உலகக் கழிவறை நாள் நவம்பர் 19 .
உலகக் கழிவறை நாள் ( World toilet
day ) ஆண்டு தோறும் நவம்பர் 19 ஆம்
நாள் கொண்டாடப்பட்டு
வருகிறது. இந்நாளிலேயே 2001
ஆம் ஆண்டில் உலகக் கழிவறை
அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது.
அன்று முதல் இவ்வமைப்பின்
உறுப்பு நாடுகள் இந்நாளை
உலகளாவிய முறையில்
சிறப்பாகக் கொண்டாடி
வருகின்றன. அடிப்படைக்
கழிவறை வசதிகள் பற்றியும்,
அது குறித்த விழிப்புணர்வை
மக்களுக்கு ஏற்படுத்துவதுமே
இந்நாளின் முக்கிய
நோக்கமாகும்.
2013 சூலையில் ஐக்கிய நாடுகள்
பொதுச் சபை நவம்பர் 19 ஆம்
நாளை ஐக்கிய நாடுகளின்
சிறப்பு நாளாகக்
கொண்டாடுவதெனத்
தீர்மானித்தது. இதற்கான
முன்மொழிவை சிங்கப்பூர்
ஐக்கிய நாடுகள் சபையில்
முன்வைத்து அத்தீர்மானம்
ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
ஐக்கிய நாடுகள் மற்றும் வேறு
அமைப்புகளின் அறிக்கைகளின்
படி உலகின் மூன்றில் ஒரு பங்கு
மக்கள் அடிப்படை கழிவறை
வசதிகளற்று வாழ்கிறார்கள் எனக்
கணக்கிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் 2011 மக்கள் தொகைக்
கணக்கெடுப்பு அறிக்கையின்படி
131 மில்லியன் குடும்பங்களில்
கழிவறை வசதி இல்லை எனவும்
அவர்களில் எட்டு மில்லியன்
குடும்பத்தினர் பொதுக்
கழிவறையையும் 123 மில்லியன்
குடும்பங்கள்
வெளியிடங்களையும்
கழிவறைகளாகப்
பயன்படுத்துகிறார்கள்.
************************************
உலகக் கழிவறை நாள் (World toilet day)
ஆண்டு தோறும் நவம்பர் 19 ஆம் நாள்
கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நாளிலேயே 2001 ஆம் ஆண்டில்
உலகக் கழிவறை அமைப்பு
ஆரம்பிக்கப்பட்டது.
உலகக் கழிவறை நாள் (World toilet day)
ஆண்டு தோறும் நவம்பர் 19 ஆம் நாள்
கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நாளிலேயே 2001 ஆம் ஆண்டில்
உலகக் கழிவறை அமைப்பு
ஆரம்பிக்கப்பட்டது.
அனைவரும் கழிவறையை
பயன்படுத்துவதை
வலியுறுத்தவும்,
விழிப்புணர்வூட்டவும் உலக
கழிவறை தினம் இன்று
கடைப்பிடிக்கப்படுகிறது. அன்று
முதல் இவ்வமைப்பின் உறுப்பு
நாடுகள் இந்நாளை உலகளாவிய
முறையில் சிறப்பாகக் கொண்டாடி
வருகின்றன. அடிப்படைக் கழிவறை
வசதிகள் பற்றியும், அது குறித்த
விழிப்புணர்வை மக்களுக்கு
ஏற்படுத்துவதுமே இந்நாளின்
முக்கிய நோக்கமாகும்.
2013 ஜுலையில் ஐக்கிய நாடுகள்
பொதுச் சபை நவம்பர் 19 ஆம் நாளை
ஐக்கிய நாடுகளின் சிறப்பு
நாளாகக் கொண்டாடுவதெனத்
தீர்மானித்தது. இதற்கான
முன்மொழிவை சிங்கப்பூர் ஐக்கிய
நாடுகள் சபையில் முன்வைத்து
அத்தீர்மானம் ஏகமனதாக ஏற்றுக்
கொள்ளப்பட்டது.
ஐக்கிய நாடுகள் மற்றும் வேறு
அமைப்புகளின் அறிக்கைகளின்
படி உலகின் மூன்றில் ஒரு பங்கு
மக்கள் அடிப்படை கழிவறை
வசதிகளற்று வாழ்கிறார்கள் எனக்
கணக்கிடப்பட்டுள்ளது. இந்தியாவில்
2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு
அறிக்கையின்படி 131 மில்லியன்
குடும்பங்களில் கழிவறை வசதி
இல்லை எனவும் அவர்களில் எட்டு
மில்லியன் குடும்பத்தினர் பொதுக்
கழிவறையையும் 123 மில்லியன்
குடும்பங்கள் வெளியிடங்களையும்
கழிவறைகளாகப்
பயன்படுத்துகிறார்கள்.
தற்போதைய கணக்கெடுப்பின்படி
உலகின் 700 கோடி மக்களில் 240
கோடி மக்கள் மேம்பட்ட
சுகாதாரமான கழிப்பறை வசதி
பெறாமல் உள்ளனர். இன்னமும் 100
கோடி மக்கள் திறந்தவெளியில் மலம்
கழிப்பதாக புள்ளி விபரங்கள்
கூறுகின்றன.
கழிவறை வசதி இல்லாததால், சில
வேளை பெண்களும், சிறுமிகளும்
பாலியல் வன்கொடுமைக்கு
ஆளாகவும் நேரிடுகிறது. உலக
நாடுகளின் வளர்ச்சிக்கும், நீடித்த
வளர்ச்சிக்கும் முக்கியத்துவம்
வாய்ந்ததும் முதன்மையானதுமாக
சுகாதாரம்
வலியுறுத்தப்படுகிறது. இதனை
கருத்தில் கொண்டே ஐநா மன்றம்
நவம்பர் 19 ந்தேதியை உலக கழிவறை
தினமாக அறிவித்துள்ளது.
இந்தாண்டின் முக்கிய கருவாக,
“சிறந்த ஊட்டச்சத்துமிக்க ஆரோக்கிய
வாழ்வுக்கு, சிறந்த கழிவறை
வசதி” என்று அறிவிக்கப்பட்டுள்ளது
இந்த தினத்தில் கிராமப்புறங்களில்
சுத்தமான சுகாதாரமான
கழிவறையை பயன்படுத்த மக்களிடம்
விழிப்புணர்வு ஊட்ட உலக அளவில்
நிகழ்ச்சிகளுக்கு அந்ததந்த நாட்டின்
அரசுகளாலும், பொது
அமைப்புகளாலும்
நடத்தப்படுகிறது. மத்தியஅரசு,
தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ்
வரும் 2019 ஆம் ஆண்டுக்குள்
அனைத்து விடுகளிலும் கழிவறை
கட்டிமுடிக்க உறுதி ஏற்று
நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.
இது அரசுகள், ஆர்வலர்கள்
முன்னெடுத்தாலும், தனிநபர்களின்
ஈடுபாடு மற்றும் விழிப்புணர்வு
அவசியம்.
கணக்கெடுப்பின் படி, ஒரு
நாளைக்கு சுமார் 1000
குழந்தைகள் வயிற்றுப்போக்கால்
உயிரிழந்துள்ளனர். இதற்கு காரணம்
சுகாதாரமற்ற கழிவறையே
காரணம் என கூறப்படுகிறது.
முக்கிய தகவல்கள்
# உலகளவில் 240 கோடி மக்கள்
சுத்தமான கழிவறையை
பயன்படுத்துவதில்லை 100 கோடி
மக்கள் திறந்தவெளியில் மலம்
கழிக்கிறார்கள்.
# உலகளவில் சுகாதாரமற்ற
கழிவறைகளை பயன்படுத்தும்
நாடுகளில் இந்தியா முதலிடம்
# உலகளவில் திறந்த வெளியில் மலம்
கழிப்பவர்கள் எண்ணிக்கையில்
இந்தியா முதலிடம்
# இந்தியாவில் 60.4 % மக்கள்
கழிவறையை
பயன்படுத்துவதில்லை
# கழிவறை இல்லாததால், பெண்கள்,
குழந்தைகள் பாலியல்
தொந்தரவுகளுக்கு ஆளாகிறார்கள்
# சுகாதாரமான கழிவறை உங்கள்
குழந்தைகளை
ஆரோக்கியமாகவும்,
வலிமையாகவும் வளர
துணைபுரிகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக