வெள்ளி, 13 அக்டோபர், 2017

எழுத்தாளர் சுந்தர ராமசாமி நினைவு தினம்- அக்டோபர் 14 , 2005 .


எழுத்தாளர் சுந்தர ராமசாமி நினைவு தினம்- அக்டோபர் 14 , 2005 .

சுந்தர ராமசாமி , ( மே 30 , 1931 - அக்டோபர் 14 , 2005 ) நவீனத் தமிழ் இலக்கியத்தின் மிகச் சிறந்த எழுத்தாளர்களுள் ஒருவர். இவர் ஒரு நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர், கவிஞர் எனப் பல இலக்கியவினங்களில் ஆளுமை பெற்றிருந்தார். பசுவய்யா என்ற புனைப்பெயரில் கவிதைகள் எழுதியவர். நவீனத் தமிழ் இலக்கியத்தில்,
தமிழ் மொழியினை பல்வேறு தளங்களுக்குக் கொண்டு சென்றார். மார்க்சியக் கண்ணோட்டத்தில் தொடங்கிய இவர் எழுத்துக்கள் (தண்ணீர், பொறுக்கி வர்க்கம்) இறுதியாக பட்டறிவுத் திறனாய்வு சார்ந்த உய்யநிலை நடப்பியல் (Empiricist Critical Realism) நோக்கில் (ஜகதி) கால்கொண்டன எனலாம். இடைபட்ட காலத்தில் புத்தியலின் (Modernism) பலவெளிகளை படைத்தாலும் அவ்வப்போது வியன்புனைவிலும் (இருக்கைகள் போன்றன) திளைத்துள்ளார்.
இவர், நாகர்கோவில் அருகே உள்ளே தழுவிய மகாதேவர் கோவில் என்ற கிராமத்தில் பிறந்தார். தன் இளைய பருவத்தில்,தொ.மு.சி.ரகுநாதனிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். தொ.மு.சி-யினால் மார்க்ஸிய தத்துவங்களிலும் ஈர்க்கப்பட்டவராகவும் இருந்தார். பிறகு தொ.மு.சி ஆசிரியராக இருந்த சாந்தி என்ற இதழில் எழுதத் தொடங்கினார்.1953 ஆம் ஆண்டு ’சாந்தி’ பத்திரிக்கையில் இவர் எழுதிய ’தண்ணீர்’ கதைக்கு முதல் பரிசு கிடைத்தது.
இலக்கியச் செல்வாக்குகள்
இவர் சமூக சீர்திருத்தவாதிகளான காந்தி, பெரியார் ஈவெரா, அரவிந்தர், இராமகிருஷ்ண பரம அம்சர், இராம் மனோகர் லோகியா, ஜேசி குமரப்பா, ஜே கிருஷ்ணமூர்த்தி, தமிழ் இலக்கியத்தில் புத்துணர்திறனைப் புகுத்திய புதுமைப்பித்தன் எனப் பலரது நூல்களின் தாக்கத்துக்கு ஆட்பட்டுள்ளார். மேலும் மலையாள இலக்கியச் சுடரான எம். கோவிந்தனை 1957இல் தொடர்பு கொண்டு தொடர்ந்து அவரது நண்பராக கடைசிவரை விளங்கியுள்ளார்.. 1950களில் பொதுவுடைமைத் தோழரான ப. ஜீவானந்தம் அவர்களைச் சந்தித்துள்ளார். அதனால் இவருக்கு மார்க்சியத் தத்துவத் தாக்கம் ஏற்பட்டது. தொ.மு.சி. ரகுநாதன் ஆசிரியராகவிருந்து வெளியிட்ட சாந்தி இதழில் அவரது இலக்கியத் தொடர்பு உருவானது. மேலும் அவர் சரஸ்வதி இதழில் ஆசிரியக் குழு உறுப்பினராகியதும் எழுத்தாளராக வளர உதவியது.

படைப்புகள்
நாவல்
ஒரு புளியமரத்தின் கதை (1966)
ஜே.ஜே. சில குறிப்புகள் (1981)
குழந்தைகள் பெண்கள் ஆண்கள் (1998)
சிறுகதைகள்
சுந்தர ராமசாமி சிறுகதைகள் முழு தொகுப்பு (2006)
விமர்சனம்/கட்டுரைகள்/மற்றவை
ந.பிச்சமூர்த்தியின் கலை: மரபும் மனிதநேயமும் (1991)
ஆளுமைகள் மதிப்பீடுகள் (2004)
காற்றில் கரைந்த பேரோசை
விரிவும் ஆழமும் தேடி
தமிழகத்தில் கல்வி: வே.வசந்தி தேவியுடன் ஒர் உரையாடல் (2000)
இறந்த காலம் பெற்ற உயிர்
இதம் தந்த வரிகள் (2002)
இவை என் உரைகள் (2003)
வானகமே இளவெயிலே மரச்செறிவே (2004)
வாழ்க சந்தேகங்கள் (2004)
புதுமைப்பித்தன்: மரபை மீறும் ஆவேசம்(2006)
புதுமைப்பித்தன் கதைகள் சுரா குறிப்பேடு (2005)
மூன்று நாடகங்கள் (2006)
வாழும் கணங்கள் (2005)
கவிதை
சுந்தர ராமசாமி கவிதைகள் முழு தொகுப்பு (2005)
மொழிபெயர்ப்பு
செம்மீன் - தகழி சங்கரப்பிள்ளை (1962)
தோட்டியின் மகன்(புதினம்) - தகழி சங்கரப்பிள்ளை (2000)
தொலைவிலிருக்கும் கவிதைகள்(2004)
நினைவோடைகள்
க.நா.சுப்ரமண்யம் (2003)
சி.சு. செல்லப்பா (2003)
கிருஷ்ணன் நம்பி (2003)
ஜீவா (2003)
பிரமிள் (2005)
ஜி.நாகராஜன் (2006)
தி.ஜானகிராமன் (2006)
கு.அழகிரிசாமி .
சிறுகதைகள் பட்டியல்
சிறுகதைகள் இதழ் வர
1.முதலும் முடிவும்
புதுமைப்பித்தன் மலர் 1951
2.தண்ணீர் சாந்தி 1953
3.அக்கரை சீமையில் சாந்தி 1953
4.பொறுக்கி வர்க்கம் சாந்தி 1953
5.உணவும் உணர்வும் 1955
6.கோவில் காளையும் உழவு மாடும்
சாந்தி 1955
7.கைக்குழந்தை சரஸ்வதி 1957
8.அகம் சரஸ்வதி 1957
9.அடைக்கலம் சரஸ்வதி 1958
10.செங்கமலமும் ஒரு சோப்பும் சரஸ்வதி 1958
11.பிரசாதம் சரஸ்வதி 1958
12.சன்னல் சரஸ்வதி 1958
13.லவ்வு சரஸ்வதி 1958
14.ஸ்டாம்பு ஆல்பம் சரஸ்வதி 1958
15.கிடாரி சரஸ்வதி ஆண்டு மலர் 1959
16.சீதைமார்க் சீயக்காய்த்தூள்
தாமரை பொங்கல் மலர் 1959
17.ஒன்றும் புரியவில்லை
கல்கி தீபாவளி மலர் 1960
18.வாழ்வும் வசந்தமும் நவசக்தி வார இதழ் 1960
19.ரயில் தண்டவாளத்தில் ஓடும்
கல்கி தீபாவளி மலர் 1961
20.மெய்க்காதல் கல்கி 1961
21.மெய்+பொய்=மெய் எழுத்து 1962
22.எங்கள் டீச்சர் கல்கி தீபாவளி மலர் 1962
23.பக்த துளசி இலக்கிய வட்டம் 1964
24.ஒரு நாய், ஒரு சிறுவன், ஒரு பாம்பு
இலக்கிய வட்டம் 1964
25.தயக்கம் சுதேசமித்திரன் தீபாவளி மலர் 1964
26.லீலை கல்கி 1964
27.தற்கொலை கதிர் 1965
28.முட்டைக்காரி தீபம் 1965
29.திரைகள் ஆயிரம் தீபம் ஆண்டுமலர் 1966
30.இல்லாத ஒன்று
கல்கி வெள்ளிவிழா ஆண்டுமலர்
1966
31.காலிப்பெட்டி உமா
32.அழைப்பு ஞானரதம் 1973
33.போதை சதங்கை 1973
34.பல்லக்குத் தூக்கிகள் ஞானரதம் 1973
35.வாசனை ஞானரதம் 1973
36.அலைகள் கொல்லிப்பாவை 1976
37.ரத்னாபாயின் ஆங்கிலம் அக் 1976
38.குரங்குகள் யாத்ரா 1978
39.ஓவியம் யாத்ரா 1979
40.பள்ளம் சுவடு 1979
41.கொந்தளிப்பு மீட்சி 1985
42.ஆத்மாராம் சோயித்ராம் 1985
43.மீறல் இனி 1986
44.இரண்டு முகங்கள் வீடு 1986
45.வழி கொல்லிப்பாவை 1986
46.கோலம் கொல்லிப்பாவை 1987
47.பக்கத்தில் வந்த அப்பா புதுயுகம் 1987
48.எதிர்கொள்ளல் காலச்சுவடு 1988
49.காணாமல் போனது காலச்சுவடு 1989
50.விகாசம் இந்தியா டுடே 1990
51.காகங்கள் காலச்சுவடு ஆண்டுமலர் 1991
52.மேல்பார்வை
இந்திய டுடே இலக்கிய ஆண்டுமலர்
1994-
53.பட்டுவாடா காலச்சுவடு 1995
54.நாடார் சார் தினமணி பொங்கல் மலர் 1996
55.நெருக்கடி சதங்கை 1996
56.இருக்கைகள் காலச்சுவடு 1997
57.டால்ஸ்டாய் தாத்தாவின் கதை
தினமணி தீபாவளி மலர் 1999
58.மயில் ஆனந்த விகடன் பவழவிழா மலர் 2002
59.பையை வைத்துவிட்டு போன மாமி
2003
60.தனுவும் நிஷாவும் காலம் 2004
61.களிப்பு 2004
62.நண்பர் ஜி.எம் காலச்சுவடு 2004
63.ஒரு ஸ்டோரியின் கதை
காலச்சுவடு 2004
64.கூடி வந்த கணங்கள் 2004
65.கதவுகளும் ஜன்னல்களும் புதியபார்வை 2004
66.மறியா தாமுவுக்கு எழுதிய கடிதம்
2004
67.அந்த ஐந்து நிமிடங்கள் 2004
68.ஈசல்கள் 2004
69.கிட்னி 2004
70.பிள்ளை கெடுத்தாள் விளை
காலச்சுவடு 2005
71.கொசு, மூட்டை, பேன் புதியபார்வை 2005
72.ஜகதி காலம் 2005
சுந்தர ராமசாமி பெற்ற விருதுகள்
இவர் கீழ்வரும் விருதுகளைப் பெற்றார். [2]
குமரன் ஆசான் நினைவு விருது
இயல்விருது தமிழ் இலக்கியத் தோட்டம் 2001இல் வாழ்நாள் சாதனைக்காகப் பெற்றார். [3]
கதா சூடாமணி விருது (2004) [1]
சுந்தர ராமசாமி பெயரிலான விருதுகள்
தமிழ்க் கணிமைக்கான விருது
தமிழ்க் கணிமை, தகவல் நுட்பம் துறைகளுக்கான பங்களிப்புகளைக் கௌரவிக்கும் முகமாக சுந்தர ராமசாமி தமிழ்க் கணிமை விருது ஆண்டு தோறும் வழங்கப்படுகிறது. கனடாவின்
தமிழ் இலக்கியத் தோட்டம் அமைப்பினால் நிர்வகிக்கப்படும் இந்த விருது காலச்சுவடு அறக்கட்டளையின் பணவுதவியுடன் வழங்கப்படுகிறது. இலக்கியத் தோட்டம் நடத்தும் வருடாந்திர இயல் விருது வழங்கும் விழாவில் இவ்விருதைப் பெறுபவருக்கு ஆயிரம் கனேடிய டாலர்களும் விருதுப் பட்டயமும் வழங்கப்படும். இவ்விருதைப் பெறுபவர் சுயேச்சையான பன்னாட்டு நடுவர் குழுவால் தெரிந்தெடுக்கப்படுகிறார்.
இளம் படைப்பாளர் விருது
சுந்தர ராமசாமி நினைவாக ஆண்டுதோறும் இளம் படைப்பாளி ஒருவருக்கு நெய்தல் இலக்கிய அமைப்பு சுந்தர ராமசாமி விருது அளித்து வருகிறது. இலக்கியத்தின் ஏதேனும் ஒரு வகைமையிலோ ஒன்றுக்கு மேற்பட்ட வகைமைகளிலோ முக்கியமான பங்களித்து வரும் இளம் படைப்பாளி ஒருவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. நாற்பது வயதுக்கு உட்பட்டவர்கள் இவ்விருதுக்குப் பரிசீலிக்கப்படுவார்கள். படைப்புத் துறையில் தொடர்ந்து தீவிரமாக இயங்கிவருபவர்களாக அவர்கள் இருப்பது அவசியம். விருதில் பாராட்டுப் பத்திரமும், பத்தாயிரம் ரூபாய் ரொக்கப்பரிசும் அடங்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக