உலக மாற்றுத்திறனாளிகள் தினம் டிசம்பர் 3
உலக மக்கள் அனைவரும் மாற்றுத்திறனாளிகளின் பிரச்சனைகளைப் புரிந்து கொள்வதுடன், அவர்களுக்கு மேன்மையும், உரிமைகளும் வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தால்
ஐ.நா சபை உலகம் முழுவதும் பன்னாட்டு
மாற்றுத்திறனாளிகள் நாள் ( பன்னாட்டு ஊனமுற்றோர் நாள் ) என
டிசம்பர் 3ஐ அனுசரிக்கின்றது.
1981-ம் ஆண்டை உலக மாற்றுத்திறனாளிகள் ஆண்டாக ஐக்கிய நாடுகள் அவை அறிவித்தது. 1992-ஆம் ஆண்டு டிசம்பர் 3-ம் தேதியை பன்னாட்டு மாற்றுத்திறானாளிகள் நாளாக அறிவித்தது. அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் இந்த நாள், உலக நாடுகளால் பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் நாள் என கொண்டாடப்படுகின்றது.
உலகின் பல நாடுகளிலும் பல்வேறு மட்டத்தில் இந்நாள் கொண்டாடப்பட்டு வருகின்றது. பொதுவாக தன்னார்வலர்களினாலேயே இந்நாளில் பல முன்னெடுப்புகள் இடம்பெறுகின்றன. பல நாடுகல் அரசு நிறுவனங்கள், மற்றும் அரசு சார்பற்ற தொண்டு நிறுவனங்கள் ஊனமுற்றோர்களின் நிலையை உயர்த்துவதற்கான செயல் திட்டங்களை தீட்டி, அவர்களின் முயற்சிகளுக்கு உறுதுணை புரிகின்றன. அத்துடன், சமுதாயத்தில் ஊனமுற்றோர்களின் நிலை உயர சிறப்புக் கருத்தரங்கங்கள், பயிற்சி மற்றும் விழிப்புணர்வு முகாம்கள், பிரசாரங்கள், ஊடகங்கள் வழியாக விழிப்புணர்வு விளம்பரங்கள் ஆகியவற்றின் வாயிலாக சமூகத்தில் சம உரிமைகளுடன் ஒவ்வொரு துறையிலும் ஊனமுற்றோர்கள் சிறந்து விளங்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
நோக்கம்
மாற்றுத்திறனாளிகளுக்கு, அரசாங்கமும், சேவை வழங்கும் நிறுவனங்களும், பெற்றோரும், ஏனைய மனிதர்களும் உதவுவதும், இவர்களின் வாழ்க்கையில் எல்லோரையும் போல சகல உரிமைகளையும் பெற வைப்பதும் ஒரு சமுதாய கடமையாகும் என மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இத்தினத்தின் நோக்கமாகும்.
ஊனமுற்றோர் வகைப்பாடு(இந்திய அளவில்)
1 . பார்வை குறைபாடுடையோர். 2 . கை,கால் குறைபாடுடையோர். 3 . செவித்திறன் குறைந்தோர் மற்றும் பேச இயலாதவர் 4 . மனவளர்ச்சி குன்றியவர்கள். 5 . தொழுநோய் பாதித்தவர்கள் மற்றும் குணமடைந்தவர்கள். - என்று ஐந்து வகைகளாக பிரிக்கப்பட்டு உள்ளனர்.
ஊனமுற்றோர் மறுவாழ்வு முயற்சிகள்
1957 -ம் ஆண்டு ஊனமுற்றோருக்கான முதல் வேலைவாய்ப்பு மையம் பம்பாயில் ஏற்படுத்தப்பட்டு, தொடர்ந்து 22 நிலையங்கள் மத்திய அரசால் பெரும் நகரங்களில் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் 55 உப அலுவலகங்கள் பல்வேறு கிராமப்பகுதிகளில் நிறுவப்பட்டுள்ளது.
1968 -ம் ஆண்டு மத்திய அரசால் ஊனமுற்றோர் மறுவாழ்வு இல்லங்கள் ஆரம்பிக்கப்பட்டு, தற்போது 17 இல்லங்கள் இந்தியாவின் பெரும் நகரங்களில் நடத்தப்பட்டு வருகின்றது.
1981 -ம் ஆண்டு சர்வதேச ஊனமுற்றோர் ஆண்டாக அனுசரிக்கப்பட்டது.
1969 -ம் ஆண்டு முதல் வேலை பார்க்கும் ஊனமுற்றோர்களுக்கு வகைக்கு இரண்டு பேராக 10 நபர்களுக்கும், அவர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் 5 நபர்களுக்கும் தேசிய விருதுகள் சர்வதேச ஊனமுற்றோர் தினம் அன்று, குடியரசு தலைவரால் வழங்கப்படுகிறது.
1995 -ம் ஆண்டின் ஊனமுற்றோர்(சம வைப்புகள்,உரிமைகள்,பாதுகாப்பு மற்றும் முழு பங்கேற்ப்பு)சட்டமும்,1992 -ம் ஆண்டின் மறுவாழ்வு குழுமச் சட்டமும், 1999 -ம் ஆண்டின் ஊனமுற்றோர் நலனுக்கான தேசிய அறக்கட்டளைச் சட்டமும் அவர்கள் நலனுக்காக இந்திய அரசால் இயற்றப்பட்டவை ஆகும்.
இந்தியாவில் மத்திய அரசால் ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 183 ஊனமுற்றவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகின்றது.
இவை போக அனைத்து மாநில அரசுகளும் ஊனமுற்றோர் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன.
சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்...!
சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 3- ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.
மனதில் ஊனத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள் மத்தியில் ஊனம் உடம்பில் இல்லை என தைரியமாக வாழ்ந்துவரும் பல மாற்றுத்திறனாளிகளை ஊக்குவிக்கவே இந்த தினம் கடைபிடிக்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளை ஒரு மூலையில் அமர வைத்த காலம்போய், இன்று அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் மாற்றுத்திறனாளிகள் (Visually challenged person) என்ற பெயரிட்டு அழைப்பது பெருமைக்குரிய விஷயமே.!
ஐக்கிய நாடுகள் சபை 1981 ஆம் ஆண்டை உலக ஊனமுற்றோர் ஆண்டாக முதன் முதலில் அறிவித்தது. அதன் பின்னர் 1982 ஆம் ஆண்டு முதல் டிசம்பர் 3 ஆம் நாளை அனைத்துலக ஊனமுற்றோர் நாளாக அறிவித்தது. அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் இந்த நாள், உலக நாடுகளால் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் என அனுசரிக்கப்படுகிறது. உலகின் பல நாடுகளிலும் இந்நாள் கொண்டாடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
ஊனம் என்பது உடலின் பிழை உள்ளத்தில் அல்ல என வாழ்வில் பல போராட்டங்களை சந்தித்து வரும் மாற்றுத்திறனாளிகளை ஊக்குவிக்க அரசு பல நல உதவிகளையும், பல போட்டிகளையும் நடத்தி வருகிறது. உடலில் மட்டுமின்றி வாழ்விலும் எல்லாத் தடைகளையும் வலியோடும் வலிமையோடும் எதிர்கொண்டு வரும் மாற்றுத்திறனாளிகளின் பிரச்சனைகளை புரிந்து கொள்வதுடன், அவர்களுக்கு மேன்மையும், உரிமைகளையும் வழங்க வேண்டும்..
உலக மக்கள் அனைவரும் மாற்றுத்திறனாளிகளின் பிரச்சனைகளைப் புரிந்து கொள்வதுடன், அவர்களுக்கு மேன்மையையும், உரிமைகளையும் வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தால் ஐ.நா சபை உலகம் முழுவதும் பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் நாள் (அனைத்துலக ஊனமுற்றோர் நாள்) என டிசம்பர் 3-ஐ அனுசரிக்கின்றது.
1981-ம் ஆண்டை உலக மாற்றுத்திறனாளிகள் ஆண்டாக ஐக்கிய நாடுகள் அவை அறிவித்தது. 1982-ஆம் ஆண்டு டிசம்பர் 3-ம் தேதியை பன்னாட்டு மாற்றுத்திறானாளிகள் நாளாக அறிவித்தது. அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் இந்த நாள், உலக நாடுகளால் பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் நாள் என கொண்டாடப்படுகின்றது. உலகின் பல நாடுகளிலும் பல்வேறு மட்டத்தில் இந்நாள் கொண்டாடப்பட்டு வருகின்றது. பொதுவாக தன்னார்வலர்களினாலேயே இந்நாளில் பல முன்னெடுப்புகள் இடம்பெறுகின்றன.
பல நாடுகல் அரசு நிறுவனங்கள், மற்றும் அரசு சார்பற்ற தொண்டு நிறுவனங்கள் ஊனமுற்றோர்களின் நிலையை உயர்த்துவதற்கான செயல் திட்டங்களை தீட்டி, அவர்களின் முயற்சிகளுக்கு உறுதுணை புரிகின்றன. அத்துடன், சமுதாயத்தில் ஊனமுற்றோர்களின் நிலை உயர சிறப்புக் கருத்தரங்கங்கள், பயிற்சி மற்றும் விழிப்புணர்வு முகாம்கள், பிரசாரங்கள், ஊடகங்கள் வழியாக விழிப்புணர்வு விளம்பரங்கள் ஆகியவற்றின் வாயிலாக சமூகத்தில் சம உரிமைகளுடன் ஒவ்வொரு துறையிலும் ஊனமுற்றோர்கள் சிறந்து விளங்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-
* 1971- இந்திய- பாகிஸ்தான் போர், 1971: இந்தியா கிழக்கு பாகிஸ்தானை முற்றுகையிட்டது. முழுமையான போர் ஆரம்பித்தது. * 1973- வியாழனின் முதலாவது மிகக்கிட்டவான படங்களை பயனியர் 10 விண்கலம் பூமிக்கு அனுப்பியது. * 1976- ரெகே பாடகர் பொப் மார்லி இரு தடவைகள் சுடப்பட்டுக் காயமடைந்தார். ஆனாலும் இவர் இரு நாட்களின் பின்னர் இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். * 1978- வேர்ஜீனியாவில் பயணிகள் ரெயில் ஒன்று தடம் புரண்டதில் 6 பேர் கொல்லப்பட்டு 60 பேர் காயமடைந்தனர்.
* 1989- மால்ட்டாவில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளை அடுத்து அமெரிக்க அதிபர் ஜோர்ஜ் எச். டபிள்யூ. புஷ், சோவியத் அதிபர் மிக்கைல் கொர்பச்சோவ் ஆகியோர் பனிப்போர் முடிவடையும் கட்டத்தில் உள்ளதாக அறிவித்தனர். * 1997- நிலக் கண்ணி வெடிகளைத் தயாரிப்பது, மற்றும் பயன்படுத்துவது தடை செய்யும் ஒப்பந்தத்தில் 121 நாடுகள் ஒட்டாவாவில் கையெழுத்திட்டனர். அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகியன இவ்வொப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை.
* 1999- செவ்வாய்க்கோளை நோக்கி ஏவப்பட்ட Mars Polar Lander இன் தொடர்புகளை நாசா இழந்தது. * 2007- இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் முரளிதரன் டெஸ்ட் கிரிக்கெட்டில் 709 விக்கெட்டுக்கள் வீழ்த்தி உலக சாதனைப் படைத்தார்.
உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் மாற்றுத்திறனாளிகள் வாழ்கின்றனர். இவர்கள் உடலளவில் பலவீனமாக இருந்தாலும் , மனதளவில் தைரியமாகவே உள்ளனர். இவர்களுக்குள் பல்வேறு திறமைகள் மறைந்து கிடைக்கின்றன. ஆனால் “ஊனம்’ என்ற ஒரே காரணத்தை வைத்து, அவர்களை இந்த சமூகம் சம அளவில் வாய்ப்பளிக்க மறுக்கிறது.
மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான வசதிகளை செய்து தர வலியுறுத்தியும், அவர்களின் பிரச்னைகளை புரிந்து கொண்டு, அவர்களுக்கான உரிமைகளை வழங்க வலியுறுத்தியும் ஐ.நா., சார்பில் 1992ம் ஆண்டு முதல் டிச., 3ம் தேதி சர்வதேச மாற்றுதிறனாளிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. அரசியல், சமூக, கலாசாரம், பொருளாதாரத்தில் மற்றவர்களைப் போல, மாற்றுத்திறனாளிகளுக்கும் உரிய வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது. “அனைவருக்காகவும் நல்ல உலகத்தை படைக்க ஒன்று சேர்வோம்: மாற்றுதிறனாளிகளையும் வளர்ச்சியில் சேர்ப்போம்’ என்ற மையக்கருத்து இந்தாண்டு முன்வைக்கப்படுகிறது.
எத்தனை பேர் : உலக மக்கள்தொகையில் 10 சதவீதம் பேர் மாற்றுத்திறனாளிகளாக உள்ளனர். இதில் 80 சதவீதம் பேர் ஏழை நாடுகளில் உள்ளனர். இவர்கள் வேலைவாய்ப்பு அற்றவர்களாகவும் உள்ளனர். வளரும் நாடுகளில் உள்ள மாற்றுத்திறனாளியாக உள்ள குழந்தைகளில் 90 சதவீதம் பேர் பள்ளிக்கு செல்வதில்லை என “யுனெஸ்கோ’ அமைப்பு தெரிவித்துள்ளது.
வசதிகள் தேவை : மேலை நாடுகளில் ஊனம் வெளியே தெரிய வேண்டும் என்ற அவசியமில்லை. ஒரு நுரையீரல், ஒரு சிறுநீரகத்துடன் வாழ்பவர்களை கூட ஊனமுற்றவர்களாகவே கருதுகின்றனர். இன்னும் சில நாடுகள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களையும் ஊனமுற்றவர்களாக கருதி அவர்களுக்கு சிறப்பு சலுகைகள் அளிக்கின்றன. ஆனால் இந்தியாவில் அவ்வாறான நிலையில்லை. வெளியில் தெரியும் படியான ஊனத்தை தான் அரசே ஏற்றுக்கொள்கிறது. அப்படியும் அவர்களுக்கு சிறப்பு சலுகைகள் எதுவும் கிடைப்பதில்லை. பேருந்துகள், தியேட்டர் போன்ற இடங்களில் சக்கர நாற்காலியுடன் ஏறுவதற்கு வசதி தேவை என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டும், சில இடங்களை தவிர நிறைவேற்றப்படவில்லை. இங்கு ஊனமுற்றவர்களை வேலைக்கு எடுக்க நிறுவனங்கள் தயங்குகின்றன.
பொருளாதாரம் மேம்பட : ஊனமுற்றவர்களின் பங்களிப்பை ஏற்காமல் நம்நாட்டை வளர்ந்த நாடாக மாற்றிவிடலாம் என நினைப்பது கனவாகவே முடியும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். சமூகத்தின் இரங்கல் பார்வையை பெற்றுக்கொண்டு ஊனமுற்றோர் ஒதுங்கி வாழ வேண்டும் என நினைப்பது தவறு. நாட்டின் முன்னேற்றத்தில் அவர்களின் நியாயமான பங்கேற்பை ஏற்க வேண்டும். தனியார் வேலைவாய்ப்பில் அவர்களுக்கு சலுகை அளிக்காவிட்டாலும், ஊனமுற்றவர்கள் என்பதற்காக அவர்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான உரிமையையும் பறித்து விடக்கூடாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக