திங்கள், 17 ஏப்ரல், 2017

உலக பாரம்பரிய தினம் (World Heritage Day) ஏப்ரல் 18




உலக பாரம்பரிய தினம்  (World Heritage Day) ஏப்ரல் 18 .

உலகில் ஒவ்வொரு நாடும் , ஒவ்வொரு பகுதியும், ஒவ்வொரு இனமும் பல்வேறு வகையான பாரம்பரிய பெருமைகளை வளர்ந்து வரும் வேகமான காலத்தில் காப்பதற்காக ஏப்ரல் 18 ம் தேதியை உலக பாரம்பரிய தினமாக (World Heritage Day). அறிவிக்கப்பட்டுள்ளது.
தோற்றம்
1982 ஆம் ஆண்டு துனிசியாவில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் ஏப்ரல் 18ஆம் நாள் சர்வதேச நினைவிடங்கள் (International Day for Monuments and Sites) தினமாக கொண்டாட பரிந்துரைத்தது. அடுத்த ஆண்டு யுனெஸ்கோ நிறுவனம் இதனை அங்கீகரித்தது. இதுவே பின்னாளில் உலக பாரம்பரிய தினமாக மாறியது.
இந்த நாளில் என்ன செய்யலாம் என்று அந்த மாநாடு பரிந்துரைத்தது. அதன் படி இந்நாளில்
கட்டிட பெருமைகளைக் கண்காட்சிகள் அமைத்து விவரிப்பது
கட்டணம் ஏதுமில்லாமல் இந்த ஒரு நாள் நினைவிடம், அரும் பொருளகம்(Monument), தலங்களுக்கு மக்களை அனுமதிப்பது
இந்த நாள் பற்றிய விழிப்புணர்வை ஊடகங்கள் மூலம் மக்களுக்குத் தெரிவிப்பது
பொது இடங்களில் விவாதங்கள் நடத்துவது
புத்தகங்கள், தபால் தலை முத்திரைகள்(Stamps), போன்றவற்றை அச்சிடுவது
பாரம்பரியத்தை காப்பாற்றியவருக்கு சிறப்பு பரிசுகள் வழங்குவது
பள்ளி மாணவர்கள் மத்தியிலும் இளைஞர்கள் மத்தியிலும் நிகழ்ச்சிகள் நடத்துவது
என்று சில பரிந்துரைகளை வழங்கி உள்ளது.



: நினைவு சின்னங்களுக்கும், புராதன இடங்களுக்கான உலக பாரம்பரிய தினம் (World Heritage Day, April 18 ) ஆண்டு தோறும் ஏப்ரல் 18 ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தக் கொண்டாட்டம் முதன் முதலாக 1983 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் யுனெஸ்கோ அமைப்பால் தொடங்கி வைக்கப்பட்டது.
1982 ஆம் ஆண்டு துனிசியாவில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் ஏப்ரல் 18 ஆம் தேதியை சர்வதேச நினைவிடங்கள் தினமாக (International Day for Monuments and Sites )கொண்டாட பரிந்துரைத்தது. அடுத்த ஆண்டு யுனெஸ்கோ நிறுவனம் இதனை அங்கீகரித்தது. இதுவே பின்னாளில் உலக பாரம்பரிய தினமாக மாறியது.
ஒரு நாட்டுக்கு அழகும், பெருமையும் சேர்ப்பது அதன் பழங்கால நினைவுச் சின்னங்கள், கல்வெட்டுகள், ஓவியங்கள் மற்றும் சிற்பங்களே. இந்த நாளில் என்ன செய்யலாம் என்று அந்த மாநாடு சிலவற்றை பரிந்துரைத்துள்ளது.
* பழங்கால கட்டட பெருமைகளை கண்காட்சிகளாக அமைத்து விவரிப்பது
* கட்டணம் ஏதுமில்லாமல் இந்தத் தினத்தில் நினைவிடம், மற்றும் அருங்காட்சியங்களில் பொது மக்களை அனுமதிப்பது
* இந்தத் தினத்தின் தேவை பற்றி பத்திரிகைகள் மற்றும் ஊடகங்கள் மூலம் மக்களுக்குத் தெரிவிப்பது
* பொது இடங்களில் விவாதங்கள் நடத்துவது
* பாரம்பரிய பெருமைகளை பறைசாற்ற்றும் புத்தகங்கள், தபால் தலை முத்திரைகள் போன்றவற்றை அச்சிடுவது
* பாரம்பரியத்தை பேணி பராமரித்து வருபவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்குவது
* பள்ளிக்கூட மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் மத்தியில் பாரம்பரியத்தின் பெருமைகளை எடுத்துச் செல்வது..! நிகழ்ச்சிகள் நடத்துவது
அழிவின் விழிம்பில்...
மனித இனத்துக்கே பொதுவானவை இயற்கை வளங்கள். ஆனால் கவனிப்பாரற்று இந்த பழங்கால நினைவுச் சின்னங்கள் அழியும் அபாயத்தில் உள்ளன.
விழிப்புணைர்வு தேவை...
உலகின் மிக முக்கிய நினைவுச் சின்னங்களை பாதுகாக்க யுனெஸ்கோ உள்ளிட்ட அமைப்புகள் முயற்சி செய்து வருகின்றன. நினைவுச் சின்னங்களை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகத்தான் உலக பராம்பரிய தினம் கடைபிடிக்கப்படுகிறது.



பாரம்பரிய நினைவுச் சின்னங்களை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் ஏப்., 18ம் தேதி உலக பாரம்பரிய தினம் கொண்டாட யுனெஸ்கோ முடிவு செய்தது.
அது சரி..இந்த உலக பாரம்பரிய நாள் தோன்றியதை கொஞ்சம் விளக்க முடியுமா? என்று கேட்பவர்களுக்கான பதில் இதோ:
1982 ஆம் ஆண்டு துனிசியாவில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் ஏப்ரல் 18ஆம் நாள் “சர்வதேச நினைவிடங்கள் தினமாக “International Day for Monuments and Sites” கொண்டாட பரிந்துரைத்தது. அடுத்த ஆண்டு யுனெஸ்கோ இதனை அங்கீகரித்தது. இதுவே பின்னாளில் உலக பாரம்பரிய தினமாக மாறியது.”World Heritage Day”.
இந்த நாளில் என்ன செய்யலாம் என்று அதே மாநாடு பரிந்துரைத்தது. அதன் படி இந்நாளில்
- கட்டிட பெருமைகளைக் கண்காட்சிகள் அமைத்து விவரிப்பது
- கட்டணம் ஏதுமில்லாமல் இந்த ஒரு நாள் நினைவிடம், அரும் பொருளகம்(Monument), தலங்களுக்கு மக்களை அனுமதிப்பது
- இந்த நாள் பற்றிய விழிப்புணர்வை ஊடகங்கள் மூலம் மக்களுக்குத் தெரிவிப்பது
- பொது இடங்களில் விவாதங்கள் நடத்துவது
- புத்தகங்கள்,தபால் தலை முத்திரைகள்(Stamps), போன்றவற்றை அச்சிடுவது
- பாரம்பரியத்தை காப்பாற்றியவருக்கு சிறப்பு பரிசுகள் வழங்குவது
- பள்ளி மாணவர்கள் மத்தியிலும் இளைஞர்கள் மத்தியிலும் நிகழ்ச்சிகள் நடத்துவது என்று சில பரிந்துரைகளை வழங்கி உள்ளது.
மேலும் இது குறித்து தஞ்சை தமிழ் பல்கலைகழக பேராசிரியர் ராஜையாவிடம் பேசிய போது, “ஐ.நா.,வின் அங்கமான யுனெஸ்கோ, உலகெங்கிலும் பழமையும், பாரம்பரியமும் மிக்க பாரம்பரிய சின்னங்களை கண்டறிந்து, அவற்றை வகைப்படுத்தி பாதுகாத்து வருகிறது. இதே ஐ நா வால் உலக பாரம்பரிய சின்னங்கள் என்று அங்கீகரிக்கப்படாத இடங்கள் இந்தியாவில் ஏராளம். கல் தோன்றி மண் தோன்றா காலத்தே நம் மூதாதையரின் நாகரிகத்தையும் பண்பாட்டையும் எடுத்துரைக்கும் பாரம்பரியச் சின்னங்களாக இன்றும் அழியாமல் நிற்கும் கோவில்களும், புராதன மண்டபங்களும் மிக அதிகம். உலக அளவில் பேசப்படும் இந்தச் சின்னங்களை பராமரித்து வருவது இந்திய தொல்பொருள் ஆராய்ச்சிக் கழகம்.
இந்தியாவில் மட்டும், யுனெஸ்கோ ஒப்புக்கொண்ட 32 நினைவுச் சின்னங்கள் பாதுகாக்கப்பட்டு பராமரிக்கப்படுகின்றன. அவற்றில், வரலாற்று காலத்திற்கு முற்பட்ட ஓவியங்கள் உள்ள, பிம்பெட்கா (ம.பி.,), தொன்மை மிக்க அஜந்தா, எல்லோரா - எலிபெண்டா குடை வரைகள், பவுத்த சின்னங்களான சாஞ்சி, புத்த கயா- மஹாபோதி கோவில், பல்லவர் குடைவரை மற்றும் சிற்ப கலைகளின் சுரங்கமான மாமல்லபுரம், சோழர்களின் புகழ்பாடும் தஞ்சாவூர் பெரிய கோவில், கங்கைகொண்ட சோழபுரம், தாராசுரம், விஜயநகர பேரரசின் உன்னத படைப்பான ஹம்பியிலுள்ள சின்னங்கள், இஸ்லாமிய பேரரசுகளின் கலை நயத்தை காட்டும் ஆக்ரா- - தாஜ்மஹால், டில்லி செங்கோட்டை, ஹுமாயுன் கல்லறை, குதுப்மினார், பதேபூர் சிக்ரி, கோவாவில் உள்ள தேவாலயங்கள், பட்டடக்கல் கோவில் கள், கஜுராஹோ கோவில்கள், கொனாரக் கோவில், ஜெய்ப்பூரிலுள்ள ஜந்தர் மந்தர் போன்றவை இடம் பெற்றுள்ளன.
இந்த சின்னங்களும், அந்தந்த பகுதிகளில் உள்ள கோவில்கள், பழமையான தொல்லியல் இடங்களும், வரலாற்றை கண் முன்னால் நிறுத்தும் சாட்சிகளாக விளங்குகின்றன.
ஆனால், அவை, தற்போது பல்வேறு காரணங்களால் அழிக்கப்பட்டு வருகின்றன.
* தமிழகத்தில் மதுரை மற்றும் புதுக்கோட்டை பகுதிகளில் உள்ள மலைகளில், தமிழர்கள் பயன்படுத்திய தொன்மையான எழுத்துக்களான தமிழ்-பிராமி கல்வெட்டு உள்ள குகைகள் உள்ளன. அவற்றுடன் வரலாற்றுக் காலத்தைச் சார்ந்த பல குடைவரைகளும் உள்ளன. அந்த பகுதிகளில் உள்ள, குவாரிகளின் ஆதிக்கத்தால், ஏற்கனவே பல தொன்மைத் தடயங்கள் அழிந்து விட்டன.
* மதுரை மேலுார் பகுதியை சுற்றியுள்ள மலைகளில், சமணர்கள் தங்கியிருந்த குகைகள் மற்றும் தமிழ்- பிராமி கல்வெட்டுகள் உள்ள பகுதிகளில், கல் உடைக்கும் தொழில் பெருமளவில் நடந்து வருகிறது.
* கோவில்களில் கும்பாபிஷேகம் என்ற பெயரில், அவற்றின் பழமை அழிக்கப் பட்டு, பளிங்குக் கற்கள் கொண்டு கட்டுவதும், கல்வெட்டுகள் இருக்கும் சுவர்களில், 'சேண்ட் பிளாஸ்ட்' எனப்படும் மணற் வெடிப்பு முறையில் இருக்கிற சிற்பங்களையும், கோவில் சுவர் களையும் அழிப்பதும், அழியாத வண்ணங்களைத் தீட்டுவதும் நடந்து வருகின்றன.
* தேர்வில் வெற்றி பெறவேண்டி, பல கோவில்களின் சுவர்களில், மாணவர்கள், கருமையால் எழுதி, கோவிலின் அழகைக் கெடுக்கின்றனர்.
* பாரம்பரிய சின்னங்கள், நாம் வாழ்ந்தவற்றின் அடையாளங்கள் என்பதால், அவற்றை பாதுகாத்தல், நமது வரலாற்றை பாதுகாப்பதாகும்.
அது மட்டுமின்றி அதிகரித்து வரும் வெப்பநிலையினால் உயரும் கடல் மட்டமானது, யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட பாரம்பரியத் ஸ்தலங்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகும் என்று இரு ஆய்வு மேற்கோள் காட்டியதை பலரும் மறந்து விட்டார்கள். இதையெல்லாம் கவனத்தில் கொண்டு நம் சந்ததியினருக்கு இந்த நினைவுச் சின்னங்களை பாதுகாத்து வழங்குவது நம் ஒவ்வொருவரின் கடமை”என்று தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக