சனி, 24 செப்டம்பர், 2016

உலக சுற்றுலா தினம் செப்டம்பர் 27.

உலக சுற்றுலா தினம்  செப்டம்பர் 27.

உலக சுற்றுலா நாள் ( World Tourism
Day ) உலக சுற்றுலா நிறுவனத்தின்
ஆதரவில் செப்டம்பர் 27ம் நாளில்
1980ம் ஆண்டிலிருந்து உலகெங்கும்
கொண்டாடப்பட்டு வருகிறது.
1979இல் ஸ்பெயினில் நடைபெற்ற
ஐக்கிய நாடுகள் உலக சுற்றுலா
நிறுவனத்தின் மூன்றாவது பொது
அவைக்கூட்டத்தில் இதற்கான தீர்மானம்
கொண்டுவரப்பட்டு
நிறைவேற்றப்பட்டது. சுற்றுலாவின்
முக்கியத்துவத்தை உலகெங்கும்
எடுத்துக்காட்டவும் சுற்றுலா எப்படி
மக்களின் சமூக, கலாச்சார, அரசியல்
மற்றும் பொருளாதாரத்தில்
தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை
எடுத்துக்காட்டவும் இந்நாள்
சிறப்பிக்கப்பட்டு வருகிறது.
அக்டோபர், 1997இல் துருக்கியில் நடந்த உலக
சுற்றுலா நிறுவனத்தின் கூட்டத்தில் ஒவ்வோர்
ஆண்டும் ஒவ்வொரு நாடு
இந்நிகழ்வை நடத்த அழைக்கப்படவேண்டும்
என்று முடிவு செய்யப்பட்டது. 2003இல்
பீக்கிங்கில் இடம்பெற்ற கூட்டத்தில்
பின்வரும் ஒழுங்கு முறையில் இந்நாள்
கொண்டாடப்பட வேண்டும் என்று
முடிவெடுக்கப்பட்டது: 2006 இல்
ஐரோப்பா, 2007இல் தெற்காசியா ;
2008இல் அமெரிக்கா, 2009இல்
ஆபிரிக்கா .
2007இல் இலங்கையில் இந்நாள்
கொண்டாடப்பட்டது. இதன்
கருப்பொருள்: "சுற்றுலாக்
கதவுகள் பெண்களுக்குத்
திறக்கப்பட்டுள்ளன" ( Tourism opens doors
for women).

உலகின் இரண்டாவது மிகப் பெரிய
தொழில் சுற்றுலா.
(முதலிடத்தில் இருப்பது கச்சா
எண்ணெய்த் துறை)
சுற்றுலா மூலமாக வேலை வாய்ப்பு,
அந்நியச் செலவாணி வருமானம்,
மக்களின் வாழ்க்கை தரம் உயர்தல் என
ஏராளமான பலன்கள் நாட்டுக்குக்
கிடைக்கும் !
வளரும் நாடுகளுக்கு மிகப் பெரிய
மூலஆதாரமாக சுற்றுலா விளங்குகிறது.
இந்திய அரசு சிறந்த சுற்றுலாப் பகுதிகளுக்கு
என தேர்வு செய்துள்ள சுமார் 60
இடங்களில் சுமார் 20 இடங்கள் தமிழகத்தில்
உள்ளது பெருமைப்படத்தக்கது ..!
கோவில் நகரங்கள். கலாச்சார மையங்கள்,
மலை வாஸ்தலங்கள், வர்த்தக மையங்கள்
போன்றவை முக்கிய சுற்றுலா இடங்களாக
திகழ்ந்து வருகின்றன.
குறிப்பாக, தஞ்சாவூர், கும்பகோணம்,
காஞ்சீபுரம், ராமேஸ்வரம்,
கன்னியாகுமாரி, தரங்கம்பாடி
திருவரங்கம், திருத்தணி, பழனி, சிதம்பரம்,
மதுரை போன்ற சரித்திரப் புகழ்பெற்ற
சுமார் 15 நகரங்களைத் தொன்மை
குறையாமல் தமிழக அரசு பாதுகாத்து
வருகிறது.
Image
குடுமப்த்தோடு ம்னம் நிறைந்து பொழுது
போக்கவும்,
வழக்கமான பணி சுமையிலிருந்து ஒரு
மாற்றத்துக்காகவும்
கல்வியறிவு பெறவும்.
தொழில் தொடர்பு
கொள்ளவும்
சுற்றுலா
மேற்கொள்ளப்படுகிறது.
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம்’
என்ற அமைப்பை ஏற்படுத்தி பல சிறப்பு
திட்டங்களுடன் இயங்கி வருகிறது.
சுற்றுலா பயணிகள் தாங்கள் விரும்பும்
இடங்களுக்குச் சென்றுவர சுற்றுலா
துறையே தங்கும் விடுதிகள் மற்றும் வாகன
வசதிகளை செய்து தருகிறது.
தமிழகத்துக்கு வரும் சுற்றுலா பயணிகள்
தங்குவதற்கு வசதிக்காக மோட்டல்கள்
(சாலையோர விடுதிகள்) பல் இடங்களில் மிகச்
சிறந்த முறையில் இயங்கிக்
கொண்டிருக்கின்றன.
ஹரியானா, ஹிமாச்சலப் பிரதேசம்,
பஞ்சாப் போன்ற மாநிலங்களில் சுற்றுலா
ஒரு முக்கிய தொழிலாக நடந்து
வருகிறது.
Image

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக