திங்கள், 9 அக்டோபர், 2017

உலக அஞ்சல் தினம் ( World Post Day ) அக்டோபர் 9



உலக அஞ்சல் தினம் ( World Post Day ) அக்டோபர் 9 

உலக அஞ்சல் தினம் ( World Post Day ) அக்டோபர் 9 இல் சர்வதேச ரீதியில் நினைவு கொள்ளப்படுகிறது. [1] அக்டோபர் 9 , 1874 இல் சுவிட்சர்லாந்திலுள்ள பேர்ன் நகரில் சர்வதேச அஞ்சல் ஒன்றியம் நிறுவப்பட்ட தினமே சர்வதேச அஞ்சல் தினமாகக் கொள்ளப்படுகிறது. மொத்தம் 150 மேற்பட்ட நாடுகளில் இந்த தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. 1969 ஆம் ஆண்டு ஜப்பான் டோக்கியோவில் நடந்த அனைத்துலக அஞ்சல் ஒன்றிய கூட்டத்தில் இந்த தினம் குறித்து முடிவெடுத்து கடைபிடிக்கப்படுகிறது.

உலக அஞ்சல் தினப் பிரகடனம்..

உலகின் பல்வேறு நாடுகளுக்கும் உரிய புவியியல், அரசியல், மதம் போன்ற பல்வேறு எல்லைகளையும், தடைகளையும் தாண்டி எமது மக்களை முழு உலகுக்கும் இணைக்கின்றோம். மக்கள் அவர்களுக்குரிய பிரத்தியேகமானதும், மிகப் பெறுமதி வாய்ந்ததுமான தகவல்களையும், பொருட்களையும் எம்மிடம் ஒப்படைப்பது, அவற்றைப் பாதுகாத்து மிக வேகமாகவும் மிகக் கவனத்துடனும் அதன் உரிமையாளர்களுக்கு ஒப்படைப்பார்கள் என்ற எம்மீதுள்ள பெரு நம்பிக்கை என்பதை நாம் அறிந்துள்ளதோடு அவர்கள் எம்மீது வைத்துள்ள நம்பிக்கையை உயர் செயற் திறமையுடனும், நேர்மையுடனும், பாதுகாப்புடனும் இரகசியத் தன்மையைப் பேணி அவர்களுடைய தகவல்களையும், பொருட்களையும், உரிமைகளையும் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும், நேற்றைய தினத்தை விட நன்றாக இன்றைய தினத்திலும், இன்றைய தினத்தை விட நன்றாக நாளைய தினத்திலும் திறமையான சேவையை மக்களுக்கு வழங்குவதற்கு அர்ப்பணத்துடன் செயற்படுவோம்.
உலகில் முதலிடம்

உலகிலேயே அதிக தபால் நிலையங்களை கொண்ட நாடாக இந்தியாவுள்ளது,
இந்திய அஞ்சல் துறை 1764ல் துவக்கப்பட்டது. தற்போது நாடு முழுவதும் ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 333 தபால் நிலையங்கள் செயல்படுகின்றன. இதில் 89 சதவீதம் கிராமங்களில் உள்ளன. இந்தியா முழுவதும் 22 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. 5 லட்சத்துக்கு மேற்பட்ட ஊழியர்கள் இத்துறையில் பணிபுரிகின்றனர்.



சாமான்ய மக்களின் சகோதரன்:இன்று உலக தபால் தினம்-

நாம் இன்று இ-மெயில், இன்டர்நெட், பேக்ஸ், மொபைல் என்று நவீன தொழில்நுட்ப உலகில் வாழ்கிறோம். பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களின் வரவால் உலகம் சுருங்கி விட்டது. இதன் காரணமாக உலகம் முழுவதும் நேரடியாகவே (லைவ்) கருத்துக்கள், புகைப்படங்கள், வீடியோ, ஆடியோ பரிமாறப்படுகிறது. ஆனால் அன்று இத்தகைய வசதி கிடையாது. ஒரு தகவலை மற்றவருக்கு தெரிவிக்க வேண்டுமெனில் தபால் மூலமே தெரிவிக்கப்பட்டது.
தபால் துறையின் மகத்துவம் பற்றி, இன்றைய தலைமுறையினர் தெரிந்து கொள்ள வேண்டும். தற்போது தபால் எழுதும் பழக்கம் இல்லாததால், சுயமாக எழுதும் பழக்கமும் இளைஞர்களிடம் குறைந்து வருகிறது. இருப்பினும் இன்றும் லட்சக்கணக்கான மக்களின் தினசரி வாழ்க்கையில் தபால் துறை ஏதாவது ஒரு வழியில் முக்கிய பங்கு வகிக்கிறது. அலுவல் ரீதியான கடிதங்கள் உள்ளிட்டவற்றைக் கொண்டு சேர்க்கும் பொறுப்பு இன்றும் தபால் துறை வசமே உள்ளது.
உலக தபால் அமைப்பு 1874ம் ஆண்டு சுவிட்சர்லாந்து தலைநகர் பெர்ன் நகரில் தொடங்கப்பட்டது. 1969ல் இதை நினைவுபடுத்தும் விதமாக அக்.,9, உலக தபால் தினமாக அறிவிக்கப்பட்டது. உலக தபால் அமைப்பில், இந்தியா உள்ளிட்ட 150 நாடுகள் உள்ளன. தபால் துறையின் சேவைகளை பாராட்டும் விதமாகவும், தபால் துறையின் திட்டங்கள் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும் அக்.,9ம் தேதி, உலக தபால் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்தியாவில் தபால் வாரமாக (அக்.,9 -- 15) கடைப்பிடிக்கப்படுகிறது.

உலகில் முதலிடம்:

இந்திய தபால் துறை 1764ல் துவக்கப்பட்டது. சுதந்திரம் பெற்ற தொடக்கத்தில் 23 ஆயிரம் தபால் நிலையங்கள் மட்டுமே இருந்தன. தற்போது நாடு முழுவதும் ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 333 தபால் நிலையங்கள் செயல்படுகின்றன. இதில் 89 சதவீதம் கிராமங்களில் உள்ளன. 12 ஆயிரம் தபால் நிலையங்கள் கம்ப்யூட்டர் மையமாக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் 22 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. உலகிலேயே அதிக தபால் நிலையங்கள் கொண்டதாக இந்திய தபால் துறை திகழ்கிறது. 5 லட்சத்துக்கு மேற்பட்ட ஊழியர்கள் இத்துறையில் பணிபுரிகின்றனர்.
ஈடு தர முடியுமா:
ஸ்டாம்ப் விற்பனை, பதிவு தபால், விரைவு தபால், இ- போஸ்ட், மணி ஆர்டர், பார்சல் சர்வீஸ், சேமிப்பு கணக்குகள் போன்ற பணிகளை தபால் துறை செய்கிறது.


உலக தபால் தினம்!

உலக தபால் தினம் அக்டோபர் 9 ஆம் தேதி சர்வதேச ரீதியில் கொண்டாடப்படுகிறது. இது முதன் முதலில் 09.10.1874-ல் சுவிட்சர்லாந்தின் பெர்ன் நகரில் சர்வதேச தபால் ஒன்றியம் (Universal Postal Union) ஸ்தாபிக்கப்பட்டது. இதை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதம் 9-ம் தேதி உலக தபால் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
தபால்துறை என்பது மற்ற எல்லாத் துறைகளையும் விட சிறப்பான தொன்றாகும். இது மனித வாழ்வின் அங்கமாக தற்பொழுதும் விளங்கிக் கொண்டிருக்கிறது. அறிவியல் கருவிகள் கண்டுபிடிப்பதற்கு முன் செய்திக் கருவியாய் விளங்கியது நம் தபால் துறை தான். ஆரம்ப காலத்தில் ஒருவர் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செய்திகளை அனுப்பப் பயன்பட்டது கடிதங்கள். அவை வெறும் காகிதங்கள் மட்டும் அல்ல. சில கடிதங்கள் காவியமாகவும், வரலாறாகவும் ஆகியுள்ளன!


உலகின் முதல்தர விளையாட்டுப் போட்டி ஒலிம்பிக் போட்டி கூட கடிதப் பரிமாற்றத்தில் ஏற்ப்பட ஒரு விளைவின் ஞாபகார்த்தமாகவே ஆரம்பிக்கப்பட்டது என்று வரலாறு சான்று கூறுகின்றது. உத்தியோகப்பூர்வமான தகவல் பரிமாற்றங்களுக்கு இன்றும் தபால் முறை அவசியமாகின்றது.
ஆரம்ப காலத்தில் தபால்களைப் போடுவதற்கு தபால்பெட்டிகள் பயன்படுத்தப்படவில்லை. கடிதங்களைக் கொண்டு செல்பவர்களே கடிதங்களைப் பெற்றும் வந்தனர். 1653 ஆம் ஆண்டு லாங்குவிலே (Longueville) மாகாண மின்ஷ்டர் பாகுட் (Minister Fouget) என்ற தபால் அதிபரின் மனைவியின் யோசனையின் பேரில்தால் தபால்பெட்டி அறிமுகப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. தபால்பெட்டிக்கு மாதிரி வடிவத்தை சார்லஸ் ரீவ்ஸ் என்பவர் அமைத்துக் கொடுத்தார். சிவப்பு வண்ணத்தில் தபால்பெட்டிகன் வைக்கப்பட்டதன் காரணம் மக்களின் பார்வையை உடனடியாக ஈர்க்கும் சக்தி கொண்டதால் ஆகும்.
இன்றளவும் நம் உலகம் அறிவியல் ரீதியாக வளர்ந்து தான் வருகின்றது. அவ்வாறிருக்கு இந்திய தபால் துறை மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட நடைமுறைகள் பலருக்கும் தெரியாமல் இருக்கிறது. அதில் ஒன்று தான் ‘My Stamp’ (மை ஸ்டாம்ப்). இது என்னவென்றால் நம் புகைப்படங்களையே நாம் அஞ்சல் தலைகளாக பெறும் முறை ஆகும். இதற்கு ஆகும் செலவு ரூ.300. இதனை முறையாக தபால் துறையில் விண்ணப்பித்து ரூ.300-க்கு பணிரெண்டு தபால் தலைகளைத் பெறலாம். இவை அனைத்து வயதினருக்கும் பொருந்தும். நம் புகைப்படங்களையே அஞ்சல் தலையாக பார்க்கும் இந்த நடைமுறை மகிழ்ச்சிக்குரியதாகும். இதை நாம் ஒரு பரிசாகவும் பிறகுக்கு அளிக்கலாம்.
தபால் துறையில் எத்தனையோ நலத்திட்டங்கள் உள்ளன. தபால் துறையில் மக்களின் பயன்பாடு குறைந்து கொண்டே வரும் இவ்வேளையில், அத்துறையையும் நாம் பயன்படுத்தி மகிழ்வதோடு மட்டுமல்லாமல், மக்களாகிய நாம் தபால் துறையைப்பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்துவோமாக!



சாமான்ய மக்களின் சகோதரன்... அக்டோபர் 9 உலக தபால் தினம்...

உலக தபால் தினம் ஆண்டுதோறும் அக்டோபர் 9ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. தபால் சேவையென்பது இன்றைய மனித வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்றாகும். உலகில் மிக வேகமாக வளர்ந்து வரும் துறைகளில் தொலைதொடர்பு துறையும் ஒன்றாகும். ஆரம்ப காலத்தில் மனிதன் தொலைவில் உள்ளவர்களுடன் பரிமாறி கொள்ள புறாக்களை பயன்படுத்தினான். ஊருக்கு ஊர் முரசு அடித்து அறிவிப்பு செய்த காலங்கள் மாறி இன்று நொடிப்பொழுதில் தொடர்பு கொள்ள வைக்கும் மின்னஞ்சல், குறுஞ்செய்திப்பரிமாற்றம் (வாட்ஸ் ஆப்) வரை தகவல் தொடர்புத்துறை வியத்தகு மாற்றம் அடைந்துள்ளது.

நவீன காலத்தில் தகவல் தொழில்நுட்பம் எவ்வளவோ முன்னேறிய போதிலும்கூட தகவல் பரிமாற்றங்களுக்கு தபால் சேவை மிகவும இன்றியமையாத ஒன்றாக இன்றும் காணப்படுகிறது. ஆரம்ப காலங்களில் தபால் நிலையங்கள் கடிதப் பரிமாற்றங்களுடன் தபால் சேவைகளுடன் இணைந்த வகையில் தந்தி சேவைகள், தொலைபேசி சேவைகள் ஆகியவற்றை முக்கியமாக கொண்டிருந்தன. ஆனால், இன்றைய காலத்தில் தபால் நிலையங்கள் முடங்கிவிட்டன.
தபால் பெட்டிகள் அதிகபட்சம் ஐந்தேகால் அடி உயரத்தையும், குறைந்தபட்சம் நான்கடி உயரத்தையும் கொண்டவையாகவே வடிவமைக்கப்பட்டன. 1852ல் அமெரிக்காவில் செவ்வக வளைவு கொண்ட தபால் பெட்டிகள் வைக்கப்பட்டன. அதன்பின்னர் 1855ல் குர்னெசி மாகாணத்தில் 3 தபால்பெட்டிகளும், லண்டனில் 6 தபால் பெட்டிகளும் வைக்கப்பட்டன. இதில் லண்டனில் வைக்கப்பட்ட தபால் பெட்டிகள் பொதுமக்களின் கவனத்தை மிகவும் ஈர்த்தன. சிவப்பு வண்ணம் மக்களது பார்வையை உடனடியாக ஈர்க்கும் சக்தி கொண்டதால் தபால் பெட்டிகளுக்கு சிவப்பு வர்ணம் பூசலாம் என அறிவுறுத்தப்பட்டது. பச்சை நிற தபால் பெட்டிகளும் பின்னர் அறிமுகமாயின. ஆனால், அவை மிகக் குறைந்த எண்ணிக்கையில் உள்நாட்டு தபால்களை போடுவதற்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தன.
தற்போது உலகில் ஏறத்தாழ 6 லட்சத்து 70,000 நிரந்தர அஞ்சல் அலுவலகங்கள் இயங்குவதாக கணக்கிடப்பட்டுள்ளது. இவற்றில் ஆறு மில்லியன் பேர் வரையில் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். அத்துடன், சர்வதேச ரீதியில் 4 லட்சத்து 30,000 மில்லியன் தபால் பொருட்கள் வருடந்தோறும் கையாளப்படுகின்றன.
இந்தியாவில் தபால் குறியீடு எண் ஆறு எண்களை கொண்டிருக்கும். உதாரணமாக 6060000. இலங்கையிலும் தற்போது தபால் குறியீட்டு எண் பயன்படுத்தப்படுகின்றது. இது ஐந்து இலக்கங்களைக் கொண்டதாகும். இலங்கையில் முதல் எண் மாகாண இலக்கமாகும். ஒவ்வொரு தபால் நிலையத்திற்கும் துணை தபால் நிலையங்களுக்கும் இலக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


உலக அஞ்சல் தினம் -அக்டோபர் 9

உலக அஞ்சல் தினம் ஒக்டோபர் 09ஆம் திகதி சர்வதேச ரீதியில் அனுஷ்டிக்கப்படுகின்றது. 1874ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 09ஆம் திகதி சுவிற்சர்லாந்தின் பேர்ன் நகரில் சர்வதேச அஞ்சல் ஒன்றியம் தாபிக்கப்பட்ட தினமே சர்வதேச அஞ்சல் தினமாக கொள்ளப்படுகிறது


சர்வதேச ரீதியில் தரமான அஞ்சற்சேவையினை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு "சர்வதேச அஞ்சல் ஒன்றியம்" அமைக்கப்பட்டது. இதன் எண்ணக்கரு யாதெனில் 1863 இல் ஐக்கிய அமெரிக்காவில் அஞ்சல் அதிபர் நாயகமாகவும் ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கனின் மந்திரி சபையின் உறுப்பினராகவும் விளங்கிய மொன்கெமேரி பிளேயரின் எண்ணத்தில் உதித்ததன் பலனாக பாரிஸ் நகரில் கூட்டப்பட்ட மாநாட்டில் ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளைச் சேர்ந்த பதினைந்து பிரதிநிதிகள் சந்தித்து பரஸ்பர நம்பிக்கையுடன் கூடிய பொதுவான அமைப்பினை ஏற்படுத்துவதற்கு இணக்கம் கண்டனர். இதன் பின் ஜேர்மன் நாட்டின் அஞ்சல் பணிப்பாளர் நாயகத்தின் பெரு முயற்சியினால் 1874 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் ஒன்பதாம் திகதி சுவிற்சலாந்து நாட்டின் பேர்ன் நகரில் கூட்டப்பட்ட மாநாட்டில் இருபத்திரண்டு நாடுகளின் பிரதிநிதிகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு "அஞ்சல் பொது ஒன்றியம்' உருவாக்கப்பட்டது. இப்பெயரானது 1878 இல் நடைபெற்ற இரண்டாவது மாநாட்டில் "சர்வதேச அஞ்சல் ஒன்றியம்" (Universal Postal Union) எனப் பெயர் மாற்றம் பெற்றது.


இதனைத் தொடர்ந்து ஆண்டு தோறும் ஒக்டோபர் மாதம் 09ஆம் திகதி உலக அஞ்சல் தினமாக பிரகடனம் செய்யப்பட்டு அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

உலக அஞ்சல் தின பிரகடனம்
"உலகின் பல்வேறு நாடுகளுக்கே உரிய புவியியல், அரசியல், மதம் போன்ற பல்வேறு எல்லை மற்றும் தடைகளைத் தாண்டி எமது மக்களை முழு உலகுக்கும் இணைக்கின்றோம். மக்கள் அவர்களுக்குரிய பிரத்தியேகமானதும் மிகப் பெறுமதி வாய்ந்ததுமான தகவல்களையும் பொருட்களையும் எம்மிடம் ஒப்படைப்பது. அவற்றைப் பாதுகாத்து மிக வேகமாகவும் மிகக் கவனத்துடனும் அதன் உரிமையாளர்களுக்கு ஒப்படைப்பார்கள் என்ற எம்மீதுள்ள பெரு நம்பிக்கை என்பதை நாம் அறிந்துள்ளதோடு அவர்கள் எம்மீது வைத்துள்ள நம்பிக்கையை உயர் செயற்றிறமையுடனும் நேர்மையுடனும் பாதுகாப்புடனும் இரகசியத் தன்மையைப் பேணி அவர்களுடைய தகவல்களையும் பொருட்களையும் உரிமைகளையும் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் நேற்றைய தினத்தை விட நன்றாக இன்றைய தினத்திலும் இன்றைய தினத்தை விட நன்றாக நாளைய தினத்திலும் திறமையான சேவையை மக்களுக்கு வழங்குவதற்கு அர்ப்பணத்துடன் செயற்படுவதாக" என்பதாகும்


சில அஞ்சல் செய்திகள்

- அஞ்சல் அட்டையை முதன் முதலில் அறிமுகப்படுத்திய நாடு ஆஸ்திரியா.
- ஆசியாவில் முதன்முதலில் தபால் தலை வெளியிட்ட நாடு இந்தியா.
- இந்திய தபால் தினம் அக்டோபர் 10ம் தேதி.
- உலக தபால் தினம் அக்டோபர் 9ம் தேதி கொண்டாடப்படுகிறது.
- கடிதங்களில் பின்கோடு இடும் முறை இந்தியாவில் 1972ம் ஆண்டு அறிமுகப்படுத்தப் பட்டது.

- இலங்கையில் தபால் முத்திரை ஆறிமுகம் - 1857 ஆம் ஆண்டு
- இலங்கையில் தந்திச் சேவை ஆரம்பம் - 1858 ஆம் ஆண்டு
- இலங்கையில் தபால்களின் நிறைக்கு கட்டணம் அறவிடும் முறை ஆரம்பம் - 1858 ஆம் ஆண்டு
- இலங்கையில் அஞ்சல் சேவை தனியார்துறையுடன் இணைக்கப்பட்டது - 1982 ஆம் ஆண்டு .




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக