வெள்ளி, 9 செப்டம்பர், 2016

டெடி பியர் தினம் செப்டம்பர் 09 .



டெடி பியர் தினம் செப்டம்பர் 09 .

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 9-ஆம் தேதி டெடி பியர் தினமாக கொண்டாடபப்டுகிறது.

இன்று சிறியவர்கள் முதல் ­­­­­­­பெரியவர்கள் வரை அனைவர் மனதிலும் டெடி பியர்கள் தமக்கான ஓர் தனித்துவமான இடத்தை பிடித்துள்ளது.

ஆரம்ப காலங்களில் பாடல்கள், கார்ட்டூன்கள் ஆகியவற்றில்  புகுந்து கலக்கிய டெடி பியர் பொம்மைகள் தற்போது அவற்றுக்கான தனியான  தினம் வைத்து கொண்டாடப்படும் அளவுக்கு மக்கள் புகழை ஈர்த்துள்ளது.

இது பற்றிய ஒரு சுவாரசியமான பின்னணிக் கதை.அமெரிக்க ஜனாதிபதி தியடர் ரூஸ்வெல்ட்ஒரு நாள்    காட்டுக்கு வேட்டையாட சென்றாராம்.அப்பொழுது ஒரு குட்டிக் கரடி அவர் முன்னால் வந்திருக்கிறது. அந்த சமயத்தில் அதைப் பார்த்த அவருடன் கூட வந்தவர்கள் அதனை பிடித்துக் கட்டி கொள்ள முயன்றனர்.

அதனை கண்ட ரூஸ் வெல்ட் அதனை தடுத்து நிறுத்தி 'வயதான இக்கரடியை அதன்பாட்டில் போக விடுங்கள்…!' என்று அன்பு  கட்டளையிட்டாராம்.

இதன் பின்னர்தான் அமேரிக்காவிலும் ஐரோப்பாவிலும் அதிகமான டெடி பியர் பொம்மைகள் உருவாக்கப்பட்டன. இவ்வாறு உருவாக்கப் பட்ட இந்த அமேரிக்க பொம்மைகள் நாளடைவில் உலக அளவில் பெரும் வரவேற்பை பெற்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக