புதன், 21 செப்டம்பர், 2016

உலக அமைதி தினம் செப்டம்பர் 21.


உலக அமைதி தினம்  செப்டம்பர் 21 

உலகில் அமைதியை வலியுறுத்தியும்,
நாடுகளிடையே போர், வன்முறை ஏற்படுவதை
தடுக்கும் விதத்திலும் ஐ.நா., சார்பில்
ஆண்டுதோறும் செப்., 21ம் தேதி, உலக
அமைதி தினம் கடைபிடிக்கப்படுகிறது.
1981ல், இத்தினம் முதன் முதலாக
தொடங்கப்பட்டது. உலகில் வன்முறை
அதிகரிப்பதை தவிர்த்து அமைதி நிலவ,
ஒவ்வொருவரும் உதவ வேண்டும்
என இத்தினம் வலியுறுத்துகிறது.
இன்றைய சூழலில், ஒவ்வொரு
நாடும் மற்ற நாட்டுடன் அனைத்து
துறைகளிலும் போட்டி போடுகின்றன.
இந்த போட்டி ஆக்கபூர்வமாக அமைந்தால்
பாராட்டுக்குரியது. மாறாக சில
நாடுகள், மற்ற நாடுகளுடன் நட்பு
பாராட்டுவதற்கு பதில், பகைமை உணர்வுடன்
செயல்படுகிறது. சில நாடுகளில்
பயங்கரவாதம் வளர்க்கப்படுகிறது.
உலகில் ஏதாவது இரு நாடுகளிடையே சண்டை
ஏற்பட்டால், அது ஒட்டு மொத்த
உலக நாடுகளின் அமைதிக்கும் பாதிப்பை
ஏற்படுத்தி விடும்.
அனைத்து நாடுகளும் தங்களுக்கிடையே உள்ள
பிரச்னைகளை பேச்சுவார்த்தை மூலமே தீர்க்க
வேண்டும். மாறாக வன்முறையை
தேர்ந்தெடுத்தால், பிரச்னையும் தீராது,
நாட்டின் பொருளாதாரமும்
வீழ்ச்சியடையும். பயங்கரவாதத்தை ஒழிக்க
அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து
செயல்பட்டால், அமைதியான உலகை
உருவாக்கலாம்.
எதிரியுடன் நீங்கள் அமைதியை பேண
வேண்டுமெனில், அவர்களுடன் இணைந்து
பணியாற்றுங்கள். பின் அவர்கள்
உங்களது கூட்டாளியாகி விடுவார்கள்.
முன்னாள் தென் ஆப்ரிக்கா அதிபர்
அமைதி என்பது கட்டாயத்தினால்
ஏற்படுத்த முடியாது;
ஒருவருக்கொருவர் புரிந்து
கொள்ளுதல் மூலமே ஏற்படும்.
அறிவியலாளர்
இருளை இருளால் போக்க முடியாது, ஒளி
தான் இருளை போக்கும். அதே போல
வெறுப்புணர்வை வெறுப்பால்
போக்க முடியாது, அன்பால் தான் முடியும்.
சமூக உரிமை போராளி
புன்னகையில் தொடங்குகிறது அமைதி
அமைதி என்பது விபத்தல்ல;
அமைதி நன்கொடை அல்ல;
அமைதி ஏற்பட ஒவ்வொரு நாளும்,
ஒவ்வொரு நாடும் பணியாற்ற
வேண்டும்.
ஐ.நா., பொதுச் செயலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக