செவ்வாய், 23 ஜனவரி, 2018

தேசிய பெண் குழந்தைகள் தினம் ஜனவரி 24


தேசிய பெண் குழந்தைகள் தினம் ஜனவரி 24

இந்தியாவில் பெண் குழந்தைகளின் நலனை காக்கும் விதமாக ஜனவரி 24ஆம் தேதியை தேசிய பெண் குழந்தைகள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

மறைந்த பிரதமர் திருமதி இந்திரா காந்தி அவர்கள் 1996ஆம் ஆண்டு ஜனவர 24 ஆம் தேதி நம் நாட்டின் முதல் பெண் பிரதமராக பதவி ஏற்றார். அந்த நாள் 2009 ஆம் ஆண்டிலிருந்து இத்தினமாக அனுசரிக்கப்படுகிறது.

பெண் குழந்தைகள் பற்றிய தவறான கருத்துக்கள் அடியோடு போகவும்இ அவர்களது ஆரோக்கியம் சீர் படவும்இ அவர்கள் நல்ல ஊட்டச் சத்துமிக்க ஆகாரம் சாப்பிடவும் உதவுவது ஒவ்வொரு தாய் தந்தையரின் கடமை என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும்..


 குழந்தைத் திருமணங்களால் சிதையும் எதிர்காலம்:

‘உலகம் முழுவதும் நடக்கும் குழந்தைத் திருமணங்களால் பாதிக்கப்படும் சிறுமிகளில், மூன்றில் ஒரு பகுதியினர் இந்தியாவைச் சேர்ந்த சிறுமிகள்’ என்கிறது யுனிசெஃப் நிறுவனம்(ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம்). குழந்தைத் திருமணங்களைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்படாவிட்டால், 2050-க்குள் நூறு கோடி சிறுமிகள் குழந்தைத் திருமணத்தால் பாதிக்கப்படுவார்கள் என்ற அதிர்ச்சித் தகவலைத் தருகிறது அந்த நிறுவனம்.
2009-ம் ஆண்டிலிருந்து இந்தியாவில் ஜனவரி 24-ம் தேதி, தேசிய பெண் குழந்தை தினம் அனுசரிக்கப்பட்டுவருகிறது. இந்த ஆண்டு தேசிய பெண் குழந்தை தினத்தை முன்னிட்டு இந்தியத் தொழிற் கூட்டமைப்பும்(CII), யுனிசெஃப் நிறுவனமும் சென்னைப் பல்கலைக்கழகத்துடன் சேர்ந்து வளரிளம் பெண்களுக்கான ஒருநாள் கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்திருந்தன. இந்தியா மட்டுமல்லாமல் சர்வதேச அளவில் பெண்களும், பெண் குழந்தைகளும் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து இந்தக் கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டது. சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஆர். தாண்டவன், பெண் கல்வி துறைத் தலைவர் பாரதி ஹரிசங்கர், சிஐஐ-சிஎஸ்ஆர் தலைவர் ராணி முரளிதரன், காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஜி. பழனிதுரை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
குழந்தைத் திருமணங்கள்
இந்தியாவின் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழகத்தில் பெண்களின் நிலை உயர்ந்திருக்கிறது என்று யுனிசெஃப்பின் அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. கடந்த பத்து ஆண்டுகளில் சமூக, பொருளாதாரக் காரணிகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைத் தமிழகப் பெண்கள் அடைந்திருக்கின்றனர் என்று சொல்லலாம். ஆனால், தமிழகத்தில் கிருஷ்ணகிரி, சேலம், தருமபுரி போன்ற பின்தங்கிய மாவட்டங்களில் குழந்தைத் திருமணங்களின் எண்ணிக்கையில் பெரிய மாற்றம் எதுவும் நடக்கவில்லை. கிருஷ்ணகிரி இதில் முதல் இடத்தில் இருக்கிறது. அடுத்தடுத்த இடங்களில் தருமபுரி, சேலம், நாமக்கல் போன்ற மாவட்டங்கள் இருக்கின்றன. தமிழகத்தில் 24 சதவீதப் பெண்களுக்கு பதினெட்டு வயதுக்கு முன்னால் திருமணம் செய்யப்படுகிறது என்று தெரிவிக்கிறது யுனிசெஃப்பின் அறிக்கை.
நவீன பிரச்சினைகள்
குழந்தைத் திருமணத்தால் பாதிக்கப்படும் வளரிளம் பெண்கள் நவீன காலத்திற்கேற்ற நவீன பிரச்சினைகளையும் சந்திக்கின்றனர். “சமூக, பொருளாதார நிலைகளில் பின்தங்கியிருக்கும் வளரிளம் பெண்கள் குழந்தைத் திருமணத்தால் பாதிக்கப்படும்போது அவர்களை அடையாளம் கண்டு உதவுவது சமூக அமைப்புகளுக்கு ஓரளவு எளிதாக இருக்கிறது. ஆனால், சமூக, பொருளாதார நிலைகளில் முன்னேறிய வளரிளம் பெண்கள் இதே பிரச்சினையால் பாதிக்கப்படும்போது அவர்களை அடையாளம் காணுவது எளிதானதாக இல்லை” என்று சொல்கிறார் சென்னைப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியை ரீட்டா ஜான்.
தமிழகத்தின் கிராமப்பகுதிகளில் நடக்கும் குழந்தைத் திருமணங்களின் எண்ணிக்கை 25.5 சதவீதம் என்றால், நகரங்களில் அது 21.4 சதவீதமாக இருக்கிறது. கிராமங்களுக்கு இணையாக நகரங்களில் சமூக, பொருளாதாரத்தில் முன்னேறிய சூழலில் வசிக்கும் வளரிளம் பெண்களும் குழந்தைத் திருமணங்களால் பாதிக்கப்படுகின்றனர். “நகரங்களில் சிறுவயது திருமணத்தால் பாதிக்கப்படும் வளரிளம் பெண்கள் தங்கள் பிரச்சினைகளைப் பற்றி பேசுவதற்கான தளம் இன்னும் உருவாகவில்லை என்பதுதான் உண்மை. கல்வி, தொழில்நுட்பம், சுதந்திரம் என நகரத்தில் வசிக்கும் பெண்களுக்கு வசதிகள் இருந்தாலும் இந்தப் பெண்கள் தங்கள் பிரச்சினைகளைப் பேசுவதற்கான ஒரு தளத்தை விரைவில் உருவாக்க வேண்டும்” என்கிறார் பேராசிரியர் ரீட்டா ஜான்.
சர்வதேச பார்வை
குழந்தைத் திருமணத்தால் வளரிளம் பெண்கள் பாதிக்கப்படுவது உலகளவிலும் அதிகமாகவே இருக்கிறது. மூன்றாம் உலக நாடுகளுக்கு மட்டுமல்லாமல் ஐரோப்பிய நாடுகளிலும் குழந்தைத் திருமணங்களைக் கட்டுப்படுத்துவது சவாலாகவே இருக்கிறது. “இந்தியாவில் 27 சதவீத பெண்களுக்குப் பதினைந்து வயதுக்குள் திருமணம் முடிந்துவிடுகிறது. இந்தப் பெண்கள் குடும்ப வன்முறை, குழந்தைப் பேறு சிக்கல், பிரசவகால மரணம் போன்ற பல்வேறு பிரச்சினைகளை சந்திக்கின்றனர். சமீபத்தில், தருமபுரியில் நிகழ்ந்த சிசு மரணங் களுக்கு இந்தச் சிறுவயதுத் திருமண மும் ஒரு முக்கிய காரணம்” என்று சொல்கிறார் தமிழகக் குழந்தைகள் உரிமை ஆய்வகத்தின் மாநிலத் தலைவர் ஆண்ட்ரூ சேசுராஜ்.


தேசிய பெண் குழந்தைகள் தினம்
மறைந்த பிரதமர் திருமதி இந்திரா காந்தி அவர்கள் நம் நாட்டின் முதல் பெண் பிரதம மந்திரியாக பதவி ஏற்ற நாள் ஜனவரி 24. வருடம் 1966. அந்த நாள் 2009 ஆம் ஆண்டிலிருந்து பெண் குழந்தைகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது.
பெண் குழந்தைகள் பற்றிய தவறான கருத்துக்கள் அடியோடு போகவும், அவர்களது ஆரோக்கியம் சீர் படவும், அவர்கள் நல்ல ஊட்டச் சத்துமிக்க ஆகாரம் சாப்பிடவும் உதவுவது ஒவ்வொரு தாய் தந்தையரின் கடமை. இதை நினைவுறுத்தும் வகையில் நம் நாட்டில் ஒவ்வொரு வருடமும் ஜனவரி 24 ஆம் தேதி பெண் குழந்தைகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது.
இந்தச் செய்தியை இப்போது சொல்ல வேண்டிய அவசியம் என்ன என்கிறீர்களா? UNICEF நிறுவனம் நடத்திய சமீபத்திய ஆய்வின்படி நம் நாட்டில் சுமார் 46% பெண் குழந்தைகள் இந்த இரத்த சோகை நோயால் பீடிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்று தெரிய வந்திருக்கிறது. 15 வயதிலிருந்து 19 வயது வரை உள்ள சிறுமிகள் இந்த நோயால் அதிகம் பாதிப்புக்கு ஆளாகிறார்கள். அதுமட்டுமல்ல; ஒவ்வொரு வருடமும் சுமார் 6000 இந்திய சிறுமிகள் இரத்த சோகையாலும் ஊட்டச்சத்து பற்றாக் குறையாலும் இறந்து போகிறார்கள் என்றும் இந்த ஆய்வு கூறுகிறது.
சமீபத்தில் பெங்களூரில் இருக்கும் 15 பள்ளிகளில் நடத்தப்பட்ட ஆய்வு ஒரு அதிர்ச்சி செய்தியை சொல்லுகிறது. அதாவது சுமார் 45% பள்ளிச்சிறுமிகள் இரத்த சோகை நோயின் பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள் என்று! அவர்களது ஹீமோகுளோபின் அளவு 10% க்கும் குறைவாக இருக்கிறது. உலக சுகாதார நிறுவனத்தின் அளவுப்படி இது 12:12 என்ற அளவில் அதாவது 12 வயது சிறுமிக்கு 12% ஹீமோகுளோபின் இருக்க வேண்டும்.
இரத்த சோகை நோய் என்பது என்ன?
நமது இரத்தத்தில் இருக்கும் சிகப்பு அணுக்களில் இருக்கும் புரதச் சத்து தான் ஹீமோகுளோபின் என்பது. உடலின் அனைத்து பகுதிகளுக்கும் தேவையான பிராண வாயுவை இந்த ஹீமோகுளோபின் தான் கொண்டு செல்லுகிறது.
நமது ரத்தத்தில் ஹீமோகுளோபின் இருக்க வேண்டிய குறைந்த பட்ச அளவு:
HB % அதிக பட்சம்….. 14.08 gm %
ஆண்கள ………………………. 13.00 gm %
பெண்கள் ……………………… 11.00 gm %
கர்ப்பிணி பெண்கள் …………… 10.00 gm %
குழந்தைகள் …………………………. 12.00 gm %
பள்ளி செல்லும் வயதினர் … 12.00 gm %
முதியோர்கள் 10.00 gm %
இந்த அளவின்படி ஹீமோகுளோபின் இல்லாத போது இரத்த சோகை நோய் ஏற்படும். நம் நாட்டில் இரும்புச் சத்து குறைப்பாட்டால் பெண்கள் பாதிக்கப் படுவது கவலைக்குரிய விஷயம். 18 வயதுக்கு முன் திருமணம் செய்துவிடுவது, பருவமடையும் போது போஷாக்கான ஆகாரம் சாப்பிடாமல் அல்லது கிடைக்காமல் போவது ஆகியவை பிற்காலத்தில் அவர்கள் இரத்த சோகை நோய்க்கு ஆளாவதற்கும், அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளும் பிறக்கும் போதே இரத்த சோகைக்கு ஆளாகவும் காரணம்.
இளம் பெண்களில் மூன்றில் ஒரு பங்கு சரிவர ஊட்டச் சத்து கிடைக்காத நிலையில் இருக்கிறார்கள். தேசிய குடும்ப ஆரோக்கிய கணக்கெடுப்பின்படி இனபெருக்கக் காலம் (reproductive age) என்று சொல்லப்படும் வயதில் (15-49) இருக்கும் பெண்களில் 56.2% பேர்கள் இரத்த சோகை உள்ளவர்கள். கர்நாடகத்தில் மட்டும் இந்த எண்ணிக்கை 69.5%. இதனால் பச்சிளம் குழந்தைகளின் ஆரோக்கியம் மட்டுமின்றி ஒட்டு மொத்த சமுதாயத்தின் நலமும் பாதிக்கப்படுகிறது.
மேலும், மெலிந்த உடல் அமைப்பு (size zero) வேண்டும் என்பதற்காக சாப்பாட்டை குறைப்பதும், பசி வேளையில் “ஜங்க் பூட்” (junk food) என்று சொல்லப்படும் சத்து குறைந்த உணவுப் பொருட்களை உண்பதும் இளம் பெண்களின் ஆரோக்கியத்தை கெடுக்கிறது. பதின்வயது (teen age) என்பது பெண்கள் பருவமடையும் வயது. அவர்களது இனப் பெருக்க காலமும் அப்போதுதான் தொடங்குகிறது.
இந்தக் கால கட்டத்தில் இளம் பெண்களுக்கு நல்ல போஷாக்கு மிக்க உணவும், உடல் சுகாதாரத்தில் மிகுந்த அக்கறையும் தேவைப்படும். சரியான போஷாக்கான சாப்பாடு சாப்பிடாமல், சத்து இல்லாத ஜங்க் பூட்” (junk food) சாப்பிடுவது அவர்களுக்கு இரும்புச் சத்துப் பற்றாக்குறையை ஏற்படுத்துகிறது. அத்துடன் புரதச் சத்து, மாவுச் சத்து பற்றாக்குறையும் சேர்ந்து அவர்களுக்கு இரத்த சோகையை உண்டு பண்ணுகிறது. இந்தப் பெண்கள் கருவுறும்போது இந்தக் குறை அவர்களது கர்ப்பத்தையும், அதன் பின் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளையும் பாதிக்கிறது.
இளம் பெண்களுக்கு இந்த நோய் பற்றிய விழிப்புணர்வை கொடுக்க வேண்டும். இனப்பெருக்க காலத்தில் அவர்களுக்கு இருக்க வேண்டிய உடல் ஆரோக்கியம் பற்றியும் அறிவுறுத்தல் அவசியம்.
இரத்த சோகையை போக்கக்கூடிய உணவு வகைகள்:
பச்சைக் காய்கறிகள், கீரை வகைகள், தோலுடன் சாப்பிட கூடிய பழ வகைகள் மற்றும் டிரை ப்ரூட்ஸ் எனப்படும் முந்திரி, பாதாம், உலர்ந்த திராட்சை, முதலியவற்றில் உள்ள இரும்புச் சத்து நமக்குத் தேவையான ஹீமோகுளோபின் இரத்தத்தில் உண்டாக உதவும்.
எள் மற்றும் வெல்லத்தில் அதிக இரும்பு சத்து இருக்கிறது. எலுமிச்சை சாறில் சர்க்கரைக்கு பதில் வெல்லம் சேர்த்து குடிக்கலாம். எள்ளுருண்டை, எள்ளு பொடி, எள்ளு சாதம் ஆகியவற்றில் இரும்பு சத்து இருப்பதால் பெண் குழந்தைகளுக்கு இவற்றைக் கொடுக்கலாம்.
எள் பிடிக்கவில்லை என்றால் தினமும் ஒரு சிறிய கட்டி வெல்லம் சாப்பிடலாம். இதனால் நமக்கு தினசரி இரும்பு சத்து கிடைக்கும்.
இரும்பு மாத்திரைகள் சாப்பிடலாம். உணவுடனோ, எலுமிச்சை அல்லது சாத்துக்குடி சாறுடனோ சாப்பிடலாம். இந்த சாறுகள் இரும்புச் சத்தை நம் உடல் உறிஞ்ச உதவுகின்றன.
பெண் குழந்தைகளைக் காப்போம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக