சனி, 18 நவம்பர், 2017

உலகக் கழிவறை நாள் ( World toilet day ) நவம்பர் 19.


உலகக் கழிவறை நாள் ( World toilet day )  நவம்பர் 19.

உலகக் கழிவறை நாள் ( World toilet day ) ஆண்டு தோறும் நவம்பர் 19 ஆம் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளிலேயே 2001 ஆம் ஆண்டில் உலகக் கழிவறை அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது. அன்று முதல் இவ்வமைப்பின் உறுப்பு நாடுகள் இந்நாளை உலகளாவிய முறையில் சிறப்பாகக் கொண்டாடி வருகின்றன. அடிப்படைக் கழிவறை வசதிகள் பற்றியும், அது குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்துவதுமே இந்நாளின் முக்கிய நோக்கமாகும்.
2013 சூலையில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை நவம்பர் 19 ஆம் நாளை ஐக்கிய நாடுகளின் சிறப்பு நாளாகக் கொண்டாடுவதெனத் தீர்மானித்தது. இதற்கான முன்மொழிவை சிங்கப்பூர் ஐக்கிய நாடுகள் சபையில் முன்வைத்து அத்தீர்மானம் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
ஐக்கிய நாடுகள் மற்றும் வேறு அமைப்புகளின் அறிக்கைகளின் படி உலகின் மூன்றில் ஒரு பங்கு மக்கள் அடிப்படை கழிவறை வசதிகளற்று வாழ்கிறார்கள் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இந்தியாவில் 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அறிக்கையின்படி 131 மில்லியன் குடும்பங்களில் கழிவறை வசதி இல்லை எனவும் அவர்களில் எட்டு மில்லியன் குடும்பத்தினர் பொதுக் கழிவறையையும் 123 மில்லியன் குடும்பங்கள் வெளியிடங்களையும் கழிவறைகளாகப் பயன்படுத்துகிறார்கள்.



உலகக் கழிவறை நாள்: நவம்பர் 19

இந்தியாவில் 52 சதவீதத்துக்கும் அதிகமானோர் அடிப்படைத் தேவையான கழிப்பறை இன்றி இருப்பதாகக் கடந்த ஆண்டு வெளியான தேசிய மாதிரிக் கணக்கெடுப்பு அறிக்கை சொல்கிறது.

விளிம்பில்லாக் கோப்பை
விளிம்பில்லாக் கோப்பை
இந்திய மக்கள்தொகையில் சரிபாதிப் பேர் திறந்தவெளியைத்தான் கழிவறையாகப் பயன்படுத்தி வருகின்றனர். நாட்டின் முன்னேற்றம் என்பது மக்களின் அடிப்படைத் தேவைகள் பூர்த்தியாவதில்தான் இருக்கிறது.

ஆங்கிலோ இந்தியக் கோப்பை
ஆங்கிலோ இந்தியக் கோப்பை
இந்தியாவில் செல்போன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை கணிசமான அளவு உயர்ந்துள்ளது என்கிறது ஐநாவின் அறிக்கை. ஆனால், கழிவறைப் பயன்பாடு அந்த அளவில் அதிகரிக்கவில்லை.

ஸ்மார்ட் கோப்பை
ஸ்மார்ட் கோப்பை
மத்திய அரசு கடந்த ஓர் ஆண்டில் மட்டும் ஒரு கோடிக்கு அதிகமான கழிவறைகளைக் கட்டியது. வருங்காலத்தில் கழிவறைப் பயன்பாடு அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தண்ணீரில்லாக் கோப்பை
தண்ணீரில்லாக் கோப்பை
கழிவறைப் பற்றாக்குறை அரசுப் பள்ளிகளிலும் பெரும் பிரச்சினையாக இருக்கிறது. பல அரசுப் பள்ளிகளில் முறையான கழிவறை வசதி இல்லை.

இந்தியக் கோப்பை

குறிப்பாகப் பெண்கள் படிக்கும் பள்ளிகளில் கழிவறை அத்தியாவசியமானது.

நகரும் கோப்பை
தண்ணீர்த் தட்டுப்பாடு காரணமாகக் கழிவறை இருந்தும் பராமரிப்பின்றிப் பயன்படுத்தப்படாமல் இருக்கிறது. அதற்காகத் தண்ணீர் இல்லாத கழிவறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் பயன்பாடு பரவலாக வேண்டும். பல வகைக் கழிவறைகள் இங்கே ஒளிப்படங்களாகத் தொகுக்கப்பட்டுள்ளன.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக