வெள்ளி, 14 ஏப்ரல், 2017

சித்திரை விசு கனிகாணல்



சித்திரை விசு கனிகாணல்

தமிழ்ப் புத்தாண்டு நாளான சித்திரை முதல் நாள் கனிகாணல் தமிழ்நாட்டின் கன்னியாகுமரி முதலிய இடங்களில் மரபு. கோவில்களிலும் வீடுகளிலும் கனிகளை அலங்கரித்து வைப்பர். வீடுகளில் பூஜையறையில் வாழை, கொய்யா, மாதுளை முதலிய கனிகளையும் காய்கறிகளையும் வாழையிலையில் வைத்து அதிகாலையில் எழுந்ததும் பூஜையறைக்குச் சென்று அவற்றின் மேல் கண்விழிப்பர். கோயில்களிலும் கனிகாணுதல் நிகழ்ச்சியும்
கைநீட்டமும் நடைபெறும்.
வருடப் பிறப்பு (சித்திரை) முதல் நாள் இரவு, பூஜையறையில் கனி வர்க்கங்கள், காய்கறிகள், பணக் குவியல்கள், நகைகள் என்று அலங்காரமாக வரிசைப்படுத்தி வைத்து விடிய விடிய விளக்குகளை எரியச் செய்வர். வருடப் பிறப்பு அன்று அதிகாலை குடும்பத்தினர் எழுந்து, கண்களைத் திறக்காமல் பூஜை அறைக்குச் சென்று, முதல் நாள் வைத்த சீர்வரிசை போன்ற கனி வர்க்கங்களையும் நகைகளையும் பார்த்தபின் வணங்கிச் செல்வார்கள்.
அன்று, சிறியவர்கள் பெரியவர்களிடம் ஆசி பெற்றுப் பரிசு பெறுவார்கள். (பெரும்பாலும் நாணயங்கள்.) இதனைக் கைநீட்டம் என்று சொல்வர்.
இந்த நிகழ்ச்சிகள் கேரளாவில் கொண்டாடப்படுவதுபோல் அதனையொட்டி யுள்ள குமரி மாவட்டத்திலும் கொண்டாடப் படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக