திங்கள், 14 நவம்பர், 2016

இந்திய டென்னிஸ் விளையாட்டு வீராங்கனை சானியா மிர்சா பிறந்த நாள் நவம்பர் 15,

இந்திய டென்னிஸ் விளையாட்டு வீராங்கனை  சானியா மிர்சா பிறந்த நாள் நவம்பர் 15,

சானியா மிர்சா ( உருது : ﺛﺎﻧﯿﮧ ﻣﺮﺯﺍ ,
தெலுங்கு: సానియా మీర్జా , இந்தி :सानिया मिर्ज़ा ,
பிறப்பு நவம்பர் 15,1986,மும்பை ) ஒரு இந்திய டென்னிஸ் விளையாட்டு வீரராவார்.
இவர் 2003ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டு வரை
மகளிர் டென்னிசு சங்கத்தால்
இந்தியாவின் முன்னணி டென்னிஸ்
வீராங்கனை என தரவரிசைப்படுத்தப்பட்டார்.
2004ம் ஆண்டு இவருக்கு இந்திய அரசால்
அர்ஜுனா விருது வழங்கப்பட்டது.
ஏப்பிரல் 2015இல் பேமிலி கோப்பை டென்னிசு
போட்டியில் மார்ட்டினா கிஞ்சிசுடன் இணைத்து
இரட்டையர் பட்டத்தை வென்றதை அடுத்து
இவர் பெண்கள் இரட்டையர் பிரிவில்
முதலிடம் பெற்றார். டென்னிசு போட்டி
தரவரிசையில் முதல் இடம் பிடிக்கும் முதல்
இந்தியப் பெண் இவராவார்.

ஆரம்ப வாழ்க்கை

விளையாட்டு துறை பத்திரிகையாளரான
இம்ரான் மிர்சாவிற்கும் தாயாகிய
நசிமாவிற்கும் மும்பையில் சானியா மிர்சா
பிறந்தார். அவர் ஐதராபாத்தில் ஒரு
ஷியா முஸ்லிம் குடும்பத்தில்
வளர்க்கப்பட்டார். மிர்சா தனது ஆறாம்
வயதில் டென்னிஸ் விளையாடத்
தொடங்கி 2003ம் ஆண்டு
டென்னிஸ் விளையாட்டை
தொழிலாக்கிக்
கொண்டார். அவர் தனது
தந்தையாலும் மற்றும் அவரது குடும்ப
உறுப்பினர்களாலும் டென்னிஸ்
விளையா ட்டில் பயிற்சி அளிக்கப்பட்டார்.
அவர் முதலில் ஐதராபாத்தில் உள்ள
நாசிர் பள்ளியில் படித்து பின்னர்
செயின்ட் மேரிஸ் கல்லூரியில் பட்டம்
பெற்றார்.
டென்னிஸ் விளையாட்டு
வாழ்க்கை
2003ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மிர்சா இந்திய
பெடரேசன் கோப்பைக் குழுவில் சேர்ந்து அனைத்து
மூன்று ஒற்றையர்கள் ஆட்டங்களிலும்
வெற்றி பெற்றார். 2003ம் ஆண்டில்
நடந்த விம்பிள்டன் மகளிர் இரட்டையர்
விளையாட்டில் ரஷ்யாவை சேர்ந்த அலிசா
க்லேய்போனவுடன் ஜோடி சேர்ந்து விளையாடிப் பட்டம்
பெற்றார்.
மகளிர் டென்னிஸ் விளையாட்டு
வீராங்கனைகளில் மிர்சா இந்தியாவிலிருந்து
ஒற்றையர் விளையாட்டில் 27ம் தர வரிசையிலும்
இரட்டையர் விளையாட்டில் 18வது தர வரிசையிலும்
அடைந்து,மிக அதிகப் படியான தர வரிசையில்
இடம் பெற்றவராவார். அவர்
கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ்
விளையாட்டுப் போட்டித் தொடரில்
இந்தியாவில் முதல் பெண்மணியாக
வித்திட்ட நற்பெயரை
கொண்டுள்ளார். அதற்கு முன்பு
சனியா கிராண்ட் ஸ்லாம்
தொடரில்2005ம் ஆண்டு நடந்த
யு.எஸ் திறந்த வெளிப் போட்டியில் மஷோன
வாஷிங்க்டன், மரியா எலேனா கமேரின்
மற்றும் மரியான் பார்டோலி ஆகிய மூவரையும்
வென்று நான்காம் சுற்றை அடைந்த முதல்
இந்திய பெண்மணியாவார். 2009ம்
ஆண்டு ஆஸ்திரேலியா திறந்த வெளி
கலப்பு இரட்டையர் பிரிவில் மகேஷ் பூபதியிடம் ஜோடி
சேர்ந்து விளையாடி கிராண்ட் ஸ்லாம் பட்டம்
பெற்ற முதல் இந்தியப்
பெண்மணியாவார்.
மிர்சா 2005ம் ஆண்டு ஆஸ்திரேலியா திறந்த
வெளி போட்டியின் சாம்பியனான
செரீனா வில்லியம்சிடம் தோற்று
மூன்றாவது சுற்றில் வெளியேறினார்.
2005ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12ம் நாள்
ஹைதராபாத் திறந்தவெளி இறுதிப்
போட்டியில் உக்ரைனை சேர்ந்த அல்யோன
போண்டறேங்கோவை தோற்கடித்து டபிள்யு டி எ வின்
ஒற்றையர் பட்டதை பெற்ற முதல் இந்திய
பெண்மணி என்ற பெருமையைப்
பெற்றார். செப்டம்பர் 2006ம்
ஆண்டு வரை மூன்று மிகப்பெரிய
வெற்றிகளை பின்வரும்
வீராங்கனைகளான, ச்வேத்லேன
குச்நேத்சொவ, நாடிய
பெட்ரோவா மற்றும் மாற்றின ஹிங்கிசை
எதிர்த்துப் பெற்றார். 2006ம் ஆண்டு
நடந்த தோஹா ஆசிய விளையாட்டுகளில்
மிர்சா மகளிர் ஒற்றையர் பிரிவில்
வெள்ளியையும் மற்றும் கலப்பு
ரெட்டையர் பிரிவில் லியாண்டர்
பெயசிடம் ஜோடி சேர்ந்து தங்கத்தையும்
வென்றார். இவர் அதில் அணி சார்ந்த
போட்டியில் வெள்ளிக் கோப்பை பெற்ற
இந்திய மகளிர் அணியின் ஒரு
அங்கத்தினராகவும் இருந்தார்.
2006ம் ஆண்டு இந்தியாவின் நான்காவது
உயர்ந்த சமூகம் சார்ந்த கௌரவ விருதான
பத்மஸ்ரீ பட்டம், டென்னிஸ்  துறையில்
மிர்சாவின் பங்கிற்கு வழங்கப்பட்டது.
மிர்சாவிற்கு 2007ம் ஆண்டு கடினமிக்க கோடை
பருவத்தில் நடந்த யு.எஸ் திறந்த வெளி
தொடர் நிலை போட்டியில் எட்டாம்
இடத்தைப் பெற்று தனது டென்னிஸ்
துறையில் மிகச் சிறந்த போட்டி முடிவை அடைந்தார்.
இவர் பாங்க் ஆப் தி வெஸ்ட் கிளாசிக்
இறுதி சுற்றை அடைந்து ஷகார் பீருடன் ஜோடி சேர்ந்து
இரட்டையர் போட்டியில் வென்று டயர் 1
அகூரா க்ளாசிக் கால் இறுதி போட்டியை
அடைந்தார்.
2007ம் ஆண்டு நடந்த யு.எஸ் திறந்த
வெளி போட்டியில் கடந்த சில வாரங்களில்
மூன்றாவது முறையாக அண்ணா
சக்வேத்சிடம் தோற்று மூன்றாம் சுற்றை அடைந்தார்.
இவர் சற்று சிறப்பாக கலப்பு இரட்டையர்
போட்டியில் தனது கூட்டாளியாகிய மகேஷ்
பூபதியுடன் கால் இறுதிக்கும் மகலியா
இரட்டையர் போட்டியில் பெதனீ மட்டேக்குடன்
ஜோடி சேர்ந்து இரண்டாம் நிலையிலுள்ள லிசா
ரய்மொந்து மற்றும் சமந்தா ச்டோசூர்
இருவரையும் வெற்றி
கொண்டதையும் சேர்த்து மகளிர்
இரட்டையர் கால் இறுதி போட்டியை அடைந்தார்.
இவர் பீஜிங்கில் 2008ம் ஆண்டு நடந்த கோடை
ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் மகளிர் ஒற்றையர்
மற்றும் இரட்டையர் பிரிவுகளில் இந்தியாவின்
சார்பில் விளையாடினார். இங்கு செக்
குடியரசை சேர்ந்த இவேட
பெநேசொவிடம் 1-6, 1-2 என்ற
நிலையில் தோற்கும் தருவாயில் ஒற்றையர் பிரிவில்
தனது 64வது சுற்றில் ஒய்வு பெற்றார்.
அதில் இரட்டையர் பிரிவில் சுனிதா ராவுடன்
ஜோடி சேர்ந்தார். அவர்கள் 32ம் சுற்றில்
சுலபமாக அடைந்தாலும் ரஷ்யாவை சேர்ந்த
ஜோடிகளான ச்வேத்லேன குழ்னேடசொவ
மற்றும் டிநர சபினா இவர்களிடம் 4-6, 4-6
என்ற நிலையில் 16ம் சுற்றில் தோற்றனர்.
சென்னையை சேர்ந்த எம்.ஜி.ஆர் கல்வி
மற்றும் ஆராய்ச்சி கழகத்தின்
எழுத்துகளுக்கான கௌரவ மருத்துவர் பட்டத்தை
2008-12-11 [8] தேதி பெற்றார். அங்கு
அவளது உடன் பிறந்தவரின் மகளாகிய
சோனியா பைய்க் மிர்சா படிக்கின்றாள்.
2008
மிர்சா ஒபர்டில் பிலாவயா
பென்னேட்டவிடம் மூன்று கட்டங்களில்
தோற்று 6ம் நிலையில் கால் இறுதியை அடைந்தார்.
இவர் ஆஸ்த்ரேலியா திறந்த வெளி
போட்டிகளில் 31ம் நிலையில் மூன்றாவது சுற்றிற்கு
8ம் நிலையில் உள்ள வீனஸ் வில்லியம்சுடன்
முதல் கட்டத்தில் 5-3 என்றிந்தாலும் பின்பு
நடந்த கட்டங்களில் 7-6(0) , 6-4 என்ற
புள்ளிகளில் தோல்வியுற்றார். இவர்
ஆஸ்த்ரேலியா திறந்த வெளி கலப்பு
இரட்டையர்]] பிரிவில் மகேஷ் பூபதியுடன் ஜோடி
சேர்ந்து இரண்டாம் வெற்றி நிலையை
எட்டினார். இந்த போட்டியில் சன் டிஆன்டன்
மற்றும் நேனாத் ஜிமொஞ்சிக் 7-6(4).
6-4 என்ற புள்ளிகளில் இறுதி சுற்றை
வென்றனர்.
பட்டாயா நகர போட்டியிலிருந்து இடது
தோள்பட்டையின் வலி காரணமாக
விலகினார்.
மிர்சா இந்தியன் வேல்சில் 21ம் நிலையில் 9ம்
நிலையிலுள்ள ஸ்ஹஹார் பெயரை
வென்றார்.ஆனால் 5ம் நிலையிலுள்ள
டேனியல் ஹன்டுசோவாவிடம் தோற்று 4ஆர நிலையை
அடைந்தார்.
2008 ஆண்டு விம்பிள்டன் சேம்பியன்ஷிப்
போட்டியில் சனியா 32ம் நிலையில் மிகப் பல
விளையாட்டு புள்ளிகளை பெற்றிருந்தும்
போட்டிக்கு தகுதி நிலையிலுள்ள மரியா ஜோஸ்
மர்டிநேஸ் சந்செசிடம் 6-0, 4-6, 9-7 என்ற
புள்ளிகளில் தோற்கடிக்கப்பட்டார்.
2008ம் ஆண்டு நடந்த பீஜிங் ஒலிம்பிக்ஸ்
போட்டியில் மிர்சா இவேட
பெநேசொவவிற்கு எதிரான
போட்டியில் தனது வலது மணிக்கட்டு
காயத்தால் முதல் சுற்றிலேயே
வெளியேற்றப்பட்டார், 2008ம் ஆண்டு
முழுவதும் தனது மணிகட்டில்
தொடர்ந்து வந்த
தொந்தரவுகளை அனுபவித்து அதன்
காரணமாக ரோலாந்து காரோஸ் ,
யு.எஸ்.திறந்தவெளி , கிராண்ட் சலாம்
மற்றும் பல போட்டிகளிலிருந்து விலக நேர்ந்தது.
2009
சானியா 2009ம் ஆண்டு ஆஸ்திரேலியா
திறந்தவெளி போட்டியில் தனது முதல்
கிராண்ட் சலாம் பட்டத்தை வென்றார்.
மேல்பௌர்நில் நடந்த இறுதி போட்டியில் கலப்பு
இரட்டையர் பிரிவில் மகேஷ் பூபதியுடன் ஜோடி சேர்ந்து
6-3, 6-1 என்ற புள்ளிகளில் பிரான்சை சேர்ந்த
நதலயே தேசி மற்றும் இஸ்ரேலை சேர்ந்த அண்டி
ராம் ஜோடியை வென்று பட்டத்தை
பெற்றார். பின்னர் இவர்
பாங்காக்கில் நடந்த பட்டையா மகளிர்
திறந்தவெளி தொடர் போட்டியில்
வரிசையாக நல்ல முறையில் விளையாடி இறுதி
போட்டியை அடைந்தார். இவர் இறுதி போட்டியில் வேற
வோனறேவாவிடம் 7-5, 6-1 என்ற புள்ளிகளில்
ஆட்டத்தை இழந்தார்.அதே தொடரில்
சானியா இரட்டையர் பிரிவில் அரை இறுதியை
அடைந்தார்.
சனியா மிர்சா பி என் பி பரிபாஸ் திறந்த
வெளிப்போட்டியில் கலந்து
கொண்டு தனது இரண்டாவது
சுற்றில் பிலவியா பென்னேட்டவிடம்
தோற்றார். ப்லவியா பென்னேட்ட பின்னர்
இவர் மியாமி மாஸ்டர் போட்டியில் பங்கு
கொண்டு பிரான்சை சேர்ந்த மதில்டே
ஜோதன்ச்சொனிடம் முதல் சுற்றிலேயே
தோற்றார். இங்கு மிர்சா தனது இரட்டையர்
ஜோடியான சீனா தைபெயை சேர்ந்த சயா
ஜங் சாங்குடன் சேர்ந்து இரட்டையர் பிரிவில் அரை
இறுதி வரை விளையாடினார்.இவர் எம் பி எஸ்
குழு சம்பியன்ஷிப்ஸ் போட்டிகளில் முதல்
சுற்றிலேயே சுருண்டு வீழ்ந்து ஆனால் அதே
போட்டியில் சுஅங்கியுடன் விளையாடி இரட்டையர்
பட்டத்தை வென்றார்.ரோலாந்து காரோஸ்
போட்டியிலும் முதல் சுற்றிலேயே கசகச்தானை சேர்ந்த
கலீனா வோச்கொபோவாவிடம்
தோற்றார்.மீண்டும் அதே போட்டியில் இரட்டையர்
பிரிவில் சாங்குடன் விளையாடியும் கலப்பு
இரட்டையர் பிரிவில் மகேஷ் பூபதியுடன் விளையாடி
இரண்டிலுமே தோற்றார். இவர் 2009ம் ஆண்டு
நடைபெற்ற ஏகன் க்ளாசிக் போட்டியில் பங்கு
கொண்டு அரை இறுதி வரை
விளையாடினார். இதில் இவர்
ச்லோவ்வகியாவை சேர்ந்த இறுதி சுற்றில் பட்டம்
வென்ற மக்தலேனா
ரய்பரிகொவாவிடம் 3-6 , 6-0, 6-3
என்ற புள்ளிகளில் அரை இறுதி வரை விளையாடி
தோற்றார்.
மிர்சா 2009 விம்பிள்டன் சாம்பியன்ஷிப்
போட்டியில் தனது முதல் சுற்றிலேயே அண்ணா
லேனா க்ரோன்பில்டை தோற்கடித்தார். பிறகு
சொரானா சிர்சடேயிடம் விளையாடி
தோற்றதின் மூலம் 28ம் நிலைக்கு தள்ளப்பட்டார்.
டென்னிஸ் துறையின் இறுதிப்
போட்டிகள்
பெருவெற்றித்தொடர்களில்
வாகையர்
இவர் மூன்று முறை கலப்பு இரட்டையர் ஆட்டத்தில்
வாகையர் பட்டம் பெற்றுள்ளார். 2009
ஆசுத்திரேலிய ஓப்பன் & 2012 பிரெஞ்சு
ஓப்பனில் மகேசு பூபதியுடன் இணைந்தும். 2014ம்
ஆண்டு அமெரிக்க ஓப்பன் கலப்பு
இரட்டையர் பிரிவில் பிரேசிலின் புருனோ
சோரெசுடன் இணைந்தும் வெற்றி
பெற்றார். [9]
ஒற்றையர்கள்
வெற்றிகள் ( 1 டபிள்யு டி எ / 12 இ டி
எப் )
2005 ஹைதரபாத் திறந்தவெளிப் போட்டியில்
4 இறுதி போட்டிகளை அடைந்து 1 போட்டியில்
வென்றார்.
ஹைதராபாத் திறந்தவெளி
2006ல் சானியா மிர்சா
2007 ஆஸ்த்ரேலியா
திறந்தவெளி மகளிர் இரட்டையர்
போட்டியில் முதல் சுற்றில் சானியா
மிர்சா
இரட்டையர்கள்
2015ம் ஆண்டின் விம்பிள்டன்
தொடரில் மார்ட்டினா ஹிங்கிஸ்
உடன் இணைந்து முதல் இரட்டையர்
கிரான்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றார்
வெற்றிகள் (12)
பதக்கம்:
2009ற்கு முன்பு
பதக்கம் 2009
தொடக்கம் முதல்
கிராண்ட் ஸ்லாம் போட்டி தொடர்கள்
(0)
டபிள்யு டி எ சம்பிஒன்ஷிப் (0)
தளம் 1 (0) பிரிமீயர் கட்டாய தகுதி (0)
தளம் 2(2) பிரிமீயர் 5 (0)
தளம் 3 (3) பிரிமீயர் (0)
தளம் 4 மற்றும் 5
(2) பலநாடுகள் (1)
இ டி எப் சர்குட் (4)
எண்: தேதி : போட்டி தொடர் மேற்ப
1 ஜனவரி 7, 2002 மணிலா பிலிப்பைன்ஸ் கடின
2 மார்ச் 3, 2003 பெனின் சிடி,
நைஜீரியா கடின
3 பிப்ரவரி 22,
2004
ஹைதராபாத்,
இந்தியா கடின
4 ஆகஸ்ட் 15,
2004
லண்டன், கிரேட்
பிரிட்டன் கடின
5 அக்டோபர் 10,
2004 லோகோஸ் , நைஜீரியா கடின
6 பிப்ரவரி 19,
2006
பெங்களூர் ,
இந்தியா கடின
7 செப்டம்பர்
24, 2006
கொல்கத்தா
, இந்தியா ஜமுக்
8 மே 14, 2007 பேஸ் மொரோக்கோ களிம
9 ஜூலை 22, 2007 சின்சினாட்டி , யு.எஸ் , கடின
10. ஜூலை 29, 2007 ச்டான்போர்த் , யு.எஸ் , கடின
11. ஆகஸ்ட் 25,
2007 நீயு ஹேவன் , யு.எஸ் , கடின
12. ஏப்ரல் 12, 2009 போனதே வெட்ற பீச் ,
யு.எஸ் களிம
கலப்பு இரட்டையர்கள் (1)
வெற்றிகள் (1)
வருடம் சம்பிஒன்ஷிப் ஜோடி
சேர்தல்
இறுதி
போட்டி
எதிரிகள்
புள்
இறு
2009 ஆஸ்திரேலியா
திறந்தவெளி
[52] மகேஷ்
பூபதி
[53]நதலயே
தேசி
[54] அண்டி
ராம்
6-3,
ஒற்றையர்கள் ஆட்ட
செயல்முறை நேரக் குறிப்புகள்
2007 ஆஸ்தேரேலியா
திறந்தவெளி டென்னிசில்
சனியா மிர்சா
ஒற்றையர்கள் ஆட்ட
செயல்முறை குறிப்புக்கள்
குழப்பங்களையும் இரட்டை எண்ணிக்கையையும்
தவிர்க்க இந்த அட்டவணையில் வீரர்களின்
பங்கோ அல்லது தொடர் முடிந்தாலே
மட்டுமே அந்த தகவல்கள் தற்போதிய நிலையில்
வழங்கப்பட்டுள்ளது. இந்த அட்டவணை பி என்
பி பரிபாஸ் போட்டி 2009ம் ஆண்டு இந்தியன்
வெல்ல்ஸில் நடந்து 2009 ஆண்டு மார்ச்
மாதம் 23ம் தேதி முடியும் வரை நிலுவையில்
இருக்கும்.
போட்டி
தொடர் 2004 2005 2006 2007 2008
ஆஸ்திரேலியா
திறந்தவெளி எ 3R 2R 2R 3R
பிரெஞ்சு
திறந்தவெளி
அலைன் =
"நடுவில்"
= ஸ்டைல்
எ 1R 1R 2R
விம்ப்லேடோன்
அலைன் =
"நடுவில்
" ஸ்டைல்
எ 2R 1R 2R
யு.எஸ்
திறந்தவெளி எ 4R 2R 3R எ அ
கிராண்ட்
ஸ்லாம்
வெற்றி -
தோல்வி
0-0 6-4 2-4 5-4 3-2
ஆண்டு முடிவில்
வரிசை பட்டியல் 206 33 66 31 99 அ
எ = தொடரில் பங்கு
கொள்ளவில்லை
கியு = தகுதி சுற்றில் தோல்வி
வெற்றிக்கு அடையாளமாக பச்சை வர்ண
பின்னலங்காரம் மஞ்சள் பின்னலங்காரம்
முதல் 8 எண்ணிக்கையில் உள்ளவர்கள் ( கால்
இறுதி முதல் இறுதி போட்டி வரை )
சர்ச்சைகள்
சானியா ஒரு முஸ்லிம்
பெண்ணாகையால் அவர்
விளையாட்டின்போது உடுத்தும் உடை, இஸ்லாமிய
உடை உடுத்தும் முறைக்கு பொருந்தவில்லை
என்று சில தீவிர இஸ்லாமிய குழுக்களால்
குற்றம் சுமத்தபட்டார். செப்டம்பர் 8,
2005 வெளியிடப்பட்ட ஒரு குற்றச்சாட்டில்
ஒரு பெயர் குறிப்பிடப்படாத ஒரு
இஸ்லாமிய பகுத்தறிவாளர் இவரது உடை
உடுப்பு இஸ்லாமிய உடை கட்டுபாட்டிற்கு
எதிரானது என்று கூறியுள்ளார் [10] .
ஆனால் இந்த கேலிக்கும் குற்றச்சாட்டிற்கும்
மிர்சா கலங்கவில்லை என்ற செய்தியை
மறுநாள் வெளியிட்ட செய்திக்குறிப்பு
விளக்கியது. [11] இவரது டென்னிஸ்
போட்டிகளை இடையுறு செய்யப்போவதாக ஜமைத்
உலேமா இ ஹிந்த் மிரட்டியாதாகவும்
புரளிகள் இருந்தன. ஆனால் இந்த புரளிகளை
அந்த அமைப்பு மறுத்தது, அவர்கள்
சானியாவின் உடை இஸ்லாமியக்
கலாச்சாரத்திற்கு சற்று எதிராக
இருந்தாலும் யாருடைய விளையாட்டையும்
தடுப்பதாக இல்லை என்றும் அறிவித்தது.
எனினும் இவருடைய பாதுகாப்பை
கொல்கொத்தா
காவல்துறை மிகவும் பலப்படுத்தியது. [12]
2005 நவம்பர் மாதம் நடந்த ஒரு
மாநாட்டில் பாதுகாப்பான உடலுறவைப்
பற்றி பேசியதை வைத்து, இஸ்லாமிய குழுக்கள்
சானியா இஸ்லாமிலிருந்து பிரிந்து
விட்டதாகவும் அவர் இளைய தலைமுறையினரை நேர்
வழியிலிருந்து கெடுப்பதாகவும் உரிமை
கொண்டாடினர். ஆனால் மிர்சா
தான் திருமணத்திற்கு முன்
வைத்துகொள்ளும் உடலுறவை
எதிர்ப்பதாக தனது நிலையை தெளிவு
படுத்தினார். [13]
2006 ஆண்டு சில செய்தித் தாள்களில்
இஸ்ரேல் சேர்ந்த வீரரான சாஹர் பீ'ர் உடன்
சேர்ந்து விளையாட மறுப்பதாக செய்திகள்
வந்தன. இந்திய இஸ்லாமிய சமுதாயத்தின்
தீவிர எதிர்ப்பின் காரணமாக விளையாட
மறுப்பதாக ஊடகங்கள் செய்தி
வெளியிட்டன. [13] ஆனால், அடுத்த
வருடமே (i.e, 2007 ) , இவருடன் இணைந்து WTA
ஸ்தாந்பொர்ட் ,
கலிபொர்நியா விளையாட்டில்
கலந்து கொண்டார்.
2008 ஹாப்மன் கோப்பை போது நடந்த
பத்திரிகையாளர்கள் கூட்டத்தில் இந்திய தேசிய
கொடியை தன் காலடிக்கு
அருகாமையில் வைத்துகொண்டிருக்கும்
நிலையில் படம் எடுக்கப் பட்டார். [14]
இதனால், ஒரு தனி குடிமகனின் புகாரின்
பேரில் தேசிய கௌரவ சட்டத்திற்கு அவமரியாதை
தடுக்கும் சட்டத்தின் கீழ் உரிய தண்டனையும்
பெற்றார். ஆனால் மிர்சா அதை
எதிர்த்து, தான் தன் நாட்டை நேசிப்பதாகவும்
இல்லையெனில் ஹாப்மன் கோப்பை போட்டியில்
பங்கு கொண்டிருக்க மாட்டேன்
என்றும் தான் எந்த அவமரியாதையையும்
உணர்த்தவில்லை என்றும் வாதாடினார்.
2008 பிப்ரவரி 4 தேதி அன்று மிர்சா தான்
அடுத்த மாதம் பெங்களூரில்
தொடங்கும் பெங்களூர் 2008
போட்டிமுதல் இந்தியாவில் நிகழும் எல்லா
டென்னிஸ் விளையாட்டு
தொடர்களிலும், மிகப்பல
முரண்பாடுகளையொட்டி தனது
நிர்வாகியின் ஆலோசனைப்படி, பங்கு
கொள்ளப் போவதில்லை என்று
அறிவித்தார்.
சொந்த வாழ்க்கை
சானியா மிர்சாவிற்கு அவரது குழந்தை பருவ
நண்பரான ஹைதராபாதை சேர்ந்த
ஸொஹ்ரப் மிர்சாவுடன் திருமணம்
நிச்சயம் ஆனது. இவர்கள் திருமண நிச்சயம்
நீண்ட நாட்கள் நிலைத்திருக்கவில்லை.
இந்தப் பிரிதலுக்குப் பின்னர் சானியா,
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான
சொயப் மாலிக்கை காதலித்து
மணம் புரிவதாகக் கூறினார். இதனையடுத்து
சொயப் மாலிக் முன்பே
திருமணமானவர், விவாகரத்துப்
பெறாதவர் என்ற சர்ச்சைகளும்
அரங்கேறின. அவரது முன்னாள் மனைவி என்று
கூறப்படும் ஆயிஷா மாலிக்,
சொயப் மீது வழக்குத்
தொடர்ந்ததையடுத்து ஐதராபாத்
காவலர்கள் அவரது கடவுச்சீட்டை பறித்த
நிகழ்வுகளும் அரங்கேறின. உள்ளூர்
சமயத்தலைவர்களின் அமைதிப் பேச்சுக்களைத்
தொடர்ந்து ஏப்ரல் 12 , 2010 அன்று
இருவருக்கும் திருமணம் நடந்தது. [19] அவர்கள்
திருமண நிகழ்வு ஹைதராபாத்திலுள்ள
டெக்கானிலும், வரவேற்பு
சியால்கோட்டிலும் நிகழ்ந்தது. திருமணத்திற்குப்
பின் அவர்கள் துபாயில் தங்களது
வாழ்க்கையைத் தொடர திட்டமிட்டு
இருக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக