திங்கள், 15 ஜனவரி, 2018

தேவநேயப் பாவாணர் நினைவு தினம் - சனவரி 15 , 1981


தேவநேயப் பாவாணர் நினைவு தினம் - சனவரி 15 , 1981 

தேவநேயப் பாவாணர் ( Devaneya Pavanar ) ( பெப்ரவரி 7 , 1902 - சனவரி 15 , 1981 ) மிகச்சிறந்த தமிழறிஞரும், சொல்லாராய்ச்சி வல்லுநருமாவார். இவர் 40க்கும் மேலான மொழிகளின் சொல்லியல்புகளைக் கற்று மிக அரிய சிறப்புடன் சொல்லாராய்ச்சிகள் செய்துள்ளார். மறைமலை அடிகளார் வழியில் நின்று தனித்தமிழ் இயக்கத்திற்கு அடிமரமாய் ஆழ்வேராய் இருந்து சிறப்பாக உழைத்தார். இவருடைய ஒப்பரிய தமிழறிவும் பன்மொழியியல் அறிவும் கருதி, சிறப்பாக மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் என்று அழைக்கப்பட்டார்.
தமிழ் உலக மொழிகளில் மூத்ததும் மிகத்தொன்மையான காலத்திலேயே செம்மையான மொழியாக வடிவம் பெற்றது எனவும்; திராவிடத்திற்குத் தாயாகவும் ஆரியத்திற்கு மூலமாகவும் விளங்கிய மொழியென வாதிட்டவர். கிரேக்கம், இலத்தீன், சமற்கிருதம் உள்ளிட்டவைகளுக்குத் தன் சொற்கள் பலவற்றை அளித்தது என்று நிறுவியவர் பாவாணர் ஆவார். தமிழின் வேர்ச்சொல் வளத்தையும் செழுமையையும் சுட்டிக்காட்டி, அதன் வளர்ச்சிக்கான வழியையும் அவரின் நூல்களின் வழி உலகிற்கு எடுத்து இயம்பினார்.
வாழ்க்கை வரலாறு
பிறப்பு
பாவாணர் 1902 ஆம் ஆண்டு பெப்ரவரி 7 ஆம் நாள் வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு ஞானமுத்து என்னும் கணக்காயருக்கும், பரிபூரணம் அம்மையார் என்னும் கணக்காய்ச்சியருக்கும் பத்தாவது மகவாகவும் நான்காவது மகனாகவும் பிறந்ததாகத் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சங்கர நயினார் கோவிலில் ( சங்கரன்கோவில் ) பதிவு செய்யப்பட்டுள்ளது. தேவநேயரின் தந்தையார் ஞானமுத்து தோக்கசுவை (Stokes) கிறித்தவ மத குருவானவர் ஒருவர் எடுத்து வளர்த்து வந்துள்ளார் . ஞானமுத்து தோக்கசுவின் பெற்றோர் முத்துசாமி, திருவாட்டி. வள்ளியம்மாள் இருவரும் தோக்கசு அவர்களின் மாளிகையில் காவலர்களாகப் பணியாற்றி வந்துள்ளனர். அவர்களைக் கிறித்துவர்களாக்கி தம் பெயரையும் சூட்டி உள்ளார். முத்துசாமி தஞ்சாவூர் மாவட்டம் நீடாமங்கலத்தை சேர்ந்தவர். [1] 1906 - பாவாணரின் தந்தையாரும் அன்னையாரும் அடுத்தடுத்து இயற்கை எய்தினர். சங்கரநயினார் கோயில் வட்டம் வட எல்லையாகிய சீயோன்மலை என்னும் முறம்பில் 'யங்' துரை என்பார் காப்பில் தேவநேயப் பாவாணர் தொடக்கக் கல்வி பயின்றார்.
படிப்பும், பணிகளும்
வருட அடைவு
1912 - தம் ஐந்தாம் அகவையில் பெற்றோரை இழந்தப் பாவாணர், வட ஆர்க்காடு மாவட்டம், ஆம்பூரில் மூத்த அக்காளான பாக்கியத்தாயின் பேணலில் வளர்ந்தார். சோழபுரம் விடையூழியப் பள்ளியில் தொடக்கக் கல்வியும் , ஆம்பூரில் உள்ள மிசௌரி உலுத்தரின் விடையூழிய (M.E.L.M.) நடுநிலைப் பள்ளியில், எட்டாம் வகுப்பு வரை படிப்பைத் தொடர்ந்தார்.
1916 - பாளையங்கோட்டைத் திருச்சபை விடையூழியக் கழக
உயர்நிலைப்பள்ளியில் (C.M.S.) IV, V, VI ஆம் படிவங்கள் (இந்நாளில் 9, 10, 11 ஆகிய வகுப்புகள்) பயின்றார்.
1919 - இராமநாதபுரம் மாவட்டம் முறம்பு என்னும் சீயோன் மலையில் உயர்தரப்பள்ளி ஒன்றை உருவாக்கி அதன் தாளாளராக இருந்த யங் என்பவர் பணவுதவி செய்தார்; பின்பு தன் 17ம் அகவையில், 1919 ஆண்டு தாம் பயின்ற சீயோன் மலை உயர்தரப்பள்ளியிலேயே முதல் படிவ (ஆறாம் வகுப்பு) ஆசிரியராக இரண்டு ஆண்டுகள் பணியாற்றினார்.
1921 - ஆம்பூர் உயர்நிலைப்பள்ளியில் உதவித் தமிழாசிரியராகப் பணிவுயர்வு பெற்றார் (3 ஆண்டுகள்).
1924 - மதுரைத் தமிழ்ச்சங்கப் பண்டிதத்தேர்வில் அவ்வாண்டு தேர்ச்சி பெற்ற ஒரேயொருவர் தேவநேயர் என்ற சிறப்பும் பெற்றார்.'ஞா.தேவநேசக் கவிவாணன், மிசன் உயர்தரப் பாடசாலை, ஆம்பூர்,வடார்க்காடு ஜில்லா ( மாவட்டம் )' என்பது தேர்ச்சிக் குறிப்பு (செந்தமிழ் தொகுதி 22)
சென்னை வருகை; பிரம்பூர் கலவல கண்ணன் செட்டி உயர்நிலைப்பள்ளி.
1925 - சென்னை, திருவல்லிக்கேணி கெல்லற்று உயர்நிலைப்பள்ளி.
1926 - சென்னை, தாம்பரம் கிறித்தவ உயர்நிலைப்பள்ளி (மூன்றாண்டு)
திருநெல்வேலி தென்னிந்திய தமிழ்ச்சங்கத் தனித்தமிழ்ப் புலவர் தேர்வில் அவ்வாண்டு தேர்ச்சியடைந்த ஒரேயொருவர் தேவநேயரே. (செந்.செல்.4:336);
சென்னைப் பல்கலைக்கழக வித்துவான், கீ.க. தேர்வு (B.O.L) என்னும் இளநிலைத் தேர்விலும் வெற்றி பெற்றார்;
எசுந்தர் அம்மையார் திருமணம்.ஈராண்டில் இயற்கை. ஒரு குழந்தை மணவாளன்; தத்தாகத் தரப்படுதல்.
1929 மன்னார்குடிப் பின்லேக் கல்லூரி உயர்நிலைப்பள்ளியில் ஆறாண்டு பணி; இக்காலகட்டத்தில், இராசகோபாலர் என்பவரிடம் முறையாக இசை பயின்றார்.
1930 தேவநேயர்-நேசமணியார்
திருமணம் .
1931 'மொழியாராய்ச்சி' - ஒப்பியன் மொழி நூல்' என்னும் மொழியாய்வுக் கட்டுரை செந்தமிழ்ச் செல்வியில் வெளிவருதல்.
1934 திருச்சி பிசப் ஈபர் உயர்நிலைப்பள்ளியில் ஒன்பது ஆண்டுகள் (1934- 1943 ) பணிசெய்தார்.
1935 - திரவிட மரபு தோன்றிய இடம் குமரி நாடே என்னும் தலைப்பில் கீ.க.மு.(M.O.L.) பட்டத்திற்காக இடுநூல்
சென்னைப் பல்கலைக்கழகத்தில் வழங்குதல்.
1936 - இடுநூல் சென்னைப் பல்கலைக்கழகத்தால் தள்ளப்படுதல். 'இனி எனது நூல்களையெல்லாம் ஒவ்வொன்றாக வெளியிடுவேன்' என உறுதிக் கொள்ளல்.
1940 - ஒப்பியன் மொழிநூலை வெளியிட்டார். [2]
1943 - சென்னை முத்தியாலுப்பேட்டை உயர்நிலைப்பள்ளி (ஓராண்டு). தமிழ் உணர்ச்சி மாநாட்டில் பங்கேற்பு (21.10.43). தொல்காப்பியக் குறிப்புரை வரைவு.
1944 - சேலம் நகராண்மைக் கல்லூரியில் தலைமைத் தமிழ்ப் பேராசிரியர் (பன்னீராண்டு) ஏந்தாக வாழ்தல்.
1947 - பெரியார் வெள்ளிப் பட்டயம் வழங்கிப் பாராட்டல்.
1952 - தமிழ் முதுகலைப் பட்டம் (M.A.) பெறுதல்.
நாள் அடைவு
12. 07 . 1956 அண்ணாமலைப் பல்கலைக்கழகம் - திரவிட மொழியாராய்ச்சித் துறை (ஐந்தாண்டு)
24.09. 1961 - காட்டுப்பாடியில் வாழ்வு.
27.10. 1963 - மனைவியார் நேசமணி அம்மையார் இயற்கை எய்துதல்.
12. 01 . 1964 - தமிழ்ப்பெருங்காவலர் விருது; தமிழ்க் காப்புக் கழகம், மதுரை
06. 10 . 1966 - உ.த.க. தோற்றம்; திருச்சிராப்பள்ளி.
08. 09 . 1967 - மணி விழா, மதுரை.
28.12. 1969 - உ.த.க. முதலாண்டு விழா, பறம்புக்குடி
09. 01 . 1971 - உ.த.க. இரண்டாம் விழா, மதுரை.
12. 02 . 1971 - தென்மொழி, பாவாணர் அகரமுதலித் திட்டத் தொடக்கம்.
05.05. 1971 - குன்றக்குடி அடிகளார் பாரி விழாவில் 'செந்தமிழ் ஞாயிறு' விருது வழங்குதல்
31.12. 1972 - தமிழன் பிறந்தகம் குமரிநாடே என்னும் தீர்மானிப்பு மாநாடு, தஞ்சை .
08. 05 . 1974 - செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்குநராக அமர்த்தம்.
15.01. 1979 - தமிழ்நாட்டு அரசு 'செந்தமிழ்ச் செல்வர்' விருது வழங்குதல்.
05. 01 . 1981 - மதுரை உலகத் தமிழ் மாநாட்டுப் பொதுநிலைக் கருத்தரங்கில், 'மாந்தன் தோற்றமும் தமிழர் மரபும்' என்னும் பொழிவு. நெஞ்சாங்குலைத் தாக்குண்டு, மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்படுதல்.
14.01. 1981 - மீளவும் நெஞ்சாங்குலைத் தாக்கம்.
15.01. 1981 - இரவு 12.30க்கு இயற்கை எய்துதல்.
16.01. 1981 - சென்னை, கீழ்ப்பாக்கம் கல்லறையில் அடக்கம்.
இறுதி நாட்கள்
மதுரையில் நடைபெற்ற ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டில் பங்கேற்று, "மாந்தன் தோற்றமும், தமிழர் மரபும்" எனும் பொருளில் 75 நிமிடங்கள் உரையாற்றினார். அன்று (5.1.1981) இரவே உடல் நலங்கெட்டு அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். நோயிலிருந்து மீளாமலேயே 1981 சனவரி 15 பின்னிரவு (அதிகாலை) இயற்கை எய்தினார்.
தேவநேயப்பாவாணரின் படத்துடன் இந்தியா வெளியிட்ட அஞ்சல் தலை
பாவலரேறு
தமிழ்த்தேசியத்தந்தையாகப் போற்றப்படும் பாவலரேறு பெருஞ்சித்திரனாருக்கு ஆசிரியராக இருந்த இவர், அவரின் தென்மொழி வாயிலாகவே உலகிற்கு வெளிப்பட்டார். தென்மொழி இயக்கமே அவரின் வளர்ச்சிக்கு பெரிதும் துணைநின்றது. மொழிஞாயிறு பட்டமும் தென்மொழியே வழங்கியது.
பாவாணரின் குழந்தைகள்
நச்சினார்க்கினிய நம்பி
சிலுவையை வென்ற செல்வராசன்
அருங்கலை வல்லான் அடியார்க்கு நல்லான்
மடந்தவிர்த்த மங்கையர்க்கரசி
மணிமன்ற வாணன்
பைந்தமிழ் வளர்த்த பாண்டியன் - 24.12. 1939 இல் இயற்கை எய்துதல்.
வாழ்க்கைவரைவு
தேவநேயரின் வாழ்க்கை வரலாற்றைப்
பாவாணர் என்னும் தலைப்பில் இரா. இளங்குமரன் நூல்வடிவில் எழுதியுள்ளார். இந்நூல் 2000 இல் வெளிவந்தது. தேவநேயப் பாவாணரின் மகன் தே. மணி தம் தந்தையாரின் வாழ்க்கை வரலாற்றைப் பாவாணர் நினைவலைகள் என்னும் தலைப்பில் 2006 இல் ஒரு நூலாக எழுதியுள்ளார்.
பாவாணர் கட்டுரைத் தொகுப்பு நூல்களும் கட்டுரைகளும்
திரட்டு நூல்கள் - 12
1. இலக்கணக் கட்டுரைகள்
1. தொல்காப்பியச் சூத்திரக் குறிப்புரை
2. இலக்கணவுரை வழுக்கள்
3. உரிச்சொல் விளக்கம்
4. ஙம் முதல்
5. தழுவு தொடரும் தழாத் தொடரும்
6. நிகழ்கால வினை
7. படர்கை 'இ' விகுதி
8. காரம்,காரன்,காரி
9. .குற்றியலுகரம் உயிரீறே (1)
10. .குற்றியலுகரம் உயிரீறே (2)
11. .ஒலியழுத்தம்
12. .தமிழெழுத்துத் தோற்றம்
13. .நெடுங்கணக்கு (அரிவரி)
14. .தமிழ் எழுத்து மாற்றம்
15. .தமிழ் நெடுங்கணக்கு
16. .'ஐ,ஔ' 'அய்,அவ்' தானா?
17. .எகர ஒகர இயற்கை
18. .உயிர்மெய் வரிவடிவுகளின் ஒரியலின்மை
2. தமிழியற் கட்டுரைகள்
1. செந்தமிழ் வரம்பீட்டின் சிறப்பு
2. தென்மொழி
3. தமிழுக்கு ஆங்கில நட்பும் வடமொழிப் பகையும்
4. தமிழ் தனித்தியங்குமா?
5. தமிழும் திரவிடமும் சமமா?
6. திராவிடம் என்பதே தீது
7. மொழி பெயர்முறை
8. நிகழ்கால வினைவடிவம்
9. நிகழ்கால வினை எச்சம் எது?
10. கால்டுவெல் கண்காணியாரின் சறுக்கல்கள்?
11. ஆய்தம்
12. மூவிடப் பதிற் பெயர்களின் முதற்கால எண்ணீறுகள்
13. பாயிரப் பெயர்கள்
14. திருக்குறட் சிறப்புச் சொற்களும் சொல்லாட்சியும்
15. சிந்தாமணியின் செவ்விய வனப்பியல்
16. ஆவுந் தமிழரும்
17. கற்புடை மனைவியின் கண்ணியம்
18. அசுரர் யார்?
19. கோசர் யார்?
20. முருகு முதன்மை
21. மாந்தன் செருக்கடக்கம்
22. தற்றுடுத்தல்
23. தலைமைக் குடிமகன்
24. மாராயம்
25. முக்குற்றம்
26. திருவள்ளுவர் காலம்
27. வள்ளுவர் கோட்டக் கால்கோள்விழா வாழ்த்துரை விளக்கம்
3. மொழியாராய்ச்சிக் கட்டுரைகள்
1. மொழியாராய்ச்சி
2. உலக மொழிகளின் தொடர்பு
3. முதற்றாய் மொழியின் இயல்புகள்
4. வாய்ச் செய்கை யொலிச் சொற்கள்
5. சொற்குலமும் குடும்பமும்
6. சொற்பொருளாராய்ச்சி
7. சொல்வேர்காண் வழிகள்
8. ககர சகரப் பரிமாற்றம்
9. மொழியாராய்ச்சியும் மொழியகழ்வராய்ச்சியும் ஒன்றே
10. மேலை மொழிநூலாரின் மேலோட்டக் கொள்கைகள்
11. சேயும் சேய்மையும்
12. ஆலமரப் பெயர்மூலம்
13. கருப்பும் கறுப்பும்
14. தெளிதேனும் களிமதுவும்
15. கலைச்சொல்லாக்க நெறிமுறைகள்
4. மொழிநூற் கட்டுரைகள்
1. ஒப்பியல் இலக்கணம்
2. சொற்பொருள் வரிசை
3. வண்ணனை மொழிநூல்
4. பொருட்பாகுபாடு
5. உலக வழக்கு கொச்சை வழக்கன்று
6. எல்லாராய்ச்சியும் சொல்லாராய்ச்சியும்
7. வடசொல் தென்சொல் காணும் வழிகள்
8. பாவை என்னுஞ் சொல் வரலாறு
9. திரு என்னும் சொல் தென்சொல்லா, வடசொல்லா?
10. 'உத்தரம்', 'தக்கணம்' எம்மொழிச் சொற்கள்?
11. 'மதி' விளக்கம்
12. 'உவமை' தென்சொல்லே
13. திரவிடம் தென்சொல்லின் திரிபே
14. தமிழ் முகம்
15. வள்ளுவன் என்னும் பெயர்
16. கழகமெல்லாம் சூதாடுமிடமா?
17. இந்திப் பயிற்சி
5.பண்பாட்டுக் கட்டுரைகள்
1. புறநானூறும் மொழியும்
2. வனப்புச் சொல்வளம்
3. அவியுணவும் செவியுணவும்
4. 501 ஆம் குறள் விளக்கம்
5. அரசுறுப்பு
6. பாவினம்
7. அகத்தியர் ஆரியரா? தமிழரா?
8. தமிழ்மன்னர் பெயர்
9. வேளாளர் பெயர்கள்
10. பாணர்
11. குலப்பட்ட வரலாறு
12. கல்வி (Culture)
13. நாகரிகம்
14. வெடிமருந்து
15. பண்டைத் தமிழர் காலக் கணக்குமுறை
6. தென்சொற் கட்டுரைகள்
1. வடமொழிச் சென்ற தென்சொற்கள்
2. வடமொழித் தென்சொற்கள்
3. வடசொல்லென மயங்குந் தொல்காப்பியத் தென்சொற்கள்
4. 'இலக்கியம்', 'இலக்கணம்'
5. 'இலக்கணம்', 'இலக்கியம்' எம்மொழிச் சொற்கள்?
6. திருவென்னும் சொல் தென்சொல்லே
7. 'காலம்' என்னுஞ் சொல் எம்மொழிக்குரியது?
8. 'மாணவன்' தென்சொல்லா? வடசொல்லா?
9. என் பெயர் என்சொல்?
10. சிலை என்னுஞ் சொல் வரலாறு
11. .கருமம் தமிழ்ச் சொல்லே!
12. எது தேவமொழி?
13. சமற்கிருதவாக்கம்சொற்கள்
14. சமற்கிருதவாக்கம்-எழுத்து
15. சமற்கிருதவாக்கம் - இலக்கணம்
16. ஆரியப் பூதம் அடக்கம் எழும்புதல்
7.செந்தமிழ் சிறப்பு
1. மதிப்படைச் சொற்கள்
2. தமிழின் தனிப்பெருந்தன்மைகள்
3. தமிழின் தனியியல்புகள்
4. தமிழ் பற்றிய அடிப்படை உண்மைகள்
5. தமிழின் தொன்மையும் முன்மையும்
6. தமிழும் திராவிடமும் தென்மொழியும்
7. தமிழ் வேறு திரவிடம் வேறு
8. செந்தமிழும் கொடுந்தமிழும்
9. திசைச்சொல் எவை?
10. மலையாளமும் தமிழும்
11. இசைத்தமிழ்
12. 'கடிசொல் இல்லை காலத்துப்படினே'
13. புதுமணிப் பவளப் புன்மையும் புரைமையும்
14. போலித் தமிழ்ப்பற்று
15. மதுரைத் தமிழ்க் கழகம்
16. உலகத் தமிழ்க் கருத்தரங்க மாநாடு
17. தமிழனின் பிறந்தகம்
18. தமிழன் உரிமை வேட்கை
19. உரிமைப் பேறு
8.தலைமைத் தமிழ்
8.1. தனிச் சொற்கள்
1 உம்பர் 2 உய் 3 உருளை 4 அரத்தம் 5 க
9 அந்தி 10 எல்லா 11 கலித்தல் 12 மகன் 13
17 பாதம் 18 புரி (வளை) 19 பொறு 20 பகு 21 ப
8.2. தொகுதிச் சொற்கள்
1. புனைப் பெயர்கள்
2. நெருப்புப் பற்றிச் 'சுள்' அடிச் சொற்கள்
9.மறுப்புரை மாண்பு
1. குரலே சட்சம்
2. குரல் சட்சமே; மத்திமமன்று
3. நன்னூல் நன்னூலா?
4. நன்னூல் நன்னூலா - மறுப்பறுப்பு
5. சேரலாதன் பெருஞ்சோறு வழங்கியது பாரதப் படைகட்கே
6. பேரா. தெ.பொ.மீ. தமிழுக் கதிகாரியா?
7. தெ.பொ.மீ.யின் திரிபாராய்ச்சி
8. `பாணர் கைவழி` மதிப்புரை (மறுப்பு)
9. சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள் மதிப்புரை மறுப்பு
10.தமிழ் வளம்
1. வேர்ச்சொற் சுவடி
2. போலிகை யுருப்படிகள்
3. அகரமுதலிப் பணிநிலை
4. தமிழ் அகரமுதலித் தொகுப்பாளர் தகுதி
5. உலகத் தமிழ்க் கழகக் கொள்கை
6. பதவி விடுகையும் புத்தமர்த்தமும்
7. உ.த.க. உறுப்பினர்க்கு அறிவிப்பு
8. உ.த.க. உறுப்பினர் உடனடியாய்க் கவனிக்க
9. உ.த.க. மாவட்ட அமைப்பாளர்க்கு உடனடி வியங்கோள்
10. பாவாணரின் மூன்று அறிக்கைகள்
11. தமிழா விழித்தெழு!
12. தமிழ் ஆரியப் போராட்டம்
13. கோலாலம்பூரில் கொண்டான்மார் கூத்து
14. தமிழ்ப் பேராசிரியரின் தவறான மொழிக் கொள்கை
15. பல்குழுவும் உட்பகையும் கொல்குறும்பும்
16. உண்மைத் தமிழர் அனைவர்க்கும் உரைத்த எச்சரிக்கை
17. அந்தோ! வெங்காலூர்த் தமிழர் படும்பாடு
18. தி.மு.க அரசிற்குப் பாராட்டு
19. மனோன்மணிய ஆசிரியர் சுந்தரனார் தமிழ்வார்த்தை இனிப்பாட வேண்டிய முறை
20. தனித் தமிழ் இதழாசிரியர் தவறு
21. வாழ்நாட் பல்லாண்டு வரம்பு விழாக்கள்
22. மறைமலையடிகள் நூல்நிலைய மாண்பு
23. ஆங்கிலத்தை அகற்றுவது அறிவுடைமையா?
24. தேசியப் படை மாணவர் பயிற்சி ஏவல்கள்
25. திருக்கோவில்களில் தமிழ்ச் சொற்கள்
26. மதிப்புரைமாலை
27. கேள்விச் செல்வம்
28. ஈ.வே.இரா. பெரியாருக்கு விடுத்த வெளிப்படை வேண்டுகோள்
29. பிறந்த நாட்செய்தி
11.பாவாணர் நோக்கில் பெருமக்கள்
1. மறைமலை யடிகளின் மும்மொழிப் புலமை
2. நாவலர் பாரதியார் நற்றமிழ்த் தொண்டு
3. நாவலர் சோமசுந்தர பாரதியாரின் நற்றமிழ்த் தொண்டு
4. பழந்தமிழ் புதுக்கும் பாரதிதாசன்
5. தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் தவப்பெருஞ் சிறப்பியல்புகள்
6. தமிழ் எழுத்து மாற்றம் தன்மானத் தந்தையார் கொள்கையா?
7. தமிழ்நாடு ஆளுநர் உயர்திரு.கே.கே.சா அவர்கட்குப் பாராட்டு
8. என் தமிழ்த் தொண்டு இயன்றது எங்ஙனம்?
9. ஐந்தாம் உலகத் தமிழ் மாநாடு அடிப்படை எவர் பட்ட அரும்பாடு?
10. செந்தமிழ்ச் செல்விக்கு உட்கரணம் கெட்டதா?
11. வரிசை யறிதல்
12. மகிழ்ச்சிச் செய்தி
13. துரைமாணிக்கத்தின் உரைமாணிக்கம்!
14. வல்லான் வகுத்த வழி
15. தீர்ப்பாளர் மகாராசனார் திருவள்ளுவர்
16. திருவள்ளுவரும் பிராமணீயமும் - மதிப்புரை
12.பாவாணர் உரைகள்
1. மொழித் துறையில் தமிழின் நிலை
2. இயல்புடைய மூவர்
3. தமிழ்மொழியின் கலைச்சொல்லாக்கம்
4. தமிழ் வரலாற்றுத் தமிழ்க் கழக அமைப்பு - மாநாட்டுத் தலைமையுரை
5. பாவாணர் சொற்பொழிவு
6. தமிழின் தொன்மை
7. தமிழன் பிறந்தகம்
8. வ.சு. பவளவிழா
9. தமிழ் ஆராய்ச்சியாளர் பேரவை விழா
10. கலைஞர் நூல் வெளியீட்டு விழா
11. பாவாணர் இறுதிப் பேருரை
தேவநேயர் ஆக்கிய நூல்கள்
1. இசைத்தமிழ்க் கலம்பகம் (1966) 303 இசைப்பாக்களைக் கொண்ட நூல்
2. இசையரங்கு இன்னிசைக் கோவை (1969) இசைப்பாடல்கள் 34 உள#. 31 பக்கங்கள்#.
3. இயற்றமிழ் இலக்கணம் (1940) 148 பக்கங்கள்
4. இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும் (1968) 89 பக்கங்கள்
5. உயர்தரக் கட்டுரை இலக்கணம் (1950) 284 பக்கங்கள்
6. உயர்தரக் கட்டுரை இலக்கணம் இரண்டாம் பாகம் (1951) 251 பக்கங்கள்
7. ஒப்பியன்மொழி நூல் (1940) 378 பக்கங்கள்
8. கட்டாய இந்திக் கல்விக் கண்டனம் என்னும் இசைநூல், இசைப்பாடல்கள் 35 கொண்டது#. பக்கங்கள் 33 1937 #.
9. கட்டுரைக் கசடறை என்னும் வியாச விளக்கம் (1937) 84 பக்கங்கள்
10. கட்டுரை வரைவியல் என்னும் இடைத்தரக் கட்டுரை இலக்கணம் (1939, 1952) 160 பக்கங்கள்
11. கட்டுரை எழுதுவது எப்படி? 36 பக்கங்கள்
12. கடிதம் எழுதுவது எப்படி? (1984) 36 பக்கங்கள்
13. கிறித்தவக் கீர்த்தனம் (1981?) 25 இயற்பாக்கள், 50 இசைப்பாக்கள் கொண்டது
14. சிறுவர் பாடல் திரட்டு (1925) கதை, விளையாட்டு கைவேலை பற்றிய 29 பாடல்கள் கொண்டது#.
15. மருத நிலப் பாடல் , 1925
16. சுட்டு விளக்கம் அல்லது அடிப்படை வேர்ச்சொல் ஐந்து (1943) 104 பக்கங்கள்
17. சென்னை பல்கலைக் கழகத் தமிழகராதியின் சீர்கேடு (1961) 46 பக்கங்கள்
18. சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள் (1949) 120 பக்கங்கள்
19. செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி - முதன் மண்டலம்- முதற்பகுதி (1985) 574 பக்கங்கள்#.
20. தமிழ் இலக்கிய வரலாறு (1979) 326 பக்கங்கள்
21. தமிழ்நாட்டு விளையாட்டுக்கள் (1954) 144 பக்கங்கள்
22. தமிழ் வரலாறு (1967) 319 பக்கங்கள்
23. தமிழர் திருமணம் (1956) 96 பக்கங்கள்
24. தமிழன் எப்படிக் கெட்டான் 1940
25. தமிழர் மதம் (1972) 200 பக்கங்கள்
26. தமிழர் வரலாறு (1972) 382 பக்கங்கள்
27. தமிழின் தலைமை நாட்டும் தனிச்சொற்கள் (1977) செந்தமிழ்ச் செல்வியில் வந்த கட்டுரைகளின் தொகுப்பு (தனி நூல் அல்ல)
28. திராவிடத்தாய் (1944, 1956) 112 பக்கங்கள்#. முன்னுரை, மலையாளம் ,
கன்னடம் , துளு , முடிவு ஆகிய 6 பாகமுடையது#.
29. திருக்குறள் தமிழ் மரபுரை (1969) 812 பக்கங்கள் கொண்டது#.
30. தொல்#. எழுத்து - குறிப்புரை (1946)
31. தொல்#. சொல் - குறிப்புரை (1949)
32. பண்டைத் தமிழ் நாகரிகமும் பண்பாடும் (1966) 240 பக்கங்கள்
33. பழந்தமிழராட்சி (1952) 170 பக்கங்கள்#.
34. பாவாணர் பாடல்கள் , பாவாணர் பல்வேறு காலங்களில் இயற்றிய 320க்கும் மேலான பாடல்களைத் தொகுப்பசிரியர் இரா#. இளங்குமரன் தொகுத்து#.
35. பாவாணர் மடல்கள், பாவாணரின் கடிதங்கள் சுமார் 600ஐத் தொகுத்து 1988ல் வெளியானது#. தொகுப்பு#. இரா#. இளங்குமரன்#.#.
36. மண்ணில்விண் அல்லது வள்ளுவர் கூட்டுடமை (1978) 250 பக்கங்கள்
37. முதல்தாய்மொழி அல்லது தமிழாக்கவிளக்கம் (1953) 344 பக்கங்கள்#. குறிப்பொலிக் காண்டம், சுட்டெலிக் காண்டம் என இரு பகுதிகள் கொண்டது
38. வடமொழி வரலாறு (1967) 350 பக்கங்கள் கொண்டது#.
39. வண்ணணை மொழி நூலின் வழுவியல் (1968) 122 பக்கங்கள்#.
40. வேர்ச்சொற் கட்டுரைகள் (1973) 298 பக்கங்கள்#.
41. என் அண்ணாமலை நகர் வாழ்க்கை (1988) பதிப்பாசிரியர் பேரா#. கு#.பூங்காவனம்#. பக்கங்கள்??
42. The Primary Classical Language of the World (1966) 312 பக்கங்கள்
43. The Lemurian Language and its Ramifications (1984) 400 பக்கங்கள் (வெளியீடு தெரியவில்லை)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக