புதன், 14 செப்டம்பர், 2016

இந்தியாவின் பொறியாளர் தினம் செப்டம்பர் 15.


இந்தியாவின் பொறியாளர் தினம்  செப்டம்பர் 15.   
இந்தியாவில் வேலை இல்லாத் திண்டாடத்தில் அதிகளவில் பாதிக்கப்பட்டாலும், மாணவர்கள் சாரை சாரையாக படையெடுக்கும் துறை பொறியியல். அத்தகைய சிறப்பு பெற்ற பொறியாளர்களுக்கான 48வது "பொறியாளர்கள் தினம்" இன்று கொண்டாடப்படுகின்றது.
அப்படி பொறியாளர்கள் அனைவருக்கும் முதன்மைப் பொறியாளராக இருந்த ஒருவரின் பிறந்தநாளே இந்தியாவில் பொறியாளர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. கர்நாடக மாநிலத்தில் பிறந்த மோக்சகுந்தம் விஸ்வேஸ்வரையா தான் அந்தப் பெருமைக்குரிய பொறியாளர்.
"சர் எம்.வி" என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்டவர். புனே பல்கலைக்கழகத்தின் காலேஜ் ஆப் எஞ்சினியரிங் கல்லூரியில் படித்த இவர், மும்பை பொதுப் பணித்துறையில் பணியாற்றி, பிறகு இந்திய நீர்பாசனத்துறை கமிஷனில் பொறியாளராக அரசால் நியமிக்கப்பட்டார்.

இந்தியாவின் முதல் பொறியாளர்:
இந்திய அரசு இவரை ஆப்பிரிக்காவின் ஈடன் நாட்டுக்கு நீர் மற்றும் கழிவு நீர் குறித்து படிப்பதற்கு அனுப்பியது. இந்தியாவின் முதல் மற்றும் முதன்மை பொறியாளர் இவர் தான்.

கிருஷ்ண ராஜ சாஹருக்கு அடிக்கல்:
மைசூர் அருகே காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கிருஷ்ண ராஜ சாஹர் அணை கட்டும்போது தலைமைப் பொறியாளராக பணிபுரிந்தவர். இந்த அணை கட்டும்போது, ஆசியாவின் மிகப் பெரிய நீர்த்தேக்கமாக கருதப்பட்டது மட்டுமல்லாமல், பல தொழில்நுட்ப வல்லுனர்களால் பாரட்டப்பட்டது.

மைசூரின் தந்தை:
மைசூர் திவானாக ஏழு ஆண்டுகள் பதவி வகித்த இவர் "நவீன மைசூரின் தந்தை" எனவும் அழைக்கப்படுகிறார். சிறந்த பொறியாளராக திகழ்ந்த சர்.எம்.விக்கு 1955 ஆம் ஆண்டில் நாட்டின் உயரிய விருதான "பாரத் ரத்னா" விருது வழங்கி கெளரவித்தது இந்திய அரசு.

நாட்டின் வளர்ச்சி உங்கள் கையில்:
இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்தியாவின் முதன்மைப் பொறியாளரை நினைவுகூரும் வகையில் அமைந்துள்ள இந்தத் தினம், பொறியியல் துறையின் மகத்துவத்தையும் பறைசாற்றுகிறது. நாட்டின் ஒவ்வொரு வளர்ச்சிப் பாதையிலும் பொறியாளர்களின் பங்கு இன்றியமையாதது. அப்படிப்பட்ட பொறியாளர்கள் அனைவருக்கும் இனிய பொறியாளர் தின வாழ்த்துகள்!


* இவரின் பிறந்தநாள் தேசிய
பொறியியலாளர் தினமாக
கொண்டாடப்படுகிறது
இந்தியாவின் பொறியியல் துறை தந்தை
விஸ்வேஸ்வரய்யா எளிமையான குடும்பத்தில்
பிறந்த இவர் பன்னிரண்டு வயதில் தந்தையை
இழந்தார் .அதற்கு பின்பு பிள்ளைகளுக்கு
டியுஷன் எடுத்து தன் கல்வியை
தொடர்ந்தார் ,பி ஏ பட்டப்படிப்பில்
மாநில அளவில் முதல் மதிப்பெண்
பெற்று தேறினார் .பின் பூனாவில்
பொதுவியல் (சிவில்
இஞ்சினியரிங் )துறையில் படித்து தங்கப்பதக்கம்
பெற்றார் .பெர்க்லே விருது அவருக்கு
வழங்கப்பட்டது.ஆங்கிலேய அரசின்
பொதுப்பணி துறையில் சேர்ந்தார்
வந்தன பணிகள் .பைப் சிபானை
கொண்டு ஒரு கரையில் இருந்து
மறுகரைக்கு பூனாவில் நீரைகொண்டு
போய் சேர்க்கும் வடிவமைப்பை உருவாக்கினார்
.கச்சிதமாக வேலை செய்தது.அடுத்தது
பம்பாயின் காடகவாசாலா அணையில்
அவருக்கான சவால்
காத்துக்கொண்டிருந்தது .அணையின்
கொள்ளளவை உயரத்தை ஏற்றாமல்
அதிகரிக்க வேண்டிய சவால் தான் அது
.எட்டடி உயரத்தில் நீரின் உயரத்துக்கு ஏற்ப
உயர்ந்து கொள்ள மற்றும் தாழ்ந்து
கொள்ளும் வகையில் தானியங்கி கேட்
ஒன்றை வடிவமைத்தார் .அது இன்றும்
பயன்படுகிறது
சிந்து மாகாணம் சூரத் என பல பகுதிகளின்
நீர் தாகத்தை தன் திட்டங்களின் மூலம் தீர்க்கிற
பணியை செய்தார் .இருந்த
பொறியியல் அதிகாரிகளிலேயே
தலைசிறந்த வல்லுனராக இருந்த
பொழுதும் அவருக்கு உயர் பதவிகள்
இந்தியர் என்பதால் மறுக்கப்பட்டன .மனம்
வெறுத்துப் பதவியைத் துறந்து வெளியே
வந்தார் மனிதர் .வெள்ளத்தால்
பாதிக்கப்பட்ட தன் நாட்டை ஹைதராபாத்
நிஜாம் சரி செய்ய இவரை அழைத்தார்
.திட்டங்கள் போட்டு அணைகள் மற்றும் வடிகால்
அமைப்புகளை உருவாக்கி முரண்டு பிடித்த முஸியை
அடக்கி விட்டு கிளம்பினார் .
சொந்த மாகாணம் அழைத்தது அது
தான் தமிழகத்துக்கு கெட்டகாலம்
ஆனது .அங்கே பத்து கோடி ரூபாய் மதிப்பீட்டில்
கிருஷ்ண ராஜசாகர் அணையை கட்ட அவர்
முயன்ற பொழுது அரசர் யோசித்தார்
.அதன் மூலம் மின்சாரம் தயாரித்து பிற
மாநிலத்துக்கு விற்கலாம் என இவர்
சொல்லி சாதித்தார்.காவிரியின்
நடுவே ஒப்பந்தத்தை மீறி அணை
கட்டினார்கள்.கர்நாடகம் பசுமை
போர்த்திக்கொண்டது .
தொழிற்சாலைகள் வளர்ந்தன
.ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தின்
முன்னோடி நிறுவனம் இவரால்
அம்மாகாணத்தில் அமைந்தது .உருக்காலையை
உருவாக்கினார் .மாநிலத்தை
தொழில்மயபடுத்தினார் .இவரின்
பிறந்தநாள் தேசிய
பொறியியலாளர் தினமாக
கொண்டாடப்படுகிறது .இவருக்கு
பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
நன்றி -ஓன் இந்தியா ,விகடன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக