வியாழன், 16 ஜூன், 2016

தந்தையர் தினம் ஜூன் 3வது ஞாயிறு (ஜூன் 19)


தந்தையர் தினம்  ஜூன் 3வது ஞாயிறு (ஜூன் 19) 
தந்தையர் தினம் என்பது தந்தையர்களை கெளரவிப்பதற்காக கொண்டாப்படும் ஒரு நாளாகும். உலகின் 52 நாடுகளில் ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக் கிழமையிலும் வேறுபகுதிகளில் பிற நாட்களிலிலும் இந்த தினம் கொண்டாப்படுகிறது. அன்னையர்களை கெளரவிப்பதற்காக கொண்டாப்படும் அன்னையர் தினத்தை இந்த தினம் முழுமையடையச் செய்கிறது.

வரலாறு
இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் அன்னையர் தினத்தை முழுமைப்படுத்த தந்தை ஸ்தானம் மற்றும் தந்தையைக் கொண்டாடுவதற்காக தந்தையர் தினம் என்ற கொண்டாட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. மேலும் தந்தையர் மற்றும் முன்னோர்களின் நினைவுவிழாவாகவும் இந்த நாளில் கொண்டாடப்பட்டு கெளரவிக்கப்படுகிறது. உலகளவில் தந்தையர் தினம் பல்வேறு தேதிகளில் கொண்டாப்படுகிறது. மேலும் இந்த நாளில் தந்தையருக்கு பரிசுகளைக் கொடுப்பது, சிறந்த இரவு விருந்து அளிப்பது மற்றும் குடும்ப-உறவுகள் செயல்பாடுகளில் ஈடுபடுவது போன்றவை மேற்கொள்ளப்படும்.

ஸ்போகேனில் சோனோரா டோடின் முயற்சியால் ஜூன் 19, 1910 அன்று முதல் தந்தையர் தினம் அனுசரிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.

வாஷிங்டனைச் சேர்ந்த சோனோரா ஸ்மார்ட் டோட் என்பவர் 1909 ஆம் ஆண்டில் விடுமுறை நாளான ஒரு ஞாயிற்றுக் கிழமையில் ஸ்போக்கனில் உள்ள சென்ட்ரல் மெத்தோடிஸ்ட் எபிஸ்கோபால் தேவாலயத்தில் அன்னையர் தினம் சமய போதனையைக் கேட்டுக் கொண்டிருந்த போது இதைப் பற்றி அவருக்கு தோன்றியது. மேலும் ஜூன் 19, 1910 அன்று அவருடைய தந்தைக்காக ஒரு புகழுரையை ஏற்பாடு செய்தார். அதிகார்வப்பூர்வமாக தந்தையர் தினத்தை கடைப்பிடித்து அனைத்து தந்தையர்களையும் கெளரவப்படுத்துவதற்கான யோசனையை இவரே முதன்முதலில் பரிந்துரைத்தார்.

இது அதிகார்வப்பூர்வ விடுமுறை நாளாக அறிவிக்கப்படுவதற்கு பல ஆண்டுகள் ஆனது. இருந்தபோதும் YWCAஇல் இருந்த ஆதரவால் YMCA மற்றும் தேவாலயங்கள் போன்ற இடங்களில் இது காலெண்டர்களில் இல்லாத போதும் கொண்டாடப்பட்டது.அன்னையர் தினம் மிகுந்த ஆர்வத்துடன் கொண்டாடப்பட்ட போது, தந்தையர் தினம் குதூகலமாய் கொண்டாடப்பட்டது.தவறான காரணங்களுக்காக இதற்கான விடுமுறைநாள் மெதுவாக கவனம் பெற்றது. ஸ்போக்ஸ்மன்-ரிவியூ என்ற உள்ளூர் செய்தித்தாளில் நகைச்சுவை உள்ளிட்ட அதிகமான பழிப்பு, பகடி மற்றும் ஏளனம் ஆகியவற்றிற்கு இது உள்ளானது. சிந்தனையற்று ஊக்கவிக்கப்பட்டும் "முன்னோர்கள் தினம்", "புரொபசனல் செக்ரட்டரீஸ் தினம்" மற்றும் பல தினங்களைப் போன்று காலெண்டரை நிரப்புவதற்கு முதல் படியாகவே இதைப் பல மக்கள் பார்த்தனர் "தேசிய மேசைச் சுத்தப்படுத்தும் தினம்" போலத்தான் இதுவும் எனக் கருதினர்.

1913 ஆம் ஆண்டில் இதற்கான ஒரு மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது. அமெரிக்க ஜனாதிபதி கல்வின் கூலிட்ஜ் 1924 ஆம் ஆண்டில் இந்த யோசனைக்கு ஆதரவளித்தார்.[சான்று தேவை] மேலும் இதன் விடுமுறையை சட்டமயமாக்குவதற்காக வாணிக அமைப்புகளால் இதற்கான தேசிய செயற்குழு 1930 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. 1966 ஆம் ஆண்டில் ஜனாதிபதி லிண்டன் ஜான்சன் இதற்கு பெடரல் விடுமுறை அனுசரிக்கப்படப் போவதாக பொது அறிவிப்பை வெளியிட்டார்.

தந்தையர் தினம் மட்டுமின்றி பல நாடுகளில் சர்வதேச ஆண்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இது பெரும்பாலும் நவம்பர் 19இல் கொண்டாடப்படுகிறது.

வணிகமயமாக்கல்
1930களில் ஆண்களின் உடுப்புகளுக்கான இணைக்கப்பட்ட விற்பனையாளர்கள் நியூயார்க் நகரத்தில் தேசிய தந்தையர் தின செயற்குழுவை அமைத்தனர். 1938 ஆம் ஆண்டில் இந்த அமைப்பின் பெயரானது தந்தையர் தினத்தை ஊக்குவிப்பதற்கான தேசிய கவுன்சில் என மாற்றம் செய்யப்பட்டது. மேலும் இதில் பிற வாணிக அமைப்புகளும் ஒருங்கிணைந்தன. மக்களின் மனதில் இந்த விடுமுறையை சட்டரீதியாக ஆக்குவதும் மேலும் விடுமுறையில் விற்பனையை பெருக்குவதற்காக இந்த விடுமுறையை மிகுந்த திட்டமிட்ட வழியில் வர்த்தகரீதியான நிகழ்ச்சியாக செயல்படுத்துவதும் இந்த கவுன்சிலின் நோக்கமாகும். இந்த கவுன்சிலுக்கு டோடின் ஆதரவு எப்போதும் இருந்தது. இந்த விடுமுறையை வணிகமயமாக்குதலால் இவருக்கு எந்த பிரச்சனையும் இல்லை மேலும் பரிசுகளை குறிப்பிட்ட எண்ணிக்கையில் உயர்த்துவதற்கான பல்வேறு ஊக்குவித்தலுக்கும் அவர் ஒப்புதல் அளித்தார். இந்த விஷயத்தில் அன்னையர் தினதிற்கான அனைத்து வணிகமயமாக்குதல்களையும் தற்போது எதிர்த்துக் கொண்டிருக்கும் அன்னா ஜார்விஸுக்கு எதிரானவராக இவரைக் கருதலாம்.

வணிகர்கள் இந்த விடுமுறையை பகடி செய்யும் மற்றும் நையாண்டி செய்யும் போக்கைக் கண்டுகொண்டனர். மேலும் இந்த நாளில் தந்தையர்களுக்கான பரிசுகளை விளம்பரம் செய்யும் அதே விளம்பரங்களில் கேலிச் செயல்களில் ஈடுபட்டு அவர்களின் ஆதாயத்திற்காக அதைப் பயன்படுத்திக்கொண்டனர். பரிசுப் பொருள்களில் வணிகத்தனத்தைக் கண்டாலும் மக்கள் பரிசுகளை வாங்க கட்டாயப்படுத்தப்பட்டனர். மேலும் இந்த நாளில் பரிசுகள் வழங்கப்படுவது இதன் ஆதரவாளர்களால் மிகவும் வரவேற்கப்பட்டது. 1937 ஆம் ஆண்டில் ஆறு பேரில் ஒரே ஒரு தந்தை மட்டும் அந்த நாளில் பரிசு பெறுவதாக தந்தையர் தின கவுன்சில் கணக்கிட்டது. எனினும் 1980களில் இந்த கவுன்சில் அவர்களது நோக்கத்தை அடைந்து விட்டதாக பிரகடனப்படுத்தியது: அதாவது இந்த ஒரு நாள் நிகழ்ச்சி ஒரு "இரண்டாவது கிறிஸ்துமஸ்" போல மூன்று வாரங்களுக்கு கொண்டாடப்படும் வணிக நிகழ்ச்சியாக மாறியது. 1949 ஆம் ஆண்டில் கவுன்சிலின் தலைமை அதிகாரி இதைப் பற்றி விவரிக்கும் போது, கவுன்சிலின் ஒருங்கிணைந்த செயல்பாடுகள் இல்லாமலும் மற்ற அமைப்புகளின் ஆதரவு இல்லாமலும் இருந்தால் இந்த விடுமுறை மறைந்து போயிருக்கலாம் என்றார்.

உச்சரிப்பு
இந்த நிகழ்ச்சியின் பெயர் வழக்கமாக பன்மை உடைமையாகவே புரிந்து கொள்ளப்பட்டது (எ.டு. "தந்தையர்களுக்கு உரிய தினம்"), வழக்கமான ஆங்கிலத்தில் நிறுத்தற்குறிகள் நெறிமுறைகளால் இது "பாதர்ஸ்' டே" என உச்சரிக்கப்பட்டது. மேலும் அதிகமாக ஒருமை உரிமைப் பொருளைக் கொண்டு "பாதர்'ஸ் டே" என்றே உச்சரிக்கப்பட்டது (எ.டு. "தந்தைக்கு உரிய தினம்"). டோட் அவரது தொடக்க விண்ணப்பத்தில் "பாதர்ஸ்' டே" என்ற உச்சரிப்பையே பயன்படுத்தியிருந்தார், ஆனால் 1913 ஆம் ஆண்டில் ஒரு மசோதா முதல் முயற்சியாக இந்த விடுமுறையை அமெரிக்க பிரதிநிகளுக்கு நிலைநாட்ட முயற்சிக்கையில் "பாதர்'ஸ் டே" என்ற உச்சரிப்பை பயன்படுத்தியிருந்தது. மேலும் 2008 ஆம் ஆண்டு இந்த தினத்தை உருவாக்கிய படைப்பாளரான அமெரிக்க நிர்வாகிகள் இதன் புகழுரைக்காக பாதர்'ஸ் டே என்ற உச்சரிப்பையே பயன்படுத்தினர்.

அர்ஜென்டினா
அர்ஜென்டினாவில் தந்தையர் தினம் ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக் கிழமை கொண்டாடப்படுகிறது. ஆனால் ஜோஸ் டே சன் மார்டின் அந்த நாட்டின் "தேசியத் தந்தையாக" கருதப்பட்டு தந்தையர் தினத்தை ஆகஸ்ட் 24 ஆம் தேதி அவரது நினைவு விழாவாக மாற்றிக் கொண்டாட பல்வேறு முயற்சிகள் நடந்தது.

1953 ஆம் ஆண்டில் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் ஆகஸ்ட் 24 அன்று தந்தையர் தினத்தை கொண்டாடுவதற்கு முன்மொழியப்பட்டது. ஜோஸ் டே சன் மார்டினை கெளரவப்படுத்துவதற்காக இது கொண்டாடப்பட வேண்டுமென மெண்டோசா புரொவின்ஸின் கல்வியகங்களின் பொது இயக்ககத்திற்கு இது அனுப்பப்பட்டது. 1958 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக் கிழமையில் முதன் முதலில் இந்த தினம் கொண்டாடப்பட்டது. ஆனால் பல்வேறு அமைப்புகளின் நெருக்கடியின் காரணமாக பள்ளி காலெண்டரில் இந்த தினம் சேர்க்கப்படவில்லை.

மெண்டோசா புரொவின்சில் இருந்த பள்ளிகளில் தொடர்ந்து ஆகஸ்ட் 24 ஆம் தேதி தந்தையர் தினத்தை கொண்டாடின. மேலும் 1982 ஆம் ஆண்டில் மாநில ஆளுநர் அந்த மாகாணத்தில் தந்தையர் தினம் அதே நாளில் கொண்டாடப்படும் என சட்டமியற்றினார்.

2004 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24 ஆம் தேதிக்கு மாற்றுவதற்கு பல்வேறு முன்மொழிதல்கள் தனித்தனியே ஒருங்கிணைக்கப்பட்ட செயல்திட்டமாக அர்ஜென்டினே கேமரா டே டிபுடடஸில் தாக்கல் செய்யப்பட்டது. இதன் அனுமதியைப் பெற்றபிறகு இந்த செயல்திட்டம் அர்ஜென்டினா ஆட்சிப் பேரவைக்கு இறுதி மதிப்பாய்வு மற்றும் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. வரையறுக்கப்பட்ட செயல்திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க ஆட்சிப்பேரவையானது புதிய முன்மொழியப்பட்ட தேதியிலிருந்து ஆகஸ்ட் மூன்றாவது ஞாயிற்றுக் கிழமைக்கு மாற்றி அமைத்தது. எனினும் ஆட்சிப்பேரவையின் குறிப்பிட்ட பருவத்தில் இந்த செயல்திட்டத்தைப் பற்றி எந்த சொற்பொழிவும் நடக்கவில்லை. அதனால் இந்தத் திட்டம் மிகப்பெரிய தோல்வியை அடைந்தது.

ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியாவில் தந்தையர் தினமானது செப்டம்பர் மாதத்தின் முதல் ஞாயிற்றுக் கிழமை கொண்டாடப்படுகிறது ஆனால் இங்கு இது அரசு விடுமுறை தினம் அல்ல.

கோஸ்டா ரிகா
கோஸ்டா ரிகாவில் த யுனைடடு சோசியல் கிர்ஸ்டினா கட்சியானது இந்த தினத்தை ஜூன் மாத மூன்றாவது ஞாயிற்றுக் கிழமை கொண்டாடப்படுவதற்கு பதிலாக சென் ஜோசப் தினமான 19 மார்ச்சில் கொண்டாடுவதற்கான ஒரு மசோதாவை அறிமுகப்படுத்தியது. நாட்டின் தலைநகரமான சான் ஜோஸ், கோஸ்டா ரிக்காவிற்கு பெயரளித்த புனிதருக்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்த மசோதா செயல்படுத்தப்பட்டது. மேலும் அதன் மூலம் குடும்பத்தினர் தொண்டரான செயிண்ட் ஜோசப்பின் பெருவிருந்து தினத்திலேயே தந்தையர் தினத்தையும் கொண்டாடுவதற்கு இது வழிசெய்யும். ஆனால் இன்றும் அதிகார்வப்பூர்வ தேதியாக ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக் கிழமையே உள்ளது.

ஜெர்மனி

ஹெரண்டக் அருகில் குடித்து விட்டு உலாவரும் நிகழ்ச்சி
ஜெர்மனியரின் தந்தையர் தினம் உலகத்தின் மற்ற பகுதிகளைப் போல் அல்லாமல் வேறு விதமாகக் கொண்டாடப்படுகிறது. பழைய இனத்தவரிலிருந்து இரண்டு சொற்கள் மற்றும்/அல்லது நிகழ்ச்சிகள் இதே பெயரைக் கொண்டுள்ளது. ஆனால் அது முழுவதுமாக வேறுவிதமான கருத்தைக் கொண்டுள்ளது. அஸ்சென்சன் தினத்தில் மட்டுமே எப்போதும் வேட்டர்டக் கொண்டாடப்படுகிறது (ஈஸ்டர் முடிந்து நாற்பது நாளுக்கு பின்பு வரும் வியாழக்கிழமை). அது அரசாங்க விடுமுறையாக அனுசரிக்கப்படுகிறது. இந்தப் பிராந்தியத்தில் இது மேனர்டக் எனப்படும் ஆண்களின் தினம் என்றும் அல்லது ஹெரன்டக் எனப்படும் நன்மகன் தினம் எனவும் அழைக்கப்படுகிறது. இதில் ஆண்கள் மட்டும் நடைபயணமாக ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பார வண்டிகளான பொல்லர்வேகனை மனித ஆற்றலைக் கொண்டு இழுத்துச் செல்வது பராம்பரியமாகும். இந்த பாரவண்டிகளானது வைன் அல்லது பியர் (பிராந்தியங்களைப் பொருத்து) மற்றும் பராம்பரிய பிராந்திய உணவுகள், சவுமகென் உணவு வகையான ஹவுஸ்மன்கோஸ்ட் , லிபெர்வொர்ஸ்ட் (லிவர்ஒர்ஸ்ட்), ப்ளட்ஒர்ஸ்ட் (ப்ளட் சசஜ்), காய்கறிகள், முட்டைகள், மற்றும் பலவற்றைக் கொண்டிருக்கும். பல ஆண்கள் இந்த விடுமுறை தினத்தை மிகவும் அதிகமாக குடித்துவிட்டு தெருக்களில் குழுவாக அலைவதற்காக பயன்படுத்துகின்றனர். இதில் பங்குகொள்ளாமல் இருக்கும் மாறுதலை விரும்பாத ஜெர்மன் மக்கள் அதிகமான தர்மசங்கடத்திற்கு ஆளாகின்றனர். காவல்துறை மற்றும் அவசர நிலை சேவைகள் போன்றவை இந்த நாளில் மிகவும் எச்சரிக்கையுடன் இருப்பர். மேலும் சில இடது சாரிகள் மற்றும் பெண்ணுரிமை அமைப்புகள் இந்த விடுமுறையை தடை செய்யும் படி கோரி வருகின்றனர்.

ஜெர்மனியின் சில பகுதிகளில் (பவரியா மற்றும் ஜெர்மனியின் வடக்கு பகுதி போன்றவை) தந்தையர் தினத்தை ஒப்பிடும் படியான இந்த நாளை "வேட்டர்டக்" என அழைக்கின்றனர்.

நியூசிலாந்து
நியூசிலாந்தில், தந்தையர் தினமானது செப்டம்பர் மாதத்தின் முதல் ஞாயிற்றுக் கிழமையில் கொண்டாடப்படுகிறது ஆனால் இங்கு இது அரசு விடுமுறை தினம் அல்ல.

பிலிப்பைனஸ்
பிலிப்பைன்ஸில் தந்தையர் தினமானது ஒரு அதிகார்வப்பூர்வ விடுமுறை அல்ல. ஆனால் ஜூன் மாதத்தின் 3வது ஞாயிற்றுக் கிழமை இந்த தினம் பரவலாகக் கொண்டாடப்படுகிறது. 1960கள் மற்றும் 1970களில் பிறந்த பெரும்பாலான பிலிப்பைன் மக்கள் தந்தையர் தினத்தை கொண்டாடவில்லை. ஆனால் அமெரிக்காவைப் பற்றி தொலைக்காட்சியில் பார்த்தறிந்து அந்தத் தாக்கத்தினால் பிலிப்பைன் மக்கள் அமெரிக்காவின் பாரம்பரியத்தை பின்பற்ற மிகவும் விரும்பினர். மேலும் இதைப் போன்ற பிற அமெரிக்க விடுமுறைகளையும் இவர்கள் பின்பற்றுகின்றனர். இணையத்தின் வருகையும் பிலிப்பைன் மக்களுக்கு இந்த விடுமுறைகளின் மேல் ஆர்வத்தை ஏற்படுத்த உதவியாக இருந்தது.

ரோமன் கத்தோலிக்க பாரம்பரியம்
ரோமன் கத்தோலிக்க பாரம்பரியத்தில் செயின்ட் ஜோசப் தினத்தில் தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. மார்ச் 19 அன்று வழக்கமாக இது செயிண்ட் ஜோசப் விருந்து என அழைக்கப்படுகிறது. எனினும் குறிப்பிட்ட நாடுகளில் தந்தையர் தினமானது மதச்சார்பற்ற கொண்டாட்டமாக உள்ளது.

சிங்கப்பூர்
சிங்கப்பூரில் தந்தையர் தினமானது ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக் கிழமையில் கொண்டாடப்படுகிறது ஆனால் இங்கு இது அரசு விடுமுறை தினம் அல்ல.

தைவான்
தைவானில் தந்தையர் தினம் ஒரு அதிகார்வப்பூர்வ விடுமுறைதினம் அல்ல. ஆண்டின் எட்டாவது மாதத்தின் எட்டாவது நாளான ஆகஸ்ட் 8 இல் இந்த தினம் பரவலாக அனுசரிக்கப்படுகிறது. மண்டரைன் சைனிஸில் எண் 8 ஆனது பா என உச்சரிக்கப்படுகிறது. "பாபா" அல்லது "தந்தை" என்ற அர்த்ததில் இந்த உச்சரிப்பு "爸" "பா" என்ற எழுத்தை மிகவும் ஒத்துள்ளது. அதனால் தாய்வானியர்கள் ஆகஸ்ட் 8 ஐ அதன் செல்லப்பெயரில் "பாபா தினம்" (爸爸節) என வழக்கமாக அழைக்கின்றனர்.

தாய்லாந்து
தாய்லாந்தில் ராஜாவின் பிறந்த நாளை தந்தையர் தினமாகக் கொண்டாடுகின்றனர். தற்போதைய ராஜாவான புயிமிபொல் அடல்யதேஜிற்கு (ராமா IX) டிசம்பர் 5 ஆம் தேதி பிறந்த நாளாகும். தாய்ஸ் இந்த தினத்தை ஆண்தன்மையுடைய மலராக கருதப்படும் கன்னா மலரை (கோக் புட் ட ருக் சா) அவர்கள்து தந்தை அல்லது தாத்தாக்களுக்கு கொடுத்து கொண்டாடுகின்றனர். தாய் மக்கள் ராஜாவிற்கு மரியாதை செலுத்தும் வகையாக இந்த நாளில் மஞ்சள் நிற ஆடையை உடுத்துவர். ஏனெனில் மஞ்சள் நிறமானது திங்கள் கிழமையின் அந்த நாளின் நிறமாகக் கருதப்படுகிறது. இந்த நாளில் தான் ராஜா புயிமிபொல் அடல்யதேஜ் பிறந்தார்.

இது தாய்லாந்தின் பிரதம மந்திரி பிரேம் தின்சுலனோந்தா அவர்களால் தாய்லாந்தின் ராஜ குடும்பத்தை முன்னிறுத்தும் பிரச்சாரத்தின் பகுதியாக 1980களில் இருந்து கொண்டாடத் தொடங்கப்பட்டிருக்கின்றது. அன்னையர் தினமானது ராணியான சிரிகிட் பிறந்த தினத்தில் கொண்டாடப்படுகிறது.

அமெரிக்கா
அமெரிக்காவில் தந்தையர் தினமானது ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக் கிழமை கொண்டாடப்படுகிறது. ஜூன் 19, 1910 அன்று வாஷிங்டனில் உள்ள ஸ்போக்கனில் இதன் முதல் கொண்டாட்டம் தொடங்கியது.தந்தையர்களைக் கெளரவப்படுத்துவதற்கான பிற கொண்டாட்டங்கள் பேர்மோண்ட் மற்றும் கிரெஸ்டனில் கடைபிடிக்கப்பட்டது. ஆனால் இந்த நவீன விடுமுறை இந்த இரண்டிலும் இருந்து கடைப்பிடிக்கப்பட்டது அல்ல.

வாஷிங்டனில் உள்ள கிரெஸ்டனில் பிறந்த சொனொரா ஸ்மார் டோடினால் இந்த நவீன தந்தையர் தினம் கண்டுபிடிக்கப்பட்டது. இதை நிறுவுவதற்கு இவரே இயக்கு சக்தியாக இதற்குப் பின்னால் இருந்தார். அவருடைய அப்பாவான உள்நாட்டுப் போரில் அனுபவமுள்ள வில்லியம் ஜாக்சன் ஸ்மார்ட், வாஷிங்டனில் உள்ள ஸ்போக்கனில் தனி மனிதராக அவரது ஆறு குழந்தைகளையும் வளர்த்துள்ளார். அன்னையர் தினத்தை நிறுவுவதற்கு உழைத்த அன்னா ஜர்விஸால் இவர் ஊக்கமூட்டப்பட்டார். எனினும் தொடக்கத்தில் அவரது அப்பாவின் பிறந்த நாளான ஜூன் 5 ஆம் தேதியையே அறிவுறுத்தினார். இவர் நிறுவனர்களுக்கு ஏற்பாடுகளைச் செய்ய தகுந்த காலம் தராததால் இந்த கொண்டாட்டம் ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக் கிழமைக்கு தள்ளி வைக்கப்பட்டது. ஜூன் 19, 1910 அன்று வாஷிங்டனில் உள்ள ஸ்போக்கனின் ஸ்போக்கன் YMCAவில் முதல் தந்தையர் தினம் கொண்டாடப்பட்டது.

பிரபலங்களான வில்லியம் ஜென்னிங்ஸ் ப்ரைன்போன்றோரின் அதிகார்வப்பூர்வமற்ற ஆதரவால் விரைவாக இது பரவியது. 1916 ஆம் ஆண்டு ஜனாதிபதி உட்ரோ வில்சன் அவரது குடும்பத்தாருடன் தனிப்பட்ட முறையில் இந்த தினத்தைக் கொண்டாடினார். 1924 ஆம் ஆண்டு ஜனாதிபதி கெல்வின் கூலிட்ஜ் இந்த தினத்தை தேசிய விடுமுறையாக அறிவிக்கும் படி பரிந்துரைத்தார். 1966 ஆம் ஆண்டில் ஜனாதிபதி லிண்டன் ஜான்சன் தந்தையர் தினத்தை ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக் கிழமை விடுமுறை நாளாகக் கொண்டாட வழிவகை செய்தார். ரிச்சர் நிக்சனின் ஆட்சி நடந்து கொண்டிருந்த போது 1972 ஆம் ஆண்டு வரை இந்த விடுமுறை தினம் அதிகார்வப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

அண்மை ஆண்டுகளில் விற்பனையாளர்கள், வாழ்த்து அட்டைகள் மற்றும் ஆண்கள் சம்பந்தப்பட்ட பரிசுகளான எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கருவிகளை இந்த விடுமுறை நாளில் அளிப்பதற்கு ஊக்கமளித்து வருகின்றனர். தந்தையர் தினப் பரிசுகளை அளிப்பதற்காக வழக்கமாக பள்ளிகளிலும் மற்றும்பிற குழந்தைகள் நிகழ்ச்சி நிரல்களிலும் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

முன் வரலாறு
முதல் நவீன "தந்தையர் தின" கொண்டாட்டமானது ஜூலை 5, 1908 அன்று மேற்கு வெர்ஜினியாவில் உள்ள பேர்மோண்ட்டில் மத்திய யுனைட்டட் மெத்தொடிஸ்ட் தேவாலயம் என இப்போது அறியப்படும் வில்லியம்ஸ் நினைவு மெத்தொடிஸ்ட் எபிஸ்கோபல் தெற்கு தேவாலயத்தில் கடைப்பிடிக்கப்பட்டது. கிரேஸ் கோல்டன் கிளைடன் அவருடைய அப்பாவான, மெத்தொடிஸ்ட் மதகுருவான ஃப்ளெட்சர் கோல்டன் பிறந்த நாளுக்கு அருகில் வரும் ஞாயிற்றுக் கிழமையைத் தேர்ந்தெடுத்தார். இந்த நகரத்தில் பிற நிகழ்ச்சிகள் அதிகமாக இருந்ததால் இந்தக் கொண்டாட்டம் அவர்களது நகரத்தைத் தாண்டி ஊக்குவிக்கப்படவே இல்லை. மேலும் எந்த அரசுப் பொது அறிவிப்பும் நகர கவுன்சிலால் மேற்கொள்ளப்படவில்லை. வேறு இரண்டு நிகழ்ச்சிகள் இந்த நிகழ்ச்சியின் மேல் ஆதிக்கம் செலுத்தின. அவை: ஜூலை 4 ஆம் தேதியில் கொண்டாடப்படும் சுதந்திர தினத்தில் 12,000 பேர் கலந்து கொண்டு வெப்பமான காற்று பலூன் நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு காட்சிகள் நடத்தப்பட்டது. இதில் ஒரு 16 வயது இளம் பெண் இறந்திருந்தார் அது ஜூலை 5 ஆம் தேதி தெரியவந்தது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து வந்த நாள்களில் இது முக்கிய செய்தியாக இருந்தது. உள்ளூர் தேவாலயமும் கவுன்சிலும் ஆர்வமெடுத்து இந்த நிகழ்ச்சியை ஊக்குவிப்பதைப் பற்றி நினைக்கவே இல்லை. மேலும் இந்த நிகழ்ச்சி மீண்டும் பல ஆண்டுகளுக்கு கொண்டாடப்படவே இல்லை. இந்த நிகழ்ச்சியைப் பற்றிய போதனை மீண்டும் நிகழ்த்தப்படாமல் இது கைவிடப்பட்டது. மேலும் கிளைடன் இந்த நிகழ்ச்சியை ஊக்குவிக்கவோ மற்றவர்களிடம் இந்த நிகழ்ச்சியைப் பற்றி பேசக்கூட செய்யாமல் அமைதியாக இருந்து விட்டார்.

கிளைடன் அவருடைய அப்பாவின் இழப்பினால் துயருற்றிருந்தார். மேலும் அந்த ஆண்டின் டிசம்பர் மாதத்தில் மோனோநக் அருகில் உள்ள மோனோநக் சுரங்கத்தொழில் சேதத்தில் 361 ஆண்கள் கொல்லப்பட்டனர். அதில் 250 பேர் அப்பாக்கள் இந்த சம்பவத்தால் ஆயிரத்துக்கும் மேலானோர் அப்பா இல்லாத குழந்தைகள் ஆனார்கள். கிளைடன் அவருடைய மதகுருவான ராபர்ட் தாமஸ் வெப்பை இறந்த அனைத்து அப்பாக்களையும் கெளரவிக்கும் படி கேட்டுக் கொண்டார்.

பேர்மோண்ட்டில் இருந்து 15 மைல்கள் (24 கிமீ) தொலைவில் இருக்கும் நகரமான கிரப்டன், மேற்கு விர்ஜினியாவில் அவரது அம்மா இறந்ததற்கான சடங்குகளை இரண்டு மாதத்திற்கு முன்பு அன்னா ஜர்விஸ் செய்திருந்தார். மேலும் அன்னா ஜர்விஸ்' அன்னையர் தினத்தை நிறுவுவதற்கு அறப்போர் நடத்தியதில் கிளைடனும் ஈர்க்கப்பட்டிருக்கலாம்.



அன்னையின் வயிற்றில் ஐந்திரண்டு மாதங்களாய் நம்மை சுமந்தாலும், ஆயுள் வரை நெஞ்சில் சுமப்பவர் தந்தை. அம்மாக்களை போல, அப்பாக்களுக்கு பாசத்தை வெளிக்காட்டத் தெரியாது. முள்ளுக்குள் ரோஜாவாய், பலாப்பழத்தில் பலாச்சுளையாய் நினைக்க, நினைக்க நெஞ்சுக்குள் சந்தோஷமும், பெருமையும் தருபவர். வாழ்க்கைச் சக்கரத்தில் வசதியாய் நாம் வாழ்வதற்காக, ஓயாமல் சுழலும் அன்புச் சக்கரம் தந்தை. "நான் பட்ட கஷ்டம்', என் பிள்ளையும் படக்கூடாது என்று வாயாற பேசி, மனமார உழைக்கும் அந்த அன்பு... "கண்ணுக்கு தெரியாத கடவுளைப் போல', நம்மை அரவணைத்து காக்கும். தந்தையின் பெருமைகளை மனதால் உணரும் போதுதான், அவரது அன்பு நம் கண்ணுக்குத் தெரியும்.

தந்தையிடம் அறிவை வாங்கலாம்...: தந்தையருக்கு மரியாதையும், நன்றியும் செலுத்தும் விதமாக, உலக தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. இத்தினம் கொண்டாடப்படும் தேதி நாட்டுக்கு, நாடு வேறுபட்டாலும், இந்தியா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகளில் ஜூன் 3வது ஞாயிறு (ஜூன் 19) கொண்டாடப்படுகிறது. இன்று ஒவ்வொருவரும் தங்களது தந்தைக்கு, நேரிலோ, போனிலோ வாழ்த்து தெரிவித்துக்கொள்ளுங்கள்.

பாசத்துக்கு எப்போதும் அன்னை தான் உதாரணம். தந்தைதான் ஒரு குழந்தைக்கு வழிகாட்டியாக இருக்கிறார். "அன்னையிடம் அன்பை வாங்கலாம், தந்தையிடம் அறிவை வாங்கலாம்' என்ற பாடல் வரிகள் தாய், தந்தையரின் முக்கியத்துவத்தை விளக்குகின்றன. சிறு வயதிலேயே குழந்தைகளுக்கு, தந்தையை மதிக்க கற்றுத் தருவதே இத்தினத்தின் நோக்கம். தந்தையும் குழந்தைகளுக்கென நேரம் ஒதுக்க வேண்டும்.

எப்படி வந்தது: அமெரிக்காவில் 1909ல் "சொனாரா லூயிஸ் ஸ்மார்ட் டாட்' என்ற இளம் பெண் தந்தையர் தினம் கொண்டாடும் யோசனையை முன் வைத்தார். அன்னையர் தினம் கொண்டாடும் போது, தந்தையர் தினம் ஏன் கொண்டாடக் கூடாது என வலியுறுத்தினார். இவர், தாயாரின் மறைவுக்கு பிறகு தந்தை வில்லியம், ஆறு குழந்தைகள் கொண்ட தனது குடும்பத்தை கடுமையான சிரமங்களுக்கிடையே பராமரிப்பதை கண்டார். இது தான், தந்தையர் தினம் கொண்டாட வேண்டும் என்ற எண்ணத்தை இவருக்கு தூண்டியது. இதன்படி 1910ம் ஆண்டு முதன் முதலில் தந்தையர் தினம் கொண்டாடப்பட்டது. 1972ல் அமெரிக்க ஜனாதிபதி ரிச்சர்ட் நிக்சனால், அந்நாட்டின் அங்கீகரிக்கப்பட்ட விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டது.

உங்களுக்கும் வரலாம்: தாயின் அன்புக்கு எவ்வகையிலும் குறைந்து விடுவதில்லை தந்தையின் அன்பு. சிறு வயது முதல் பிள்ளைகள் விரும்பியவற்றை செய்து தருகிறார். பிள்ளைகளின் கல்வி முதல் திருமணம் வரை அனைத்திலும் தந்தையின் பணி அளவிட முடியாதது. சிலர், முதுமை பருவத்தில் தந்தையை தவிக்க விடுகின்றனர், இது தவறு. இன்று பிள்ளையாக இருப்போர், நாளை தந்தையாக மாறுவர். எனவே இந்நிலைமை யாருக்கும் வரலாம் என்பதை நினைவில் வைத்து தந்தைக்கு உரிய மதிப்பளிக்க வேண்டும்.

இன்று தந்தையர் தினம். நம் நாளின் ஒவ்வொரு மணித்துளியிலும் தந்தையின் உழைப்பை நினைவு கூர்வோம், புரிந்து கொள்ள முயற்சிப்போம். "தந்தை சொல்மிக்க மந்திரமில்லை' என்ற வாக்கை, வாழ்க்கையில் கடைப்பிடித்து வரும், வி.ஐ.பி.,க்கள், தங்களது தந்தையரின் பெருமைகளை, பகிர்ந்து கொள்கின்றனர்.

ஞாயிற்றுக் கிழமை மட்டும் பார்ப்போம் அப்பாவை: மதுரை வடமலையான் சிறப்பு மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் புகழகிரி வடமலையான்: அப்பா வடமலையான், ஆங்கிலேயர் காலத்தில் மதுரை அரசு மருத்துவமனையில், காலை 7 முதல் மாலை 4 மணி வரை, ஊதியம் வாங்காமல், கவுரவ அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்றியவர். தொழிலுக்கு அடுத்து தான் குடும்பத்தை நினைப்பார். நாங்கள் நான்கு பேர். எனக்கும், அண்ணனுக்கும் 20 வயது வித்தியாசம். எங்களையும் மக்களுக்கு சேவை செய்யும், டாக்டராக்க நினைத்தார், சாதித்தார். "எமர்ஜென்சிக்காக' அழைக்கப்படுபவன் தான் டாக்டர். வைத்தியம் பார்க்க வருபவர்களை, காசில்லை என்பதற்காக திருப்பி அனுப்பக்கூடாதென நினைப்பவர். பணிநேரத்தில், எங்களுக்கு உடல்நிலை சரியில்லை என்றாலும், வேறு டாக்டரைத் தான் அனுப்புவார். நாங்கள் எழுமுன் வேலைக்குச் செல்வார். இரவு 11.30 மணிக்கு வருவார். ஞாயிற்றுக் கிழமை மட்டும் தான் அப்பாவை பார்ப்போம். எங்கள் வீட்டிற்கு ஒருமுறை, மருத்துவ இயக்குனர் வந்திருந்தார். அப்போது, என்னைப் பார்த்து, "உங்கள் பையனா... என்ன படிக்கிறான்' என அப்பாவிடம் கேட்டார். அப்பா "என்னடா படிக்கிற' என, என்னைப் பார்த்து கேட்டார். அக்காவுக்கு திருமண நாளில், முகூர்த்தத்தின் போது அப்பாவைக் காணோம். மருத்துவமனைக்கு போன் செய்த போது, முகூர்த்தம் 10 மணிக்கு தானே. அதற்குள், நோயாளிகளை ஒருமுறை பார்த்துவிட்டு வருகிறேன், என்றார். அந்தளவுக்கு தொழில் மீது பக்திகொண்டவர். அப்பா இறக்கும் போது, எனக்கு வயது 19. மருத்துவக் கல்லூரியில் முதலாண்டில் சேர்ந்திருந்தேன். இறப்பதற்கு முன், என்னைப் பார்த்து கூறிய வார்த்தைகள்... "யாருக்காகவும் நான் தப்பு செய்யல. இதுவரைக்கும் நேர்மையா இருந்துட்டேன். நான் இறந்தபின், மத்தவங்க உன்னை கஷ்டப்படுத்துவாங்க. தாங்கிக்கோ... மருத்துவமனையை நீ தான் காப்பாத்த ணும்,' என்றார். அப்பாவின் வார்த்தைகள், நிஜத்தில் என்னை தீயாய் சுட்டது. அவரது தர்மம், என்னை காப்பாற்றியது. தமிழகத்தின் தென்பகுதியில் 1955ல் முதன்முதலில் தனியார் மருத்துவமனை அமைத்தது, அப்பா தான்.

எங்கள் தூக்கத்தில் அவரது அன்பு மறைந்திருக்கும்: மதுரை வருமான வரித்துறை கமிஷனர் எம்.கிருஷ்ணசாமி: திண்டுக்கல் ஆயக்குடியில், நிலம் கூட இல்லாத ஏழை விவசாயி, எங்கள் அப்பா. கஷ்டப்பட்டு உழைத்து நிலம் வாங்கினார். நாங்கள் மூவர். அப்பா, அம்மாவுக்கு படிப்பு வாசனையில்லை. உழவும், அறுவடையுமே அவருக்கு தெரிந்த விஷயம். ஆனால் நாங்கள் பெரிய அதிகாரியாக (எந்தத் துறை என சொல்லத் தெரியாது) வேண்டும் என்பது அவரது பெருங்கனவு. அண்ணன் ரயில்வேயில் இருக்கிறார். எங்களிடம் எந்த கோரிக்கையுமே, இதுவரை அப்பா வைத்ததில்லை. "சிறுவயதில் நாங்கள் தூங்கினாலும், எழுப்பி சோறூட்டி மீண்டும் தூங்கவைப்பார்' என, அம்மா சொல்வார். எங்களின் தூக்கத்தில் அவரது அன்பு மறைந்திருக்கும். சிலநேரம் அவரது கருத்து, ஏற்புடையதாக இல்லாவிட்டாலும், எதிர்த்து பேசியதில்லை. நாங்கள் நல்ல நிலையில் இருந்தாலும், அவர் சொகுசாக வாழவில்லை. தினமும் ஐந்து கிலோ மீட்டர் தூரம் சைக்கிளில் சென்று, இன்றும் வயல்வேலை செய்கிறார். உழைப்பின்அருமையை அப்பாவிடம் கற்றுக் கொண்டேன். என் பிள்ளைகளுக்கும் கற்றுக் கொடுத்திருக்கிறேன்.

கந்துவட்டிக்கு கடன் வாங்கி என்னை படிக்க வச்சாரு: பாலகிருஷ்ணன் ஐ.பி.எஸ்., மதுரை எஸ்.பி.,: எங்க தாத்தாவுக்கு அந்தக் காலத்துல நிறைய சொத்து இருந்துச்சு. அப்பா (வேலய்யா, கன்னியாகுமரி மாவட்டம் எட்டு பூட்டு தேரிவிளை கிராமம்) விவசாயத்த பார்த்துக்கிட்டாரு. அப்பா படிக்கவில்லை என்றாலும் எங்களோட படிப்பை முக்கியமா நினைச்சாரு. எங்க தலைமுறையில, நான் தான் முதன்முதலா "டிகிரி'(பி.எஸ்சி., விவசாயம்) முடிச்சேன். அதுக்கு அவர் பட்ட கஷ்டத்தை சொன்னா... இன்னைக்கும் கண்ணீர் வரும். ஒவ்வொரு நிலமா வித்தாரு. எங்க ஊர்ல, நாலாவது படிக்கும் போதே, படிப்பை நிறுத்திட்டு கயிறு வேலைக்கு அனுப்பிடுவாங்க. சொந்தக்காரங்களும், ஊர்க்காரங்களும் "பிள்ளைகளை படிக்கவைக்கறதுக்கு... நிலத்தை விக்காதே'னு சொன்னதை, அப்பா ஏத்துக்கல. "சொத்து போனா பரவாயில்லை... பிள்ளையோட படிப்பு முக்கியம்'னு சொன்னாரு. அக்காவுக்கு அடுத்து நான், எனக்கு கீழே நான்கு பேர். நான் படிச்ச அளவுக்கு, மத்தவங்களையும் படிக்க வைக்க முடியல. உண்மைய சொன்னா... அப்பா கந்துவட்டிக்கு கடன் வாங்கி, என்னை படிக்கவச்சாரு. கந்துவட்டி கொடுமைய நேரில் அனுபவிச்சவன் நான். வட்டி கட்ட முடியாத சூழ்நிலையில் கூட, படிப்பை நிறுத்த நினைக்கல. எம்.எஸ்சி., 2ம் ஆண்டு படிக்கும் போதே, வங்கியில் வேலை கிடைச்சுடுச்சு. முதல் மாச சம்பளத்த, அம்மாகிட்ட தான் கொடுத்தேன். நானா யோசிச்சு அப்பாவுக்கு வேட்டி, சட்டை எடுத்து கொடுத்தேன். அப்பாவுக்கு 67 வயசாகுது. நிலத்தையெல்லாம் இழந்துட்டு, பந்தல் கான்ட்ராக்ட் வேலை பார்க்குறாரு. அவரோட கைச் செலவுக்கு மட்டும், வருமானம் கிடைக்குது. ஆன... அப்பா இன்னமும், எதையுமே எங்கிட்ட எதிர்பார்க்கல.

அப்பா... பாட்டு பாடி என்னை எழுப்புவார்: பி.எம்.லீலா ஸ்ரீநிதி(பத்தாம் வகுப்பு ஐ.சி.எஸ்.இ., பொதுத்தேர்வில் மாநிலத்தில் முதலிடம் பெற்ற, மதுரை லட்சுமி பள்ளி மாணவி): தற்போது டி.வி.எஸ்., மெட்ரிக் பள்ளியில் பிளஸ் 1 சேர்ந்துள்ளேன். பத்தாம் வகுப்பில் முதலிடம் பெற்றதற்கு முழுக்காரணம் அப்பா தான். பெற்றோருக்கு (டாக்டர் பழனியப்பன், நுரையீரல் நிபுணர், அப்போலோ மருத்துவமனை, டாக்டர் மீனா பிரியதர்ஷினி) நான் ஒரே பிள்ளை. அப்பா... என்னை, ஒருநாளும் திட்டியதில்லை, அடித்ததில்லை. நான் சின்ன குழந்தையா இருக்கறப்ப, காலையில் எட்டு மணி வரைக்கும் தூங்குவேன். "நீ தான் எழுந்திருப்பதில் பர்ஸ்ட்... நீ தான் எதிலும் பெஸ்ட்' என்று கவிதை பாடி, எழுப்புவார். அது இன்றும் தொடர்கிறது. நான் மூன்றாம் வகுப்பு படிக்கும் போது, குட்டி குட்டியா பத்து கதைகள் எழுதினேன். அதைப் பார்த்துட்டு, தனியா ஓவியம் வரையச் சொல்லி, புத்தகமே வெளியிட்டார். அப்ப சந்தோஷமா இருந்துச்சு. இப்ப நினைச்சா... பிரமிப்பா இருக்கு. இத்தனூண்டு கதை எழுதினதுக்கே, புத்தகம் போடற அப்பா... யாருக்கு கிடைக்கும்? இரவு 2 மணி வரைக்கும் மருத்துவமனையில் வேலை. வீட்டுக்கு வரும் போதும், சிரிச்சுட்டு வருவார். பரீட்சை நேரத்துல கூட, தூங்கச் சொல்ற அப்பாவை பார்த்திருக்கீங்களா? மதிப்பெண் மட்டும் உலகமில்லை. சாப்பாடும், தூக்கமும் தான் முக்கியம் என்பார். அவருக்காக தான் முதல் மதிப்பெண் எடுத்தேன். சொந்தக் காலில் நிற்கவேண்டும் என்பதை தினமும் சொல்லித் தருவார். பாட்டு, வீணை, விளையாட்டுனு... என் மனசுக்கு பிடிச்ச விஷயங்களை அம்மாவும், அப்பாவும் ஊக்கப்படுத்துவாங்க. ஐ லவ்யூ அப்பா...

அப்பாவின் கைப்பிடித்து நடக்கும் அனுபவம், கோடி ரூபாய்க்கு கூட ஈடாகாது: கோபிநாத், சாக்ஸ் நிறுவன பங்குதாரர், மதுரை: நாங்க நான்கு பிள்ளைகள். இப்படித் தான் வாழவேண்டும் என்று, வாழ கற்றுக் கொடுத்தவர் என் அப்பா(கணபதி, சாக்ஸ் நிறுவனர்). அவரைப் போல நல்லவரைப் பார்க்கமுடியாது. கோபப்பட்டு திட்டினாலும், அது நமக்கு நன்மையாக அமையும். ஒருமுறை, ஒரு ரூபாய் தானே... என, அசட்டையாக கூறிவிட்டேன். அப்பாவுக்கு வந்ததே கோபம்... "ஒரு ரூபாயோட அருமை, உனக்குத் தெரியுமா? அதை சம்பாதிச்சு பாரு,' என்றார். எனக்கு திருமணம் செய்து வைத்தபோது அப்பா சொன்ன ஒரு விஷயத்தை, இன்றும் கடைப்பிடிக்கிறேன். "பெண்கள் சொல்ற குற்றச்சாட்டுகளை, நாலு பேரு முன்னால சபைக்கு கொண்டு வராதே. கூட்டுக் குடும்பமும், நிறுவனமும் சிதைஞ்சுரும்'னு சொன்னாரு. பணப் பட்டுவாடாவைப் பொறுத்தவரை, "ஒரு செக் கூட, பணமில்லைனு திரும்பி வரக்கூடாது. அது நமக்கு அவமானம்னு சொல்வாரு,'. அவரது நேர்மையும், மரியாதையும் தான் மிகப்பெரிய சொத்து. இப்போது அவருக்கு 80 வயதாகிறது. இப்பவும் கடைக்கு வந்து, எங்களை விட சுறுசுறுப்பா வேலை பார்க்கிறது ரொம்ப பிடிக்கும். அவரது ஆலோசனைகளை கேட்கும் போது, அவர் ஒரு நீதிபதியா இருந்துக்கலாமேனு தோணும்.

13 வயதில் அமெரிக்காவுக்கு தனியாக அனுப்பினார்: ஆர்.விசித்ரா (மதுரை பெல் ஓட்டல்ஸ் முதன்மை நிர்வாக இயக்குனர்): சிறு வயதிலிருந்தே அப்பா (ராஜசிங் செல்லதுரை, ஸ்டாண்டர்ட் பயர்ஒர்க்ஸ் இயக்குனர்) நிறைய சுதந்திரம் கொடுப்பார். நான் அப்பா செல்லம். 20 வயதில் தனியாக பேக்கரி துவங்குகிறேன், என்றபோது, முதலில் "செக்' புத்தகத்தை கையில் கொடுத்தார். அவரது வழிகாட்டுதலில் ஆறாண்டுகளில் கூடுதல் கிளைகளையும் திறந்துள்ளேன். ஐந்து வயதிலிருந்தே, என்னை வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்கிறார். தற்போது தொழில் தொடர்பாக, தனியாக செல்கிறேன். கரிசனமாக அவ்வப்போது போனில் பேசுவார். ஆனால் வந்தவுடன் "அங்கே சென்று என்ன கற்றுக் கொண்டாய். புதுவகை மெனுக்களை எழுதிக் கொண்டாயா' எனக் கேட்பார். 13 வயதில் சுற்றுச்சூழல் போட்டியில் வெற்றி பெற்றபோது, அமெரிக்காவின் ஹவாய் தீவிற்கு 15 நாட்கள் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்தனர். வீட்டில் நானும், அண்ணனும் தான். ஆனாலும் பயப்படாமல் என்னை தனியாக அனுப்பி வைத்தார். அப்போது வைத்த நம்பிக்கை, இன்னும் மாறவில்லை. ஒருமுறை, இரண்டு முறையல்ல... நூறு முறை மன்னிப்பார். என்னை மட்டுமல்ல... தொழிலாளர்களையும் தான்.

அப்பாவுக்கு அன்பு பரிசு: தந்தையர் தினத்தை முன்னிட்டு அப்பாவிற்கு பரிசளிக்க விரும்புகிறீர்களா? ஷாப்பிங் செய்யப்போகிறீர்களா?

* நம் நினைவுகளை நெஞ்சோடு பத்திரப்படுத்த, பணத்தோடு "பர்ஸ்' பரிசளிக்கலாம்.
* கீதையும், குரானும், பைபிளும், நன்னெறி புத்தகங்களும் தரலாம்.
* சிறுவயதில் கைப்பிடித்து நடந்ததை நினைவுகூற, "வாட்ச்' தரலாம்
* விரும்பிய இடத்திற்கு சிறு சுற்றுலா அழைத்து செல்லலாம். முடிந்தால் அப்பா பிறந்த கிராமத்திற்கு, குடும்பத்தோடு செல்லலாம்.
* போட்டோவுடன் "கீ செயின்'
* நினைத்த நேரம் பேசி மகிழ, மொபைல் போன்
* எதுவும் வாங்காவிட்டாலும், அன்பான வார்த்தைகள் பேசலாம். காலில் விழுந்து வணங்கலாம்.

தெய்வம் இருப்பது எங்கே?

* வாழும் தெய்வங்கள் (பெற்றோர்) இருப்பது வீட்டில் தான். கோயிலில் தேட வேண்டாம்.
* எட்டி உதைத்த கால்களை, கட்டி அணைத்து கொஞ்சிய அப்பாவுக்கு... முதியோர் இல்லம் தான்... நீங்கள் தரும் பரிசா? உங்கள் பிள்ளையிடம், இந்தப் பரிசை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா?
* வாலிபம் தொலைந்து வயதாவது இயற்கை. நாளை நமக்கும் தான். சிறுவயதில் நம்மை தாங்கியவருக்கு, முதுமையில், நாம் கொஞ்சம் தாங்கிப் பிடிக்கலாமே.
நன்றி - விக்கிபிடியா ,தினமலர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக