சனி, 14 அக்டோபர், 2017

சீரடி சாய்பாபா (Shirdi Sai Baba, நினைவு தினம் அக்டோபர் 15, 1918.


சீரடி சாய்பாபா (Shirdi Sai Baba, நினைவு தினம்  அக்டோபர் 15, 1918.

சீரடி சாய்பாபா (Shirdi Sai Baba, செப்டம்பர் 28, 1838.  அக்டோபர் 15, 1918), ( மராட்டி :
शिर्डीचे श्री साईबाबा, உருது : ﺷﺮﺩﯼ ﺳﺎﺋﯿﮟ ﺑﺎﺑﺎ ),மகாராட்டிரத்தில் அகமது நகர் மாவட்டத்தில்
சீரடியில் வசித்திருந்த ஓர் இந்திய குரு, யோகி மற்றும் சுஃபி துறவி. இவரை
இந்துக்களும் இசுலாமியரும் புனித சாமியாராக போற்றுகின்றனர். இந்துக்கள் இவரை கடவுள் தத்தாத்திரேயரின்
அவதாரமாகக் கருதுகின்றனர். இசுலாமியர் பிர் ( உருது : ﭘﯿﺮ ) அல்லது
குதுப் ஆக நம்புகின்றனர். சீரடியில் இவர் சமாதி அடைந்த இடம் தற்போது பல்லாயிரக்கணக்கானவர் தொழும் புண்ணியத் தலமாக விளங்குகிறது.
ஒருமுறை நீதிமன்ற ஆணையர் அவரது வயதைக் கேட்டபோது லட்சக்கணக்கான வருடங்கள் என்று சாய் பாபா தெரிவித்திருந்தார்.பக்தர்கள் பலர் திரட்டிய தகவல்களில் இருந்து சாய் பாபாவின் அவதார தினம் 1838 செப்டம்பர் 28 என தெரியவந்தது.

இந்து முஸ்லீம் சிநேகம் வளர்த்தது
பல்வேறு அற்புதங்கள் நிகழ்த்திய இவர், இந்து முஸ்லீம்களிடையே சிநேகத்தை வளர்த்தவர். மசூதியில் வேற்றுமை பாராட்டாமல் நுழைந்து இந்துக்களை இவரை வழிபட வைத்தது போலவே, மசூதியை மலர்களால் அலங்கரிக்க விரும்பிய முஸ்லீம் பக்தரை அந்த மலர்களை அருகிலிருந்த கோவிலில் உள்ள ஆஞ்சநேயருக்கு அர்ச்சனை செய்ய பணித்தது என்று பல நிகழ்வுகளில் இந்துக்களும் முஸ்லீம்களும் நண்பர்களாக விளங்க வேண்டும் என்ற தமது உன்னத எண்ணத்தை செயல்படுத்தியவர்.


சீரடி சாயி பாபா, 20 ஆம் நுற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்த ஓர் இந்திய குரு ஆவார். இதுவரை இந்தியாவில் பிறந்த மிகச்சிறந்த துறவிகளில் இவரும் ஒருவர். இவரை இந்துக்களும், இஸ்லாமியர்களும் புனித துறவியாகவும் போற்றுகின்றனர். தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு பல அற்புதங்களை நிகழ்திக்காட்டினார். நோயுள்ளவர்களை குணப்படுத்தினார். இதனால், இந்துக்கள் இவரை ‘கடவுளின் அவதாரம்’ என்று கருதி, தெய்வமாக வழிபட்டு வருகின்றனர். இஸ்லாமியர்கள் இவரை, ‘பிர் அல்லது குதுப்’ ஆக நம்புகின்றனர். உலகமெங்கும் இருந்து பக்தர்கள் அவர் வாழ்ந்து மறைந்த ஸ்தலத்தை வணங்கி தரிசிக்க, அவர் பிறந்த இடமான சீரிடிக்கு வருகைப் புரிந்த வண்ணம் உள்ளனர். தன்னுடைய வாழ்நாள் முழுவதும் துறவியாகவே வாழ்ந்து மறைந்த புனித சீரடி சாய் பாபா அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் சிறப்புகளை விரிவாகக் காண்போம்.
பிறப்பு: செப்டம்பர் 28, 1838
இடம்: சீரடி, அகமது நகர் மாவட்டம், மகாராஸ்டிரா மாநிலம், இந்தியா
பணி: இந்திய குரு
இறப்பு: செப்டம்பர் 20, 1928
நாட்டுரிமை: இந்தியன்
பிறப்பு பற்றிய தகவல்
சீரடி சாய் பாபா என்றழைக்கப்படும் “சாய் பாபா” அவர்கள் இந்தியாவின் மகாராஸ்டிரா மாநிலம் அகமது நகர் மாவட்டதிலுள்ள “சீரடி” என்ற இடத்தில் பிறந்தார். இவருடைய பிறப்பு மற்றும் ஆரம்ப வாழ்க்கை பற்றிய உண்மையான தகவல்கள் ஏதும் கிடைக்காததால், இன்றுவரையும் அவருடைய பிறப்பு பற்றிய விவரங்கள் மர்மமாகவே உள்ளது. ஆனால், அவர் இந்து மதம் சார்ந்த பெற்றோருக்கு பிறந்ததாகவும், பிறகு ஒரு முஸ்லிம் குடும்பத்தில் வளர்ந்ததாகவும் கூறப்படுகிறது.
ஒரு மகானாக சீரடி சாயி பாபா
அவருக்குப் பதினாறு வயது இருக்கும் பொழுது, ஒரு வேப்பமரத்தடியில் முதல் முதலாக தியானத்தில் ஈடுபட்டிருந்தபொழுது, ஒரு மகானாக காட்சியளித்ததாக கூறப்படுகிறது. பின்னர், அவரை நாடிவந்த மக்களுக்கு சிறந்த ஆன்மீகத் தத்துவங்களை எடுத்துக்கூற தொடங்கினார். அவரை தரிசிக்க அதிகளவில் மக்கள் வர ஆரம்பித்தனர். மேலும், தன்னிடம் ‘உடல் நிலை சரியில்லை’ என்று வருபவர்களுக்கு ஆசி வழங்கி அவர்களுடைய நோயைக் குணப்படுத்தினார். அவருடைய ஆன்மீக போதனைகள், இந்து மற்றும் இஸ்லாமியர்கள் மட்டுமல்லாமல், அனைத்துத்தரப்பு மக்களையும் கவர்ந்தது. அதுமட்டுமல்லாமல், அவருடைய போதனைகளும், தத்துவங்களும், கூற்றுகளும் பொதுமக்கள் எளிதில் புரிந்துக்கொள்ளும் அளவிற்கு மிக எளிமையான மொழியில் இருந்தது. அவருடைய புகழ், இந்தியா முழுவதும் பரவத் துவங்கியது.
இறப்பு
இருபதாம் நூற்றாண்டில் இந்தியா முழுவதும் பரவலாக அறியப்பட்ட ‘முதல் அவதாரப் புருஷர்’ எனப் போற்றப்பட்ட சீரடி சாய் பாபா அவர்கள், 1918 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15 ஆம் நாள் இந்த உலக வாழ்க்கையை விட்டு நீங்கினார். இன்று அவர் இல்லாவிட்டாலும், சீரடியில் அவர் சமாதியான இடம் தற்பொழுது பல்லாயிரக்கணக்கானவர் புனிதமாக வணங்கும் புண்ணியத் தலமாக விளங்குகிறது.
நான் தான் செய்கிறேன்
எல்லாச் செயல்புரியும் சக்திகளையும் சாயி பாதங்களில் சமர்ப்பித்துவிடுங்கள். பிறகு அவர் ஆணையிட்ட ரீதியிலேயே செயல்படுங்கள். சாயி சர்வசக்தியும் நிறைந்தவரென்பதை அறிந்துகொள்ளுங்கள். பாரத்தை அவர்மீது போட்டுவிட்டு அபிமானம் கொள்ளாது செயல் புரியுங்கள்; எல்லா சித்திகளையும் பெறுவீர்கள்.
மாறாக, மிகச் சிறிய அளவில் அபிமானம் ஒட்டிகொண்டிருந்து, ‘நான்தான் செய்கிறேன்’ என்று நினைத்தால் ஒரு கணமும் தாமதமில்லாது உடனே அதனுடைய விளைவு தெரியும்.
புறச்சம்பிரதாயங்களை லட்சியம் செய்வதில்லை.
அன்புடனும் பக்தியுடனும் அளிக்கப்படும் எத்தகைய சிறிய பொருளையும், பாராட்டுதல்களுடன் பாபா ஏற்றுக்கொள்வார். ஆனால் அதுவே பெருமையுடனும்,இறுமாப்புடனும் அளிக்கப்பட்டால், ஏற்றுக் கொள்ள மறுத்து விடுவார். வெறும் புறச் சம்பிரதாயங்களை, அவர் பெருமளவு லட்சியம் செய்வதில்லை. அடக்கவொடுக்கத்துடனும், பணிவான உணர்வுடனும், ஒன்று சமர்பிக்கப்படுமானால் அதை அவர் வரவேற்று, பேரார்வத்துடனும், மகிழ்ச்சியுடனும் ஏற்றுக் கொண்டார்.- ஸ்ரீ சாய் சத்சரித்திரம்.


இதயப்பூர்வமான சரணாகதி
பாபாவிடம் இதயப்பூர்வமான சரணாகதி அடைதலே துயரங்களின் பிடிகளிலிருந்து விடுபடுவதற்கு மிகச்சிறந்த வழியாகும். வெறும் உடலை மட்டும் பாபாவிடம் இருத்துவதால் லாபம் என்னவாக இருக்க முடியும்? சிந்தனையும் பாபாவை பற்றியதாக இருக்க வேண்டும். அப்போது சுகம் உண்டாகும்.
நீ எங்கிருந்தாலும் உன்னுடனேயே நான் இருக்கிறேன்
ஒரு குரு பெளர்ணமி தினம். என் குருவான உபாசினி மகராஜ் ஷிர்டியை விட்டு கரக்பூருக்கு போவதற்கு முன் அது. சாயி பாபா என்னிடம் பூஜை சாமான்களையும், நைவேத்தியத்தையும் எடுத்துச் சென்று மகராஜுக்கு பூஜை செய்யும் படி பணித்தார். பாபாவின் ஆணை எனக் கூறி மகராஜை நான் பூஜை செய்யத் தொடங்கினேன். மகராஜ் என்னைத் தடுக்கவில்லை. ஆனால் அந்த தினத்திற்கு பிறகு நான் மகராஜை ஒரு போதும் பூஜை செய்யவில்லை. அவரிடம் என்னகுள்ளது ஒரு குருபந்துவினிடம் இருக்க வேண்டிய எண்ணமே. ஷிர்டி மக்கள் பலரைப் போல் நான் அவரிடம் வெறுப்பு காட்டவில்லை. சாயிபாபா அடிக்கடி சொல்வார்; “நாம் யாரிடமும் வெறுப்பு கொள்ளக்கூடாது; பொறாமை, விரோதம், எதிர்ப்பு, சண்டைபோடும் மனோபாவம் ஆகியவை தவிர்க்கப்படவேண்டும்.” ஆனால் உபாசினி மகராஜிடம் என் மனோபாவத்தை அவரும் மற்றவர்களும் தவறாகப் புரிந்து கொண்டு விட்டனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவருடைய பஞ்சகன்யா நிறுவனத்தில் கொண்டு வரப்பட்ட சில மாற்றங்களில் உதவும் நோக்கத்துடன் நான் சகோரிக்குச் சென்றேன். ஆனால், என் எண்ணம் அவருக்கு எதிராக இருக்குமெனக் கருதி, மனம் விட்டு தனியாக அவரிடம் பேசக்கூட அவர் அனுமதிக்கவில்லை. நான் திருபினேன்.
என்னிடமும் என் குடும்பத்திடமும் சாயிபாபா காட்டிய பிரிவு 1918-ல் அவர் இறப்பதற்கு முன் மட்டுமின்றி பின்னரும் வெளியாயிற்று.
1918-ம் ஆண்டு தசராவுக்கு முன்று மாதங்களுக்கு முன்பு தாம் உடலை விட்டபிறகும் என் நல்வாழ்வைப் பற்றி எண்ணியிருந்தார். “பாய்!(அவர் என்னை அப்படித்தான் அழைப்பார்) நீ என்னைக் காண இனி இங்கே வந்து சிரமப் பட வேண்டாம். நீ எங்கிருந்தாலும், உன்னுடனேயே நான் இருக்கிறேன்” என அவர் என்னிடம் உறுதி அளித்தார். (இதைச் சொல்லும்போது அந்த அம்மையாரின் கண்களில் நீர் பெருகியது) – சந்திர பாய். ஷிர்டி சாய்பாபாவின் பக்தர் அனுபவங்கள்.
அமைதியாக அமர்ந்திரு
அமைதியாக அமர்ந்திரு. நான் உனக்கு தேவையானதை செய்வேன். நான் உன்னைக் குறிக்கோளை அடையச் செய்வேன். – ஷீரடி சாய்பாபா
நானேதான் என்னிடம் வரவழைக்கிறேன்
ஒருமுறை பக்தர் ஒருவர், உலக ஆதாய நன்மையை நாடி பாபாவிடம் மக்கள் போவதை ஆட்சேபித்தபோது, பாபா “ஒருபோதும் அப்படி சொல்லாதே. எனது மக்கள் முதலில் அதற்காகத்தான் என்னை நாடி வருகிறார்கள். தமது ஆசைகள் நிறைவேறி, வாழ்க்கையில் சவுகரியத்தை அடைந்த பிறகு, அவர்கள் என்னை பின்பற்றி ஆத்மீகத் துறையிலும் முன்னேறுகிறார்கள். என்னைச் சேர்ந்தவர்களை தொலை தூரத்தில் இருந்தெல்லாம் பல்வேறுவித முகாந்திரமாக இங்கே வரவழைக்கிறேன். நானேதான் அவர்களை என்னிடம் வரவழைக்கிறேன். அவர்கள் தம் இச்சைப்படி தாமே வருவதில்லை. நான் அவர்களை என்னிடம் இழுத்துக்கொள்கிறேன்” என்றார். இச்சொற்கள் இன்றும் பலித்து வருகின்றன.
அனைத்து வியாதிகளும் குணப்படுத்தப்படும்
என்னுடைய கதைகள், உபதேசங்கள் இவைகளைக் கேட்போருக்கு நான் பணிவிடை செய்வேன். செய்வது மட்டுமல்ல, அவர்கள் ஆசைகளையும் பூர்த்தி செய்வேன். என்னுடைய கதைகள் வெறுமனே கேட்கப்பட்டால் கூட அவர்களது அனைத்து வியாதிகளும் குணப்படுத்தப்படும். என்னுடைய பக்தர்களை எக்கணமும் அச்சுறுத்துகின்ற ஆபத்துக்களின் கோரப்பற்களிலிருந்து நான் வெளியே இழுத்துவிடுவேன். – ஸ்ரீ ஷீரடி சாயிபாபா


சிறிதளவும் அஞ்சாதீர்
நீர் உமது கடமையைச் செய்யும். சிறிதளவும் அஞ்சாதீர். என் மொழிகளில் நம்பிக்கை வையும். என்னுடைய லீலைகளை நினைவில் கொள். நான் உன்னுடைய ஆசைகளைப் பூர்த்தி செய்து உன்னுடைய பக்தியை அதிகப்படுத்துவேன். – ஸ்ரீ ஷீரடி சாய்பாபா[ஸ்ரீ சாய்  சத்சரித்திரம்]
ஆராய்ச்சிக்கு அப்பாற்ப்பட்டவை
“இந்த ஜகத்தில் நான் ஒருவனே இருக்கின்றேன்; என்னைத்
தவிர வேறெதுவும் இல்லை. இப்பூவுலகம் மாத்திரமல்லாது
மூன்று உலகங்களிலும் நான், நான் மாத்திரமே இருக்கின்றேன்.”
-ஷிர்டி சாய்பாபா.
பாபாவின் லீலைகள் சூக்குமமானவை; ஆராய்ச்சிக்கு அப்பாற்ப்பட்டவை. யாரால் அவற்றைக் கற்பனை செய்ய முடியும்? எல்லாரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திவிடுகின்றன! வேறெதையும் நாடாமல் சாயியின் பாதங்களில் எவர் சிரம் தாழ்த்துகிறாரோ அவர், தம்மைக் காக்கும் தெய்வமும் அபயமளிப்பவரும் நன்மையைச் செய்பவரும் தீமையை அழிப்பவரும் ஒரே அடைக்கலமும் சாயியே என்று உணர்ந்துகொள்வார்.
என்னையே தியானி
மன சாந்தி இல்லாத என்ற ஒரு அங்குல இடம் கூட இவ்வுலகில் எங்கும் கிடையாது. உன் பாரத்தை என் மேல் வை. என் மீது உன் பார்வையை திருப்பு. என்னையே தியானி, நிச்சயமாய் நான் உனக்கு சாந்தியை அளிப்பேன்.- ஷிர்டி ஸ்ரீ  சாய்பாபா
துவாரகாமாயி
ஸ்ரீ சாய்பாபா ஷீரடிக்கு வந்த ஆரம்ப காலத்தில், அவருக்குப் பின்புறம் நீண்டு தொங்கும் முடி இருந்தது. பச்சை நிறத்தில் நீண்ட அங்கியும், தலையில் முதலில் ஒரு குல்லாயும், அதன்மேல் காவி நிறத்தில் தொப்பியும் அணிந்திருந்தார். அவர்தம் கையில் ஒரு தண்டத்தையும் புகைக்குழாய், தீப்பெட்டி ஆகியவற்றையும் வைத்திருப்பார். அவர் பிச்சையெடுத்து உண்டு வந்தார்.
ஷீரடிக்கு வந்த நாலைந்து மாதங்களுக்குப்பின், பாபா வெள்ளை அங்கியும், வெண்மையான தலை உடைகளையும் அணியத்தொடங்கினார். இரண்டாவதுமுறை ஷீரடிக்கு வந்த பிறகும் கூட, பாபா சிறிதுகாலம் வேப்பமரத்தடியிலேயே வாழ்ந்ததாகத் தோன்றுகிறது. ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சியின் காரணமாகத்தான், அவர் தமது வாசத்தைக் கிராமத்திலுள்ள ஒரு பழைய பாழடைந்த மசூதிக்கு மாற்றிக் கொண்டார்.
மசூதிக்கு ( துவாரகாமாயி ) மாறியது.
ஒருமுறை ஷீரடியிலும் அதன் சுற்றுப் புறங்களிலும் அடைமழை பெய்தது. அதன் பெரும்பகுதி வெள்ளக் காடாகிவிட்டது. நீண்ட நேரத்துக்குப்பின் பாபாவின் ஆரம்பகால பக்தர்கள் சிலர், வீடற்ற பக்கீரின் ஞாபகம் வந்தவர்களாய், அவர் இந்த மலையிலிருந்து எங்கு ஒதிங்கியுள்ளார் என்று காண விரும்பினார்கள். மஹல்சபதியும் மற்றும் சிலரும் வேப்ப மரத்துக்கு விரைந்தனர். அங்கே சாயிபாபா அதே மரத்தடியில் பாதி சாய்ந்தவராகக் சமாதி நிலையில் இருப்பதைக் கண்டு செயலற்றுப் போயினர். அவர் மேல் தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது. எல்லாவிதமான குப்பைகூளங்களும் அவர் உடல்மேல் சேர்ந்திருந்தன. அவரை அந்த நிலையிலிருந்து எழுப்ப அவர்களுக்குத் துணிவிருக்கவில்லை. அவர்கள் காத்துக் காத்துப் பார்த்துப் பின் சற்று நேரத்துக்குப்பின் வரலாமென்றெண்ணித் திரும்பச் சென்றனர். சில மணி நேரத்துக்குப் பின், தண்ணீர் முழுதும் வடிந்தபின் அவர்கள் வந்து பார்த்தபோது, அவர் இன்னும் ஈரத் தரையிலேயே கிடப்பதைக் கண்டனர். அவரது உடலும் முகமும் முற்றிலும் மண்ணால் மூடப்பட்டிருந்தன. தமக்குத் துன்பங்கள் வந்துற்றபோது தமது ஒரே பாதுகாப்பாளராகவும், வழிகாட்டியாகவும் இருந்த அவரை ஒரேயடியாகக் கவனிக்காமல் இருந்துவிட்டதைக் குறித்து, அவர்கள் குற்ற உணர்வு அடைந்தனர். பின்னர் அவர் சாதாரண உணர்வு நிலைக்குத் திரும்பியவுடன் அந்த பக்தர்கள், அவரைக் கிராமத்திலுள்ள ஒரு சிறிய பழுதடைந்த மன்கட்டிடமான மசூதியில் தங்குமாறு செய்தனர். சாயிபாபா ஒரு முஸ்லீம் ஆகையால், அவர் ஜானகிதாஸ், தேவிதாஸ் போன்ற மற்ற மகான்களைப் போல் இந்துக்களின் கோவில்களில் தங்குவது சரியல்ல என்று கிராமத்தின் இந்துக்கள் கருதியே இவ்வாறு செய்திருப்பார் போலும். அப்போதிலிருந்து அவர் மசூதியில் சிறிது நேரமும், வெப்ப மரத்தடியில் சிறிது நேரமும் இருப்பார். பின் சிறிது காலத்தில் அவர் மசூதியையே தமது முக்கிய, முழுநேர இருப்பிடமாக்கிக் கொண்டார்.



சீரடி சாய்பாபா வாழ்க்கை வரலாறு

 இந்த வரலாறு மிக மிக சுருக்கப்பட்ட ஒன்றாகும். இது சீரடி சாய்பாபாவின் ஒரு அறிமுகம் மட்டுமே. சீரடி சாய்பாபாவின் முழு வரலாறு படித்தால் மட்டுமே அவரின் வாழ்வையும். அவரின் அற்புதங்களையும் ஓரளவாவது புரிந்து கொள்ளமுடியும்.
"
மகாராஷ்டிரா மாநிலத்தில் கோதாவரி நதிக்கரையில் இருக்கும் சீரடி எனும் அந்த கிராமத்தில் ஒரு பழமையான மசூதி ஒன்று இருந்தது. அந்த மசூதியின் பின்புறம் ஒரு வேம்பு மரம் ஒன்றும் இருந்தது. அந்த வேப்பமரத்தின் அடியில் ஒரு எட்டு வயதுச் சிறுவன் அமர்ந்து தியானம் செய்து கொண்டிருந்தான்.
அந்த சிறுவனின் முகத்தில் தெய்வீக ஒளி வட்டம் ஒன்றிருப்பதைக் கண்ட அந்த கிராமத்துத் தலைவரின் மனைவி பாஜ்யாபாய் அந்த சிறுவனைக் கண்டு தன் வீட்டுக்கு வரும்படி அழைத்தாள்.ஆனால் அந்த சிறுவன் அவருடன் வீட்டுக்குச் செல்ல மறுத்து அந்த இடத்திலேயே தியானம் செய்வதிலேயே ஆர்வம் கொண்டான்.அந்தச் சிறுவன் தன்னுடன் வர மறுத்தாலும் அந்தச் சிறுவனிடம் ஏற்பட்ட பாசத்தால் அவனுக்குத் தினமும் உணவு கொண்டு வந்து கொடுப்பதாகவும் அதை மறுக்காமல் வாங்கிச் சாப்பிட வெண்டுமென்றும் அவர் கேட்டுக் கொண்டார்.அதற்கு அந்தச் சிறுவனும் சம்மதித்தான்
அந்தத் தாயும் சிறுவனுக்குத் தினசரி உணவு கொண்டு வந்து கொடுத்தாள். அந்தச் சிறுவனும் அதை வாங்கிச் சாப்பிட்டுக் கொள்வான். அவர்களுக்கிடையே தாய்- மகன் பாசம் மேலிட்டது.அந்த வேப்பமரத்தின் அருகிலிருந்த கந்தோபா எனும் கோவிலின் பூசாரி அந்தச் சிறுவனிடம் இருந்த தெய்வீக ஒளியைக் கண்டு அந்தச் சிறுவனை “சாய்” என்று அழைக்கத் துவங்கினார்.
சில காலத்திற்குப் பிறகு அந்தச் சிறுவன் அந்த ஊரை விட்டு வெளியேறினான். ஊர் ஊராக அலைந்து திரிந்த அந்தச் சிறுவன் அங்கிருந்த கோவில்களில் எல்லாம் வணங்கி வழிபாடு செய்தான்.இப்படி அலைந்து கொண்டிருந்த சிறுவன் சாந்து பாட்டீல் எனும் வியாபாரியைச் சந்தித்தான். அந்தச் சிறுவனின் தெய்வீகத் தன்மையைக் கண்டு வியந்த அவர் தனது மகள் திருமணத்தில் கலந்து கொள்ள வேண்டுமென்று வற்புறுத்தினார்.சிறுவனும் கலந்து கொள்வதாக உறுதியளித்தான்.
அந்தச் சிறுவன் அந்த வியாபாரியின் மகள் திருமணத்திற்காக அந்த வியாபாரியின் குடும்பத்தினருடன் சீரடிக்கு மீண்டும் வந்தான்.அப்போது அந்த சிறுவனுக்கு வயது பதினாறு ஆகியிருந்தது.சீரடிக்குத் திரும்பிய அந்தச் சிறுவன் தான் முன்பு அமர்ந்திருந்த அந்த வேப்பமரத்தடியைத் தேடிச் சென்று அமர்ந்தான்.கந்தோபா கோயில் பூசாரிக்கு வேப்பமரத்தடியில் முன்பு தியானம் செய்து கொண்டிருந்த அந்தச் சிறுவன் மீண்டும் திரும்பி வந்திருப்பதை அறிந்து கொண்டார்.அந்தச் சிறுவன் அந்த வேப்பமரத்தடியை விட்டு வேறு இடத்தில் அமர மறுப்பதைக் கண்ட அந்த ஊர் மக்கள் அது பற்றி அவனிடமே கேட்டார்கள்.

அதற்கு அந்தச் சிறுவன் இந்த வேப்பமரம்தான் தனது குரு என்று பதில் அளித்தான்.பின் அந்த மரத்தினடியில் ஒரு இடத்தைக் காட்டி அந்த இடத்தைத் தோண்டச் சொன்னான்.அங்கு சிறிது ஆழம் தோண்டியதும் உள்ளே ஒரு சிறு அறையில் ஒரு விளக்கு எரிந்து கொண்டிருந்தது.இதைப் பார்த்ததும் அந்த ஊர் மக்கள் வியந்து போனார்கள். அந்தச் சிறுவனைக் கடவுளின் அவதாரமாகக் கருதினார்கள். கடவுளைப் போன்று பூஜிக்கத் துவங்கினார்கள்.
அன்றிலிருந்து அந்தச் சிறுவன் அற்புதங்கள் நிகழ்த்தத் துவங்கினான்.அந்தச் சிறுவன் கோவில் பூசாரி அழைத்த சாய் என்பதுடன் மக்கள் பாபா என்பதையும் சேர்த்து “சாய்பாபா” என்று அழைக்கத் துவங்கினார்கள்.இதுதான் சீரடி சாய்பாபா குறித்த வரலாறு.
இந்த சீரடி சாய்பாபா அந்த ஊரில் பல அற்புதமான செயல்களைச் செய்து மக்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியதுடன் அவரை அனைவரையும் நேசிக்கவும் வைத்தார்.இவரின் அற்புதங்கள் அந்த ஊரை விட்டு அடுத்த ஊர்களிலும் பரவியது. அவரைத் தேடி பல இடங்களிலிருந்தும் மக்கள் வரத் துவங்கினார்கள். அவரும் அனைவரது கவலைகளுக்கும் வடிகாலாக பல அற்புதங்களைச் செய்து காண்பித்து மகிழ்ச்சியடையச் செய்தார்.
அவர் வேப்பமரத்தடியில் அமர்ந்து கிருஷ்ண பரமாத்மாவை வழிபட்டு வந்தார் என்றாலும் இசுலாமிய வழிபாட்டுத் தலமான மசூதியில் தங்கிக் கொண்டு அவர்களுடைய நம்பிக்கைக்கும் உரியவரானார். இதனால் இரு மதத்தினருக்கும் அவர்கள் மத அடிப்படையிலான நன்மைகளை எடுத்துச் சொல்லி மத வேற்றுமைகளைத் தவிர்த்தார். இதனால் இவரிடம் இரு மதத்திலிருப்போரும் ஈடுபாடு கொண்டனர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
இப்படி பல அற்புதங்கள் பல நிகழ்த்திய சாய்பாபாவிற்கு வக்கீல் தொழில் புரியும் பட் என்பவர் அறிமுகமானார். அவர் சாய்பாபா மீது அளவில்லாத நம்பிக்கை வைத்திருந்தார். சாய்பாபா அவரிடம் தான் சமாதி அடைவதற்காக தனிவீடு ஒன்று கட்டித் தரும்படி சொல்ல அவரும் அப்படியே வீடு ஒன்று கட்டித் தந்தார். சாய்பாபா அந்த வீட்டில் அப்துல் என்ற ஏழையை தனக்கு சேவை செய்வதற்காக தன்னுடன் வைத்துக் கொண்டார். 1918 ஆம் ஆண்டில் அக்டோபர் மாதம் 15 ஆம் தேதியன்று சாய்பாபா சமாதி அடைந்தார்.
இன்றும் மக்கள் நம்பிக்கையோடு இங்கு வந்து சீரடிசாய்பாபாவை தரிசனம் செய்து செல்கிறார்கள். ஆந்திர மாநிலத்திலிருக்கும் திருமலை திருப்பதி கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கைக்கு அடுத்தபடியாக இந்த சீரடி சாய்பாபாவின் தலத்திற்கு வருபவர்கள் இருக்கிறார்கள் என்பது இங்கே குறிப்பிடத்தக்க ஒன்று.



சீரடி ... பகவான் சாய்பாபா சூட்சும ரூபத்தில் இருந்து அருளாசி செய்யும் தெய்விகத்தலம். இங்குள்ள ஒவ்வோர் இடமும் தரிசித்து வணங்க வேண்டிய இடங்களே. இங்குள்ள ஒவ்வோர் அடி மண்ணும் பாபாவின் திருவடி ஸ்பரிசத்தால் மகிமை பெற்றுத் திகழ்கிறது. இந்த இடங்களைச் சுற்றியே சாயிநாதரின் லீலைகள் நடைபெற்றன.
சீரடியில் பாபாவின் சமாதி மந்திர், அவர் வசித்த துவாரகாமாயி, சாவடி, குருஸ்தான், லெண்டித் தோட்டம், மகல்சாபதி இல்லம் என்று பல இடங்களை பக்தர்கள் தரிசித்து வருகின்றனர். இந்த இடங்களின் மகத்துவம் என்ன, இந்த இடங்களுக்கும் பாபாவுக்கும் உள்ள தொடர்பு என்ன என்பது பற்றி இங்கே காணலாம்.
சமாதி மந்திர், துவாரகமாயி, சாவடி, குருஸ்தான், லெண்டித் தோட்டம், மகல்சபாதி இல்லம் எனப் பல இடங்கள் பக்கதர்களால் தினம்தோறும் தரிசிக்கப்பட்டு வருகிறது. இந்த இடங்களின் பெருமைகள் என்ன? ஏன் தரிசிக்க வேண்டும் என்ற விவரங்களை இங்கு காண்போம்.
துவாரகாமாயியை அடுத்து சுமார் 50 அடி தூரத்தில் சாவடி உள்ளது. சாவடி என்றால் மக்கள் கூடிப் பேசும் பொது இடம். அந்நாளில் யாத்திரீகர்கள் தங்கிச் செல்லவும் இந்தச் சாவடி பயன்பட்டது. இரண்டு அறைகள், ஒரு வராண்டா கொண்ட சிறு அமைப்பை கொண்டது சாவடி. மிகவும் சிறிய இடமான சாவடி எப்படி புனிதத்துவம் பெற்றது என்றால், சாயிநாதரின் அருளால்தான் என்றே சொல்லலாம்.
சாய்பாபா தங்கியிருந்த மசூதி பாழடைந்து மழைக்காலத்தில் தங்கவே முடியாத நிலையில் இருந்தது. அப்போது அவரது பக்தர்கள் மசூதியை விட்டு வெளியே வந்து சாவடியில் வந்துதான் தங்கச் சொல்வார்கள். ஆனால் ஆரம்பத்தில் பாபா அங்கு வர சம்மதிக்கவில்லை. பின்னர் சாவடி சென்று அங்கும் தங்க ஆரம்பித்தார். இதனால்தான் சாவடி துவாரகமாயி மசூதிக்கு இணையான புகழை அடைந்தது. இன்று பளிங்கு மாளிகையாக இருக்கும் இந்த சாவடி அந்த நாளில் பாபாவின் திருவடி பட்டு பலரது நோய்நொடிகளை தீர்த்த புனித மண்ணைக் கொண்டிருந்தது. இங்கு இன்றும் சாய்பாபா பயன்படுத்திய நாற்காலி, சக்கர நாற்காலி, பலகை, பல்லக்கு, விசிறி போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. சாய்பகவானின் உடல் வைக்கப்பட்டிருந்த பலகையும், இங்குதான் வைக்கப்பட்டிருந்தது. பின்னரே அருங்காட்சியகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.சாவடியில் சாய்பாபா படுத்து இருந்த அறைக்குள் மட்டும் பெண்கள் செல்வதில்லை. பாபா உறங்கிய அறையில்தான் பூஜைகளும், வழிபாடும் செய்யப்படுகிறது.
சுமார் 20 ஆண்டுகள் இரவு வேளையில் சாயிநாதர் துவாரகாமாயியில் இருந்து சாவடிக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். பாபா சாவடிக்குச் செல்லும் நிகழ்ச்சியானது ஒரு பெரிய வைபவம் போலவே ஆர்ப்பாட்ட, அலங்கார அணிவகுப்பாக நடைபெறும். தினசரித் திருவிழா என்றே சொல்லலாம். முதலில் பாபா இதற்குச் சம்மதிக்கவில்லை என்றாலும், பக்தர்களின் வற்புறுத்தலுக்காக சம்மதித்தார். இப்போதும் வியாழக்கிழமைகளில் பாபாவின் திருவுருவம் துவாரகாமாயியில் இருந்து சாவடிக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லும் நிகழ்ச்சி நடைபெறுகின்றது.பாபாவின் அருள் நிறைந்த இடங்களுள் சாவடி முக்கியமானது. அடுத்ததாக சீரடியில் முக்கியத்துவம் பெற்ற மற்றோர் இடத்தை தரிசிப்போம்.


சீரடி சாய்பாபாவின் 9 வார விரதம்

சீரடி சாய் பாபா பக்தர்கள் தாங்கள் நினைத்த காரியம் நிறைவேற பாபாவை வேண்டிக் கொண்டு ஒன்பது வியாழக்கிழமை சாயி விரதம் இருப்பார்கள். சாயின் 9 வியாழக்கிழமை விரதம் குறித்த விதி முறைகள்.
விரதத்தை எந்த ஒரு வியாழக்கிழமையானாலும் சாயி நாமத்தை எண்ணி ஆரம்பிக்கலாம். இந்த விரதம் ஆண்,பெண்,குழந்தைகள் யார் வேண்டுமானாலும் இருக்கலாம்.
எந்த காரியதிற்காக ஆரம்பிக்கிறோமோ,அதை தூய மனதில் சாயி பாபாவை எண்ணி பிரார்தித்துக் கொள்ள வேண்டும். காலை அல்லது மாலை சாயி பாபாவின் போட்டோவிற்கு பூஜை செய்ய வேண்டும்.
இந்த விரதத்தை திரவியஆகாரங்கள்(பால்,டீ,காபி,பழங்கள்,இனிப்புகள்) உட்கொண்டு செய்யவும். அப்படி நாள் முழுவதும் செய்யமுடியாதவர்கள் ஏதாவது ஒரு வேளை(மதியமோ,இரவோ) உணவு அருந்தலாம். நாள் முழுவதும் பட்டினியாக இந்த விரதம் செய்யவே கூடாது.
ஓரு தூய ஆசனத்தில் அல்லது பலகையில் மஞ்சல் துணியை விரித்து சாயி பாபா படத்தை வைத்து தூய நீரால் துடைத்து சந்தனம் குங்குமம் வைத்து திலகம் இட வேண்டும்.
மஞ்சள் நிறமலர்கள் மாலை சாயிபாபா படத்திற்கு அணிவித்து, தீபம், ஊதுபத்தி ஏற்றி , பிரசாதம் (பழங்கள், இனிப்புகள், கற்கண்டு எதுவானாலும்) நைவேத்தியம் வைத்து படைத்து, சாயி பாபாவை ஸ்மரணை செய்யவும்.
முடிந்தால் சாயிபாபாவின் கோவிலுக்குச் செல்லலாம். வீட்டிலேயே சாயி பாபாவுக்கு 9 வாரங்கள் பூஜை செய்யவும் சாயி விரத கதை, சாயி பாமாலை, சாயி பவானி இவற்றை பக்தியுடன் படிக்கவும். வெளியூர் செல்வதானாலும் இந்த விரதம் கடைபிடிக்கலாம்.
விரதத்தின் ஒன்பது வாரங்களில் பெண்களுக்கு மாத விலக்கு அல்லது இன்ன பிற காரணங்களாலே விரதம் செய்ய முடியவில்லை எனில், அந்த வியாழக்கிழமை கணக்கில் எடுத்து கொள்ளாமல் இன்னொருவியாழக்கிழமை விரதம் இருந்து 9 வியாழக்கிழமைகள் நிறைவு செய்யவும்
விரத நிறைவு விதிமுறைகள்
ஒன்பதாவது வியாழக் கிழமை ஐந்து ஏழைகளுக்கு உணவு அளிக்கவும். நேராக உணவு அளிக்க முடியாதவர்கள் யார் மூலமாகவும் பணமோ,உணவுப் பொருளோ கொடுத்து ஏற்பாடு செய்யவும்.
சாயிபாபாவின் மஹிமை மற்றும் விரதத்தை பரப்புவதற்காக 9ஆவது வியாழக் கிழமை இந்த சாயி விரத புத்தகங்l நம்முடைய வீட்டிற்கு அருகில் வசிப்பவர்,சொந்த பந்தம் தெரிந்தவர் என்று இலவசமாக விநியோகிக்கவும்( 5 அல்லது11அல்லது 21 என்ற எண்ணிக்கையில்). விநியோகிக்கும் அன்று பூஜையில் வைத்த பிறகு விநியோகிக்கவும்.இதனால் புத்தகத்தை பெறும் பக்தர்களின் விருப்பங்களும் நிறைவேறும்
மேற்கூறிய விதிமுறைகளின்படி விரதமும்,விரத நிறைவும் செய்தால் நிச்சயமாக எண்ணிய காரியம் நிறைவேறும் என்பது நம்பிக்கை.


ஸ்ரீ ஷீரடி சாய் பாபாவின் மந்திரங்கள்

'சாய்பாபா..' இந்த மந்திரச்சொல்லின் 'சாய்' என்ற சொல்லுக்கு, 'சாட்சாத் கடவுள்.' என்ற அர்த்தமாம். இந்துக்கள் இவரை கடவுள் தத்தாத்திரேயரின் அவதாரமாகக் கருதுகின்றனர். சீரடியில் இவர் சமாதி அடைந்த இடம் தற்போது பல்லாயிரக்கணக்கானவர் தொழும் புண்ணியத் தலமாக விளங்குகிறது. 1. ஸ்ரீ ஷீரடி சாய் பாபா காயத்ரி மந்திரம்:
ஓம் ஷிர்டி வாசாய வித்மஹே
சச்சிதானந்தாய தீமஹி
தன்னோ சாய் ப்ரசோதயாத்.
தினமும் 11அல்லது 33 அல்லது 108 அல்லது 1008 முறை பாராயணம் செய்ய வேண்டும்.
2. ஷீரடி சாயி பாபாவின் த்யான ஸ்லோகம்:
பத்ரி க்ராம ஸமத் புதம்
த்வாரகா மாயீ வாசினம்
பக்தா பீஷ்டம் இதம் தேவம்
ஸாயி நாதம் நமாமி.
3. ஷீரடி சாயி பாபாவின் மூல மந்திரம்:
"ஓம் ஸாயி ஸ்ரீ ஸாயி ஜெய ஜெய ஸாயி".
4. ஸ்ரீ ஷீரடி சாய் பாபா தியானச்செய்யுள்:
சாயிநாதர் திருவடி
ஸாயி நாதர் திருவடியே
ஸம்பத் தளிக்கும் திருவடியே
நேயம் மிகுந்த திருவடியே
நினைத்த தளிக்கும் திருவடியே
தெய்வ பாபா திருவடியே
தீரம் அளிக்கும் திருவடியே
உயர்வை யளிக்கும் திருவடியே.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக