இந்தி எதிர்ப்புப் போரின் முதல் படைத்தலைவி அன்னை மீனாம்பாள் சிவராஜ் நினைவு தினம் -நவம்பர் 30 , 1992.
மீனாம்பாள் சிவராஜ் (அன்னை மீனாம்பாள் சிவராஜ்) 26 டிசம்பர் , 1904 - 30 நவம்பர் , 1992 பெண் விடுதலைக்காகவும், தலித் விடுதலைக்காகவும் போராடுவததைத் தன் வாழ்நாள் இலட்சியமாகக் கொண்டு போராடி வென்ற பெண். இவர் இந்தி எதிர்ப்புப் போரின் முதல் படைத்தலைவியாக விளங்கியவர்.
தமிழ் , தெலுங்கு , இந்தி , ஆங்கிலம் போன்ற மொழிகளில் வல்லமை பெற்றவர். சென்னை மாநகராட்சியின் துணை மேயர். 1938 திசம்பரில் நீதிக்கட்சியின் மாநாடு 29,30,31 மூன்று நாட்கள் நடைப்பெற்றன.அந்த மாநாட்டில்தான் பெரியார் நீதிக்கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த மாநாட்டுப் பந்தலிலேயே மூன்றாம்நாள் இறுதியில் ஆதி திராவிடர் மாநாடு நடத்த மீனாம்பாள் சிவராஜ் நீதிக்கட்சி தலைவர்களிடம் ஒப்புதல் பெற்றிருந்தார்.மீனாம்பாள் தலைமையில் நடைபெற்ற அந்த மாநாட்டில் அம்பேத்கர் தலைமையை ஏற்று அகில இந்திய அளவில் மாநாடு நடத்துவது என்று தீர்மானித்தனர் .
குடும்பவிபரம்
இவர் தலித் சமுதாயத்திலிருந்து சென்னை மாநகராட்சிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பிரதிநிதியான வாசுதேவப்பிள்ளையின் மகள். முதன் முதல் கப்பலோட்டிய தமிழர் என்று புகழப்பட்டவரும், கோடீஸ்வரப்பிள்ளை என்று அழைக்கப்பட்டவருமான மதுரைப்பிள்ளையின் பேத்தி.இவர் அக்காலத்தில் ரங்கூனில் மிகவும் வசதியான குடும்பத்தில் பிறந்தவர். அக்காலத்திலேயே ரங்கூனில் மெட்ரிக்குலேசன்வரை படித்தவர். இவர் தனது 16வது வயதில் 1918இல் தலித் இயக்கத் தலைவர் ந. சிவராஜ் என்பவரை மணந்து கொண்டார்.
பொறுப்புகளும் பணிகளும்
கவுன்சிலர் (6 ஆண்டுகள்)
கௌரவ மாகாண நீதிபதி (16 ஆண்டுகள்)
திரைப்பட தணிக்கை குழு உறுப்பினர் (6 ஆண்டுகள்)
சென்னை மாகாண ஆலோசணைக் குழு உறுப்பினர் (9 ஆண்டுகள்)
தொழிலாளர் ட்ரிப்யூனல் உறுப்பினர்
சென்னை நகர ரேஷன் ஆலோசனைக் குழு உறுப்பினர்
சென்னை பல்கலைக் கழக செனட் உறுப்பினர் (13 ஆண்டுகள்)
போருக்குப்பின் புனரமைப்புக்குழு உறுப்பினர்
S.P.C.A உறுப்பினர்
நெல்லிக்குப்பம் பாரி கம்பெனி தொழிலாளர் தலைவர்
தாழ்த்தப்பட்டோர் கூட்டுறவு வங்கி இயக்குனர்
அண்ணாமலை பல்கலைக்கழக செனட் உறுப்பினர் (6 ஆண்டுகள்)
சென்னை கூட்டுறவு வீட்டு வசதி சங்க இயக்குனர்
விடுதலை அடைந்த கைதிகள் நலச்சங்க உறுப்பினர்
காந்தி நகர் மகளிர் சங்கத் தலைவர்
மகளிர் தொழிற் கூட்டுறவு குழுத்தலைவர் (6 ஆண்டுகள்)
சென்னை அரசு மருத்துவ மனைகளின் ஆலோசனைக் குழு உறுப்பினர்
அடையார் மதுரை மீனாட்சி மகளிர் விடுதி நடத்துனர்
லேடி வெலிங்டன் கல்லூரி தேர்வுக்குழு தலைவர்.
பழங்குடி மக்களுக்கு மாதர் தரப்பில் கிடைத்த தாய் அன்னை மீனாம்பாள் சிவராஜ் அவர்கள். அறிவிலும் ஆற்றலிலும் பெருமையுடன் திகழ்ந்தவர். அன்னை அவர்கள் நாடறிந்தவர். குறிப்பாகவும் சிறப்பாகவும் பழங்குடி மக்களின் வாழ்வுப் போராட்ட சரித்திரத்தில் அவருக்கு நிறைவான இடம் ஒதுக்கப்பட்டே ஆக வேண்டும்.
அன்னை மீனாம்பாள் குறித்து சில முக்கிய குறிப்புகள்:-
பல்வேறு மகளிர் போராட்டங்களில் தலைமை ஏற்று வழி நடத்தியவர் அன்னை மீனாம்பாள் .
திராவிட கழக தலைவர் ஈ. வெ. ராமசாமிக்கு "பெரியார்" என்ற பெயர் வழங்கி சிறப்பித்தவர் அன்னை மீனாம்பாள்.
சைமன் குழு வருகையை ஆதரித்து முதல் மேடை பேச்சில் 1928 ல் தம் பொது வாழ்வை தொடங்கினார்.
தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் போன்ற மொழிகளில் வல்லமை பெற்றவர்.
இந்தி எதிர்ப்பு போரின் முதல் படைத்தலைவியாக விளங்கியவர்.
1930 இல் இருந்தே அண்ணல் அம்பேத்கரின் பணிகளை தமிழக மக்களிடம் எடுத்துக் கூறியவர்.
இணையர் தந்தை சிவராஜுடன் இணைந்து பவுத்த நெறியினை மக்களிடம் பரப்பினார் அன்னை மீனாம்பாள்.
டாக்டர் அம்பேத்கரின் தங்கை என செல்லமாக அழைக்கப்பட்டவர் அன்னை மீனாம்பாள் .
அன்னை மீனாம்பாள் குடும்பம்:
அன்னை மீனாம்பாள் 26 -12 -1904 இல் வி .ஜி.வாசுதேவப்பிள்ளை -மீனாட்சி தம்பதியருக்கு மகளாய் பிறந்தார்.
அன்னையின் பிறப்பிலேயே பெருமையிருக்கிறது என்றால் மிகையாகாது. அவரது முப்பாட்டனார் ஒரு வணிகர். தாய்வழிப்பாட்டனார் பெ. ம.மதுரைபிள்ளை ஒரு பெரும் வணிகர். வள்ளலுங்கூட இரங்கூன் மாநகரில் கப்பல் வணிகத்தில் சிறந்து வாழ்ந்தவர். கப்பல் வைத்திருக்குமளவுக்கு செல்வம் படைத்தவர். அன்னையாரின் தந்தை திரு. வி.ஜி.வாசுதேவப்பிள்ளை அவர்கள் ஆதிதிராவிட தலைவர்களில் சிறப்பானவர். பழங்குடி மரபில் சென்னை மாநிலத்திலேயே முதன்முதலில் மாநகராட்சி மன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். நெடுங்காலம் சென்னை மாநில சட்டமன்றத்தை அலங்கரித்தவர்.
தந்தை சிவராஜின் வாழ்க்கை இணையர்.
பொது வாழ்க்கை :-
சைமன் குழு வருகையை ஆதரித்து முதல் மேடை பேச்சில் 1928 ல் தம் பொது வாழ்வை தொடங்கினார். தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் போன்ற மொழிகளில் வல்லமை பெற்றவர். இந்தி எதிர்ப்பு போரின் முதல் படைத்தலைவியாக விளங்கியவர். 1930 இல் இருந்தே அண்ணல் அம்பேத்கரின் பணிகளை தமிழக மக்களிடம் எடுத்துக் கூறியவர். "என் அன்பு சகோதரி" என்று அண்ணல் அம்பேத்கரால் அழைக்கப்பட்டவர். திராவிட கழக தலைவர் ஈ. வெ. ராமசாமிக்கு "பெரியார்" என்ற பெயர் வழங்கி சிறப்பித்தவர்.
கிட்டதட்ட 1970 வரை அவரது பொதுப்பணி தீவிரமாக இருந்தது. அன்னையின் அயராத உழைப்பிற்கும் உண்மையான தொண்டிற்கும் பல பதிவிகள் அவரைத் தேடிவந்தன. அவரில் சில:- சென்னை மாநகராட்சியின் துணை மேயர் ,கவுன்சிலராக 6 ஆண்டுகள், கவுரவ மாகாண நீதிபதியாக 16 ஆண்டுகள், திரைப்பட தணிக்கை குழு உறுப்பினராக 6 ஆண்டுகள், சென்னை மாகாண ஆலோசணைக் குழு உறுப்பினராக 9 ஆண்டுகள், தொழிலாளர் ட்ரிப்யூனல் உறுப்பினர் , சென்னை நகர ரேஷன் ஆலோசனைக் குழு உறுப்பினர், சென்னை பல்கலைக் கழக செனட் உறுப்பினராக 13 ஆண்டுகள் , போருக்குப்பின் புணரமைப்புக்குழு உறுப்பினர், S.P.C.A உறுப்பினர், நெல்லிக்குப்பம் பாரி கம்பெனி தொழிலாளர் தலைவர், தாழ்த்தப்பட்டோர் கூட்டுறவு வங்கி இயக்குனர், அண்ணாமலை பல்கலை கழக செனட் உறுப்பினராக 6 ஆண்டுகள் , சென்னை கூட்டுறவு வீட்டு வசதி சங்க இயக்குனர், விடுதலை அடைந்த கைதிகள் நலச்சங்க உறுப்பினர், காந்தி நகர் மகளிர் சங்கத் தலைவர், மகளிர் தொழிற் கூட்டுறவு குழுத்தலைவராக 6 ஆண்டுகள், சென்னை அரசு மருத்துவ மனைகளின் ஆலோசனைக் குழு உறுப்பினர், அடையார் மதுரை மீனாட்சி மகளிர் விடுதி நடத்துனர், லேடி வெலிங்டன் கல்லூரி தேர்வுக்குழு தலைவர் போன்ற பொறுப்புகள் வகித்து மக்கள் பணி ஆற்றியவர்.
அரசியல் வாழ்க்கை :-
அன்னையார் ஆதிதிராவிடர் தலைவர்களுடன் இன்னைந்து பணியாற்றியவர், அவர்களால் விரும்பப்பட்டு பெரிதும் பாராட்டப்பட்டவர். இருப்பினும் தான் தனித்தன்மையை நிலைநாட்டுவதில் சற்றும் தயங்காதவர். அன்னையவர்கள் பலநூறு கூட்டங்களுக்கும் மாநாடுகளுக்கும் தலைமை தாங்கியும் கலந்துகொண்டும் சிறப்பித்திருக்கிறார்.
31 -1 -1937 இல் திருநெல்வேலில் ஆதிதிராவிடர் மாநாட்டில் அன்னை மீனாம்பாள் பேசியது :-
" ஒற்றுமையில்லாக் குடும்பம், ஒருமிக்க கெடும் என்பார்கள். அதுபோல ஒரு குடும்பமோ, ஒரு சமுதாயமோ, ஒரு தேசமோ முன்னேற்றமடைய வேண்டுமானால் ஒற்றுமை மிகவும் அவசியம். நாம் தேசத்தில் சாதிப்பிரிவினை அறவே ஒழிய இன்னும் பல ஆண்டுகள் செல்லுமாயினும் நம் சமூகத்தினர், நாம் முன்னேற்றமடைய நாங்களும் மனிதர்கள்தான்; எல்லா உரிமைகளும் எங்களுக்கும் உண்டு என்று நிருபிப்பான் வேண்டி நாம் யாவரும் பிரிவினை இல்லாமல் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்திய ஆதிதிராவிடர்களின் கடைசி தலைவியான அன்னை மீனாம்பாள் சிவராஜ் அவர்கள்
30 -11 -1992 இல் இம் மண்ணுலகிலிருந்து மறைந்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக