திங்கள், 9 அக்டோபர், 2017

உலக மனநல நாள் ( World Mental Health Day ) அக்டோபர் 10 .


உலக மனநல நாள் ( World Mental Health Day )  அக்டோபர் 10 .

உலக மனநல நாள் ( World Mental Health Day ) ஆண்டுதோறும் அக்டோபர் 10 அன்று உலகளாவிய மனநலக் கல்வி,விழிப்புணர்வு மற்றும் சமூக மனப்பான்மைக்கு எதிராக வாதிடும் நாளாகக் கடைப்பிடிக்கப்படுகின்றது.  இந்நாள் முதன் முதலாக 1992 ஆம் ஆண்டில் உலக மனநல மையத்தின் முன்னெடுப்பில் கொண்டாடப்பட்டது. இவ்வமைப்பில் 150 இற்கும் மேற்பட்ட நாடுகள் உறுப்புரிமை வகிக்கின்றன. ஆத்திரேலியா போன்ற சில நாடுகளில் இந்நாள் மனநல வாரமாக ஒரு கிழமைக்கு கொண்டாடப்படுகிறது.

கருப்பொருட்கள்

1994 -ல் இருந்து ஆண்டு தோறும் குறுப்பிட்ட கருப்பொருளில் இந்நாள் கடைபிடிக்கபடுகிறது.
ஆண்டு கருப்பொருள்
2017 பணியிடங்களில் மனநலம்
2016 உளவியல் முதலுதவி
2015 மனநலத்தில் கண்ணியம்
2014 மனப்பித்துடன் வாழ்தல்.



மனநல நாள் உணர்த்தும் பாடம்.
உலக மனநல நாள் (World Mental Health Day) அக்டோபர் மாதம்10 ஆம் தேதி உலகம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டது.
மனித சமூகத்தில் பெருகி வரும் மனரீதியான பாதிப்புகள் அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த மனநல நாள் கடைபிடிக்கப்படுகிறது.
அறிவியலின் வளர்ச்சி, தொழில் நுட்பப் புரட்சி, புதிய கண்டுபிடிப்புகள், மின்னணு பொருட்களின் பெருக்கம் போன்றவைகள் மனித வாழ்வில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி மனிதனின் மனதிலும் அவனது சிந்தனையிலும் அவனால் கட்டுப்படுத்த இயலாத மாற்றங்களை நிகழ்த்துகின்றன.
வாழ்வில் சுயத்தை மறந்து வெளிக் கவர்ச்சியை நோக்கி நகர்ந்த எல்லா சமூகத்திலும், நாடுகளிலும் இந்த பாதிப்புகள் அதிகம் உள்ளன. குறிப்பாக இந்திய மக்களிடையே பெருகி வரும் மனரீதியான பாதிப்புகள் மிகுந்த வேதனை அளிக்கின்றது.
பெண்கள், குழந்தைகள், முதியவர்கள், ஏழை, பணக்காரன் என்று யாரையுமே விட்டு வைக்கவில்லை இந்த மன அழுத்தம் என்ற இடர்பாடு.


மனித உள்ளங்கள் இப்படி பலகீனமாகிப் போய் பலவிதமான பாதிப்புகளை சந்திப்பதற்கு அடிப்படையான காரணம் நமது கல்வி முறையும், நம் மீது திணிக்கப்படுகின்ற மேலை நாட்டு வாழ்க்கை முறையும்தான்.
இந்தியாவில் பெருகி வரும் தற்கொலைகள் குறித்து ஆய்வு செய்தாலே மனநல பாதிப்புகளின் வேகம் எந்த அளவிற்கு உள்ளது என்று தெரிந்து விடும். அதற்கான காரணமும் புரிந்து விடும்.
உலகில் ஒரு ஆண்டிற்கு 8 இலட்சம் மக்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர். உள்ளத்தின் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகவில்லை என்பதற்காக ஒவ்வொரு 40 வினாடிகளுக்கு ஒருவர் உயிரை மாய்த்துக் கொள்கிறார். இதில் இந்தியாவின் பங்கு 21விழுக்காடு. அதிலும் தற்கொலை செய்து கொள்பவர்களில் 44 விழுக்காட்டினர் இளைஞர்களே! அதில் 80 விழுக்காட்டினர் படித்தவர்களே! என்ற புள்ளி விவரம் மூலம் பூனைக்குட்டி வெளியே வருகிறது.
இந்தியாவிலேயே எழுத்தறிவு அதிகமாக உள்ள தென்னிந்திய மாநிலங்களில்தான் தற்கொலைகள் அதிகம் நடக்கின்றன. தமிழகம், கேரளா, ஆந்திரா 17 விழுக்காடும், மது ஆறாக ஓடும் புதுவை யூனியனில் 33 விழுக்காடு என்று தற்கொலைகளில் நாட்டிலேயே முதன்மை நிலை வகிக்கின்றன. கல்வியில் பின் தங்கியுள்ள வட இந்தியாவில் குறிப்பாக பீகாரில் தற்கொலை 0.1 விழுக்காடு என்ற அளவிலேயே உள்ளது. பெருநகரங்களில் நாட்டிலேயே சென்னையில்தான் தற்கொலைகள் அதிகம் நடைபெறுகிறது.
அதிக கல்வியறிவு கிடைக்கப்பெற்ற மாநிலங்கள் பெருமை பேசும் அதே நேரத்தில் அற்ப காரணங்களுக்காக உயிரை மாய்த்துக் கொள்ளபவர்களும் இங்கேதான் அதிகம் என்றால் கல்வி என்ன மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. கல்வி என்ற பெயரில் இளைய தலைமுறைக்கு நாம் எதை கற்பித்துக் கொடுக்கிறோம் என்பதை அலசிப் பார்க்க வேண்டும்.
கல்வி கற்றவர்களிடம் சொகுசு வாழ்விற்கான ஏக்கம் அதிகரித்து; கிடைப்பதில் திருப்தி கொள்ளாத மனதால் ஏக்கமும், ஏமாற்றமும் அதிகரித்து இறுதியில் தற்கொலை செய்து கொள்கின்றனர் என்று மனநல மருத்துவர்களும், ஆலோசகர்களும் கூறுகின்றனர். மனநல மருத்துவர்களுக்கும் இந்தியாவில் கடும் பற்றாக்குறை நிலவுகிறது. இந்தியாவில் மொத்தமே 4 ஆயிரம் மனநல மருத்துவர்களும் 1000 மனநல ஆலோசகர்களுமே உள்ளனர். வாழ்வில் சோதனைகள் ஏற்படும் போது அவற்றை பொறுமையாக எதிர்கொள்வது எப்படி என்பதும் போதிக்கப்படவில்லை அதேபோல எதிர்பார்ப்புகள் இல்லாமல் இயற்கையாக வாழ்வதே இனிமையான வாழ்வு என்பது போதிக்கப்படவில்லை. இப்படி வாழ்வின் எதார்த்தத்தை உணர்த்தாத கல்வியே மனநோய்கான அடிப்படைக் காரணி!
நவீன கல்வியில் வளர்ந்த நாடுகளில்தான் உலகில் அதிகமான தற்கொலைகள் நடக்கின்றன. மனச்சிதைவு, மனநலம் பாதிப்பு ஆகியவற்றால் உந்தப்பட்டு ஏற்படும் தற்கொலைகளின் உலகத்தர வரிசைப் பட்டியலில் இஸ்லாமிய நாடுகள் (கல்வியில் கடைசி இடத்தில் இருப்பது போலவே) தற்கொலைகளிலும் கடைசி இடத்தில் உள்ளன.


நலந்தானா... உடலும் உள்ளமும் நலந்தானா...: இன்று உலக மனநல நாள்

உலக மனநல தினம், 1992 முதல் அக்., 10ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. உடலால் நன்றாக இருந்து, மனதால் பாதிக்கப்பட்டுள்ள உள்ளங்களுக்கு, ஆறுதல் அளிக்க வேண்டிய தினம். மனது என்ன நினைக்கிறதோ, அதுதான் செயல் வடிவம் பெறுகிறது. ஆரோக்கியமான வாழ்வுக்கு, உடல்நலத்தைப் போல, மனநலமும் முக்கியம். உலகளவில் 35 கோடி பேர், மனநிலை பாதிக்கப்பட்டவர்களாக உள்ளனர். அனைத்து வயதினரையும் மனநலம் பாதிக்கிறது. நீண்ட கால சோகம், வேலையின்மை, ஏமாற்றம், ஏக்கம், தொடர் தோல்வி, மதுப் பழக்கம், பிடிப்பு இல்லாமை ஆகியவை மன அழுத்தம் உருவாக காரணங்கள். மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், தற்கொலைக்கும் முயற்சிக்கின்றனர். ஆண்டுதோறும் உலகம் முழுவதும், 8 லட்சம் பேர் தற்கொலை செய்கின்றனர். இவர்களில் 15 முதல் 44 வயதுக்குட்பட்டோரே அதிகம். மனநலம் பாதிக்கப்பட்டால் உடல் நலனும் பாதிக்கப்படும் என்பதை மறக்க கூடாது. மனநலம் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிப்பது, சவாலாக உள்ளது. நீண்டகால சிகிச்சை மூலமே, அதுவும் ஓரவுளக்குத்தான் இதை தீர்க்க முடியும். இந்தியாவில் மக்கள் தொகைக்கு ஏற்ப, மனநல மருத்துவர்களின் எண்ணிக்கை இல்லை. கல்லூரிகளில் மனநிலை மருத்துவப் படிப்புகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.


கருணை காட்டலாமே: மனநலம் பாதித்தவர்களை, தீண்டத்தகாதவர் போல பார்ப்பது பிரச்னையை அதிகரிக்கிறது. நகர்ப்புறங்களில் வாழ்வோர், அதிகம் படித்தவர்களிடம் இப்பழக்கம் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது. பாதிக்கப்பட்டவர்களை மதிப்பது, சிகிச்சை அளிப்பது, அவர்களுக்குரிய உரிமைகளை வழங்குவது போன்றவை கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாமல் உள்ளது. மனநோயை பேய் பிடித்திருப்பதாக நினைக்கின்றனர். இதனால் மை வைத்தல், மருந்து வைத்தல், பேய் விரட்டுதல் போன்ற சம்பவங்கள் நடக்கின்றன. இவை மூட நம்பிக்கைகள்.

பாதிக்காமல் இருக்க: மனநலம் பாதிக்காமல் இருக்க, மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். இசை கேட்பது, விளையாடுவது, நண்பர்களுடன் கலந்துரையாடுவது, உடற்பயிற்சி, யோகா, தியானம் செய்வது நல்லது. மற்றவர்களுடன் பழக வேண்டும். தனிமையை தவிர்க்க வேண்டும். உடல்நலம் பாதிக்கப்பட்டால் டாக்டரை அணுகுவது போல், மனநலம் பாதிக்கப்பட்டாலும் அணுக வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக