புதன், 14 செப்டம்பர், 2016

தென்கச்சி கோ. சுவாமிநாதன் நினைவு தினம் செப்டம்பர் 16,


தென்கச்சி கோ. சுவாமிநாதன்  நினைவு  தினம் செப்டம்பர் 16,  
தென்கச்சி கோ. சுவாமிநாதன் (1946 - செப்டம்பர் 16, 2009) புகழ்பெற்ற பேச்சாளரும், எழுத்தாளரும் ஆவார். 'இன்று ஒரு தகவல்' நிகழ்ச்சி மூலம் வானொலி நேயர்களிடையே பிரபலமாக விளங்கினார். அகில இந்திய வானொலியில் உதவி இயக்குநராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தொலைக்காட்சியில் 'இந்த நாள் இனிய நாள்' என்ற நிகழ்ச்சியை நடத்தி வந்தார். பல சிறுகதைகளையும் எழுதியிருந்தார்.

அரியலூர் மாவட்டம் தென்கச்சிப்பெருமாள் நத்தம் என்ற ஊரில் பிறந்த கோ. சுவாமிநாதன் சென்னை மடிப்பாக்கத்தில் வசித்து வந்தார். வேளாண்மைப் பட்டதாரி ஆவார். நெல்லை வானொலியில் அறிவிப்பாளராகப் பணியைத் தொடங்கியவர். சென்னை வானொலி நிலையத்தில் இன்று ஒரு தகவல் நிகழ்ச்சி வழியாக உலகத் தமிழர் உள்ளங்களில் நிலையான இடம் பிடித்தவர். திரைப்படங்களிலும் தொலைக்காட்சியிலும் நடித்தவர்.

இவர் தமிழ்நாடு அரசுப் பணியில் விவசாய அலுவலராக வாழ்க்கையைத் தொடங்கி, பின்னர் 1977 முதல் 1984 வரை திருநெல்வேலி வானொலி நிலையத்தில் பணிபுரிந்தார். அகில இந்திய வானொலியில் வேளாண்மை நிகழ்ச்சிப் பிரிவு இயக்குனராக இருந்தபோது "வீடும் வயலும்" என்ற சிறப்பான நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். "அன்பின் வலிமை", "தீயோர்", மற்றும் "அறிவுச்செல்வம்" உட்பட பல நூல்களை எழுதியுள்ளார். "இலக்கணம்" என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

படைப்புகள்
இன்று ஒரு தகவல் (பாகம் 1 & 2)
வாழ்க்கையைக் கொண்டாடுவோம்
அய்யாசாமியின் அனுபவங்கள்
தகவல் கேளுங்கள் - கீதம் பப்ளிகேஷன்
உள்ளமே உலகம், வானதி பதிப்பகம்
அருள்தந்தையின் நகைச்சுவையுணர்வு
சிறகை விரிப்போம்
அனுபவங்கள் அர்த்தமுள்ளவை
கடவுளைத் தேடாதீர்கள்
சிந்தனை விருந்து
நினைத்தால் நிம்மதி
மறைவு
இதயநோயால் அவதிப்பட்ட சுவாமிநாதன் போரூர் மருத்துவமனையில் 2009 செப்டம்பர் 16 புதன்கிழமை பகல் 12:40 இற்குக் காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது 67. சுவாமிநாதனுக்கு மனைவி மகாலட்சுமி, மகள் செந்தமிழ்ச்செல்வி ஆகியோர் உள்ளனர்.



தென்கச்சி கோ.சுவாமிநாதன் சொன்ன நகைச்சுவை…

மார்க் ட்வைன் உங்களுக்கு தெரியும். புகழ்பெற்ற நகைச்சுவை
எழுத்தாளர். ஒரு நாள் ஒரு பத்திரிகை நிருபர் அவரை பேட்டி
காணவந்தார்.

அந்த எழுத்தாளருக்கு பேட்டி என்றால் பிடிக்காது. எதையாவது
சொல்லி தப்பித்து விடுவார். ஆனால் அவரை தேடி வந்த
பத்திரிகை நிருபர் அவரை விட கில்லாடி. விடாக்கண்டன்.
எதையாவது பேசி எப்படியாவது ஆசாமிகளை கெட்டியாக
பிடித்து கொள்வார்.

வேறு வழியில்லாமல் மார்க் ட்வைன் இவரிடம் வசமாக
மாட்டிக்கொண்டார். தப்பிக்க வழியில்லை. வேறு என்ன செய்யலாம்? குழப்புவது தான் சரியான வழி என்று மனதுக்குள் முடிவு செய்து கொண்டார்.


சரி.. கேளுங்கள்…சொல்கிறேன். என்று அவர் முன்னால் உட்கார்ந்தார். பத்திரிகை நிருபர் மெல்ல ஆரம்பித்தார்.
ஏன் சார்…. உங்களுக்கு சொந்தக்காரங்கன்னு யாராவது இருக்காங்களா?
என்ன கேக்கறீங்க…?
உதாரணத்துக்கு ஒரு சகோதரர்…?
ஆமாம்… ஆமாம்… ஒருத்தன் இருந்தான் என்று கூறி பெருமூச்சு விட்டார் எழுத்தாளர். நிருபர் அவரை கூர்ந்து கவனித்தார்.
ஏன் சார்… ஏதாவது கெட்ட செய்தியா…?
ஆமாம் அது ஒரு துயரம்
ஏங்க…. என்ன ஆச்சு அவருக்கு?
அதை ஏன் கேக்கறீங்க… அது ஒரு சோக கதை
அப்படின்னா…?
அவன் செத்துட்டான்..!
ஐயோ பாவம்…எப்படிச் செத்தார்?


அது தானே இன்னமும் எங்களுக்கு நிச்சயமாக தெரியலே…
என்ன சொல்றீங்க… எப்படி இறந்தார்ன்னு தெரியலையா…?
அப்படி இல்லே.. எங்களுக்கு சந்தேகம் என்ன… ன்னா அவர் இறந்துட்டாரா… அப்படிங்கறது தான்.


அப்படின்னா அவர் எங்காவது மறைஞ்சுட்டாரா….அல்லது அவரை இழந்துட்டீங்களா?
அப்படியும் அதை தீர்மானமாச் சொல்ல முடியாது. ஒரு வேளை அப்படியும் இருக்கலாம். ஏன்னா மரணம்ங்கறதும் ஒரு“ இழப்பு தானே… அந்த வகையிலே பார்த்தா அது மரணம் தானே

நிருபர் குழம்பினார். இருந்தாலும் இன்னும் கொஞ்சம் தெளிவு பாக்கி இருந்து அவரிடம் ஆகவே தொடர்ந்துகேட்டார்.


நீங்க என்ன சொல்றீங்க..? அவர் இறந்து போனதே நிச்சயமில்லலேங்கறீங்களா?
சரி.. அவ்வளவு தூரத்துக்கு ஏன்… நடந்தது என்னங்கறதை விவரமாவே சொல்லிப்புடறேன் கேட்டுக்குங்களேன்.
நிருபர் நம்பிக்கை யோடு நிமிர்ந்து உட்கார்ந்தார். கையில் இருந்த குறிப்பு புத்தகமும் பென்சிலும் சுறுசுறுப்பாக இயங்க காத்திருந்தன. அவுர் சொல்ல ஆரம்பித்தார்.
நாங்க ரெண்டுபேர்… இரண்டு பேரும் இரட்டை குழந்தைகள் ஒருத்தர் பெயர் பில் இன்னொருத்தர் பெயர் ட்வைன் ஒரு நாள் குளித்து கொண்டிருக்கும்போது அந்த விபத்து நடந்தது. சின்னப்பையன் தொட்டியிலே மூழ்கி விட்டான்.
ஓ… அப்படியா? இப்பத்தான் எனக்கு புரியுது… உங்க சகோதரர் குழந்தையா இருக்கும்போதே செத்துட்டார்ங்கறீங்க..


அப்படியும் சொல்ல முடியாது


என்ன சொல்றீங்க?
நாங்க இரட்டை குழந்தைங்க… எங்களில் யாரோ ஒருத்தர் தண்ணீரில் மூழ்கிவிட்டார். அது மார்க் ட்வைனா…. அல்லது பில்லாங்கறது நிச்சயமாத் தெரியாது.
அப்படின்னா?
அதுதான் ஆரம்பத்துலேயே சொன்னேன்..
பில் இறந்து விட்டது சந்தேகம்..ன்னு


பேட்டி காண வந்த நிருபர் பேய் அறைந்தது போல் அதிர்ச்சிகுள்ளாகி.. உடனே அந்த இடத்தை விட்டு எழுந்து ஓடிப்போனாராம். அதன்பிறகு அவர் பத்திரிகை தொழிலுக்கே முழுக்கு போட்டு விட்டதாக கேள்வி.

-தென்கச்சி கோ.சுவாமிநாதன்

குட்டி கதைகள் --------தென்கச்சி கோ சுவாமிநாதன்
ஒரு ஊர்ல ஒரு கோவில் இருந்தது , அரசாங்கம் அந்த கோயிலை பராமரித்து வந்தது . அதிகாரிகள் அவ்வப்போது வந்து கணக்கு வழக்குகளை சரி பார்ப்பது வழக்கம் .

அந்த வகையில் , ஒரு சமயம் அரசாங்க அதிகாரி அங்கே வந்தார் . கோயில் நிர்வாக அதிகாரி கணக்கு புத்தகங்களையும் மற்ற பதிவேடுகளையும் எடுத்து அவர் முன்னால் வைத்தார்

வந்த அதிகாரி , கோயில் செலவு கண்ணுக்கு பார்த்து கொண்டு வந்தார் ." சும்மா இருக்கும் சாமியாருக்கு ஒரு பட்டை சோறு ".. என்று தினசரி செலவு பட்டியலில் எழுதபட்டிருந்தது.

அதை பார்த்த அவர் " சும்மா இருக்கிறவருக்கு எதுக்காக சோறு போடணும் ? அதை உடனே நிறுத்துங்கள் ! என்று ஆணையிட்டார் .

உடனே ஆலய ஊழியர்கள் , அதிகாரிகளை நெருங்கி மெல்ல சொன்னார்கள் : "ஐயா சும்மா இருப்பது என்பது அவ்வளவு சுலபமான காரியமல்ல ... அதனால் தான் அவருக்கு சோறு வழங்குகிறோம் !"

இந்த விளக்கம் அந்த அதிகாரிக்கு திருப்தி அளிக்கவில்லை . எனவே ,அதுபற்றி ஒன்றும் சொல்லாமல் வீட்டுக்கு வந்து விட்டார் , வந்த பிறகு ஒரு சாய்வு நாற்காலியில் உக்காந்து யோசிக்க ஆரம்பித்தார்

" சும்மா இருப்பது என்ன அவ்வளவு கடினமான காரியமா ? கொஞ்ச நேரம் நாமும்தான் சும்மா இருந்து பார்ப்போமே !" முன்று பார்த்தார் . மனம் அலைய ஆரம்பித்தது ....அடங்க மறுத்தது .

சரி , கொஞ்ச நேரம் கண்களை மூடி தியானம் செய்து பார்க்கலாம் , முன்றார் ' வயிறு பசிக்கிறது போலிருக்கிறதே ! என்று நினைத்தார்

ஒரு புத்தகத்தை எடுத்து புரட்டினார் கவனத்தை அதில் செலுத்தினார் . காகம் ஒன்று எங்கோ கத்துகிற சதம் அவர் காதில் விழுந்தது . கண்களையும் காதுகளையும் கட்டுபடுத்த முன்றார்

மனம் எதிர்காலத்தை பற்றி யோசிக்க ஆரம்பித்தது . மகளுக்கு மாப்ளை தேட வேண்டும் ,மகனுக்கு வேலை தேட வேண்டும் , மறுபடி எதையும் நினைக்காமல் தியானம் செய்ய முயன்றார்


திடீர் என ஒரு மணம் வந்து மூக்கை தொடுகிறது . கண் விழித்து பார்கிறார்
மனைவி கொண்டு வந்து வைத்து விட்டு போன சூடான காபி எதிரே மேஜை மீது இருக்கிறது .அதை எடுத்து குடிக்க ஆரம்பித்தார்

" மனம் - தியானம் இரண்டும் ஒன்றுகொன்று சம்பந்தம் உள்ளது " என்று நினைக்கிறார் . அது அப்படி அல்ல : மனம் முடிந்து போகிற இடத்தில தான் தியானம் ஆரம்பமாகிறது


எனவே , தியானம் இருக்கிற இடத்தில மனம் இல்லை . மனம் செயல் படுகின்ற வரையில் தியானமும் அரம்பமவதில்லை "


அதிகாரி திணறி போனார் . அவருக்கு ஊழியர்கள் கட்டுபடுகிறார்கள் , உள்ளே இருக்கிற அவர் மனம் கட்டுப்பட மறுக்கிறது


அதிகாரி அலைபாய்கிற மனதை அடக்க முயன்று , அது முடியாமல் சோர்ந்து போனார். " சும்மா இருப்பது எவ்வளவு பெரிய விஷயம் ! என்பது அவருக்குபுரிந்தது


உடனே மறுபடியும் புறப்பட்டு அந்த கோவிலுக்கு போனார், பதிவேட்டை கொண்டு வர சொன்னார். அதில் இப்படி எழுதினார் : " சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு !"

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக