சனி, 31 ஆகஸ்ட், 2019

தமிழ்மாமுனிவர்’ மங்கலங்கிழார் நினைவு நாள்


தமிழ்மாமுனிவர்’ மங்கலங்கிழார் நினைவு நாள் ஆகஸ்ட்31,1953.

 தமிழ்நாட்டின் எல்லையினை, “வட வேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுகம்” எனத் தொல்காப்பியம் காட்டியது. இந்திய நாட்டின் விடுதலைக்குப் பின்னர் அது ‘வடதணிகைத் தென்குமரி’ எனச் சுருங்கிப்போய்விட்டது. தமிழகத்தின் வடக்கெல்லையில் இழப்பு நேரும் சூழல் எழுந்தபோது, அறிஞர் மங்கலங்கிழார் போர்க்குணத்துடன் ஆற்றிய புகழார்ந்த செயல்கள் வரலாற்றுச் சிறப்புக் கொண்டவை; என்றென்றும் தமிழ் மக்களின் வணக்கத்துக்குரியவை!

                மொழிவகையில் தமிழராகவும், நில வகையில் தெலுங்கராகவும் வாழ்ந்த மக்கள், தமிழரென்பதையே மறக்கத் தொடங்கிய, நிலையில் சித்தூர், தணிகைப் பகுதி மக்களுக்குத் தமிழுணர்வு ஊட்டியவர் மங்கலங்கிழார்!

களுக்கு எழுத்தறிவித்தல் எல்லாவற்றையும்விட மிகச்சிறந்த அறம் என்பதை உணர்ந்து தெளிந்தார். ஆதைத் தன் வாழ்வில் நிகழ்த்திக் காட்ட முடிவு செய்து குருவப்பேட்டை என்னும் ஊரில் உள்ள மக்களுக்குத் தமிழ்ப்பாடம் நடத்தினார். அதற்காக, ‘அறநெறித் தமிழ்ச் சங்கம்’ என்றோர் அமைப்பை உருவாக்கி, தமிழ்க் கல்வியும், தமிழ்ப் பற்றும் தழைத்துச் செழித்திட, தளர்வறியாது தொண்டாற்றிய செம்மல் ஆவார். அப்பெருந்தகையை மக்கள் அன்போடும் மரியாதையோடும் ‘தமிழ்மாமுனிவர்’ என்றே அழைத்தனர்.

                மங்கலங்கிழார், ‘வடவெல்லை’ ‘தமிழ்ப்பொழில்’ ‘தமிழ்நாடும் வடவெல்லையும்’, முதலிய ஆய்வு நூல்களையும், ‘தவமலைச் சுரங்கம்’, என்னும் சிறுவர் சிறுகதை நூலையும், ‘சகலவலாவல்லிமாலை’ க்கு உரை விளக்கமும் ‘நளவெண்பா’வுக்கு விளக்கவுரையும், மாணவர்களுக்கான ‘இலக்கண வினாவிடை‘யையும், ‘நன்னூல் உரை’ நூலையும் ஆக்கி தமிழுலகுக்கு அளித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக