வியாழன், 24 நவம்பர், 2016

பெண்களுக்கு எதிரான அனைத்துலக வன்முறை ஒழிப்பு நாள் நவம்பர் 25.


பெண்களுக்கு எதிரான
அனைத்துலக வன்முறை
ஒழிப்பு நாள் நவம்பர் 25.

பெண்களுக்கு எதிரான
அனைத்துலக வன்முறை
ஒழிப்பு நாள் ( International Day for the
Elimination of Violence against Women)
ஆண்டுதோறும் நவம்பர் 25 ஆம்
நாள் அன்று உலகெங்கணும்
கொண்டாடப்பட்டு வரும் ஒரு
சிறப்பு நாள் ஆகும்.
உலகளாவிய ரீதியில் பெண்கள்
இன்று பல விதமான
வன்முறைகளுக்கு
உட்படுத்தப்படுகின்றனர்.
பெண்களுக்கு எதிரான
வன்முறைகளை வெளி
உலகிற்கு காட்டி அதற்கான
நியாயமான தீர்க்கமான
முடிவுகளை எடுப்பதற்காக
சர்வதேச மகளிர் தினம் மற்றும்
பெண்களுக்கு எதிரான
வன்முறைகள் ஒழிப்பு சர்வதேச
தினம் ஆகியன
முன்வைக்கப்படுகின்றன.
ஐக்கிய நாடுகள் பொதுச்சபை
1999 டிசம்பர் 17 ஆம் நாள் கூடிய
போது ஆண்டு தோறும் நவம்பர் 25
ஆம் நாளை பெண்களுக்கு
எதிரான வன்முறைகள் ஒழிப்பு
சர்வதேச தினமாகப் பிரகடனம்
செய்யும் தீர்மானத்தை
நிறைவேற்றியது. இத்தீர்மானம்
ஐக்கிய நாடுகள் அவையின் 54/ 134.
இலக்க பிரேரணையாக
ஏற்றுக்கொள்ளப்பட்டது.
வரலாறு
டொமினிக்கன் குடியரசில் 1960
நவம்பர் 25 இல் மிராபெல்
சகோதரிகள் என அழைக்கப்படும்
மூன்று சகோதரிகள் அவர்களின்
அரசியல் செயற்பாடுகளுக்காக
அந்நாட்டின் அன்றைய ஆட்சியாளர்
ரபாயெல் டுருஜிலியோவின்
(1930-1961) உத்தரவின் பேரில்
படுகொலை செய்யப்பட்டனர்.
பாதிக்கப்படும்
பெண்களுக்கெதிராகவே இவர்கள்
சிறப்பாகக் குரல் கொடுத்தவர்கள்.
'மறக்கமுடியாத வண்ணத்துப்
பூச்சிகள்" என்று பின்னர் உலகில்
பெயர் பெற்ற இந்த மிராபெல்
சகோதரிகள் இலத்தீன்
அமெரிக்காவில் பெண்களுக்கு
எதிரான வன்முறைக்
கொடுமையின் சின்னமாக
மாறினார்கள். 1980 ஆம் ஆண்டு
முதல் அந்த நாள் அவர்களின்
படுகொலையை நினைவு
கூருவதற்காகவும், பால்நிலை
வன்முறைகளுக்கு எதிராக
விழிப்புணர்ச்சியை
ஏற்படுத்துவதற்காகவும்
தெரிவுசெய்யப்பட்டது. அன்றைய
தினத்தைத் தொடர்ந்து 16
நாட்களுக்கு பால்நிலை
வன்முறைகளுக்கு எதிரான
விழிப்புணர்ச்சியை
ஏற்படுத்துவதற்கு உலகளாவிய
ரீதியில் செயற்பாடுகள்
முன்னெடுக்கப்பட்டன. இந்தச்
செயற்பாடுகள் சர்வதேச மனித
உரிமைகள் தினமான டிசம்பர் 10 ஆம் திகதி முடிவடையும்.
************************************

உலகளாவிய ரீதியில் பெண்கள் பல
விதமான வன்முறைகளுக்கு
உட்படுத்தப்படுகின்றனர்
பெண்களுக்கு எதிரான
வன்முறைகளை வெளி உலகிற்கு
காட்டி அதற்கான நியாயமான
தீர்வுகளை எட்டுவதற்காக சர்வதேச
மகளிர் தினம் மற்றும்
பெண்களுக்கு எதிரான
வன்முறைகள் ஒழிப்பு சர்வதேச
தினம் ஆகியன
முன்வைக்கப்படுகின்றன.
ஐக்கிய நாடுகள் பொதுச்சபை 1999
டிசம்பர் 17 இல் கூடிய போது
ஆண்டு தோறும் நவம்பர் 25
பெண்களுக்கு எதிரான
வன்முறைகள் ஒழிப்பு சர்வதேச
தினமாகப் பிரகடனம் செய்யும்
தீர்மானத்தை நிறைவேற்றியது.
இத்தீர்மானம் ஐக்கிய நாடுகள்
சபையின் 54/ 134. இலக்க
பிரேரணையாக
ஏற்றுக்கொள்ளப்பட்டது.
டொமினிக்கன் குடியரசில் 1960
நவம்பர் 25 இல் மிராபெல்
சகோதரிகள் என அழைக்கப்படும்
மூன்று சகோதரிகள் அவர்களின்
அரசியல் செயற்பாடு களுக்காக
அந்நாட்டின் அன்றைய ஆட்சியாளர்
ரபாயெல் டுருஜிலியோ வின்
(1930-1961) உத்தரவின் பேரில்
படுகொலை செய்யப்பட்டனர்.
சமமூகத்தில் பாதிக்கப்படும்
பெண்களுக்கெதிராகவே இவர்கள்
சிறப்பாகக் குரல் கொடுத்தவர்கள்.
'மறக்கமுடியாத வண்ணத்துப்
பூச்சிகள்" என்று பின்னர் உலகில்
பெயர் பெற்ற இந்த மிராபெல்
சகோதரிகள் இலத்தீன்
அமெரிக்காவில் பெண்களுக்கு
எதிரான வன்முறைக்
கொடுமையின் சின்னமாக
மாறினார் கள். 1980 ஆம் ஆண்டு
முதல் அந்த நாள் அவர்களின்
படுகொலையை நினைவு
கூருவதற்காகவும், பாலியல்
வன்முறை களுக்கு எதிராக
விழிப்புணர் ச்சியை
ஏற்படுத்துவதற்காகவும் தெரிவு
செய்யப்பட்டது. அன்றைய தினத்தைத்
தொடர்ந்து 16 நாட்களுக்கு
பாலியல் வன்முறைகளுக்கு
எதிரான விழிப்புணர்ச்சியை
ஏற்படுத்துவதற்கு உலகளாவிய
ரீதியில் செயற்பாடுகள்
முன்னெடுக்கப்பட்டன. இந்தச்
செயற்பாடுகள் சர்வதேச மனித
உரிமைகள் தினமான டிசம்பர் 10 ஆம்
திகதி வரை தொடரும்.
பெண்களுக்கு எதிரான அனைத்து
பாகுப்பாட்டையும் ஒழிப்பதற்கான
உடன்படிக்கை என்பது ஐக்கிய
நாடுகள் பொதுச் சபையால் 1979 ம்
ஆண்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு
அனைத்துலக உடன்படிக்கை ஆகும்.
இந்த உடன்படிக்கை 1981 ம் ஆண்டு
நடைமுறைக்கு வந்தது.
உலகளாவிய நோக்கில் பெண்களின்
உரிமைகளை இந்த உடன்படிக்கை
உறுதி செய்கிறது.
சமீபத்தில் பெண்களுக்கு எதிரான
வன்முறைகளில் பெண்கள்
வாழ்வதற்கு ஆபத்தான நாடுகள்
எவை எனச் செய்தி நிறுவனம்
ஒன்று ஆய்வு நடத்தியது இந்த
ஆய்வில் சுகாதாரப் பிரச்சனை,
பாலியல் வன்முறை மற்று
பாலியல் அல்லாத வன்முறைகள்,
பண்பாடு மதம் மற்றும்
பாரம்பரியத்தின் பேரால் தீங்கு
விளைவிக்கும் சடங்குகள்,
பொருளாதார வளம் சரியாகக்
கிடைக்காதது, ஆள் கடத்தல் போன்ற
பெண்களுக்கு எதிரான ஆறு
பிரச்னைகள் மட்டும் கணக்கில்
கொள்ளப்பட்டன.
அதில் ஆப்கானிஸ்தானில் தான்
பெண்களுக்கு எதிரான
அதிகளவான கொடுமைகள்
நடப்பதால், அது பெண்களுக்கான
அபாயகரமான நாடுகளின்
பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
உலகளவில் பெண்களின் பயங்கர
நிலை குறித்து எடுக்கப்பட்ட
மற்றொரு அண்மைய தரவில்
ஆப்கானிஸ்தானில் தான்
அதிகளவு பெண்கள்
பாதிக்கப்படுகின்றனர் எனவும்
கூறப்பட்டிருந்தது.
பெண்களுக்கு எதிரான
வன்முறைகளில் இரண்டாவதாக
ஆப்ரிக்காவின் காங்கோ உள்ளது
காங்கோவில் தினமும் பல நூறு
பெண்கள் பாலியல் பலாத்காரம்
செய்யப்படுகின்றனர் காங்கோ
குடியரசில் வருடத்தில்
ஆயிரக்காணக்கான பெண்கள்
பாலியல் பலாத்காரம் மற்றும்
பாலியல் வன்முறைக்கு
ஆளாகிறார்கள்.
மூன்றாவதாக பாகிஸ்தான்
உள்ளது பாகிஸ்தான் நாட்டில்
பெண்களுக்கு எதிரான வன்முறை
பெருமளவில் அதிகரித்துள்ளது
என ஆய்வில் தெரியவந்துள்ளது.
அந்நாட்டின் மனித உரிமை
அமைப்பு கடந்த 2010ம் ஆண்டின்
அடிப்படையில் வெளியிட்டுள்ள
அறிக்கையில் குடும்ப மரியாதை
என்ற காரணத்தை முன்னிட்டு
ஏறத்தாழ 800 பெண்கள்
கொல்லப்பட்டுள்ளனர். மேலும் ஒரு
நாளைக்கு 8 பேர் என்ற எண்ணிக்
கையில் 2,900 பெண்கள் பாலியல்
வல்லுறவுக்கு
உட்படுத்தப்பட்டுள்ளனர். அதிலும்
பாகிஸ்தானில் மக்கள் நெருக்கம்
அதிகமுள்ள பஞ்சாப்
மாகாணத்திலே மிக அதிகளவில்
2,600 பெண்கள் பாலியல்
வல்லுறவுக்கு
உட்படுத்தப்பட்டுள்ளனர். என ஆய்வு
முடிவு தெரிவிக்கின்றது.
பெண்களுக்கு எதிரான
வன்முறைகளில் இந்தியா
உலகளவில் நான்காவது இடத்தைப்
பிடித்துள்ளது. இந்தியாவில்
பெண் சிசுக் கொலை, பெண்
குழந்தைகள் கொலை மற்றும்
ஆட்கடத்தல் போன்றவற்றால் இந்தியா
நான்காவது இடத்தைப்
பிடித்துள்ளது. கடந்த 2009 இல்
சி.பி.ஐ. எடுத்த கணக்கெடுப்பின்
படி ஆட்கடத்தலில் 90 சதவீதம்
இந்தியாவிற்குள் நடக்கிறது
என்றும் நாடுமுழுவதும் 30 லட்சம்
பாலியல் பெண் தொழிலாளர்கள்
உள்ளனர் என்றும் அவர்களில் 40
சதவீதம் பேர் சிறுமிகள் என்பதும்
வெளியுலகுக்குத் தெரியவந்தது.
ஜனநாயகம் கோரி போராடும்
பெண்களை உலக நாடுகள் ஆதரிக்க
வேண்டும் என ஐக்கிய நாடுகள்
சபையின் உலக அபிவிருத்தி
தொடர்பாக அண்மையில் நடந்த
கூட்டத்திலும் பேசப்பட்டது.
பெண்கள் ஜனநாயகம் கோரி
போராடும் போது உலக நாடுகள்
அவர்களை ஆதரிக்க வேண்டும்.
பெண்கள் உரிமைகளுக்காகவும்,
அவர்களுக்கு எதிரான
அடக்குமுறைகளுக்கு
எதிராகவும், குடும்பத்தில் தரமான
வாழ்க்கை வேண்டியும் போராடும்
போது அவர்களுக்கு நாம் ஆதரவை
வழங்க வேண்டும்.
குடும்ப ஏழ்மை, பெண்களுக்கு
எதிரான வன்முறை,
சமத்துவமின்மை போன்ற பல்வேறு
சவால்களுக்கு எதிராகப்
போராடும் பெண்களையும்
அவர்களின் உணர்வுகளையும்
அரசுகளும், சமூகமும் புரிந்து
கொள்ளவேண்டும்.
ஆண்களின் அதிகாரம் நிறைந்த
உலகில் முன்னேறுவதற்கான
வாய்ப்புகள் கண் முன்னே
நிறைந்து இருந்தாலும் அதைவிட
அதிகமான தடைகளும்
அவமானங்களும் பெண்களுக்கு
உள்ளன. கூடுதலாக ஆண்களின்
பெண்ணுரிமை மீறல் ஜனநாயகப்
பின்னடைவுக்கு
காரணமாவதோடு சமூக
அவலங்களுக்கும் பெண்களை
இட்டுச்செல்கின்றது. இந்த
அவலங்களுக்கு எதிராக
பெண்களுடன் சேர்ந்து அரசுகள்
போராட வேண்டும்.
பெண்களையும்
குழந்தைகளையும் அரசுகள்
பாதுகாப்பதன் மூலமே
பெண்களுக்கு எதிரான
அடக்குமுறைகளை இல்லாது
ஒழிக்க முடியும்.
பெண்களுக்குத் தேவையான
சமச்சீரான கல்வியை அரசுகள்
அளிக்க முன்வரவேண்டும்.
பெண்களுக்கு எதிரான
குற்றங்களை சகித்துக் கொள்ளும்
மனப்பான்மையை சமுதாயம்
மாற்றிக்கொள்ள வேண்டும்.
பெண்களுக்கு எதிரான தடைகளை
யெல்லாம் தாண்டி பெண்கள்
சமுதாயத்தில் முன்னுக்கு
வரவேண்டும்.
மனித வளத்துக்காக பெண்கள்
செய்யும் தியாகங்களையும்
எதிர்காலப் பயன்களையும்
கருத்தில் கொண்டு பெண்கள்
மீதான வன்முறையை ஒடுக்க
போராட வேண்டும். குறிப்பாக
பாலியல் பலாத்காரம், பாலியல்
வன்முறைகள் பெண்களுக்கு
ஏற்படாமல் தடுக்கவேண்டும் என
அண்மையில் நடந்த சூரிச்
மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.
இந்த மாநாட்டில் சுவிஸ்
ஜனாதிபதி மிச்சேலின் கள்மி ரே
மற்றும் மனித உரிமைக்கான
ஐக்கிய நாடுகள் சபையின் தூதர்
நவநீதம்பிள்ளை மற்றும் பலர்
கலந்துகொண்டனர்.
காங்கோ குடியரசு போன்ற
நாடுகளில் ஆயிரக்காணக்கான
பெண்கள் பாலியல் பலாத்காரம்
மற்றும் பாலியல் வன்முறைக்கு
ஆளாகிறார்கள் என்றும் அம்
மாநாட்டில் பேசிய தலைவர்கள்
குறிப்பிட்டனர்.
மக்கள் கூட்டத்தை கலைப்பதற்கு
ஒரு ஆயுதமாக பெண்கள் மீதான
பாலியல் வன்முறை
பயன்படுத்தப்படுகிறது. இந்த
வன்முறைகளுக்கு உலகம்
முழுவதும் உள்ள பெண்கள்
பாதிக்கப்படுகிறார்கள் என சுவிஸ்
ஜனாதிபதி கள்மி ரே
குறிப்பிட்டார்.
யுகோசுலோவியாவில் போர்
நடந்த போது 50 ஆயிரம் பெண்கள்,
சிறுமிகள் பாலியல் பலாத்காரம்
செய்யப்பட்டனர். காங்கோவில்
தினமும் பல நூறு பெண்கள்
பலாத்காரம் செய்யப்பட்டனர் என்றும்
அவர் கவலையுடன் தெரிவித்தார்.
சுவிஸ் ஜனாதிபதி கள்மி ரே
அயல்துறை அமைச்சராகவும்
உள்ளார். அவர் நவநீதம்பிள்ளை
மற்றும் இதர தலைவர்களை
பெண்களுக்கு எதிரான வன்முறை
குறித்து பேச அழைப்பு விடுத்து
இருந்தார்.
சுவிசில் ஒத்துழைப்பு மற்றும்
பெண்கள் மேம்பாடு மற்றும்
அமைதி நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்படுகின்றன. இதற்காக
1 கோடி சுவிஸ் பிராங்க் ஒதுக்கீடு
செய்யப்படுகிறது. இதே போன்று
ஏனைய நாடுகளும் முன்வர
வேண்டும்.
உலகளாவிய ரீதியில் பெண்கள்
இன்று பல விதமான
வன்முறைகளுக்கு
உட்படுத்தப்படுகின்றதைப் போலவே
இலங்கையிலும் பெண்களுக்கு
எதிரான வன்முறைகள் குடும்பம்,
அரசு, மற்றும் இராணுவம் என
வன்முறையின் பரப்பு அகன்று
விரிந்துள்ளது. பெண்கள் தமக்கு
எதிராக இழைக்கப்படும் அரசியல்,
இராணுவ கொடூரங்களை வெளி
உலகிற்கு காட்டி அதற்கான
நியாயமான தீர்வுகளை
பெறுவதற்கு இலங்கை அரசு
ஒத்துழைக்கத் தொடர்ந்தும் மறுத்து
வருகின்றது.
கடந்த 2009 ஆண்டின் கணக்கெடுப்பில்
இலங்கையில் பெண்களுக்கு
எதிரான வன்முறைகள் தொடர்பில்
3366 முறைப்பாடுகள் பொலீஸ்
நிலையங்களில் பதிவு
செய்யப்பட்டிருப்பதாகவும்,
இவற்றுள் பாரதூரமான 773
சம்பவங்கள் பதிவு
செய்யப்பட்டிருப்பதாகவும்
தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன்
பாலியல் வல்லுறவு, பெண்கள்
கடத்தல், பணிபுரியும் வீடுகளில்
வன்முறைகளுக்கு உட்படுத்துதல்,
காயமேற்படுத்துதல் போன்ற
வன்முறைகளே பெண்களு
க்கெதிராக
மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இவற்றுக்கு எதிராக சட்ட
நடவடிக்கை எடுக்கப்பட்டு
வருவதாக பொலீசார்
தெரிவித்துள்ளனர். பொருளாதார
ரீதியில் பெண்கள்
பலவீனமடைந்துள்ளமையே
இவ்வாறான சம்பவங்களுக்கு
காரணமென்றும், இதன்
காரணமாகவே பெண்கள் இலகுவில்
வன்முறைகளு க்கு இலக்காக
சாத்தியங்கள் ஏற்படுவதாகவும்
தெரிவிக்கப்பட்டுள்ளன.
பெண்களைப் பொருளாதார
ரீதியில் பலப்படுத்துவதன் மூலம்
இவற்றை தடுக்கமுடியுமென்றும்
கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வருடம் பெண்களுக்கு
எதிரான வன்முறைகள் ஒழிப்பு
சர்வதேச தினத் தில் பல நாடுகளில்
பாலியல் வன்முறைகளுக்கு
எதிரான விழிப்புணர்ச்சி யை
ஏற்படுத்துவதற்காகவும், அன்றைய
தினத்தைத் தொடர்ந்து 16
நாட்களுக்கு பெண்களுக்கு
எதிரான எல்லா
வன்முறைகளுக்கும் எதிரான
விழிப்புணர்ச்சியை
ஏற்படுத்துவதற்கும் உலகளாவிய
ரீதியில் செயற்பாடுகள்
முன்னெடுக்கப்படுகின்றன இந்தச்
செயற்பாடுகள் சர்வதேச மனித
உரிமைகள் தினமான டிசம்பர் 10 ஆம்
திகதி வரை தொடரும்.
பெண்களுக்கு எதிரான
வன்முறைகளின் போது அவர்களை
பாதுகாப்பதற்கும், அவர்களின்
உரிமைகள் மீறப்படுவதனை
தடுப்பதற்கும் தொடர்ந்தும் நாம்
அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்.
உலகில் அபிவிருத்தி உள்ளிட்ட
அனைத்து சந்தர்ப்பங்களிலும்
பெண்களுக்குத் தொடர்ந்தும்
சமமான வாய்ப்பு
வழங்கப்படாதவிடத்து
ஜனநாயகத்தையும், நிலையான
சமாதானத்தையும் உருவாக்க
பெண்களாகிய நாம் தொடர்ந்தும்
பாடுபடுவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக