புதன், 10 ஆகஸ்ட், 2016

உலக இளைஞர் தினம் ஆகஸ்ட் 12.


உலக  இளைஞர் தினம் ஆகஸ்ட் 12.
அனைத்துலக இளையோர் நாள் (International Youth Day) ஆகஸ்ட் 12ம் நாளில் இளையோருக்காகக் கொண்டாடப்படும் ஒரு சிறப்பு நாளாகும். இந்நாள் இளைஞர்களின் அனைத்துலக மட்டத்தில் பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண அந்தந்த நாடுகளின் அரசுகளுக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுப்பதற்காக ஏற்படுத்தப்பட்டது. அனைத்து நாடுகளிலும் இந்நாளில் பல்வேறு வகையான நிகழ்ச்சிகள், நிதி சேகரிப்பு, பட்டறைகள், கலாச்சார நிகழ்ச்சிகள், ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள் போன்றவை அந்தந்த நாடுகளின் அரச, அரச சார்பற்ற நிறுவனங்களினால் நடத்தப்படுவது வழக்கம். ஐக்கிய நாடுகள் அவையினால் 1999 இல் இந்நாள் இளையோருக்கான சிறப்பு நாளாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

ஒரு நாட்டின் எதிர்காலமே இளைஞர்கள் கையில் தான் உள்ளது. ஏனெனில் இளைஞர்களின் வளர்ச்சிக்கு ஏற்ப, நாட்டின் வளர்ச்சியும் அமைகிறது. நாட்டின் அமைதி மற்றும் வளர்ச்சிக்கு இளைஞர்களின் பங்களிப்பு முக்கியமானது. இத்தகைய வலிமை படைத்த இளைஞர்களை, ஒவ்வொரு அரசும் ஆக்கப்பூர்வமான பணிகளில் ஈடுபடுத்த வலியுறுத்தும் விதமாக, ஆண்டுதோறும் ஆக.,12ம் தேதி சர்வதேச இளைஞர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. ஐ.நா., சபையால் 1999ல் இத்தினம் தொடங்கப்பட்டது. "இளைஞர்கள் இடம் பெயர்தல்: வளர்ச்சியை நோக்கி முன்னேறுதல்' என்பது இந்தாண்டு இத்தினத்தின் மையக்கருத்து. உலகில் உள்ள இளைஞர்களில், 2.70 கோடி பேர், வாழ்வாதரங்களுக்காக இடம் பெயர்ந்துள்ளனர்.

ஆறில் ஒரு பங்கு :

ஐ.நா., அறிக்கையின்படி, 15 வயது முதல் 24 வயதுக்குட்பட்ட இளைஞர்கள், உலக மக்கள் தொகையில் ஆறில் ஒரு பங்கு உள்ளனர். இதில் பெரும்பாலானோர் வளரும் நாடுகளில் உள்ளனர். கல்வி, வேலைவாய்ப்பு, அரசியலில் பங்கு போன்றவற்றை இளைஞர்களுக்கு ஒவ்வொரு அரசும் சரியான விதத்தில் ஏற்படுத்தி தரவேண்டும். குடும்பத்தை முன்னேற்ற வேண்டியது, இவர்கள் கையில் உள்ளது. எனவே இளைஞர்கள், பொறுப்புகளை உணர்ந்து செயல்பட வேண்டும். ஆனாலும் சிலர், இளைமைப் பருவத்தில் ஆல்கஹால், புகையிலை, போதைப் பொருள் ஆகியவற்றுக்கு ஆளாகின்றனர். மாறாக திறமைகளை வளர்த்துக்கொண்டு, நாட்டின் முன்னேற்றத்துக்கு உதவ, இந்நாளில் இளைஞர்கள் உறுதி ஏற்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக