வெள்ளி, 9 செப்டம்பர், 2016

உலக தற்கொலை தடுப்பு தினம் செப்டம்பர் 10.


உலக தற்கொலை  தடுப்பு தினம் செப்டம்பர் 10.
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 10-ஆம் தேதி உலக தற்கொலை தடுப்பு தினமாக கொண்டாடப்படுகிறது.

சர்வதேச தற்கொலை தடுப்பு கூட்டமைப்பு இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது. தற்கொலை என்பது தடுக்கக் கூடிய ஒரு விஷயம்தான் என்பது குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்துவதே இந்த நாளைக் கொண்டாடுவதன் அடிப்படை நோக்கமாகும்.

உலக தற்கொலை தடுப்பு தினம்  முதன்முதலாக 2003-ஆம் ஆண்டு சர்வதேச தற்கொலை தடுப்பு கூட்டமைப்பு மற்றும் உலக சுகாதார நிறுவனம் ஆகியவற்றின் முயற்சியினால் கொண்டாடப்பட்டது. அதற்குப் பிறகு  ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 10-ஆம் தேதி உலக தற்கொலை தடுப்பு தினமாக கொண்டாடப்ப்படுகிறது.

உலக சுகாதார நிறுவனத்தின் கணக்குப்படி உலகெங்கும் ஒவ்வொரு ஆண்டும் 80 லட்சம் பேர் தற்கொலையால் இறக்கின்றனர்.இதன் பொருள் உலகெங்கும் பல்லாயிரக்கணக்கானோர் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்துவிடுகின்றனர் எனபதுதான். அந்த துயரத்தை குறைக்க , தற்கொலை என்பது தடுக்க கூடிய ஒரு விஷயம்தான் என்பது குறித்த விழிப்பு உணர்வை உண்டாக்க வேண்டும்.
'இணைந்திரு, தொடர்பு கொள் , பாதுகாப்பு' என்பதே 2016-ஆம் ஆண்டு தற்கொலை தடுப்பு தினத்தின் முக்கிய நோக்கமாகும்.
 //

செப்டம்பர் 10-ம் தேதி உலக தற்கொலை தடுப்பு தினம் அனுசரிக்கப்படுவதையொட்டி, பிரபல சமூக வலைதளமான ஃபேஸ்புக், சமூக ஆர்வர்களுடன் கைகோத்து தன் பயனாளிகளுக்காக சில உத்திகளைக் கையாளவுள்ளது.

இதன்படி, ஃபேஸ்புக் கண்காணிப்பார்கள், தற்கொலை எண்ணங்களோடு பதிவிடுபவர்களின் நிலைத்தகவல்களுக்கு முன்னுரிமை அளிப்பர். அந்தத் தகவல்கள் அவர்களின் நண்பர்களுக்கோ, உறவினர்களுக்கோ அனுப்பப்படும்.

தற்கொலை எண்ணத்தோடு பதிவிடுபவர்களின் நண்பர்களை அணுக சமூக ஆர்வலர்கள் பயன்படுத்தப்படுவார்கள்.

இதுகுறித்துப் பேசிய ஃபேஸ்புக்கின் ஐரோப்பிய பாதுகாப்பு கொள்கைகள் மேலாளர் ஜூலி டீ பெய்லியன்கோர்ட், ''மக்கள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரோடு தொடர்பில் இருக்க ஃபேஸ்புக்கைப் பயன்படுத்துகின்றனர். அதனால்தான் அவர்கள் துயரத்தில் இருக்கும்போது நண்பர்களையும், குடும்பத்தையும் அணுகுகிறோம். இதற்கு சமூக ஆர்வலர்களைப் பயன்படுத்த உள்ளோம்'' என்று கூறியுள்ளார்.

சமூக ஆர்வலர்கள் துயர மனநிலை, விரக்தி, மனக்கசப்பு மற்றும் தற்கொலை எண்ணங்களில் இருக்கும் மக்களுக்கு உளரீதியான ஆதரவைத் தருவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
//

//
கடைப்பிடிக்கப்படுவதையொட்டி, தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் கீழ் இயங்கி வரும் 104 மருத்துவ உதவி சேவை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

104 என்ற எண்ணில் மருத்துவ உதவி சேவை மையம் 24 மணி நேரமும் மருத்துவ தகவல் உடல்நலம் மற்றும் மனநல ஆலோசனை வழங்கப்படுகிறது. ஒவ்வொரு செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் யோகா–இயற்கை டாக்டர்களும் ஆலோசனை வழங்கி வருகிறார்கள்.

தாழ்வு மனப்பான்மை, எண்ணச்சிதறல்கள், மனஅழுத்தம், தன் நம்பிக்கையின்மை, நினைவாற்றலை பெருக்குவது, உறவுகளிடையே ஏற்படும் பூசல், பயம், தோல்வியை துணிவுடன் எதிர்கொள்வது போன்ற பல்வேறு காரணங்களுக்காக 104 சேவை மையத்தில் தமிழகத்தின் 32 மாவட்டங்களில் இருந்து 24 மணி நேரமும் அழைப்புகள் பெறப்படுகின்றன.

இவற்றில் தற்கொலை போன்ற தவறான முடிவுகளுக்காக அழைத்தவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கி, நம்பிக்கையூட்டி மீண்டும் வெற்றியடைய வழிகாட்டியாகவும் 104 மருத்துவ உதவி மையம் செயல்படுகிறது. இதுவரை 725 தற்கொலைகள் எண்ணங்கள் தடுக்கப்பட்டுள்ளது. ஒருமுறை மனம் திறந்து பேசினால் இப்படிப்பட்ட தவறான முடிவுகளில் இருந்து நிச்சயம் வெளிவர முடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக