ஞாயிறு, 10 டிசம்பர், 2017

உலக மலைகள் தினம் டிசம்பர் 11 .



உலக மலைகள் தினம் டிசம்பர் 11 .

பன்னாட்டு மலைகள் நாள் ( International Mountain Day) ஆண்டுதோறும் டிசம்பர் 11 ஆம் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. பன்னாட்டு மலைகள் நாளை ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு முன்னின்று நடத்து வருகிறது.
மலைகளைப் பாதுகாக்கவும், மலைப்பிரதேசங்களில் வாழும் மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தவும், மலையின் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், 2002ஆம் ஆண்டில் மலைகளின் கூட்டாளி என்கிற அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு உலகம் முழுவதும் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. இவ்வமைப்பின் முயற்சியால் 2002 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் அவை டிசம்பர் 11 ஆம் நாளை பன்னாட்டு மலைகள் நாளாக அறிவித்தது.


டிசம்பர் 11 ↔ உலக மலைகள் தினம்

உயிரினங்களின் வாழ்க்கையில் மலைகள் பிரதான வகிபாகத்தினைப் பெறுகின்றன. மலைகள், உலகத்திற்கு தேவையான தூய நீரினை அதிகபட்சமாக வழங்குவதுடன், மேலும் பல்வேறு வகையான தாவரங்களினதும், விலங்குகளினதும் பிரதான கேந்திர நிலையமாக விளங்குவதுடன், மனிதனின் வாழிடமாகவும் விளங்குகின்றன.
காலநிலை மாற்றங்கள், சுற்றுச்சூழல் மாசடைதல், வெடிப்பு நடவடிக்கைகள், ஆயுத மோதல்கள் இன்ன பிற காரணங்களினால் மலைகள் பிரதான பாதிப்பினை எதிர்நோக்குகின்றன.
இது தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்ச்சியினை ஏற்படுத்துவதற்காக வருடாந்தம் டிசம்பர் மாதம் 11ம் திகதி உலக மலைகள் தினமாகக் கொண்டாடப்படுகின்றது.


♪ உலக நிலப்பரப்பில் 27% பங்கிற்கு மலைகள் பரந்து வியாபித்துள்ள அதேவேளை உலக மக்களில் 12% பங்கானோருக்கு தேவையான வதிவிடத்தினை மலைகளே வழங்குகின்றன. ஆனால் உலகில் 50% இற்கும் அதிகமானோர் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ மலை வளங்களிலேயே தங்கியுள்ளனர்.
♪ மலை வாழ் மக்களில் 80% இற்கும்
அதிகமானோர் வறுமைக் கோட்டின் கீழேயே வாழ்கின்றனர்.
♪ உலகில் 80% இற்கும் அதிகமான தூய நீரானது மலைகளிலிருந்தே கிடைக்கின்றது.
♪ உலகில் மிக உயரமான மலைச்சிகரமானது இமய மலைத் தொடரில் அமைந்துள்ள எவரெஸ்ட் மலைச் சிகரமாகும். இதன் உயரம் கடல் மட்டத்திலிருந்து 29036 அடி (8850
மீற்றர்கள்) ஆகும்.
♪ உலகில் 7000 மீற்றருக்கும் உயரமான எல்லா மலைகளும் ஆசியாக் கண்டத்திலேயே அமைந்துள்ளன, குறிப்பாக 8000 மீற்றரிலும் உயரமான 14 மலைச் சிகரங்கள் இமய மலைத்தொடரிலேயே அமைந்துள்ளன.
♪ உலகில் மிக உயரமான மற்றும் மிகப் பெரிய மலைகளில் சில சமுத்திரங்களின் அடியில் அமைந்துள்ளன. ஹவாய் தீவில் அமைந்துள்ள "மவுனா கேய் " மலையே நீரின் கீழ் அமைந்துள்ள மிகப்பெரிய மலையாகும். பசுபிக் சமுத்திரத்தில் அமைந்துள்ள "மவுனா கேய் " மலையின்
உயரம் கடலின் அடியிலிருந்து 33474 அடி
(10203 மீற்றர்கள்) ஆகும். குறிப்பாக, "மவுனா கேய் " மலையானது கடலுக்கு மேலே 13796 அடி (4205 மீற்றர்கள்) உயரமானதாகும்.
♪ உலகில் அதிக சதவீதத்தில் மலைப் பாங்கான இடங்களினைக் கொண்டுள்ள முதல் 20 நாடுகளும் வருமாறு; அன்டோரா, லிச்ரென்ஸ்ரெய்ன், பூட்டான், லெசோதோ, தஜிகிஸ்தான், கிர்கிஸ்தான், சுவிட்சர்லாந்து, மஸிடோனியா, லெபனான், றுவாண்டா, ஆர்மேனியா, நேபாளம், ஜோர்ஜியா, பொஸ்னியா ஹெர்ஸ்சிகோவினா, லாவோ மக்கள் ஜனநாயக் குடியரசு, சுவாஸிலாந்து, துருக்கி, ஆஸ்திரியா, அல்பேனியா, ஸ்லோவேனியா.
♪ கனடாவில் அமைந்துள்ள "லோகன்"
மலையானது உலகில் பிரசித்தி பெற்ற மலைகளில் ஒன்றாகும். 19859 அடி உயரத்தினைக் கொண்ட இவ் மலை சிகரத்தினை மனிதன் அடைந்த முதல் நிகழ்வு இடம்பெற்றது 1925 ஆண்டாகும்.
♪ உலகில் மிக நீளமான(4900 மீற்றர்கள்) மலைத்தொடர் அந்தீஸ் மலைத்தொடராகும்.
♪ ஆபிரிக்க கண்டத்தில் மிக உயரமான மலை
(5895 மீற்றர்கள்) தன்சானியாவில் அமைந்துள்ள கிளிமஞ்சாரோ மலை. இது எரிமலை வகையினைச் சேர்ந்ததாகும்.
♪ இலங்கையின் மிக உயரமான மலை பீதுறுதாலகால மலை (2524 மீற்றர்கள்) ஆகும்.
♪ இந்தியாவின் மிக உயரமான மலை உத்தரா காண்டத்தில் அமைந்துள்ள நந்தா தேவி மலை (7816 மீற்றர்கள்) ஆகும். ஏனெனில் 8586
மீற்றர்கள் உயரமுடைய கன்சென்ஜுங்கா மலை இந்திய | நேபாள எல்லையில் அமைந்துள்ளது.


இன்று சர்வதேச மலைகள் தினம் கொண்டாடப்படுகிறது. ‘சமவெளி பிரதேசங்களின் தண்ணீர் தொட்டி’ என்று மலைகள் வர்ணிக்கப்படுகின்றன. மலைகளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் ‘மலைகள் தினம்’ கடைப்பிடிக்கப்படுகிறது.
2002ஆம் ஆண்டை அகில உலக மலைகள் ஆண்டு என்று ஐ.நா. சபை அறிவித்தது. அந்த ஆண்டை தொடர்ந்து 2003ஆம் ஆண்டு யுனஸ்கோ, டிசம்பர் 11ஆம் தேதியை சர்வதேச மலைகள் தினமாக அறிவித்தது. அன்று முதல், டிசம்பர் 11 சர்வதேச மலைகள் தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
நம் நாட்டில் இமயமலைக்கு அடுத்தபடியாக, மேற்கு தொடர்ச்சி மலை மிகவும் முக்கியமானவை. அதிலும் தொன்மை வாய்ந்த நீலகிரி, நம் பண்பாட்டோடு இணைந்த குறிஞ்சி நிலப்பகுதியாக காணப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளில் நீலகிரி மலைப்பகுதியில் பல்வேறு இயற்கைச் சீற்றங்களாலும், செயற்கைக் காரணங்களாலும் பாதிப்புக்கு ஆளாகி வருகிறது.
உலகளவில் சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வுகளின்படி, உலகில் உள்ள மிகவும் பழமையான மலைகளின் உயரம் நாளுக்கு நாள் குறைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இலங்கையிலுள்ள பல மலைகளுக்கும் பொருந்தும்.
பண்டைய கால மக்கள், மலைகளை புனித இடமாகவும், உயிரினங்களின் வாழ்வாதாரமாகவும் நினைத்தனர். ஆனால், தற்போது இதனுடைய நிலை தலைகீழாக மாறி வருகிறது. அதாவது மலைப்பகுதிகளை மக்கள் தங்கள் வாழிடமாக மாற்றி வருகின்றனர். இதனால் வெப்பமயமாதல் காரணமாக காட்டுப்பகுதிகள் அழிவடைந்து வருகின்றன.
இயற்கைச் சீற்றங்களில் இருந்து பாதுகாப்பு பெறுவதற்கும், அரியவகை மூலிகைகளை பாதுகாப்பதற்காகவும், சுத்தமான காற்றை பெறுவதற்காகவும் மலைகளின் உதவி முக்கியம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தினம் கடைப்பிடிக்கப்படுவதின் முக்கிய நோக்கம், மக்களிடையே மலைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக