வியாழன், 20 ஏப்ரல், 2017

பாவேந்தர் பாரதிதாசன் நினைவு தினம் ஏப்ரல் 21 , 1964



பாவேந்தர் பாரதிதாசன் நினைவு தினம் ஏப்ரல் 21 , 1964 

பாரதிதாசன் ( ஏப்ரல் 29 , 1891 - ஏப்ரல் 21 , 1964 .
பாண்டிச்சேரியில் (புதுச்சேரியில்) பிறந்து பெரும் புகழ் படைத்த பாவலர். இவருடைய இயற்பெயர் சுப்புரத்தினம். தமிழாசிரியராக பணியாற்றிய இவர்,
சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால் பாரதிதாசன் என்று தம் பெயரை மாற்றிக்கொண்டார். பாரதிதாசன் தம் எழுச்சி மிக்க எழுத்தால்
புரட்சிக் கவிஞர் என்றும் பாவேந்தர் என்றும் பரவலாக அழைக்கப்படுபவர். இவர்
குயில் என்னும் கவிதை வடிவில் ஒரு திங்களிதழை நடத்தி வந்தார்.

வாழ்க்கைக் குறிப்பு

புரட்சிக்கவி பாரதிதாசன் அவர்கள் 29.4.1891 இல் புதுவையில் பெரிய வணிகராயிருந்த கனகசபை முதலியார், இலக்குமி அம்மாள் ஆகியோருக்கு பிறந்தார். கவிஞரின் இயற்பெயர் கனகசுப்புரத்தினம். 1920ஆம் ஆண்டில் பழநி அம்மையார் என்பாரை மணந்து கொண்டார்.
இவர் சிறுவயதிலேயே பிரெஞ்சு மொழிப் பள்ளியில் பயின்றார். ஆயினும் தமிழ்ப் பள்ளியிலேயே பயின்ற காலமே கூடியது. தமது பதினாறாம் வயதிலியே கல்வே கல்லூரியில் தமிழ்ப் புலமைத் தேர்வு கருதிப் புகுந்தார். தமிழ் மொழிப் பற்றும் முயற்சியால் தமிழறிவும் நிறைந்தவராதலின் இரண்டாண்டில் கல்லூரியிலேயே முதலாவதாகத் தேர்வுற்றார். பதினெட்டு வயதிலேயே அவரின் சிறப்புணர்ந்த அரசியலார் அவரை அரசினார் கல்லூரித் தமிழாசிரியாரானார்.
இசையுணர்வும் நல்லெண்ணமும் அவருடைய உள்ளத்தில் கவிதையுருவில் காட்சி அளிக்கத் தலைப்பட்டன. சிறு வயதிலேயே சிறுசிறு பாடல்களை அழகாகச் சுவையுடன் எழுதித் தமது தோழர்கட்குப் பாடிக் காட்டுவார்.
நண்பர் ஒருவரின் திருமணத்தில் விருத்துக்குப் பின் பாரதியாரின் நாட்டுப் பாடலைப் பாடினார். பாரதியாரும் அவ்விருத்துக்கு வந்திருந்தார். ஆனால் கவிஞருக்கு அது தெரியாது. அப்பாடலே அவரை பாரதியாருக்கு அறிமுகம் செய்து வைத்தது.
தன் நண்பர்கள் முன்னால் பாடு என்று பாரதி கூற பாரதிதாசன் "எங்கெங்குக் காணினும் சக்தியடா" என்று ஆரம்பித்து இரண்டு பாடலை பாடினார். இவரின் முதற் பாடல் பாரதியாராலேயே சிறீ சுப்பிரமணிய கவிதா மண்டலத்தைச் சார்ந்த கனக சுப்புரத்தினம் எழுதியது என்றெழுதப்பட்டு சுதேசமித்திரன் இதழுக்கு அனுப்பப்பட்டது.
புதுவையிலிருந்து வெளியான தமிழ் ஏடுகளில் "கண்டழுதுவோன், கிறுக்கன், கிண்டல்காரன், பாரதிதாசன் என பல புனைப் பெயர்களில் எழுதி வந்தார்.
தந்தை பெரியாரின் தீவிரத் தொண்டராகவும் விளங்கினார். மேலும் அவர் திராவிடர் இயக்கத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டார். அதன் காரணமாக கடவுள் மறுப்பு, சாதி மறுப்பு, மத எதிர்ப்பு போன்றவற்றினை தனது பாடல்கள் மூலம் பதிவு செய்தார்.
பிரபல எழுத்தாளரும் திரைப்படக் கதாசிரியரும் பெரும் கவிஞருமான பாரதிதாசன் அரசியலிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினராக 1954ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1946 சூலை 29இல் அறிஞர் அண்ணா அவர்களால் கவிஞர் 'புரட்சிக்கவி" என்று பாராட்டப்பட்டு ரூ.25,000 வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.
பாரதிதாசன் அவர்கள் நகைச்சுவை உணர்வு நிரம்பியவர். கவிஞருடைய படைப்பான "பிசிராந்தையார்" என்ற நாடக நூலுக்கு 1969 இல் சாகித்ய அகாடமியின் விருது கிடைத்தது. இவருடைய படைப்புகள் தமிழ்நாடு அரசினரால் 1990இல் பொது உடைமையாக்கப்பட்டன.


மறைவு

பாரதிதாசன் 21.4.1964 அன்று காலமானார்.
பாரதிதாசன் எழுதிய புகழ் பெற்ற சில வரிகள்
புதியதோர் உலகம் செய்வோம் கெட்ட
போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்
தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத் தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்
பாரதிதாசனின் ஆக்கங்கள்
பாரதிதாசன் தனது எண்ணங்களை கவிதை, இசைப்பாடல், நாடகம், சிறுகதை, புதினம், கட்டுரை ஆகிய வடிவங்களில் வெளிட்டார். அவற்றுள் சில:
1. அம்மைச்சி (நாடகம்)
2. உயிரின் இயற்கை, மன்றம் வெளியீடு (1948)
3. உரிமைக் கொண்டாட்டமா?, குயில் (1948)
4. எது பழிப்பு, குயில் (1948)
5. கடவுளைக் கண்டீர்!, குயில் (1948)
6. கழைக்கூத்தியின் காதல் (நாடகம்)
7. கலை மன்றம் (1955)
8. கற்புக் காப்பியம், குயில் (1960)
9. சத்திமுத்தப் புலவர் (நாடகம்)
10. நீலவண்ணன் புறப்பாடு
11. பிசிராந்தையார், (நாடகம்) பாரி நிலையம் (1967)
12. பெண்கள் விடுதலை
13. விடுதலை வேட்கை
14. வீட்டுக் கோழியும் - காட்டுக் கோழியும், குயில் புதுவை (1959)
15. ரஸ்புடீன் (நாடகம்)
இவை தவிர திருக்குறளின் பெருமையை விளக்கிப் பாரதிதாசன் 5 கட்டளைக் கலித்துறைப் பாடல்களைப் பாடியுள்ளார்.

பாரதிதாசன் நூல்கள்

பாரதிதாசன் படைப்புகள் பல அவர் வாழ்ந்தபொழுதும் அவரின் மறைவிற்குப் பின்னரும் நூல்வடிவம் பெற்றுள்ளன. அவற்றின் பட்டியல்:
வ.எண் நூலின் பெயர் முதற்பத ஆண்ட
01 அகத்தியன்விட்ட புதுக்கரடி 1948
02 அமிழ்து எது? 1951
03 அமைதி 1946
04 அழகின் சிரிப்பு 1944
05 இசையமுது (முதலாம் தொகுதி) 1942
06 இசையமுது (இரண்டாம் தொகுதி) 1952
07 இந்தி எதிர்ப்புப் பாடல்கள் 1948
08 இரணியன் அல்லது இணையற்ற வீரன் 1939
09 இருண்டவீடு 1944
10 இலக்கியக் கோலங்கள் 1994
11 இளைஞர் இலக்கியம் 1958
12 உலகம் உன் உயிர் 1994
13 உலகுக்கோர் ஐந்தொழுக்கம் 1994
14 எதிர்பாராத முத்தம் 1938
15 எது இசை? 1945
16 ஏழைகள் சிரிக்கிறார்கள் 1980
17 ஏற்றப் பாட்டு 1949
18 ஒரு தாயின் உள்ள மகிழ்கிறது 1978
19 கடற்மேற் குமிழிகள் 1948
20 கண்ணகி புரட்சிக் காப்பியம் 1962
21 கதர் இராட்டினப்பாட்டு , 1930
22 கவிஞர் பேசுகிறார் 1947
23 கழைக்கூத்தியின் காதல் 1951
24 கற்கண்டு 1945
25 காதலா? கடமையா? 1948
26 காதல் நினைவுகள் 1944
27 காதல் பாடல்கள் 1977
28
குடும்பவிளக்கு – முதல் பகுதி: ஒருநாள் நிகழ்ச்சி
1942
29
குடும்ப விளக்கு - 2ஆம் பகுதி: விருந்தோம்பல்
1944
30 குடும்ப விளக்கு - 3ஆம் பகுதி: திருமணம் 1948
31
குடும்ப விளக்கு - 4ஆம் பகுதி: மக்கட்பேறு
1950
32
குடும்ப விளக்கு - 5ஆம் பகுதி: முதியோர் காதல்
1950
33 குமரகுருபரர் 1992
34 குயில் பாடல்கள் 1977
35 குறிஞ்சித்திட்டு 1959
36 கேட்டலும் கிளத்தலும் 1981
37 கோயில் இருகோணங்கள் 1980
38 சஞ்சீவி பர்வதத்தின் சாரல் 1930
39 சிரிக்கும் சிந்தனைகள் 1981
40 சிறுவர் சிறுமியர் தேசியகீதம் 1930
41 சுயமரியாதைச் சுடர் 1931
42 செளமியன் 1947
43 சேரதாண்டவம் 1949
44 தமிழச்சியின் கத்தி 1949
45 தமிழியக்கம் 1945
46 தமிழுக்கு அமிழ்தென்று பேர் 1978
47 தலைமலை கண்ட தேவர் 1978
48 தாயின் மேல் ஆணை 1958
49 தாழ்த்தப்பட்டோர் சமத்துவப் பாட்டு 1930
50 திராவிடர் திருப்பாடல் 1948
51 திராவிடர் புரட்சித் திருமணத் திட்டம் 1949
52 தேனருவி 1956
53 தொண்டர் வழிநடைப் பாட்டு 1930
54 நல்லதீர்ப்பு 1944
55 நாள் மலர்கள் 1978
56 படித்த பெண்கள் 1948
57 பன்மணித்திரள் 1964
58 பாட்டுக்கு இலக்கணம் 1980
59 பாண்டியன் பரிசு 1943
60 பாரதிதாசன் ஆத்திசூடி 1948
61 பாரதிதாசன் கதைகள் 1955
62 பாரதிதாசனின் கடிதங்கள் 2008
63
பாரதிதாசன் கவிதைகள் (முதல் தொகுதி)
1938
64
பாரதிதாசன் கவிதைகள் (இரண்டாம் தொகுதி)
1949
65
பாரதிதாசன் கவிதைகள் (மூன்றாம் தொகுதி)
1955
66
பாரதிதாசன் கவிதைகள் (நான்காம் தொகுதி)
1977
67 பாரதிதாசன் நாடகங்கள் 1959
68 பாரதிதாசனின் புதிய நாடகங்கள் 1994
69 பாரதிதாசனின் புதினங்கள் 1992
70 பாரதிதாசன் பேசுகிறார் 1981
71 பாரதிதாசன் திருக்குறள் உரை 1992
72
பாவேந்தர் பாரதிதாசன் திரைத்தமிழ்
2012
73 பிசிராந்தையார் 1967
74 புகழ்மலர்கள் 1978
75 புரட்சிக் கவி 1937
76 பொங்கல் வாழ்த்துக் குவியல் 1954
77 மணிமேகலை வெண்பா 1962
78 மயிலம் சுப்பிரமணியர் துதியமுது 1926
79
மயிலம் ஶ்ரீசிவசண்முகக்கடவுள் பஞ்சரத்நம்
1925
80 மயிலம் ஶ்ரீஷண்முகம் வண்ணப்பாட்டு 1920
81 மானுடம் போற்று 1984
82 முல்லைக்காடு 1948
83 வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா? 1980
84 வேங்கையே எழுக 1978

திரையுலகில் பாரதிதாசன்

திராவிட இயக்கத் தலைவர்களுள் முதன்முதலாக திரைப்படத்துறைக்குள் நுழைந்தவர் பாரதிதாசனே ஆவார். 1937ஆம் ஆண்டில் திரைப்படத் துறைக்குள் நுழைந்த பாரதிதாசன் தனது இறுதிநாள் வரை அத்துறைக்கு கதை, திரைக்கதை, உரையாடல், பாடல், படத்தயாரிப்பு என பல வடிவங்களில் தனது பங்களிப்பை வழங்கிக்கொண்டு இருந்தார்.
திரைக்கதை, உரையாடல்
அவ்வகையில் அவர் பின்வரும் படங்களுக்கு திரைக்கதை, உரையாடல், பாடல் எழுதியனார்:
வ.எண். திரைப்படத்தின் பெயர் ஆண்டு இயக்க
1
பாலாமணி அல்லது பக்காத்திருடன்
1937 -
2 இராமானுஜர் 1938 வ. ராமசா
3 கவிகாளமேகம் 1940 -
4 சுலோசனா 1944 டி. ஆர். சுந்தர
5
ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி
1947 -
6 பொன்முடி 1949 -
7 வளையாபதி 1952 -
8 குமரகுருபரர் - -
8 பாண்டியன் பரிசு -
9 முரடன்முத்து - -
10 மகாகவி பாரதியார் - -
இவற்றுள் பாண்டியன் பரிசு, முரடன் முத்து, மகாகவி பாரதியார் ஆகிய படங்களை தானே சொந்தமாகத் தயாரிக்கும் முயற்சியில் தனது இறுதிக்காலத்தில் ஈடுபட்டு பல்வேறு இன்னல்களுக்கு ஆளானார்.

திரைப்படப்பாடல்கள்

பாரதிதாசன் திரைப்படத்திற்கென தானே பல பாடல்களை இயற்றினார். அவர் வெவ்வேறு சூழல்களில் இயற்றிய பாடல்கள் சிலவற்றை சிலர் தத்தம் படங்களில் பயன்படுத்திக்கொண்டனர். அப்பாடல்களும் அவை இடம்பெற்ற திரைப்படங்களும் பின்வருமாறு:

வ.எண் பாடல்கள் திரைப்படம்
1 அனைத்துப் பாடல்களும்
பாலாமணி அல்லது பக்காத்திருட
2 அனைத்துப் பாடல்களும் ஸ்ரீ ராமானு
3 அனைத்துப் பாடல்களும் கவி காளமேக
4 வெண்ணிலாவும் வானும் போல... பொன்முடி
5
துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ...
ஓர் இரவு
6 அதோ பாரடி அவரே என் கணவர்... கல்யாணி
7 வாழ்க வாழ்க வாழ்கவே... பராசக்தி
8
பசியென்று வந்தால் ஒரு பிடி சோறு...
பணம்
9 அந்த வாழ்வுதான் எந்தநாள் வரும்?...
அந்தமான் கைதி
10 குளிர்த்தாமரை மலர்ப்பொய்கை... வளையாபதி
11
குலுங்கிடும் பூவிலெல்லாம் தேனருவி...
வளையாபதி
12 தாயகமே வாழ்க தாயகமே வாழ்க... பூங்கோதை
13 பாண்டியன் என் சொல்லை..... திரும்பிப்பார்
14 ஆலையின் சங்கே நீ ஊதாயோ… ரத்தக் கண்ணீர்
15 எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் என் மகள்
16 நீலவான் ஆடைக்குள் உடல் ...
கோமதியின் காதலன்
17 ஆடற்கலைக்கழகு தேடப்பிறந்தவள்... நானே ராஜா
18
தலைவாரி பூச்சூடி உன்னை-பாட...
ரங்கோன் ராத
19 கோரிக்கையற்றுக் கிடக்குதண்ணே... குலதெய்வம்
20
ஒரே ஒரு பைசா தருவது பெரிசா...
பெற்ற மனம்
21 பாடிப் பாடிப் பாடி வாடி... பெற்ற மனம்
22
மனதிற்குகந்த மயிலே வான்விட்டு...
பெற்ற மனம்
23
தமிழுக்கும் அமுதென்று பேர்-அந்த...
பஞ்சவர்ணக்கி
24 எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்...
கலங்கரை விளக்கம்
25 வலியோர் சிலர் எளியோர் தமை... மணிமகுடம்
26 புதியதோர் உலகம் செய்வோம்-கெட்ட சந்திரோதயம்
27
எங்கெங்குக் காணிணும் சக்தியடா !...
நம்ம வீட்டுத் தெய்வம்
28
சித்திரச் சோலைகளே-உமை நன்கு....
நான் ஏன் பிறந்தேன்
29 புதியதோர் உலகம் செய்வோம்
பல்லாண்டு வாழ்க
30 காலையிளம் பரிதியிலே ...
கண்ணன் ஒரு கைக்குழந்த
31 அம்மா உன்றன் கைவளையாய் ... நிஜங்கள்
32 கொலை வாளினை எடடா... சிவப்பதிகார
33 அவளும் நானும் அமுதும் தமிழும்
அச்சம் என்பது மடமையடா



“தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்” என்ற தேன் சுவைசொட்டும் பாடல் வரிகளுக்கு சொந்தக்காரர், ‘பாவேந்தர் பாரதிதாசன்’ அவர்கள். பெரும் புகழ் படைத்த பாவலரான பாரதிதாசன் அவர்கள், ‘புரட்சிக்கவி’ என்றும், ‘பாவேந்தர்’ என்றும் அழைக்கப்பட்டார். தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணம் மற்றும் சைவ சித்தாந்த வேதாந்தங்களை முறையாகக் கற்று, தமிழ் மொழிக்கு அருட்தொண்டாற்றியவர், பாரதிதாசன் அவர்கள். தமிழாசிரியர், கவிஞர், அரசியல்வாதி, திரைக் கதாசிரியர், எழுத்தாளர், கவிஞர், என்று பல்வேறு துறைகளில் தமிழ் மொழியின் இனிமையை மக்களிடம் எடுத்துச் சென்றவர் என்று சொன்னால் அது மிகையாகாது. தனது படைப்புகளுக்காக ‘சாஹித்ய அகாடமி விருது’ பெற்ற பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் தமிழ்மொழியில் இன்றளவும் நிலைத்துநிற்கும் அவரது தலைச்சிறந்த படைப்புகள் பற்றியறிய மேலும் தொடர்ந்து படிக்கவும்.
பிறப்பு: ஏப்ரல் 29, 1891
பிறப்பிடம்: புதுவை
இறப்பு: ஏப்ரல் 21, 1964
பணி: தமிழாசிரியர், கவிஞர்,
அரசியல்வாதி
நாட்டுரிமை: இந்தியன்
பிறப்பு
பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள், தென்னிந்தியாவில் இருக்கும் புதுவையில், ஏப்ரல் மாதம் 29 ஆம் தேதி, 1891 ஆம் ஆண்டில் கனகசபை முதலியார் மற்றும் இலக்குமி அம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். அவரது தந்தை, அவ்வூரில் பெரிய வணிகராக இருந்தார். பாரதிதாசன் அவர்களின் இயற்பெயர் சுப்புரத்தினம். அவரது தந்தையின் பெயரின் முதல் பாதியை, தன்னுடைய பெயரில் இணைத்து ‘கனகசுப்புரத்தினம்’ என்று அழைக்கப்பட்டார்.
ஆரம்ப வாழ்க்கையும், கல்வியும்
பாரதிதாசன் அவர்கள், தனது இளம் வயதிலிருந்தே தமிழ் மொழி மீது அதீத பற்றுடையவராகத் திகழ்ந்தார். இருப்பினும், புதுவையில் பிரெஞ்சுகாரர்களின் ஆதிக்கம் இருந்ததால், அவர் ஒரு பிரெஞ்சு பள்ளியிலே சேர்ந்தார். அவர் தனது தொடக்கக் கல்வியை, ஆசிரியர் திருப்புளிசாமி அய்யாவிடம் கற்றார். அவர் புகழ்பெற்ற அறிஞர்களின் மேற்பார்வையில் தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணம் மற்றும் சைவ சித்தாந்த வேதாந்தங்களை முறையாகக் கற்றார். பின்னர், தமிழ் பயிலும் பள்ளியில் சேர அவருக்கு வாய்ப்பு கிடைத்ததால், அங்கு சேர்ந்து அவருக்கு விருப்பமானத் தமிழ் மொழியில் பாடங்களைக் கற்றார். சிறு வயதிலேயே சுவைமிக்க அழகானப் பாடல்களை, எழுதும் திறனும் பெற்றிருந்தார். பள்ளிப்படிப்பை நன்கு கற்றுத் தேர்ந்த அவர், தனது பதினாறாவது வயதில், புதுவையில் உள்ள கல்வே கல்லூரியில் சேர்ந்து, தமிழ் மொழியின் மீது அவர் வைத்திருந்த பற்றினையும், அவரது தமிழ்ப் புலமையை விரிவுப்படுத்தினார். தமிழறிவு நிறைந்தவராகவும், அவரது விடா முயற்சியாலும், தேர்வில் முழு கவனம் செலுத்தியதால், மூன்றாண்டுகள் பயிலக்கூடிய இளங்கலைப் பட்டத்தை, இரண்டு ஆண்டுகளிலேயே முடித்து கல்லூரியிலேயே முதலாவதாகத் தேர்ச்சிப் பெற்றார். மிகச்சிறிய வயதிலேயே இத்தகைய தமிழ் புலமை அவரிடம் இருந்ததால், கல்லூரிப் படிப்பு முடிந்தவுடனே அவர், 1919ல் காரைக்காலைச் சேர்ந்த அரசினர் கல்லூரித் தமிழாசிரியாராகப் பதவியேற்றார்.
 இல்லற வாழ்க்கை
பாரதிதாசன் அவர்கள், தமிழாசிரியாராகப் பதவியேற்ற அடுத்த ஆண்டிலே அதாவது 1920ஆம் ஆண்டில் பழநி அம்மையார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர்கள் இருவருக்கும் நவம்பர் மாதம் 3 ஆம் தேதி, 1928ஆம் ஆண்டில் மன்னர்மன்னன் என்ற மகன் பிறந்தான். அதன் பிறகு, சரஸ்வதி, வசந்தா மற்றும் ரமணி என்ற மகள்களும் பிறந்தனர்.
பாரதியார் மீது பற்று
தமிழ்மொழி மீது பற்றுக் கொண்டவராக இருந்த பாரதிதாசன் அவர்கள், அவரது மானசீக குருவாக சுப்ரமணிய பாரதியாரைக் கருதினார். அவரது பாடலைத் தனது நண்பனின் திருமண நிகழ்வின் போது பாடிய அவர், பாரதியாரை நேரில் சந்திக்கவும் செய்தார். பாரதியிடமிருந்து பாராட்டுக்கள் பெற்றதோடு மட்டுமல்லாமல், அவரது நட்பும் கிடைத்தது அவருக்கு. அன்று முதல், அவர் தனது இயற்பெயரான கனகசுப்புரத்தினம் என்பதை ‘பாரதிதாசன்’ என்று மாற்றிக் கொண்டார்.
தொழில் வாழ்க்கை
பாரதியாரிடம் நட்பு கொண்ட அன்று முதல், பாரதிதாசன் என்ற பெயரிலே அவர் தனது படைப்புகளை வெளியிட்டார். அச்சமயத்தில், சுதந்திரப் போராட்ட சூழல் நிலவியதாலும், அவர் திராவிட இயக்கத்தின் தீவிர தொண்டன் என்பதாலும், தந்தை பெரியார் மற்றும் பல அரசியல் தலைவர்களுடன் இணைந்து பல போராட்டங்களில் ஈடுபட்டு பலமுறை சிறைக்குச் சென்றார். அவரது இலக்கிய நடையைக் கண்டு வியந்த அன்றைய திரைத் தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் அவருக்கு வாய்ப்புகள் வழங்கியதால், அவர் திரைப்படங்களுக்கும் கதை-வசனம் எழுதியுள்ளார். பெருந்தலைவர்களான அண்ணாதுரை, மு. கருணாநிதி, மற்றும் எம்.ஜி. ராமச்சந்திரன் போன்றோர் அவருடைய படைப்புகளுக்காக அவரை ஊக்குவித்ததாலும், அவர் 1954ஆம் ஆண்டில் புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஐந்து ஆண்டுகள் செம்மையாக செயல்புரிந்த அவர், 1960ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் தோல்வியைத் தழுவினார்.
அவரது படைப்புகள்
எண்ணற்ற படைப்புகளை அவர் தமிழ்மொழிக்கு வழங்கி இருந்தாலும், சாதி மறுப்பு, கடவுள் எதிர்ப்பு போன்ற மூடநம்பிக்கைகளை மக்களின் மனதிலிருந்து அழிக்கும் விதமாகப் பல்வேறு படைப்புகளை வெளியிட்டார். அவரது மிகச்சிறந்த படைப்புகளில் சில:
‘பாண்டியன் பரிசு’, ‘எதிர்பாராத முத்தம்’, ‘குறிஞ்சித்திட்டு’, ‘குடும்ப விளக்கு’, ‘இருண்ட வீடு’, ‘அழகின் சிரிப்பு’, ‘தமிழ் இயக்கம்’, ‘இசையமுது’, ‘குயில்’, ‘தமிழச்சியின் கத்தி’, ‘பாண்டியன் பரிசு’, ‘பாரதிதாசன் ஆத்திசூடி’, ‘பெண்கள் விடுதலை’, ‘பிசிராந்தையார்’, ‘மயிலம் ஸ்ரீ சுப்பிரமணியர் துதியமுது’, ‘முல்லைக் காடு’, ‘கலை மன்றம்’, ‘விடுதலை வேட்கை’, மற்றும் பல.
விருதுகள் மற்றும் அங்கீகாரங்கள்
பாரதிதாசன் அவர்களுக்கு பெரியார், “புரட்சி கவிஞர்” என்ற பட்டமும், அறிஞர் அண்ணா, ‘புரட்சிக்கவி’ என்ற பட்டமும் வழங்கினர். தமிழ்நாடு மாநில அரசாங்கம், அவரது நினைவாக ஆண்டுதோறும் ஒரு தமிழ் கவிஞருக்கு ‘பாரதிதாசன் விருதினை’ வழங்கி வருகிறது மற்றும் ‘பாரதிதாசன் பல்கலைக்கழகம்’ என்ற பெயரில் ஒரு மாநில பல்கலைக்கழகம் திருச்சிராப்பள்ளியில் ​​நிறுவப்பட்டது.
1946 – அவரது “அமைதி-ஊமை” என்ற நாடகத்திற்காக அவர் ‘தங்கக் கிளி பரிசு’ வென்றார்.
1970 – அவரது மரணத்திற்குப் பின், அவரது ‘பிசிராந்தையார்’ நாடகத்திற்காக அவருக்கு ‘சாஹித்ய அகாடமி விருது’ வழங்கப்பட்டது
2001 – அக்டோபர் மாதம் 9ஆம் தேதி, சென்னை தபால் துறை மூலமாக ஒரு நினைவு அஞ்சல்தலை அவரது பெயரில் வெளியிடப்பட்டது.
இறப்பு
எழுத்தாளர், திரைப்படக் கதாசிரியர், கவிஞர், அரசியல்வாதி என்று பன்முகம் கொண்ட பாரதிதாசன் அவர்கள், ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி, 1964 ஆம் ஆண்டில் இயற்கை எய்தினார்.
காலவரிசை
1891: புதுவையில், ஏப்ரல் மாதம் 29 ஆம் தேதி, 1891 ஆம் ஆண்டில் கனகசபை முதலியார் மற்றும் இலக்குமி அம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார்.
1919: காரைக்காலைச் சேர்ந்த அரசினர் கல்லூரித் தமிழாசிரியாராகப் பதவியேற்றார்.
1920: பழநி அம்மையார் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
1954: புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1960: சட்டமன்ற தேர்தலில் தோல்வியைத் தழுவினார்.
1964: ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி, 1964 ஆம் ஆண்டில் இயற்கை எய்தினார்.
1970: அவரது மரணத்திற்குப் பின், அவரது ‘பிசிராந்தையார்’ நாடகத்திற்காக அவருக்கு ‘சாஹித்ய அகாடமி விருது’ வழங்கப்பட்டது.



புரட்சிக் கவிஞர்
தலைசிறந்த தமிழ் கவிஞர்களில் ஒருவரான ‘பாவேந்தர்’ பாரதிதாசன் (Bharathidasan) நினைவு தினம் இன்று (ஏப்ரல் 21). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
l புதுச்சேரியில் (1891) பிறந்தார். இயற்பெயர் கனக சுப்புரத்தினம். திருப்புளிச்சாமியிடம் ஆரம்பக் கல்வி கற்றார். பிரெஞ்சு மொழியும் கற்றார். மகா வித்வான் பு.அ.பெரியசாமி, புலவர் பங்காரு பத்தரிடம் தமிழ் இலக்கண, இலக்கியங்கள், சித்தாந்த, வேதாந்தப் பாடங்களை கற்றுத் தேர்ந்தார்.
l கல்வே கல்லூரியில் பயின்றவர், முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றார். 10 வயதிலேயே கவிதை எழுதும் ஆற்றல் பெற்றிருந்தார். ஒரு திருமண விழாவில் இவர் பாடிய பாரதியாரின் பாடல் அங்கு வந்திருந்த பாரதியாருக்கு இவரை அறிமுகம் செய்து வைத்தது. அவர் மீது கொண்ட பற்றால், தன் பெயரை பாரதிதாசன் என்று மாற்றிக்கொண்டார்.
l தமிழ் ஆசிரியராக 1909-ல் பணியில் சேர்ந்தார். 37 ஆண்டுகள் பணியாற்றினார். பாரதியார், வவேசு, அரவிந்தர் உள்ளிட்ட பல விடுதலை வீரர்கள் காவலில் இருந்து தப்ப உதவியதோடு, அவர்களுக்கு அடைக்கலமும் அளித்தார்.
l புதுச்சேரியில் ஒருமுறை சூறாவளிக் காற்றில் சிக்கி 5 கி.மீ. தூரத்துக்கு தூக்கி எறியப்பட்டு, ஒருநாள் முழுவதும் அலைந்து திரிந்து பிறகு வீடு வந்து சேர்ந்தார். இந்த அனுபவத்தை ‘காற்றும் கனகசுப்புரத்தினமும்’ என்ற கட்டுரையாக வடித்தார் பாரதியார். அதை மீண்டும் மீண்டும் கேட்டு ரசித்தாராம் அரவிந்தர்.
l ஆஷ் கொலை வழக்கில் தொடர்புடைய மாடசாமி, புதுச்சேரி வந்தபோது அவரை போலீஸுக்கு தெரியாமல் கட்டுமரத்தில் ஏற்றி நடுக்கடல் வரை கொண்டுசென்று வெளிநாட்டுக்கு அனுப்பிவைத்தார். கைத்தறி துணிகளை தெருத்தெருவாக விற்றார். தேச சேவகன், புதுவைக் கலைமகன், தேசோபகாரி, தேசபக்தன், ஆனந்தபோதினி, சுதேசிமித்திரன், புதுவை முரசு, குயில் உள்ளிட்ட பல இதழ்களின் ஆசிரியராகப் பணிபுரிந்தார்.
l திரைப்படத் துறையில் 1937-ல் பிரவேசித்தார். கதை, திரைக்கதை, வசனம், பாடல், படத் தயாரிப்பு என அனைத்து களங்களிலும் முத்திரை பதித்தார். தான் எழுதியதில் மற்றவர்கள் திருத்தம் செய்வதை விரும்பமாட்டார்.
l பாடப் புத்தகங்களில் ‘அ அணில்’ என்று இருந்ததை ‘அ அம்மா’ என்று மாற்றியவர். பல்வேறு புனைப்பெயர்களில் பாடல், கட்டுரை, நாடகம், கவிதை தொகுப்பு, கதைகளை எழுதிவந்தார். ‘இலக்கியக் கோலங்கள்’, ‘இளைஞர் இலக்கியம்’, ‘குடும்ப விளக்கு’, ‘பாண்டியன் பரிசு’, ‘இருண்ட வீடு’, ‘அழகின் சிரிப்பு’, ‘குமரகுருபரர்’ போன்றவை இவரது முக்கியப் படைப்புகள்.
l நகைச்சுவை உணர்வு மிக்கவர். நன்கு பாடுவார். உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதில் அதிக கவனம் செலுத்துவார். சிலம்பம், குத்துச்சண்டை, குஸ்தி பயின்றார். வீடு என்று இருந்தால் கோழி, புறா, பசு மூன்றும் இருக்க வேண்டும் என்பார். அவற்றை தானும் வளர்த்துவந்தார்.
l புதுச்சேரி சட்டப்பேரவை உறுப்பினராக 1954-ல் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1969-ல் இவரது ‘பிசிராந்தையார்’ நாடகத்துக்கு ‘சாகித்ய அகாடமி’ விருது கிடைத்தது. 1990-ல் தமிழக அரசு இவரது படைப்புகளை நாட்டுடைமையாக்கியது.
l புரட்சிக் கவிஞர், பாவேந்தர் என்று கொண்டாடப்படுபவரும், 20-ம் நூற்றாண்டின் இணையற்ற படைப்பாளிகளில் ஒருவருமான பாரதிதாசன் 1964 ஏப்ரல் 21-ம் தேதி 73-வது வயதில் மறைந்தார்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக