேற்றத்துக்காகச் சட்டம், சமூகம், அரசியல் என பல தளங்களில் தன்னை ஈடுபடுத்தி தமிழ்நாடு தலித்துக்களின் முக்கியத் தலைவர்களில் ஒருவராக இயங்கி வருகின்றார். இவரின் ஈழத்தமிழர்களுக்கான ஆதரவும் குறிப்பிடத்தக்கது.

அரசியல் வாழ்வு
தலித் சிறுத்தைகள் என்னும் தலித் இயக்கத்தின் தமிழகப் பிரிவை உருவாக்கிய மலைச்சாமி என்பவர் கொலை செய்யப்பட்ட பொழுது, அவருக்கு மதுரை தடய அறிவியல் துறையில் பணியாற்றிக்கொண்டு இருந்த தொல்.திருமாவளவன் மதுரையில் நினைவேந்தல் கூட்டம் நடத்தினார். அக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி தொல்.திருமாவளவன் அதன் அமைப்பாளாராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தலித் சிறுத்தைகள் அமைப்பிற்கு விடுதலைச் சிறுத்தைகள் என பெயர் மாற்றிய திருமாவளவன், நீலம், சிவப்பு வண்ணப் பட்டைகளும் விண்மீனும் கொண்ட கொடியை அவ்வியக்கத்திற்கு என வடிவமைத்து 1990ஆம் ஆண்டில் ஏப்ரல் 14ஆம் மதுரையில் ஏற்றினார்.
விடுதலைச் சிறுத்தைகள் இயக்கம் தேர்தலில் ஈடுபட முடிவு செய்த பொழுது,1999ஆம் ஆண்டு ஆகத்து 17ஆம் நாள் தொல்.திருமாவளவன் அரசு வேலையை துறந்தார்.

அரசியல் கொள்கை
தலித் மற்றும் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் உரிமைகளுக்காகப் போராட்டம் நடத்தல்,தனித்தமிழ் வளர்ச்சிக்கு உதவுதல்,சாதிய அடக்குமுறைக்கு எதிராக கருத்திடல்,தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும்,தனித்தமிழீழத்திற்காக ஆதரவளித்தல்,இந்துத்துவ கொள்கையினை எதிர்த்தல் போன்றன அவரது முக்கியக் கொள்கைகளாகும்.
படைப்புகள்
சாதீய அடக்குமுறையினை எதிர்த்தல், ஈழ விடுதலை ஆதரவு, இந்துத்துவ கருத்துகளை எதிர்த்தல் போன்ற கொள்கையினை வலியுறுத்தும் விதமாக திருமாவளவன் பல கட்டுரைகள், நூல்களை வெளியிட்டுள்ளார். அவற்றில் சில:
அத்துமீறு
தமிழர்கள் இந்துக்களா?
ஈழம் என்றால் புலிகள், புலிகள் என்றால் ஈழம்
இந்துத்துவத்தினை வேரறுப்போம்
இவற்றில் சில ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
நூல்கள்
முள்வலிா
திரைப்படங்கள்
திருமாவளவன் தமிழ் திரைப்படங்கள் சிலவற்றிலும் முக்கிய பாத்திரமேற்று நடித்துள்ளார்.இவரது முதல் திரைப்படம்
அன்புத்தோழி ஆகும்.இதில் இவர் கிளர்ச்சி தலைவர் வேடம் ஏற்று நடித்துள்ளார். [2] இப்பாத்திரம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை மாதிரியாக அமைக்கப்பட்டதாக விமர்சிக்கப்படுகின்றது. இதுதவிர கலகம்,என்னைப்பார் யோகம் வரும்,மின்சாரம் ஆகிய திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக