வியாழன், 4 ஆகஸ்ட், 2016

புதுவை முன்னாள் முதல்வர் ந. ரங்கசாமி பிறந்த நாள் ஆகஸ்டு 04,


புதுவை  முன்னாள் முதல்வர் ந. ரங்கசாமி பிறந்த நாள் ஆகஸ்டு 04,
ந. ரங்கசாமி (பிறப்பு ஆகஸ்டு 4, 1950) ஒரு இந்திய அரசியல்வாதியும் புதுச்சேரி ஒன்றியப் பகுதியின் முதலமைச்சரும் ஆவார். இவர் 2001 முதல் 2008வரை புதுச்சேரியின் முதலமைச்சராக இருமுறை பதவி வகித்துள்ளார். மே 16, 2011 அன்று மூன்றாவது முறையாக முதலமைச்சராகப் பதவி யேற்றார். மிகவும் எளிமையான முதலமைச்சர் என்று பெயர் பெற்றவர். முதலமைச்சரான பின்பும் இருசக்கர வாகனத்தில் சட்டசபைக்கும் தொகுதிகளுக்கும் வந்தவர்.

இந்திய தேசிய காங்கிரஸிலிருந்து விலகி அகில இந்திய என். ஆர். காங்கிரஸ் என்னும் புதிய கட்சியைத் தொடங்கினார். 2011 சட்டப்பேரவைத் தேர்தல்களில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து 30 இடங்கள் உள்ள பேரவையில் 20 தொகுதிகளில் வென்று ஆட்சியைப் பிடித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக