வெள்ளி, 22 செப்டம்பர், 2017

உலக ரோஜா தினம் செப்டம்பர் 22.


உலக ரோஜா தினம் செப்டம்பர் 22.

உலக ரோஜா தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில், இரண்டாம் சீசனுக்கு ஊட்டிக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் குதூகலம் அடைந்துள்ளனர்.ஊட்டி தாவரவியல் பூங்கா தோற்றுவிக்கப்பட்டு நூற்றாண்டு கடந்ததை கொண்டாடும் வகையில், 1996ம் ஆண்டு, அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவின் பேரில், ஊட்டி விஜயநகரப் பகுதியில் ரோஜா பூங்கா உருவாக்கப்பட்டது. இதற்கு, "நூற்றாண்டு ரோஜா பூங்கா' என பெயரிடப்பட்டது. இப்பூங்கா தோட்டக்கலைத் துறைக்கு சொந்தமான 10 ஏக்கர் பரப்பில், ஐந்த தளங்களில் உருவாக்கப்பட்டது. இதில், 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செடிகளில், 3,800 ரக ரோஜாக்கள் தற்போது வரை வைக்கப்பட்டுள்ளன. தற்போது, பூங்காவை ஒட்டியுள்ள ஒரு ஏக்கர் பரப்பிலான தேயிலை எஸ்டேட்டில், தேயிலைச் செடிகள் அகற்றப்பட்டு இந்த பகுதியிலும் ரோஜா பூங்காவை விரிவாக்கும் பணிகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளன. ஆசியாவிலேயே அதிக ரோஜா ரகங்கள் கொண்ட பூங்காவாக, ரோஜா பூங்கா திகழ்ந்து வருவதால், ஜப்பானில் நடந்த சர்வதேச ரோஜா கருத்தரங்கில், "கார்டன் ஆப் தி எக்சலன்ஸ்' விருது கடந்த 2006ம் ஆண்டு வழங்கப்பட்டது. இந்த பூங்காவுக்கான அங்கீகாரத்தை தக்க வைத்துக் கொள்ளும் வகையிலான பல்வேறு சிறப்புப் பணிகளை, ரோஜா பூங்கா நிர்வாகம் செய்து வருகிறது..

உலக ரோஜா தினம்:உலகில் உள்ள மலர்களில் ரோஜா மலர்களுக்கென தனித்துவமான வரலாறு உண்டு. காட்டு ரோஜாக்களை, வீட்டு ரோஜாக்களாக மாற்றியவர்களில், உலக அழகி என்று வர்ணிக்கப்படும் "கிளியோபாட்ரா' வுக்கும், ஜூலியஸ் சீசருக்கும் முக்கிய பங்கு உள்ளதென வரலாற்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களின் காலத்திலேயே பல்வேறு ரோஜா மலர்களைக் கண்டுபிடித்ததும், ரோஜாக்களில் பானங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது குறித்த தகவல்களும் உள்ளன.அதேபோல, ரோஜா மலர்களின் நிறங்களுக்கும் ஒவ்வொரு "சென்டிமென்ட்' உண்டு. மஞ்சள், சிவப்பு, நீலம், பச்சை, வெள்ளை ஆகிய ரோஜாக்கள் நட்பு, காதல், சோகம், சமாதானம் உட்பட பல்வேறு உணர்வுகளை வெளிக்காட்டுவதாக உள்ளன. இதன் காரணமாகத் தான் "காதலர் தினம்' வரும் போது, உலகில் அதிக விற்பனையாகும் மலர்களில் ரோஜா மலருக்கு என்றுமே முதலிடம் உள்ளது.
இத்தகைய சிறப்பு தகுதிகள் வாய்ந்த ரோஜா மலருக்கென ஒரு தினத்தைக் கொண்டாட, "அமெரிக்கன் ரோஜா சங்கம்' முதன் முதலில் தீர்மானம் கொண்டு வந்தது. உலகம் முழுவதும் ரோஜா தினம் செப்., 22ல் ஆண்டுதோறும் கொண்டாடப் படுகிறது.


இன்னிக்கு ரோஜாக்கள் தினம். அதனால எல்லாருக்கும் கலர்கலரா ரோஜாக்கள் கொடுக்கறேன்.
ரோஜானாலே எல்லாருக்கும் பிடிக்கும். ( மணிரத்னம் படத்தை சொல்லல! ). ரோஜாப்பூவைப் பிடிக்காதவங்க யாருமே இருக்கமாட்டாங்க. நம்ம முன்னாள் பிரதமர் திரு. ஜவஹர்லால் நேரு அவர்களுக்குக் கூட ரோஜான்னா அவ்வளவு இஷ்டமாம். அதனாலதான் அவருக்கு "ரோஜாவின் ராஜா" அப்படிங்கற பேரும் உண்டு. கலர்கலராப் பூத்துக்குலுங்கும் ரோஜாக்களைப் பார்க்கும்போதே, கண்களுக்குக் குளிர்ச்சியாகவும், மனசுக்கு மகிழ்ச்சியாகவும் இருக்கும். அதனாலதான், வெற்றிபெற்றவங்களை பாராட்டுவதிலிருந்து, நோயுற்றவர்களுக்கு ஆறுதல் சொல்றவரை எல்லாத்துக்கும் ரோஜாப்பூங்கொத்து கொடுக்கறோம். கல்யாணம் போன்ற எந்த ஒரு
விழாவுக்கும் ' ரோஸ் பொக்கே' கொடுக்கறதுதான் இப்போ ஃபேஷன்.
இந்த ரோஜாக்கள் 35 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னாலேயே, ஐரோப்பாவுல கண்டுபிடிக்கப்பட்டிருக்கு. அதுக்கப்புறம், 1798-ல் வடஅமெரிக்கவுல, ஜோஸ்ஃபின் அப்படிங்கறவங்க 250 வகையான ரோஜாப்பூக்களை அவங்க ரோஜாத்தோட்டத்தில வச்சிருந்தாங்களாம். ரோஜாக்கள் பல வடிவங்களிலயும் பல கலர்களிலயும் இருக்கு. இதுல, மஞ்சள் கலர் ரோஜா நட்பையும், வெள்ளை கலர் ரோஜா சமாதானத்தையும் குறிக்கிறது.


ஃப்ரான்ஸ் நாட்டோட தேசிய மலர் இந்த ரோஜா தான்.
உலகிலேயே நெதர்லாந்துதான் ரோஜா ஏற்றுமதியில் முனனனியில் இருக்கு. சின்ன, குட்டியான ரோஜாவுல இருந்து, பெரிய ரோஜா வரைப் பல வகைகள் இந்த உலகம் முழுக்க இருக்கு. மேலும், நம்ம நாட்டுல, காஷ்மீர் ரோஜா, ஊட்டி ரோஜா என பல வகைகள் இருக்கு. வெள்ளை, மஞ்சள், சிகப்பு, ஆரஞ்சு என பல கலர்களிலயும் நாம ரோஜாக்களைப் பார்த்திருப்போம். ஆனா கறுப்பு கலர் ரோஜாதான் ஊட்டி மலர்க்கண்காட்சியில் ஃபேமஸ்.
இதுபோல மலர்க்கண்காட்சிகளுக்கு, ரோஜாக்களினால்தான்
பெருமையே! கல்யாணம் போன்ற விழாக்களை, அலங்கரிப்பதிலயும் ரோஜாக்களின் பங்கு ரொம்ப முக்கியமானது. பரிசாகக் கொடுப்பதற்கு ரோஜாப் பூங்கொத்தையும் ஒற்றை ரோஜாவையும் தவிர சிறந்தது வேற இல்லை. அதனால இன்னிக்கு, இந்த ரோஜா தினத்தில், எல்லாரும் நண்பர்களுக்கும், பிரியமானவர்களுக்கும் ரோஜாக்களைப் பரிசாக கொடுத்து மகிழ்வோம்.



ரோஜா மலர் வண்ணங்களின் அர்த்தம்...

ரோஜா மலருக்கு உண்டான மரியாதை வேறு எந்த மலருக்கும் கிடையாது. நூற்றாண்டுகளாக வார்த்தைகள் இன்றி விசயங்களைப் பறிமாற்றிக் கொள்ள ரோஜா பயன்படுத்தப்படுகிறது. ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படும் ரோஸ் எனும் சொல்லுக்கு லத்தின் மொழியில் ‘ரகசியமாக சொல்லப்படும் விசயம்’ என்று அர்த்தம்.
ஆஸ்ட்ரோ உலகம் ரோஜா மலர் வண்ணங்களின் அர்த்தத்தை இங்கே வழங்குகிறது.


சிவப்பு
முக்கியவர்களுக்கான உன்னதமான தேர்வு இது. சிவப்பு ரோஜா என்பது மரியாதையும் அன்பையும் வெளிப்படுத்த உதவும். முள்ளிலும் உறுதியான அன்பை வெளிப்படுத்தும் இந்த சிவப்பு ரோஜா, காதலர்களுக்கான ரோஜாவாக கருதப்படுகிறது. வேறு அர்த்தம்: ஆழ்ந்த அன்பு, ஆர்வம், அழகு

வெள்ளை
வெள்ளை ரோஜா குற்றமற்ற தன்மை, பணிவு மற்றும் தூய்மையைப் பிரதிப்பலிக்கும். இது திருமண ரோஜா என்றும் அழைக்கப்படும். இது ‘நான் உனக்கு தகுதியானவன்’ என்பதை புலப்படுத்தும். அதோடு வெள்ளை ரோஜா மரியாதை மற்றும் பெருமதிப்பையும் தரும். வேறு அர்த்தங்கள்: அழியா காதல், தீராத காதல், புதிய காதல்.

இளஞ்சிவப்பு
பெண்மை, கருணை, நேர்த்தியின் அடையாளம் இது. வண்ணத்தின் சாயலில் இந்த ரோஜாவின் அர்த்தம் உண்டு. கரும் இளம்சிவப்பு பாரம்பரிய முறையில் நன்றி மற்றும் பாராட்டினைத் தெரிவிப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது. இளம்சிவப்பு ரோஜா புகழ், கனிவு மற்றும் அனுதாபம் ஆகியவற்றை தெரிவிக்க பயன்படுத்தப்படுகிறது. வேறு அர்த்தங்கள்: வியக்கும் அழகு, சந்தோசம், வேடிக்கை, இனிய எண்ணங்களுக்கான மலர், மென்மையான உணர்வு.

மஞ்சள்
நூற்றாண்டுகளுக்கு முன் மஞ்சள் ரோஜா பொறாமையின் சின்னமாக கருதப்பட்டது. ஆனால், இன்று அது நட்பு, சந்தோசம், அக்கறை ஆகியவற்றைக் குறிக்கிறது. அதோடு, பாராட்டுக்கான குறிப்பாகவும் காதல் இல்லாத அன்பினையும் குறிக்கும். வேறு அர்த்தம்: விரைவில் குணமாகு, நான் அக்கறை கொள்கிறேன், மகிழ்ச்சி

ஊதா
வியப்பின் அறிகுறியே இந்த ஊதா ரோஜா. முதல் பார்வையிலேயே காதலில் விழுந்ததைக் காட்டவே அவனோ / அவளோ இந்த ஊதா ரோஜாக்களைக் கொடுப்பர். இதில் மயங்கி ஊதா ரோஜா சொல்லும் அர்த்ததை தவிர்க்க முடியா நிலை ஏற்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக