செவ்வாய், 23 ஆகஸ்ட், 2016

பாலத்தீனத் தலைவர் யாசிர் அரஃபாத் பிறந்த தினம் ஆகஸ்ட் 24.


*பாலத்தீனத் தலைவர் யாசிர் அரஃபாத்*
(யாசர் அராஃபத்,Yasser Arafat) என்று பரவலாக அழைக்கப்படும் முகம்மது யாசிர் அப்துர் ரஹ்மான் அப்துர் ரவூப் அரஃபாத் அல்-குத்வா அல்-ஹுசைனி 
*(ஆகஸ்டு 24,1929 - நவம்பர் 11, 2004)* 
பலஸ்தீன விடுதலை இயக்கத்தின் தலைவராக செயலாற்றியவர். அபூ அம்மார்என்று அவரது ஆதரவாளர்களால் அழைக்கப்பட்டார். 1994 இல்அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மூவரில் ஒருவர். அரபாத் ,சுயநிர்ணய-பாலஸ்தீனம் என்ற பெயரில் இஸ்ரேலுக்கு எதிராக மிகவும் வலிமையான போராட்டம் நடத்தியவர் . அவர் இஸ்ரேல் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளில் தொடர்ந்து ஈடுபட்டு பல தசாப்தங்களாக நிலவிய மோதலுக்கு முடிவு எட்ட முயற்சித்தார் .அவற்றின் மத்தியில் முக்கியமானவை - 1991 மாட்ரிட் மாநாடு, 1993 ஒஸ்லோ உடன்பாடு மற்றும் 2000 காம்ப் டேவிட் உச்சி மாநாடு.
*ஆரம்ப வாழ்க்கை*
*பிறப்பு மற்றும் குழந்தைப்பருவம்*
அரபாத் கெய்ரோ, எகிப்தில் பாலஸ்தீன பெற்றோருக்கு பிறந்தார்.அவரது தந்தை, அப்தெல் ரௌஃப் அல் குட்வா அல் ஹூஸ்சைனி,அவரது தாயார், ஜாஹ்வா அபுல் சவுத். அரபாதின் தந்தை தனது பரம்பரை குடும்ப நிலங்களுக்கான உரிமைக்காக போராடினார். ஏனெனில் 25 ஆண்டுகளாக எகிப்திய நீதிமன்றங்களில் வழக்கு நடைபெற்றுக்கொண்டிருந்தது.ஆனால் அராபத்தின் தந்தை வெற்றியடையவில்லை. பின் சாகினி மாவட்டத்தில் ஒரு ஜவுளி வியாபாரத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தார் அராபத்தின் தந்தை.அரபாத் ஏழு குழந்தைகளில் இரண்டாவது இளம் மகனாக பிறந்தார். 1933 ல் , அரபாத் நான்கு வயதாக இருந்த போது அவரின் தாய்,சிறுநீரக நோயால் இறந்தார்.
*கல்வி*
1944 -ல் கிங் புவாட் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார் அராபத்.அந்த காலத்திலேயே யூதர்கள் பற்றிய வாசிப்புகளை மேற்கொண்டார்.பின் பேச்சுவார்த்தைகள் மூலம் யூத மற்றும் சியோனிஸம் ப்ற்றி நன்றாக புரிந்து கொள்ள ஆரம்பித்தார் . கல்லூரியில் படித்து 1950 -ல் சிவில் பொறியாளர் பட்டம் பெற்றார்.1948 -ல் நடைபெற்ற அரபு-இஸ்ரேல் போரின் போது கல்லூரியில் இருந்து வெளியேறி அரபுப்படைகளுடன் இணைந்து இஸ்ரேலுக்கு எதிராகப் போரிட்டார்.
*திருமண வாழ்க்கை*
1990 -ல் யாசிர் அரஃபாத் தனது 61 வயதில் சுஹா தாவில் என்ற 27 வயது பாலஸ்தீன கிறித்தவப் பெண்ணை மணந்தார்.திருமணத்திற்கு முன் சுஹா தாவிலை அவரது அம்மா யாசிர் அரஃபாத் அவர்களிடம் ப்ரான்ஸில் வைத்து அறிமுகப்படுத்தினார். சுஹா தாவில் அரஃபாத்தின் உதவியாளராகப் பணிபுரிந்தவர். இவர்களுக்கு 1995 ஆம் ஆண்டு ஜூலை 24 ஆம் நாள் மகள் பிறந்தார். அரஃபாத்தின் மனைவி இவருடனான மணவாழ்க்கையை விரும்பாதவராக இருந்தார்.பல முறை அவரை விட்டு விலகிச் செல்ல விரும்பியிருக்கிறார். எனது திருமணத்தை மறுபடியும் செய்யமுடியுமென்றால் நான் அரஃபாத்தை திருமணம் செய்ய மாட்டேன் என அவரது மனைவி சுஹா தாவில் கூறினார்.1992 ஆம் ஆண்டு ஏப்ரல் 7 ஆம் தியதி அரஃபாத் பயணம் செய்த விமானம் தரையிரங்கும் போது விபத்திற்குள்ளானது. அதில் விமானஓட்டிகள் இருவரும் கொல்லப்பட்டனர்.
1980 களில் லிபியா , ஈராக் , சவுதி அரேபியா ஆகிய நாடுகளிலிருந்து பண உதவி பெற்றார். அதைக் கொண்டு பலஸ்தீன விடுதலை இயக்கத்தை பலப்படுத்தினார்.
*இறப்பு*
யாசிரின் மரணம் தொடர்பாக பல கருத்துகள் கூறப்பட்டன. அதில் மிக முக்கியமானதாக இருப்பது நச்சு உட்கொண்டார் என்னும் காரணம் ஆகும்.மற்ற காரணங்களாக கல்லீரல் நோய், இரத்தத் தட்டுக்களின் சீர்கேடு என பரவலாகக் கூறப்பட்டு வருகின்றது.
2004 ஆம் ஆண்டு அக்டோபர் 25 அன்று திடீரென நோயுற்றதால் கூட்டத்தில் வாந்தி எடுத்தார். துனிஸிய , ஜோர்டானிய மற்றும் எகிப்திய மருத்துவர்களின் பரிசோதனைக்குப் பின் இவர் பிரான்சு நாட்டின் ' பெர்சி ராணுவ மருத்துவமனை ' யில் அனுமதிக்கப்பட்ட இவர் நவம்பர் 3 ஆம் நாள் கோமா நிலைக்குச் சென்றார்.நவம்பர் 11 அன்று தனது 75 ஆவது வயதில் அவர் இறந்துவிட்டார்.
கதிரியக்க இயற்பியல் நிறுவனம் மற்றும் நியூயார்க் டைம்ஸ் உட்பட பல ஆதாரங்களின் அடிப்படையில் விஷம் என்று கூறுகின்றனர்.
*நஞ்சூட்டல்*
இவரது இறப்புத் தொடர்பாகச் சந்தேகப்படுவதற்கான காரணிகளைப் பெற்றுக்கொண்ட இவரது மனைவியின் வேண்டுகோளின் பேரில் இவரது ஆடை உட்பட இறப்பின் போது இவரிடமிருந்த பொருட்கள் 2012 இல் சுவிட்சர்லாந்து நாட்டுப் பரிசோதனைக்கூடம் ஒன்றில் வேதியியற் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டன. யாசிர் அரபாத்தின் இறப்புக்குக் காரணம் அவருக்குப் பொலோனியம்-210 நஞ்சூட்டப்பட்டிருப்பதே என்பதை அவ்வாய்வுகள் உறுதிப்படுத்தின.
*இறுதி ஊர்வலம்*
அவரது சவப்பெட்டியில் பாலஸ்தீனிய கொடி போர்வையாகச் சூழப்பட்டு 11 நவம்பர் 2004 இல் பிரெஞ்சில் ஒரு சிறிய விழா நடைபெற்றது . ஒரு இராணுவ இசைக்குழு , பிரஞ்சு மற்றும் பாலஸ்தீன தேசிய கீதங்களை வாசித்தனர். பிரஞ்சு ஜனாதிபதி ஜாக் சிராக் அவரை 'தைரியத்தின் மனிதன் ' என பாராட்டினார். அடுத்த நாள் , அராபதின் உடல் மாநிலங்களில் உள்ள பிரதம மந்திரிகள் மற்றும் வெளியுறவு மந்திரிகளின் பார்வைக்காக வைக்கப்பட்டது.பின் பிரஞ்சு விமானப்படையின் விமானம் மூலம் விமானத்தில் பாரிஸ் இருந்து ஜெருசலெமுக்கு பறந்தது. ரமலாவில் அரபாதை ஒரு " தற்காலிக " கல்லறையில் , 2004 இல் புதைத்தனர்.
இஸ்ரேல் அரசு ஜெருசலேமில் அராபதை புதைக்க மறுத்துவிட்டது .மேலும், இஸ்ரேலிய அமைச்சர் டாமி " ஜெருசலேம் யூத அரசர்களின் புதையிடம் ,அரபு பயங்கரவாதிகளின் புதையிடம் இல்லை ," என்று கூறினார். பின் அராபத்தின் கல்லறை முசொலியத்தில் பி.என்.ஏ ஜனாதிபதி தலைமையகத்தில் நவம்பர் 10 , 2007 இல் திறக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக