வெள்ளி, 23 ஆகஸ்ட், 2019

அடிமை வர்த்தகத்தையும் அதன் ஒழிப்பையும் நினைவூட்டும் பன்னாட்டு ஒழிப்பு தினம் ஆகஸ்ட் 23



அடிமை வர்த்தகத்தையும் அதன் ஒழிப்பையும் நினைவூட்டும் பன்னாட்டு ஒழிப்பு தினம் ஆகஸ்ட் 23,(International Day for the Remembrance of the Slave Trade and its Abolition, August 23 )

அடிமைகள் வியாபாரத்தையும், அது ஒழிந்த விதத்தையும் நினைவுப்படுத்தும் சர்வதேச நாள் தான், அடிமைகள் வர்த்தக ஒழிப்பு நினைவு தினம்.

இதை ஆங்கிலத்தில் International Day for the Remembrance of the Slave Trade and its Abolition, August 23 என்பார்கள்.

மனித இன வரலாற்றில் அடிமைகள் வியாபார முறையையும், அதனை ஒழிக்க மேற்கொள்ளப்பட்ட தீவிர  நடவடிக்கைகளை  பற்றியும் நினைவு கூறும் நாள்தான் இது...!

இன்று உலகம் முழுக்க சுமார் 13 கோடி சிறுவர்கள் தொழிற்சாலைகளில் வேலை பார்த்து வருகிறார்கள்.

இது அடிமை முறையின் நவீன வடிவமாக இருக்கிறது. வீட்டு பணிப்பெண்களும் இதில்தான் அடக்கம்.


#வரலாறு...

உலக அளவில் அடிமை வியாபாரத்தைப் பற்றியும், அதனை ஒழிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைப் பற்றியும் நினைவூட்டும் தினமான இது கடந்த 1998 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23 ஆம் தேதி முதல் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

கடந்த 1998 ஆம் ஆண்டு ஹைத்தி நாட்டிலும், 1999 ஆம் ஆண்டு செனகல் நாட்டிலும் இந்தத் தினத்தின் சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்தன.

இன்றைய தேதியில் ஐக்கிய நாடுகள் (ஐ.நா) சபையின் யுனெஸ்கோ அமைப்பில் அங்கம் வகிக்கும் அனைத்து நாடுகளும் அடிமைகள் வர்த்தக ஒழிப்பு நினைவு தினத்தை அனுசரித்து வருகின்றன.

#அடிமை வியாபாரத்திற்கு எதிராக கிளர்ச்சி....!

கடந்த 1791 ஆம் ஆண்டு  ஆகஸ்ட் 22 ஆம் தேதி இரவும் ஆகஸ்ட் 23 ஆம்ம் தேதியும் செயின்ட் டோமிங் என்கிற நாட்டில் (தற்போதைய ஹைத்தி) அடிமை வியாபாரத்திற்கு எதிரான கிளர்ச்சி ஏற்பட்டது.

இது கலவரமாக மாறியது. இதனால் ஏற்பட்ட மோசமான விளைவுகள் மற்றும் பாதிப்புகள் இனியும் தொடரக் கூடாது என்பதை  நினைவுப்படும் விதமாகவே இந்தத் தினம் உருவானது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக