வெள்ளி, 14 அக்டோபர், 2016

உலக முட்டை  தினம் அக்டோபர் மாதத்தின் இரண்டாவது வெள்ளிக்கிழமை

உலக முட்டை  தினம் அக்டோபர் மாதத்தின்
இரண்டாவது வெள்ளிக்கிழமை (அக்டோபர்14),

முட்டையின் முக்கியத்துவத்தை உணர்த்தும்
வகையில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதத்தின்
இரண்டாவது வெள்ளிக்கிழமை (அக்டோபர்14), உலக முட்டை தினமாகக்
கொண்டாடப்படுகிறது. 
முட்டை: உடலுக்கு நல்லதா?
கூடாதா?

தினமும் முட்டை சாப்பிடுவது சரியா என்று
சிலருக்குத் தயக்கம் இருக்கும். ஆனால்
தினமும் தயங்காமல் முட்டை சாப்பிடலாம்
என்கிறார்கள் உணவியல் நிபுணர்கள்.
குறிப்பாக, வளரும் குழந்தைகள் தினமும் ஒரு
முட்டை சாப்பிடுவது மிகவும் ஆரோக்கியமானது
என்று டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர். முட்டை
நம் அன்றாட உணவில் முக்கிய பங்கை
வகிக்கிறது. முட்டையில் கொழுப்பு,
புரதம், வைட்டமின்கள், இரும்புச் சத்து உள்ளது.
தினமும் ஒரு முட்டையை சாப்பிடுவது நம் உணவை
முழுமையான, ச ரி சமமான உணவாக
மாற்றுகிறது. ஒரு முட்டையில் ஒளிந்திருக்கும்
சத்து உடலுக்கு உகந்ததாக உள்ளது.
ஆரோக்கியமாக இருப்பதில் முட்டை பெரும்
பங்கை வகிக்கிறது.
பிரதான உணவுகளில் நமது உடலுக்குத்
தேவையான புரதம் அனைத்தும் முழுமையாக
இருப்பதில்லை. எனவே ஆரோக்கியமாய்
இருப்பதற்குப் புரத உணவுகளில் ஒன்றhன
குறைந்தது ஒரு முட்டையாவது தினம் நம்முடைய
சாப்பாட்டில் அடங்கியிருக்க வேண்டும்.
வைட்டமின் ஏ, பி, சி, டி, இ என்று உடலுக்குத்
தேவையான அனைத்து வகையான
வைட்டமின்களும் முட்டையில் உண்டு. மேலும்,
தைராக்சின் சுரக்கத் தேவையான அயோடின்,
பற்கள் மற்றும் எலும்புகளின்
ஆரோக்கியத்துக்குத் தேவைப்படும் பாஸ்பரஸ்
போன்றவையும் முட்டையில் உண்டு. தசைகளின்
வலிமைக்கு புரதம் அவசியம். முட்டையின்
வெள்ளைக்கருவில் புரதச்சத்து அதிகமாக
இருக்கிறது. இதன் காரணமாகவே 'பாடி
பில்டிங்' பயிற்சியை மேற்கொள்பவர்கள்
அடுக்கடுக்காக முட்டைகளை பச்சையாகவே
உடைத்துக் குடிக்கிறார்கள்.
ஓரிடத்திலேயே அமர்ந்து வேலை செய்பவர்கள்
ஒரு நாளைக்கு ஒரு முட்டை எடுத்துக்
கொண்டாலே போதும். உடல் உழைப்பு
அதிகமுள்ள வேலைகளில் இருப்பவர்கள் ஒரு
நாளைக்கு 2 அல்லது 3 முட்டை சாப்பிடலாம்.
பொதுவாக முட்டையின்
வெள்ளைக் கருவை மட்டும் சாப்பிடுவதாக
இருந்தால் 3 அல்லது 4 முட்டைகள் வரை
சாப்பிடலாம். மஞ்சள் கருவை
சாப்பிடுவதாக இருந்தால், தினமும் ஒன்று
சாப்பிட்டால் போதும். இரவு நேரத்தில் முட்டை
சாப்பிடுவதில் தவறில்லை. ஆனால்,
தூங்கப்போவதற்கு 2 மணி நேரத்துக்கு முன்
சாப்பிட வேண்டும்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக